Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > ‘அணுகுமுறை’ என்கிற மந்திரச்சொல் – MONDAY MORNING SPL 83

‘அணுகுமுறை’ என்கிற மந்திரச்சொல் – MONDAY MORNING SPL 83

print
து ஒரு பிரபல ஏற்றுமதி நிறுவனம். அதன் மார்கெட்டிங் பிரிவுக்கு தலைமை அதிகாரியாக ஒரு தகுந்த நபரை தேர்வு செய்யவேண்டியிருந்தது. எந்த ஒரு நிறுவனத்திற்கும் மார்கெட்டிங் பிரிவு என்பது முதுகெலும்பு போல. வருவாய் ஆதாரங்களை கொண்டு வருவது அதன் பணி என்பதால் தகுந்த ஒருவரை எவ்வளவு சம்பளம் கொடுத்தேனும் அந்த பிரிவில் பணியில் அமர்த்த அதன் நிறுவனர் முடிவு செய்தார்.

நல்ல நிறுவனம், நல்ல சம்பளம் என்பதால் பலர் பணிக்கு விண்ணப்பித்தனர். தகுந்த ஒருவரை  தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் ஆர்டர் எடுக்கவே மிகவும் சவாலாக விளங்கும் சில கிளையண்ட்டுகளின் விபரத்தை விண்ணப்பித்தவர்களிடம் கொடுத்து “இவர்கள் அனைவரிடமும் ஒரு மாத காலத்திற்குள் ஆர்டர் எடுக்கவேண்டும். உங்களால் முடியுமா?” என்று கேட்க, பலர் பின் வாங்கிவிட்டனர்.

ஒரே ஒரு இளைஞன் மட்டும் “என்னால் முடியும் சார்!” என்றான் உறுதியுடன்.

Attidude

“இவர்கள் அனைவரிடமும் ஒரு மாத காலத்திற்குள் ஆர்டர் எடுக்க உன்னால் முடியுமா?” நிறுவனர் சந்தேகத்துடன் கேட்டார்.

“முடியும்!” என்றான் அதே உறுதியுடன்.

அவனுக்கு ஆஃபர் லெட்டர் தரப்பட்டது.

பணிக்கு சேர்ந்த அவன், சேர்ந்த ஒரு மாதத்திற்குள் நிறுவனர் சொன்ன அனைத்து கிளையண்ட்டுகளிடமும்  ஆர்டர் எடுத்துவிட்டான். ஒரே  ஒருவரைத் தவிர.

அடுத்த மாதம் அவன் எந்த ஆர்டரும் எடுக்கவில்லை. காரணம் புதிதாக எந்த கஸ்டமரையும் சந்திக்க அவன் ஃபீல்டுக்கு செல்லவில்லை. வழிக்கு வர மறுக்கும் அந்த ஒரு வாடிக்கையாளரையே தினமும் சென்று சந்தித்து வந்தான்.

தினமும் காலை அந்த வாடிக்கையாளர் தனது அலுவலகத்தை திறந்தவுடன் அவரை சந்திக்க சென்றுவிடுவான். அவரும் கீறல் விழுந்த ரெக்கார்ட் போல ஒரே பதிலைத் தான் சொல்லி வந்தார். “இல்லை. என்னால் ஆர்டர் தர முடியாது!” என்பதே அது.

அந்த வணிகருக்கு தெரியும் தான் எந்த காலத்திலும் இவனுக்கு ஆர்டர் தரப்போவதில்லை என்று. ஆனால் இந்த இளைஞன் அதை புரிந்துகொண்டது போலவே தெரியவில்லை. அவர் மறுத்துப் பேசும்போதெல்லாம் அதை காதில்வாங்கிக்கொள்ளாதது போல இவன் இருப்பான்.

அந்த மாதம் முழுக்க இப்படியே  சென்றது. கடைசி நாள் வந்தது.

நிறுவனத்தின் தலைவரிடம் அந்த மாத பணிக்கான ரிப்போர்ட்டை சப்மிட் செய்ய சென்றான்.

இந்த மாதம் முழுதும் அவன் புதிதாக யாரையும் சந்திக்காமல், ஒரே ஒரு வழிக்கு வராத வாடிக்கையாளரையே சந்திக்க நேரத்தை செலவழித்திருப்பதை பார்க்கிறார்.

“என்னப்பா…. உன்னை என்னவோ புத்திசாலின்னு நினைச்சேன். இப்படி ஒரு மாசத்தை வேஸ்ட் பண்ணியிருக்கியே?”

இளைஞன்… மெலிதாக புன்னகைத்தவாறு சொன்னான்…. “என்னது டயம் வேஸ்ட் பண்ணியிருக்கேனா? கிடையவே கிடையாது. இந்த ஒரு மாசமும் நான் தினசரி அவர் கிட்டே ட்ரெயினிங் போனேன். அவரு தினமும் எனக்கு ஃப்ரீயா பாடம் சொல்லிக் கொடுத்தாரு.”

“என்னது ட்ரெயினிங்கா?” நிறுவனர் புரியாதது போல பார்த்தார்.

இளைஞன் தொடர்ந்தான்… “அவரை தினசரி சந்திச்சது மூலம் ஆர்டர் கொடுக்க விருப்பம் இல்லாத ஒரு கிளையண்ட் நம்மகிட்டே என்னென்ன சாக்கு சொல்வாங்கன்னு இந்த ஒரு மாசமும் நான் கத்துகிட்டேன். அது இனி நான் போற இடத்துக்கு யூஸ்புல்லா இருக்கும்!” என்றான்.

இவன் சாதுரியமான பதிலால் வியந்த நிறுவனர், “இப்போதே உன்னை நம் நிறுவனத்தில் பணி நிரந்தரம் செய்கிறேன். முதலில் ஒப்புக்கொண்டதைவிட கூடுதல் சம்பளத்துடன்!!” என்றார்.

Winning copy

என்ன நண்பர்களே…. மேற்கூறிய அனுபவங்கள், மார்கெட்டிங் துறையில் உள்ள பலருக்கு நிகழ்வது தான். ஆனால் அதை அந்த இளைஞன், எதிர்கொண்ட விதமும், தனது முதலாளியிடம் அவன் சாதுரியமாக கூறிய பதிலும் பார்த்தீர்களா?

அணுகுமுறையில தாங்க இருக்கு எல்லாமே. எந்த ஒரு சூழ்நிலையையும் நேர்மறையாக எதிர்கொள்ளும் பக்குவம் உள்ளவர்களுக்கு இந்த உலகம் தன் கதவுகள் அனைத்தையும் திறந்து வைத்து காத்திருக்கிறது. எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் கண்ணெதிரே பொக்கிஷத்தை கண்டால் கூட  குருடராய்த் தான் இருப்பார்கள்!

நீங்கள் எப்படி?

“இந்த உலகம் நேர்மறையான, ஆற்றல்மிக்க மனிதர்களுக்கே சொந்தம்!” – ஜான் பிரேசியர்

======================================================================

நம் தளத்திற்கு சந்தா சேர்ந்துவிட்டீர்களா?

நமது தளத்தின் செலவினங்களை சமாளிக்க நாம் அறிமுகப்படுத்தியிருக்கும் VOLUNTARY SUBSCRIPTION திட்டத்தில் வாசகர்கள் இணைந்து நல்லாதரவு தரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

விபரங்களுக்கு :  ஒரு முக்கிய அறிவிப்பு + வேண்டுகோள்!

======================================================================

நம் தளத்திற்கென சட்ட ஆலோசகர்…!

நம் தளம் வளர வளர மிகப் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. முன்னெப்போதையும் விட நம் பதிவுகள்  தற்போது அதிகம் திருடப்படுகின்றன. உயிரினும் மேலான உழைப்பு இது. இந்த தளத்தின் பதிவுகளை எடுத்தாளுபவர்கள் அவசியம் நம் தளத்தின் பெயரை இறுதியில் அளிக்கவேண்டும். நமது தளத்தின் பெயரை இருட்டடிப்பு செய்து தங்கள் தளங்களில் அவர்களது படைப்புக்களை போல வெளியிடுபவர்கள் மீது இனி சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். நம் தளத்திற்க்கென சட்ட ஆலோசகர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படவிருக்கிறார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

* காப்பி & பேஸ்ட் பேர்வழிகளுக்கு எச்சரிக்கை விடுக்கவே மேற்படி செய்தி. மற்றபடி நம் பதிவுகளை வாசகர்களாகிய நீங்கள் நம் தளத்தில் படித்தது என்று சொல்லி தாராளமாக பகிரலாம். நம் வாசகர்களுக்கு எல்லாவித உரிமையும் என்றும் உண்டு. ஏனெனில் இது உங்கள் தளம்.

======================================================================

Also check :

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? – MONDAY MORNING SPL 82

அகத்தின் அழகு முகத்தில் தெரியும், எச்சரிக்கை! MONDAY MORNING SPL 81

பராசக்தியின் உடலில் தோன்றிய கொப்புளங்கள் – MONDAY MORNING SPL 80

சிரித்தவர்களை பார்த்து சிரித்த நிஜ ஹீரோ – MONDAY MORNING SPL 79

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

ஒரு சிறிய பேட்ஜ் செய்த அற்புதம் – MONDAY MORNING SPL 77

மனுஷனா பிறந்துட்டு எதுக்குங்க மாட்டைப் போல உழைக்கணும்? MONDAY MORNING SPL 76

நல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்? MONDAY MORNING SPL 75

வாழ்க்கையில் உயர என்ன வழி? – MONDAY MORNING SPL 74

கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா? – MONDAY MORNING SPL 72

பல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

நீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா? MONDAY MORNING SPL 69

திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66

உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65

முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64

முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6

======================================================================

[END]

5 thoughts on “‘அணுகுமுறை’ என்கிற மந்திரச்சொல் – MONDAY MORNING SPL 83

  1. Monday மோர்னிங் ஸ்பெஷல் சுபெர்ப் ஸ்பெஷல். நாம் எதையும் நேர்மறையாக சிந்தித்தால் உலகம் நம் கையில்.

    தங்கள் தளத்திற்கு சட்ட ஆலோசகர் நியமிப்பது அறிய மிக்க மகிழ்ச்சி.

    நன்றி
    உமா வெங்கட்

  2. நேர்மறை சிந்தனை மற்றும் அணுகுமுறையே வெற்றிக்கு வழி வகுக்கும் என்று புரிந்து கொண்டோம்…….நன்றிகள் பல…….

  3. நேர்மறையான சிந்தனையே வெற்றிக்கான அடித்தளம். மிக சிறந்த பதிவு

    நன்றி

  4. வாழ்க வளமுடன்

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *