இந்த வருட ராம நவமியை முன்னிட்டு நாம் அளித்து வரும் ராம நாம மகிமை தொடரின் இறுதிப் பதிவாக ஏதேனும் ஒரு பிரசித்தி பெற்ற ராமர் கோவில் பற்றிய ஆலய தரிசன பதிவை அளிக்கவேண்டும் என்று திட்டமிட்டு வந்தோம். அப்போது நினைவுக்கு வந்தது தான் மதுராந்தகத்தில் உள்ள ‘ஏரி காத்த ராமர்’ திருக்கோவில்.
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே
– கம்பராமாயண முதல் பாடல்
(* முப்பதுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இந்த பதிவில் உள்ளது. பொறுமையாக பார்க்கவும்)
நீண்ட நாட்களாகவே இந்த கோவிலுக்கு செல்லவேண்டும் என்கிற ஆவல் நமக்குண்டு. நமது தளத்தின் சிறப்பே எதையும் ஆதாரப்பூர்வமாக புகைப்படங்களுடன் அளிப்பது தானே… எனவே இரண்டு வாரத்துக்கு முன்பு ஒரு ஞாயிறு காலை நாமும் நண்பர் செந்திலும் இந்த கோவிலுக்கு சென்றோம்.
முந்தைய நாள் மதியம் தான் இது குறித்து முடிவெடுத்தோம். பைக்கில் செல்லக்கூடிய தூரமாக இருந்தால் பைக்கிலேயே சென்றுவிட்டு வந்துவிடுவோம். ஆனால இது மிகவும் தூரம். ட்ரெயினிலோ பஸ்ஸிலோ கிளம்பினால் பயணத்திலேயே அரை நாள் போய்விடும். எனவே நண்பர் செந்திலை தொடர்புகொண்டோம். வீட்டிலேயே நம்மை வந்து பிக்கப் செய்துகொண்டார்.
….. ஓவர் டு ஏரி காத்த ராமர் கோவில், மதுராந்தகம்.
புஷ்பக விமானத்தில் வந்த ராமர்!
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது ஏரி காத்த ராமர் ஏன்னு திருக்கோவில். இதற்கு வகுளாரண்ய ஷேத்ரம் என்பது பெயர். முன்னொரு காலத்தில் இங்கு மகிழ மரங்கள் அதிகம் இருந்தனவாம். மகிழத்துக்கு வகுளம் என்ற பெயர் உண்டு. எனவே வகுளாரண்ய ஷேத்ரம் என்று வழங்கப்படலாயிற்று. அதன் பக்கத்தில் ஓடும் நடிக்கு பெயர் கிளியாறு. அந்தப் பகுதியை ஆண்ட மதுராந்தக சோழனின் நினைவாக இந்தப்பகுதி மதுராந்தகம் எனப் பெயர் பெற்று விளங்கியது. கல்வெட்டுக்களில் இந்த ஊர் மதுராண்டக்க சதுரவேதி மங்கலம் என குரிப்பிடப்பட்டுள்ளது.
சீதையை மீட்க இலங்கை செல்லும் வழியில், ராமபிரான் விபண்டக மகரிஷியின் ஆஸ்ரமத்தில் தங்கி, அவரது உபசரிப்பை ஏற்றுக் கொண்டார். மகரிஷியின் வேண்டுதலுக்காக அயோத்தி திரும்பும் வழியில் சீதையுடன் கல்யாண கோலத்தில் இங்கு காட்சி தந்தார். இதன் அடிப்படையில் இங்கு புஷ்பக விமானத்துடன் கோதண்டராமர் கோயில் எழுப்பப்பட்டது. விபண்டக மகரிஷி தவிர சுகப்பிரம்ம மகரிஷியும் இங்கே தவம் புரிந்திருக்கிறார். திருமழிசை ஆழ்வார் முக்தி அடைந்த தலம் இது. ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் நம்மை ஆலயம் பிரமாதமாக வரவேற்கிறது.
வெளியே கோவில் குளம் உண்டு. குளக்கரையில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
பல ஆசார்யர்களோடும் தொடர்பு பெற்று விளங்குகிறது இந்தத் தலம். வைணவத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டி, மிகப் பெரிய சமூக சீர்த்திருத்தவாதியாக விளங்கிய ஸ்ரீ ராமானுஜருக்கு வைஷ்ணவ தீட்சையாகிய பஞ்ச ஸம்ஸ்காரங்கள் அளிக்கப்பட்டது இத்தலத்தில் உள்ள மகிழ மரத்தடியில் தான். மகிழ மரமே இந்தத் தல வ்ருக்ஷம். இதற்கு அதனால் த்வயம் விளைந்த பூமி என்ற பெயரும் உண்டு.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றபோது ஒரு சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. அதில் நவநீதக்கிருஷ்ணனின் சிலையும் பஞ்சபாத்திரங்களும் சங்கு சக்ரங்களும் கிடைத்தன. இவை ராமானுஜரின் பஞ்ச மஸ்காரத்திற்கு அவரது ஆசாரியர் பெரிய நம்பியால் உபயோகப்படுத்தப்பட்டிருக்கக் கூடும் என்பதால் இன்றும் அவை ராமானுஜரின் ஸந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன.
ஏரி காத்த ராமர்!
இந்த கோவிலுக்கு ஏரி காத்த ராமர் என பெயர் வந்தது பற்றி ஒரு சுவாரஸ்யமான சிலிரிக்க வைக்கும் நிகழ்வு உண்டு.
கோவிலுக்கும் ஏரிக்கும் இடையே தற்போது ஜி.எஸ்.டி. சாலை செல்கிறது. ஆனால் அந்த காலத்தில் எல்லாம் சாலைகள் ஏது?
இந்த மதுராந்தகத்தில் உள்ள பெரிய ஏரியானது மழைக் காலங்களில் கரையை உடைத்துக்கொண்டு பெருத்த சேதத்தை விளைவித்துவந்தது. கிழக்கு இந்தியக் கம்பெனி கலெக்டராக இருந்த லயனல் பிளேஸ் என்பவர் கரையை பலப்படுத்த பலமுறை முயற்சித்தும் முடியவில்லை.
இந்நிலையில் 1825-ம் ஆண்டில் அவர் இக்கோயிலுக்கு வந்தபோது, அர்ச்சகர்கள் சிதிலமுற்றிருந்த தாயார் சன்னதியை திருப்பணி செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர். அவரோ “உங்கள் தெய்வத்துக்கு சக்தியிருந்தால், இந்த வருடம் பெய்யும் மழையில் ஏரி உடைப்பெடுக்காமல் இருக்கட்டும். அப்படியிருந்தால், நான் அப்பணியை செய்து தருகிறேன்,” என்றார்.
மழைக்காலம் துவங்கவே வழக்கம்போல் ஏரி நிரம்பியது. எந்த நேரத்திலும் உடையலாம் என்ற நிலையில், ஏரியைப் பார்வையிட அவர் சென்றார். அப்போது, அங்கே இரண்டு இளைஞர்கள் கையிலிருந்த வில்லில் அம்பு பூட்டி நின்றனர். அந்த அம்பில் இருந்து மின்னல் போல் ஒளி கிளம்பியது. அதன் பிறகு ஏரிக்கரை உடையவில்லை. பெருமழை பெய்து ஏரி நிரம்பி வழிந்தபோது இரவில் ராமரும் லக்ஷ்மணரும் சென்று அதனை உடையாமல் பாதுகாப்பதைக் கண்டு பரவசமடைந்த அந்த துரை ஜனகவல்லித் தாயார் ஸந்நிதியைக் கட்டிக் கொடுத்தார். மகிழ்ந்த பிளேஸ், பின்பு தாயார் சன்னதியைக் கட்டிக் கொடுத்தார். இச்சம்பவம் குறித்த கல்வெட்டு தாயார் சன்னதியில் உள்ளது. ஏரி உடையாமல் காத்தருளியதால் சுவாமிக்கு, “ஏரி காத்த ராமர்’ என்ற பெயர் ஏற்பட்டது.
இன்றும் தாயார் ஸந்நிதியில் கலெக்டரின் இந்தத் தர்மம் பற்றிய தகவல் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதனால் இந்த தலத்து ராமபிரானை ஏரி காத்த ராமர் என்றே அழைக்க ஆரம்பித்தனர்.
மனைவியின் கரம் பிடித்த ராமன்!
கோவிலில் நின்றதிருக்கோலத்தில் மூலவராகக் கோதண்டராமர் கல்யாண கோலத்தில் ஸீதை, லக்ஷ்மணருடன் காட்சி தருகிறார். ராமபிரானுக்கு சீதை சற்று தள்ளி நிற்பது போலவே, சிலைகள் வடிக்கப்படுவதுண்டு. இந்தக் கோயில் மூலஸ்தானத்தில், சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமன் நிற்கிறார். அருகில் லட்சுமணர் இருக்கிறார். ராமர் விபண்டகருக்கு காட்சி தந்தபோது, சீதையின் மீதான அன்பினை வெளிப்படுத்தும் விதமாக இவ்வாறு காட்சி தந்ததாகச் சொல்வர். தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ இவரைத் தரிசிக்கிறார்கள். இவர்களை வணங்கியபடி விபண்டக மகரிஷியும் மூலஸ்தானத்திற்குள்ளேயே இருக்கிறார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. ஜனக மகராஜாவின் மகளாகவளர்ந்ததால் இவளுக்கு இப்பெயர்.)
உற்சவ மூர்த்தியான கோதண்ட ராமர் சற்றுப் பெரிய வடிவினராக ஸீதை லக்ஷ்மணருடன் ஸேவை ஸாதிக்கிறார். மூலவர் விபாண்டக மஹர்ஷிக்கு ஸேவை தந்த கோலத்தில் பாணிக்கிரகண பாணியில் ஸீதையின் கையைப் பற்றிக் கொண்டுள்ளார். விபாண்டக மஹர்ஷியும் ஸந்நிதியில் எழுந்தருளியுள்ளார். சற்றே சிறய அளவில் உள்ள மற்றொரு உற்சவமூர்த்தியே கருணாகரப் பெருமாள். அவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி உள்ளார். இவரையே ராமபிரானாக விபாண்டக மஹர்ஷி ஆராதித்துத் தனக்குக் காட்சி அளிக்கும்படி வேண்டினாராம். கருணாகரப் பெருமாளின் நாச்சியாரே ஜனகவல்லித் தாயார். இவர் தனி ஸந்நிதியில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளார். இவரது ஸந்நிதிதான் கலெக்டர் துரையால் கட்டிக் கொடுக்கப்பட்டது. எல்லா உற்சவங்களும் கருணாகரப் பெருமாளுக்கே. ஸ்ரீ ராமநவமி மஹோத்சவம் மட்டும் கோதண்ட ராமருக்கு. உற்சவ மூர்த்தி கண்ணன இவர் ஸந்நிதியில் உள்ளார்.
கம்பர்!
கம்பராமாயணம் எழுதிய கம்பர், அதை அரங்கேற்றும் முன்பு ராமன் தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது, ஓரிடத்தில் சிங்கம் உறுமும் சத்தம் கேட்டது. பயந்துபோன கம்பர், அவ்விடத்தைப் பார்த்தபோது நரசிம்மர் லட்சுமியுடன் காட்சி தந்தார். பிற்காலத்தில் சிங்க முகமில்லாமல், மனித முகத்துடன் சாந்த நரசிம்மர் சிலை வடிக்கப்பட்டது. உற்சவரான இவரை “பிரகலாத வரதன்’ என்கின்றனர்.
மற்றும் பிற ஸந்நிதிகளில் ஆண்டாள், விஷ்வக்ஸேனர், ராமானுஜர், பெரியநம்பிகள், நிகமாந்த மஹாதேசிகன், மணவாள மாமுனிகள் உளளனர். ஆஞ்சனேயர் ராமபிரான் கோவிலுக்கு எதிரில் தனி ஸந்நிதி கொண்டு விளங்குகிறார். லக்ஷ்மி ந்ருஸிம்ஹர், உற்சவரான ப்ரஹ்லாதவரதர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் உள்ளார். சக்கரத்தாழ்வாரும், ந்ருஸிம்ஹரும் சேர்ந்து ஒரு ஸந்நிதியில் உள்ளனர். சக்கரத்தாழ்வாரின் உற்சவ மூர்த்தியும் அங்கேயே உள்ளது.
தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ…
தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ இத்தல இறைவனை பிரார்த்தனை செய்யலாம். குழந்தைகள் கல்வி யில் சிறப்புப் பெற, பெரியநம்பி ராமானுஜர் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். பெரியநம்பி பூஜித்த குழந்தை கண்ணன் கையில் வெண்ணெயுடன், வலக்காலை மலர் மீது வைத்த நிலையில் காட்சி தருகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு தொட்டில் சேவை செய்து வைத்து வேண்டுகிறார்கள்.
இந்தக் கோவில் புஷ்கரிணியை ராமச்சந்திர புஷ்கரிணி என்றழைக்கின்றனர்.
சரித்திரப்புகழ் பெற்ற ஏரி!
சரித்திரப்புகழ் பெற்ற ஏரியைக் காணக்கோவில் அருகில் உள்ள பாதை வழியே படிகள் உள்ளன. ஏரிக்கும் இந்தப் படிகள் உள்ள நடைபாதைக்கும் நடுவில் பேருந்து செல்லும் பாதை உள்ளது.
நாம் அந்த படியின் வழியே ஏரி, இராமபிரானின் பாதம் பட்ட அந்த ஏரியில் நாமும் கால் வைக்க வேண்டும், உங்களுக்கு பிரத்யேக புகைப்படத்தை காண்பிக்கவேண்டும் என்று கருதி, ஏரிக்குள் இறங்கினோம்.
ஒரு காலத்தில் அணைபோட முடியாமல் பொங்கிப் பெருகி கரையை உடைத்த இந்த ஏரி இன்று ?
தமிழ்நாட்டில் எந்த ஏரியில் இப்போது தண்ணீர் இருக்கிறது? பல ஏரிகள் தூர்வாரப்படாமல், புதர்மண்டி, மண் மேடாகிவிட்டது.
ஆனால், ஒரு காலத்தில் அணைபோட முடியாமல் பொங்கிப் பெருகி கரையை உடைத்த இந்த ஏரி இன்று நீரின்றி வறண்டு காணப்படுகிறது. ஏரியில் இறங்கும் பாதை முழுக்க குப்பைக் கூளங்கள், மனிதர்களின் அசுத்தங்கள்.
சரிவான பாதையில் இறங்குவது சவாலாக இருந்தது. கையில் காமிரா வேறு. ராமா ராமா ராமா என்று சொல்லிக்கொண்டு தான் இறங்கினோம்.
ஒரு காலத்தில் (சுமார் 10 வருடங்களுக்கு முன்னர்) மதுராந்தகம் ஊர் வழியாக சென்றுகொண்டிருந்த ஜி.எஸ்.டி. சாலை, தற்போது எரிக்கும் கோவிலுக்கும் இடையே உள்ள கரை மீதே போடப்பட்டுள்ளது. கோவிலுக்கும் இந்த எரிக்கும் உள்ள தொடர்பை கூறும் விதமாக ஏரியில் ஆங்காங்கே கல்வெட்டு பொறிக்கப்பட்ட கற்கள் காணப்பட்டன. மனம் அடப்பாவிகளா நமது பாரம்பரியத்தின் பெருமை புரியாமல் இப்படி போட்டு வைத்திருக்கிறீர்களே என்று மனம் அடித்துக்கொண்டது. என்னவெல்லாம் அற்புதமான தகவல்கள் இந்த கல்வெட்டில் உள்ளனவோ?
ஏரியை படமெடுக்க முற்பட்டோம். மன்மேடான ஏரியை உங்கள் மனம் குளிரும் பொருட்டு, பார்த்தாலே கண்களுக்கு குளிர்ச்சி தரும் விதமாக படமெடுத்து வந்திருக்கிறோம். ஏரி, ஆறு, குளம் போன்ற இடங்களில் செய்யப்படும் பிரார்த்தனை சக்திமிக்கது என்பதால் அந்த வாரத்தின் பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையை அங்கு ஒருமுறை செய்தோம்.
மீண்டும் கோவிலுக்கே வந்தோம்.
கோ-சாலை
இந்த ஆலயத்தில் தினசரி காலை கோ-பூஜை நடைபெறுகிறது. ஆலயத்தில் பெரிய கோ-சாலையும் உண்டு. கோ-சாலையில் ஐந்தாறு பசுக்களும் கன்றுகளும் உள்ளன.
நாம் இந்த இடத்தில் நிறைய நேரம் செலவிட்டிருப்போம் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
திருக்குளமும், கோ-சாலையுமே எந்த ஒரு ஆலயத்தையும் முழுமையடையச் செய்வது. இந்த ஆலயத்தில் இரண்டுமே உண்டு.
இராஜகோபுரம்!
கோவிலின் கோபுரத்தில் வடகலைத் திருமண் அடையாளமும் ஸ்ரீராமா என்ற எழுத்துக்களும் பொலிவுடன் காட்சி அளிக்கின்றன.
பழமைக்கு பழமையாய் காட்சியளிக்கும் இந்த கோவில், திருச்சி மாவட்டத்தில் காணப்படும் பல வைணவத் தளங்களை ஒத்திருக்கிறது. விசாலமான பிரகாரங்கள், வேலைப்பாடமைந்த தூண்கள், சன்னதிகள், திருக்குளம், ராஜகோபுரம், கருடாழ்வார் சன்னதி, நரசிம்மர் சன்னதி, மடப்பள்ளி என இது ஒரு குட்டி திருவரங்கம்.
நேரமிருக்கும் போது ஒரு வார இறுதியில் குடும்பத்துடன் இந்த கோவிலுக்கு சென்றுவிட்டு வாருங்களேன்…!
இங்கு அஹோபில மடத்தினரால் நடத்தப்படும் ஸம்ஸ்க்ருதக் கல்லூரியும், ஓரியண்டல் பள்ளியும் உள்ளன.
ஆனிமாத ப்ரஹ்மோத்சவமும், பங்குனி மாதத் திருக்கல்யாண உத்சவமும், மார்கழி மாத அத்யயன உத்சவமும் இங்கு புகழ் பெற்றவை.
இது நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் சேராவிட்டாலும் மிகுந்த புகழ் பெற்றது.
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை,
முற்றும் தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை “ராம” எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்!
(ஆக்கத்தில் உதவி : தினமலர்.காம், காமகோடி)
ஆலய முகவரி : அருள்மிகு ஏரி காத்த ராமர் திருக் கோயில்,சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மதுராந்தகம் – 603 306, காஞ்சிபுரம் மாவட்டம். திறந்திருக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
=====================================================================
இந்த இடத்தில நண்பர் செந்தில் அவர்களுக்கு நம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தரிசனத்தின் போதும் சரி, புகைப்படங்கள் எடுக்கும்போதும் சரி… நம்முடன் பொறுமையாக இருந்து ஒத்துழைத்தார். செந்தில் அவர்களை உங்களுக்கு நினைவிருக்கும் என்று கருதுகிறோம். தேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை! – யாமிருக்க பயமேன் ? (10)
=====================================================================
We are running full-time. Give us your hand. Help us to serve you better – Join our ‘Voluntary Subscription’ scheme. Also ask your near and dear ones to join.
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
=====================================================================
முக்கிய அறிவிப்பு
பத்ராவதி பயணம்!
இன்றிரவு, கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள பத்ராவதிக்கு புறப்படுகிறோம். பத்ராவதியில் உள்ள புற்றுநோய் உள்ளிட்ட பல தீராத நோய்களை தீர்க்கும் சுப்ரமணிய ஆஸ்ரமத்தில் சுவாமிஜியை நமது தளத்தின் பேட்டிக்காக சந்திக்கவிருக்கிறோம். நேரில் சென்று ஒரு முறை ஆஸ்ரமத்தை பார்த்துவிட்டு, தகவல்களை திரட்டிக்கொண்டு வந்தால் வாசகர்களுக்கு உபயோகமாக இருக்கும் என கருதுகிறோம். என்னென்ன நோய்களுக்கு அங்கு சிகிச்சை அளிப்பார்கள், என்னென்ன மருந்து கொடுப்பார்கள், மற்ற வசதிகள் என்ன? கட்டணம் என்ன? இவை அனைத்தையும் தெரிந்துகொண்டு வந்து ஒரு சிறப்பு பதிவை அளிக்கவிருக்கிறோம்.
அந்த ஆஸ்ரமத்தை பற்றிய கட்டுரையும், அவர்கள் அளிக்கும் சிகிச்சை பற்றியும் சமீபத்தில் நாம் ஒரு பதிவை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. (கைவிட்ட ஆங்கில மருந்து, கைகொடுத்த நம்ம ஊர் மருந்து! MUST READ!!)
இன்றிரவு பெங்களூர் புறப்படும் நாம் அங்கிருந்து வேறொரு ரயில் மூலம் பத்ராவதி செல்கிறோம். ஞாயிறு மாலை சென்னை திரும்புகிறோம்.
பிரார்த்தனை கிளப் பதிவு இன்று கிடையாது!
தவிர்க்க இயலாத காரணங்களினால் இன்று பிரார்த்தனை கிளப் பதிவு இடம்பெறாது. சென்ற வாரம் பிரார்த்தனை செய்தவர்களுக்கே இந்த வாரமும் பிரார்த்தனை செய்யவும்.
சிவபெருமான் தந்த வரமும் சனீஸ்வரனின் மகத்துவமும் – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்
=====================================================================
For earlier episodes…
சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)
அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)
ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)
கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)
=====================================================================
Similar articles….
தீராத வினை தீர்க்கும் அடியார்கள் பாத தூளி – நம் இராமநவமி அனுபவம்!
108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!
புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!
வரங்களை அருள்வதில் திருமலைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்!
மலை மீது ஒரு எழில் கோலம்! சென்னை புதுப்பாக்கம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்! (ஆலய தரிசனம் 1)
விருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொடுத்தனுப்பிய என் கோதண்டராமன் – (ஆலய தரிசனம் 2)
நம் ராமநவமி தரிசனமும், பொறுமைக்கு கிடைத்த பரிசும்!
ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!
‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!
பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!
நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு!
அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!
=====================================================================
[END]
வாவ் … ராம நவமிக்கு இதை விட சிறப்பான பதிவை யாரும் அளித்து இருக்க முடியாது.
இவ்வளவு தகவல்களையும் திரட்டி , போடோக்களுடன் பதிய வைத்ததில் தங்களுக்கு நிகர் தாங்களே. தாங்கள் எங்கு சென்றாலும் பசுக்கள் தங்களுக்கு காட்சி அளித்து விடுகிறது இறை வடிவில்/
ஏரி காத்த ராமர் கோவில் வரலாற்றை இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. நம் தளம் சார்பாக இந்த கோவிலுக்கு சென்று வர ஆன்மிக பயணம் ஏற்பாடு செய்யவும். நாம் காண வேண்டிய கோவிலில் இதுவும் ஒன்று .
தங்கள் பத்ராவதி பயணம் இனிதே நடைபெற வாழ்த்துக்கள் . நம் வாசகர்களுக்கு அடுத்த வாரம் ஒரு நல்ல பதிவு காத்திருக்கிறது
நன்றி
உமா வெங்கட்
வணக்கம் சுந்தர் சார்.
அடடா, அடடா, ஆஹா என்ற வார்த்தைகளை தவிர சொல்ல வேறு வார்த்தை வரவில்லை.
திருமாலின் திவ்ய தரிசனம் என்பது போல பெருமாளின் பெருமை பேசும் பதிவு.
படங்கள் அனைத்தும் அருமை. கோபுரங்களும் சன்னதிகளும் பார்க்க பார்க்க பரவசமடைய வைக்கிறது.
சிவன் கோவில் கோபுரத்திற்கும் பெருமாள் கோயில் கோபுரத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன?.
சிவன் கோபுரம் என் மண்டைக்குள் லய ஓசையை உண்டாக்கும். ஆனால் பெருமாள் கோவில் கோபுரம் மனதுக்குள் அதே லய ஓசையை உண்டாக்கியது அதனால் தான் கேட்டேன்.
கோவிலின் பெருமையும் ஆழ்வார்களின் பெருமையும் படிக்க படிக்க நன்றாக உள்ளது.
உங்கள் பதிவின் மூலமாக நாங்கள் எத்தனையோ திருத்தலங்களுக்கு மானசீகமாக உலா வந்துள்ளோம். மிக்க நன்றி.
முதலில் கோவில் கோபுரத்தை பார்த்தவுடன் ஏற்பட்ட சந்தோசம் அளவிடமுடியாதது. அதுவே நடுவில் நீர் இல்லாத ஏரியை பார்த்தவுடன் மணந வேதனை பட்டது. அதை நிவர்த்தி செய்யும் விதமாக இறுதியில் கோ சாலையை காட்டி மனம் குளிர செய்து மேலும் மேலும் புண்ணியம் சேர்த்து கொண்டீர்.
ஏரி காத்த ராமர் திருத்தல புராணம் அற்புதமான படங்களுடன் மிகச்சிறப்பாக கொடுத்து உள்ளீர்கள்.
பலமுறை சென்னைக்கு அவ்வழியே சென்றும், இத்தல ராமரை சேவிக்கும் பாக்கியம் இதுவரை
கிட்டவில்லை. விரைவில் ராமர் அனுகிரகம் கிடைக்க வேண்டுகிறேன்.
தங்கள் பத்ராவதி பயணம் சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திகிறேன்
ராம நாம மகிமையை ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து பதிவாக தரவும்,. ராம நாம மகிமையை படிப்பதற்கு கசக்குமா என்ன… நம் வாசகர்களுக்காக ஒவ்வொரு பதிவையும் எழுதுவதற்கு முன் அந்த இடத்திற்கே சென்று செய்திகளை சேகரித்து பதிவாக கொடுப்பது என்பது சாதாரண விசயமில்லை. ஒவ்வொரு பதிவும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கிறது .தாங்கள் செய்யும் சேவை மகத்தானது … தங்களது பணி மேலும் மேலும் நல்லபடியாக தொடர வாழ்த்துக்கள் .
அனைவருக்கும் ஸ்ரீ ராம நவமி வாழ்த்துக்கள் ….. நாம் சொல்லும் ராம நாமம் நம்மை நல வழியில் இட்டுச் செல்லும்
ராம் ராம் ராம்
நன்றி
உமா வெங்கட்
நாம் பல பக்தி புக்ஸ்இல் படிக்கும் கட்டுரையை விட மிக அழகாக திரு சுந்தர் அவர்கள் இந்த கட்டுரை கொடுத்து உள்ளார். நாம் வேண்டுவது திரு சுந்தர் அவர்கள் அவரது கட்டுரைகளை லீடிங் புக்ஸ் இல் வெளி வர குடுத்தால் பல பல குடும்பம் பயன் பெரும். அவரது presentation மிக மிக அருமை. போட்டோ நன்றாக உள்ளது.
நன்றி.
கே. சிவசுப்ரமணியன்
ஒரு நல்ல பதிப்பாளரை தேடி வருகிறேன். இறைவன் அருளால் விரைவில் நல்லது நடக்கவேண்டும். நன்றி.
குரு அருளால் தாங்கள் நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும் … வாழ்த்துக்கள்
நன்றி
உமா வெங்கட்
வணக்கம் சார்
இது உங்கள் ஆசை மட்டுமல்ல நம் நண்பர்கள் பலரின் ஆசையும் அதுதான்
குருவருளும் திருவருளும் சித்திக்கட்டும்
நன்றி
வணக்கம் சுந்தர். பாரட்ட வாரத்தைகள் இல்லை. அருமையான புகைப்படங்கள். உழைப்பும் செலவழித்த நேரமும் நன்றாக தெரிகிறது. கண்ணில் ஒற்றிகொள்ளலாம் போல் உள்ளது. அழகான கோவில் . பார்க்கவேண்டிய கோவில். ப்ராப்தம் உள்ளதா என்ன பார்போம் . ஏரியை பார்த்தால் கண்ணீர் வருகிறது. என்னதான் இந்த அவலமோ . பயணம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள். நன்றி
உங்கள் ஏக்கம் உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது. இறைவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பான். விரைவில் உங்களுக்கு ஒரு அருமையான ராமர் கோவிலின் தரிசனம் கிட்டும். வாழ்த்துக்கள்.
டியர் சுந்தர்ஜி
இறைவன் பாரபட்சமற்றவன் என்பதற்கு சாட்சி ஏரி காத்த ராமர்
நன்றி
ஏரி காத்த ராமர் கோவில் வரலாறும் படங்களும் சிறப்பாக இருக்கின்றனது. எங்கள் ஊரில் இரண்டு ஏரிகளின் மேல்தான் அரசு ஊழியர் குடியிருப்புகள் கட்டி இருக்கின்றனர். ஏரிக்கருப்பனார் மட்டும் தான் அக்குடியிருப்புகளுக்கு இடையே இன்றும் இருக்கின்றார். இங்கு ஏரி இருந்ததற்கு அவர் மட்டும் தான் சாட்சி. இதுபோல் தான் பல நகரங்களின் நடக்கின்றதென்பது வேதனைக்குரிய செய்தி. மதுராந்தகம் ஏரியையும் கழிவுகளை இட்டு அந்நில்லைக்கு கொண்டு வந்து விடாமல் ராமர் தான் காப்பாற்ற வேண்டும். மிகச் சிறந்த பதிவிற்கும், அதனைக் கொண்ர தாங்கள் எடுத்த முயற்சிக்கும் எனது வணக்கங்களும் வாழ்த்துகளும். மிக்க நன்றி!.
சுந்தர்ஜி
தங்களின் இந்த பதிப்பு மணி மகுடத்தில் ஒரு வைரம் போல் உள்ளது.
தாங்கள் வரைந்த கட்டுரை அனைத்தும் விரைவில் ஒரு புத்தகமாக
வெளிவந்தால் மிக அருமையாக இருக்கும்.கணினி இல்லாதோர் படிப்பதற்கு வசதியாக இருக்கும். ராம நவமி ஸ்பெசல் சூப்பர்
தண்ணீர் பிரச்னையை குறித்து நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், தயவு செய்து இந்த சிந்தனை அனைவரையும் சென்று சேர உதவுங்கள் சுந்தர் சார்.
கல்லணையை கட்டியது கரிகால் சோழன், அதற்குப் பிறகு ஏன் யாருமே அணைகள், ஏரிகள், குளங்களை கட்டவில்லை? பிற்பாடு அணைகள், ஏரிகள், குளங்கள் பிளாட் போடப்பட்டு விற்கப்பட்டு விட்டது. இன்னும் விற்கப்பட்டு வருகிறது. நாம் எல்லோரும் என்ன தண்ணீர் பிரச்சனை தீர்ந்து வாழ்கிறோமா என்ன? இதனை யார் செய்வது? கேளுங்கள் கேளுங்கள் நம் தேவையை கேளுங்கள்.
நம்ம ஊர்ல, ஏன் புது அணைகள், ஏரிகள் கட்டப்படவில்லை? இதற்கு யார் காரணம்? அத விடுங்க, இப்போதாவது, இன்றில் இருந்தாவது நம்ம தமிழ் நாட்டுலயும் புதிய அணைகள், ஏரிகள், குளங்கள் கட்டி அதற்கு தலைவர்கள் பெயரை போட்டுக் கொள்ளலாம். தலைவர்களே, உங்களுக்கு சரித்திரத்தில் இடம் பெற ஒரு அறிய வாய்ப்பு. நாட்டு மக்களும் இதன் மூலம் பயன் பெறுவார். இன்றே அடிக்கல் நாட்டி செய்து முடியுங்கள், வருங்காலம் உங்களைப் பாராட்டும், சீராட்டும். ஏரிகள், குளங்களை தூர்வாரி களப்பணி செய்யுங்கள். நிரந்தரமாக தண்ணீர் பிரச்சனை, மின்சாரப் பிரச்சனைகளை சரி செய்யுங்கள்.
Namasthe Shri Sundar Sir
My apology for not being able to type in Tamil.
Your article about Eri Katha Ramar is superb. All the photos are excellent. The photo of the urchava murthigal at the beginning of this artice is so mesmerising. I can’t help looking at the beautiful smiling faces of Lord Ramar, Goddess Seetha and Lord Lakshmanar again and again- can’t take my eyes away from this photo.
In my humble opinion, you are a multi talented person, and a gifted person. Thank you so much for giving us minute details of the temple with appropriate Tamil poetry. These photos taken from different angles make me feel as though I am visiting the temple. You must have thought about people like me who have no chance of visiting this temple, when you took these photos. Thank you again for the detailed photos,
Looking forward to read your excellent article about Bhadravati.
With best wishes.
Sakuntala
Dear Mr.Sundar,
Keep up your good job.
We are waiting eagerly for the post on your bhadravathi trip.
May God bless u n guide you always!
Tks n regards
Ranjini
Chennai
சுந்தர் அண்ணா.
மிகவும் இனிமையான பதிவு..இன்று தான் பதிவுகளை பார்க்க முடிந்தது.
ஏரி காத்த ராமர் கோவில் வரலாறும் படங்களும் மிகவும் அருமை.
மிக்க நன்றி அண்ணா.
ராம் ராம் ராம்
ராம நவமியை முன்னிட்டு அளிக்கப்பட சிறப்பு பதிவு அருமை……… ராம பிரானை கோவிலில் சென்று தரிசிக்க இயலாவிட்டாலும் நம் தளத்தின் மூலம் தரிசித்துக் கொண்டோம்………