Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, May 20, 2024
Please specify the group
Home > Featured > படப்பை மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் – விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்!

படப்பை மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் – விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்!

print
சென்னை நகருக்கே வெளியே, பல கி.மீ. தொலைவில் (தாம்பரம் – ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில்) உள்ள படப்பையில் மலைப்பட்டு கிராமத்தில் யோகதா சத்சங்க நிறுவனத்தின் தியான மந்திர் & ஆஸ்ரமம் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் நெருங்கிய நண்பர் திரு.ஹரி நிர்மாணித்திருக்கும் இந்த தியான மந்திருக்கு இதற்கு முன்பு நாம் பலமுறை சென்று வந்திருக்கிறோம்.

செல்லும் வழி நெடுக பசுமை…. தூய்மையான காற்று என்று நம்மை வேறு ஒரு உலகத்துக்கு அழைத்து செல்லும் ஒரு உன்னத அனுபவம் அது.

ஒரு அழகிய பெருமாள் கோவில்

மலைப்பட்டு கிராமத்துக்குள் நுழைந்து சந்து பொந்துகளில் ஊர்ந்து சென்றால், பாபாஜி தியான மந்திர் அமைந்துள்ள பகுதிக்கு சற்று முன்பாக, ஒரு அழகிய பெருமாள் கோவிலும் மிகப் பெரிய ஆஞ்சநேயர் கோவிலும் உண்டு.

கோவிலும் அதன் சுற்றுப்புறமும், அனைவருக்கும் புத்துணர்ச்சியை தரும் என்பது உண்மை.

விஸ்வரூப ஆஞ்சநேய தரிசனம்

இந்த கோவிலின் அருகிலேயே அடுத்த காம்பவுண்டில் நங்கநல்லூர் மற்றும் நாமக்கல்லில் உள்ளது போன்று விஸ்வரூப ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். பார்த்தாலே நமது பிரச்னைகள் எல்லாம் பஞ்சாய் பறந்துபோகும் வண்ணம் அந்த இடத்தில் அப்படி ஒரு வைப்ரேஷன்.

சுந்தரகாண்டம் முழுக்க ஓவியங்களாக…

கோவிலின் காம்பவுண்ட் சுவர் நெடுக ராமாயணத்தில் வரும் சுந்தர காண்டத்தை அற்புதமான ஓவியங்களாக தீட்டி அசத்தியிருக்கிறார்கள்.

அடுத்து சற்று தொலைவில் பாபாஜி ஆஷ்ரமம். சிறிய மலைக்குன்றும், அதன் அடிவாரத்தில் அமைந்திருந்த ஆஸ்ரமம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் அழகு நம்மை கொள்ளை கொள்ளும் என்பது மட்டும் உண்மை.

மந்திரின் தோற்றம்

தியான மண்டபம் அறுகோண வடிவமுள்ள ஒரு குடில் போன்ற தோற்றம் கொண்டது. உள்ளே பாபாஜி மற்றும் பரமஹம்ச யோகானந்தர் மற்றும் அவரது குருமார்களின் படங்கள் சுவரை அலங்கரிக்கின்றன.

பரமஹம்சரின் படத்துக்கு கீழே பாபாஜியின் குகையில் இருந்து எடுத்து வரப்பட்டு இங்கு வைத்து பூஜை செய்யப்படும் கூழாங்கற்கள் காணப்படுகின்றன. கற்களை சுற்றிலும் மலர்கள் வைக்கப்பட்டிருக்கும்.  கற்களில் ஜீவன் இருப்பது அதில் ஊறும் பிள்ளையார் எறும்புகளை வைத்து புரிந்துகொள்ளலாம்.

விசேட நாட்களில் உள்ளூர் மக்கள் பலர் இங்கு வந்து அமர்ந்து தியானம் செய்வர். இல்லத்தரசிகளும், அந்த பகுதியில் உள்ள மாணவர்களும், மாணவிகளும் கூட பெருமளவு வருவார்கள்.

பாபாஜி இங்கு வாயு சொரூபத்தில் தான் வருவார் என்று நம்பப்படுகிறது. அதை மெய்ப்பிக்கும் விதமாக காற்று அவ்வப்போது பலமாக வீசி, ஜன்னல்கள் கிடுகிடுக்கும்.

பயண  தேதி & நேரம் 

வரும் ஞாயிறு ஜனவரி 20 ஆம் தேதி காலை 7.00 மணிக்கு இங்கு இறைவனின் அருளை கொண்டு செல்லவிருக்கிறோம். அப்பொழுது தான் அருகில் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு இங்கு வரமுடியும். மதியம் 11 மணிக்குள் திரும்பிவிடலாம். காலை உணவு செல்லும் வழியில் பார்த்துக் கொள்ளப்படும்.

நம்முடன் வரவிருப்பம் உள்ளவர்கள் :  BABAJI DYAN MANDHIR VISIT VOLUNTEER என்று  சப்ஜெக்ட்டில் குறிப்பிட்டு தங்கள் பெயர் மற்றும் மொபைல் நம்பருடன் நமக்கு simplesundar@gmail.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.

வருபவர்கள் எண்ணிக்கையை பொறுத்து டூ-வீலரா அல்லது கால்-டாக்சியா என்பது முடிவு செய்யப்படும்.

————————————————————————————————————————
பரமஹம்ச யோகானந்தரின் நேரடி சீடர் சுவாமி க்ரியானந்தா சென்னையில் பேசுகிறார்!

ஜனவரி 20, ஞாயிறு அன்று மாலை 5.30 அளவில் சென்னை, மியூசிக் அகாடமியில் பரமஹம்ச யோகானந்தரின் நேரடி சீடர் சுவாமி க்ரியானந்தா “Religion in the New Age” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவிருக்கிறார். இதற்கு அனுமதி இலவசம்.

காலை படப்பை சென்று மதியத்திற்குள் அவரவர் வீடு திரும்பிவிட்டு பின்னர் மாலை நம் நண்பர்களுடன் மேற்சொன்ன நிகழ்ச்சிக்கு  செல்லவிருக்கிறோம். வர விருப்பம் உள்ளவர்கள் நம்முடன் இணைந்துகொள்ளலாம்.
————————————————————————————————————————

[END]

6 thoughts on “படப்பை மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் – விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்!

 1. சுந்தர்ஜி அவர்களுக்கு ,

  கோயிலின் அறிமுகம் படங்கள் மிகவும் அருமை .
  தங்களின் சேவை மகத்தானது .இறைவன் தங்களை மிகவும் நேர்த்தியாக பயன்படுத்துகிறார் .தாங்கள் மிகவும் பாக்கியசாலி .
  வாழ்த்துக்கள் . நன்றி நன்றி .

  மனோகரன்.

 2. “OM KRIYA BABAJI NAMAH OM”

  I am coming for both anna:)
  Thanks for organising such a wonderful and useful trip:)!!
  Let Maha-avtar BABAJI shower his grace on the entire world!!
  Slowly people will understand your decision to move to a bigger platform!!
  Kaalam badil sollum:)
  Hats off for the never say die attitude you have–its a god given gift:)

  Regards
  R.HariHaraSudan
  “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”..

 3. சென்ற முறை நான் வந்தேன் ஆனால் இந்த முறை சபரிமலை சென்றதால் வர முடியவில்லை ,சீக்கிரம் அந்த புகைபடங்கள மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *