Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, July 13, 2024
Please specify the group
Home > Featured > சிவபெருமான் தந்த வரமும் சனீஸ்வரனின் மகத்துவமும் – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

சிவபெருமான் தந்த வரமும் சனீஸ்வரனின் மகத்துவமும் – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

print
ருவர் முன்ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால், தனது தசையின் போது அவருக்கு அதிர்ஷ்டத்தை தருவதும், அதுவே பாபங்கள் செய்திருந்தால் பல்வேறு சோதனைகள் துன்பங்களை கொடுத்து அந்த ஜீவனை நல்வழிப்படுத்துவதுமே சனீஸ்வரனின் கடமையாகும். இது சனி பகவானுக்கு ‘கிரக’ அந்தஸ்தை கொடுத்தபோது சிவபெருமான் அவருக்கு இட்ட கட்டளை. இதில் அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இடமே இல்லை.

திருநள்ளாறு - பிராணாம்பிகை உடனுறை தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில் நுழைவாயில்
திருநள்ளாறு – பிராணாம்பிகை உடனுறை தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில் நுழைவாயில்

அதே சமயம், தன்னை சரணடைந்தவர்களின் பாபங்களை சர்வேஸ்வரன் நோக்கியே திருப்பிவிட்டு, அவரிடம் மன்னிப்பை பெற்று தருவார். எனவே தான் சனீஸ்வரருக்கு தனியாக பரிகாரங்கள் செய்யும் வழக்கம் உண்டானது. நாமே சர்வேஸ்வரனிடம் நேரிடையாக பரிகாரங்கள் செய்யலாம் என்றாலும் ஈஸ்வரனின் பிரதிநிதியாகிய சனீச்வரன் மூலம் பரிகாரங்கள் செய்யும்போது அது தங்கு தடையின்றி அவரை சுலபமாக சென்றடைகிறது. இது தான் உண்மை. (இது பற்றி விரிவான பதிவை பின்னர் அளிக்கிறோம். அது உங்களுக்கு பல உண்மைகளை உணர்த்தும்!)

ஈஸ்வரன் கொடுத்த வரத்தின் சக்தி!

சனி பகவான் பார்வைக்கு தப்பியவர்கள் யாரும் கிடையாது. காரணம் சிவபெருமான் கொடுத்த வரத்தின் சக்தி அப்படி. சிவபெருமான் கொடுத்த வரங்கள் பல, அவருக்கே எதிராக பல தருணங்களில் திரும்பிய கதையெல்லாம் நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். (உ.ம். பஸ்மாசுரன்).

இது பற்றி பார்வதி ஒரு முறை ஈஸ்வரனிடம் கேட்டாள்… “சுவாமி உங்களிடம் வரம் பெறுபவர்களே உங்களுக்கு எதிராக சில சமயம் திரும்பிவிடுகிறார்களே… அது தவறல்லவா? அவர்களை ஏன் நீங்கள் தண்டிப்பதில்லை?”

அதற்கு பதிலளித்த ஈஸ்வரன், “தேவி, நான் வரங்களை அளிக்கும்போது, இந்த வரம் என்னை கட்டுப்படுத்தாது என்று எப்படி சொல்லமுடியும்? அப்படி சொன்னால் என் வரத்தின் மகிமையே கேள்விக்குரியதாகிவிடுமே…! என்னை விட நான் அளிக்கும் வரம் சக்தி மிக்கது என்பது எனக்கு பெருமை தானே?” என்றாராம். என்ன ஒரு அணுகுமுறை பார்த்தீர்களா நம் தலைவருக்கு….

ஒருமுறை தேவர்களின் தலைவனான இந்திரனை சனி பிடிக்கும் காலம் வந்தது. அது பற்றி அறிந்த தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று, “நான் தேவலோகத்துக்கு அதிபதி. நீ என்னை பிடிக்கக்கூடாது” என்றான். “அதெப்படி முடியும்? விருப்பு வெறுப்பின்றி அனைவரையும் அவரவர் கிரக பலன்களுக்கு ஏற்ப நான் பிடிக்கவேண்டும் என்று ஈஸ்வரன் கட்டளையிட்டிருக்கிறாரே…” என்றார் சனி.

நளதீர்த்தம்
நளதீர்த்தம்

தன்னை சனி பிடிக்கும் நேரத்தை மட்டுமாவது தெரிந்துகொண்டால் ஏதேனும் உபாயம் செய்து தப்பிக்கலாம் என்று கருதிய தேவேந்திரன், “என்னை பிடிக்கவிருக்கும் நேரத்தை மட்டுமாவது சொல்லு போதும்” என்று கேட்டுக்கொண்டார்.

சனியும் “இந்த நேரத்தில், இன்ன தேதியில் உன்னை பிடிக்கப்போகிறேன்” என்று கூறினார்.

இந்திரன் சனி பிடிக்கக்கூடிய அந்த குறிப்பிட்ட நேரம் வந்ததும் ஒரு மூஷிகமாக மாறி (பெருச்சாளி) பூவுலகில் ஒரு சாக்கடை பொந்துக்குள் பதுங்கிக்கொண்டான். ‘சனி இங்கு வரமாட்டார்’ என்பது அவர் எண்ணம்.

தனக்கு சனியின் பார்வை நீங்கியதும் வெளியே வந்த தேவேந்திரன் சனியிடம் பெருமையாக “உன் பார்வையில் இருந்து எப்படி தப்பினேன் பார்த்தாயா?” என்று எகத்தாளமாக சிரித்தார்.

“தேவலோகத்தை ஆளும் நீ எனக்கு பயந்து பூவுலகில் ஒரு சாக்கடைக்குள் சென்று பதுங்கிக்கொண்டாயே அதற்கு காரணமே என் பார்வை தான்” என்றார்.

சனி தசையை  நாம் திருந்தவும், நம்மை திருத்திக்கொள்ளவும் ஒரு பெரிய வாய்ப்பாக கருதி, சனி பகவானிடம் பரிபூரண சரணாகதி அடைந்து, உரிய பரிகாரங்களை செய்து வந்தால் நன்மையே விளையும்.

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!

==================================================================

* நமது பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்பி இதுவரை இடம்பெறாதவர்கள் மீண்டும் நமக்கு நினைவூட்டவும்.

** பிரார்த்தனை நிறைவேறிய வெற்றிக் கதைகள் விரைவில் வெளியிடப்படும்.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : வட திருநள்ளாறு ஆலயத்தில் பல ஆண்டுகளாக குருக்களாக பகவத் சேவை செய்து வரும் சுரேஷ் சிவாச்சாரியார்.

திரு.சுரேஷ் சிவாச்சாரியார் – சனீஸ்வரருக்கு லட்சக்கணக்கான அர்ச்சனைகளையும் பல்லாயிரம் அபிஷேகங்களையும் செய்த பெருமையுடையவர்.

சுரேஷ் சிவாச்சாரியார் அவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோவிலில் சனீஸ்வரனுக்கு பூஜை செய்துவருகிறார். இதுவரை பல லட்சம் அர்ச்சனைகளையும் பல்லாயிரக்கணக்கான அபிஷேகங்களையும் சனீஸ்வரனுக்கு செய்திருக்கிறார். எத்தனை பெரிய சேவை…!

Suresh Gurukkalநாளை சனிக்கிழமை (21/03/2015) அன்று வட திருநள்ளாறு கோவிலில் நடைபெறவிருக்கும் நமது விசேஷ அர்ச்சனை மற்றும் அபிஷேகத்தை சிறப்பான முறையில் நடத்தி தருவதாக கூறியிருக்கிறார். நமது பிரார்த்தனை கிளப் பற்றி குறிப்பிட்டு இந்த வார சனிதசை விசேஷ பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். அந்த நேரம் (ஞாயிறு மாலை 5.30 – 5.45) சனி பகவான் முன்னிலையிலேயே தாம் பிரார்த்திப்பதாக கூறியிருக்கிறார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

அவருக்கு சனிபகவான் எல்லா நலன்களையும் வளங்களையும் வாரி வழங்கி அவர் அர்ச்சனை செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டிய வரங்களை தந்தருளவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

Also check : வட திருநள்ளாறு – சனிப்ரீதி செய்ய இதோ சென்னையில் ஒரு திருநள்ளாறு!

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

இந்த வாரம் பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருக்கும் அனைவரை பற்றியும் ஒரு சிறு குறிப்பு.

முதல் கோரிக்கையை சமர்பித்திருப்பவர் திருமதி.உமா வெங்கட் அவர்கள். அவரைப் பற்றி சொல்லவேண்டியதில்லை. அனைத்து பதிவுகளையும் படித்து முதல் நபராக தந்து கருத்துக்களை அளித்து நம்மை உற்சாகப்படுத்தி வருபவர். நமது தளத்தின் நிகழ்ச்சிகள், விழாக்கள் என அனைத்திலும் கூடுமானவரை தவறாமல் கலந்துகொள்பவர். உழவாரப்பணி குழு உறுப்பினர்களில் ஒருவர்.

அடுத்து ராதாமணி அவர்கள். ரைட்மந்த்ரா தொடங்கிய காலம் முதல் வாசகி. கோவையிலிருந்தாலும் எத்தனையோ சிரமங்களுக்கிடையே நமது அழைப்பை ஏற்று டிசம்பரில் நடைபெற்ற நமது தளத்தின் ஆண்டுவிழாவுக்கு வந்திருந்து சிறப்பித்தார். நமது கருத்துக்களை படிப்பதோடு மட்டுமல்லாமல் அதை நடைமுறைபடுத்தி வருபவர்களில் ஒருவர்.

அடுத்து… சனிப்பெயர்ச்சியால் கணவரை பிரிந்துவிட்டதாக கூறும் ஊர் பெயர் வெளியிட விரும்பாத சகோதரியும் தளத்தின் தீவிரமான வாசகியர்களில் ஒருவர். தனக்கு சனி தசை நடப்பதை கூட எவ்வளவு அழகாக ‘சனியின் அருட்பார்வை’ என்று குறிப்பிட்டிருக்கிறார் பாருங்கள். இந்த… இந்த ஒரு பக்குவம் தான் அனைவரிடத்திலும் நாம் எதிர்பார்ப்பது. அவரது நல்ல உள்ளத்திற்கும் குணத்திற்கும் ஒரு குறையும் வாராது. அனைத்தும் நல்லபடியாகவே முடியும் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது.

அடுத்து சொத்து பிரச்சனையில் ஏமாற்றப்பட்டு தனது சகோதரர் மற்றும் சகோதரியின் உடல்நலம், வேலை ஆகியவை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் சகுந்தலா அவர்கள் தளத்திற்கு புதியவர் என்று கருதுகிறோம். அவருடைய குடும்பத்தினரின் பிரச்சனைகள் யாவும் தீர்ந்து அவர்கள் சந்தோஷமாக சௌக்கியமாக வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.

அடுத்து தற்போது வளைகுடா நாடு ஒன்றில் பணியாற்றுவதாக கூறியிருக்கும் பெயர் வெளியிட விரும்பாத வாசகர் தனக்கு விரும்பிய இடத்தில நல்ல சம்பளத்துடன் நிம்மதியான வேலையும் குடும்பத்தினரின் சுபிக்ஷத்தையும் கோரியிருக்கிறார். நிச்சயம் நல்லதே நடக்கும். கேட்டது கிடைக்கும்.

அடுத்து சந்தான பாக்கியத்துக்காக கோரிக்கை சமர்பித்திருக்கும் வாசகி மஞ்சு கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே நமது பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பித்திருக்கிறார். இருப்பினும் தற்போது அவருக்கு சனி தசை நடந்து வருவதால் மீண்டும் கோரிக்கை சமர்பித்திருக்கிறார். ஒரு முறை நமது பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை வைத்தலே திருவருளும் குருவருளும் நிச்சயம் கிடைக்கும். இந்நிலையில், நமது பிரார்த்தனையில் நம்பிக்கை வைத்து மீண்டும் கோரிக்கை சமர்பித்திருக்கிறார். அவரது நம்பிக்கை வீன்போகக்கூடாது. அவர் விரும்பியதை போன்றே அழகான ஆரோக்கியமான குழந்தை ஒன்றை அவர் பெற இறைவனை வேண்டுவோம்.

அடுத்து கடைசியாக திருமதி.பிரபா. சமீபத்தில் தான் இவர் நமது தளத்திற்கு அறிமுகமானார். ஆனால் தளத்தின் தீவிர வாசகி என்பது மட்டும் தெரியும். ஏற்கனவே தனது சந்தான பாக்கியத்துக்காக கோரிக்கை சமர்பித்திருக்கும் இவர் தற்போது தனது பெற்றோர் மற்றும் சகோதரரின் நலனை வேண்டி பிரார்த்தனை சமர்பித்திருக்கிறார். தளத்தின் வளர்ச்சியில் நிச்சயம் தொடர்ந்து உதவுவதாக கூறும் இவர் அதை செயல்படுத்தியும் வருகிறார். நமது தளத்தின் விருப்ப சந்தாதாரர்களில் ஒருவர். இவர் நல்ல மனதிற்கும் உதவும் உள்ளத்திற்கும் ஒரு குறையும் வாராது என்பது உறுதி.

இதோ நாட்டைப் பற்றி கவலைப்பட ஒரு நல்லுள்ளம்…

அடுத்து பொதுப் பிரார்த்தனையை அனுப்பியிருக்கும் திரு.நந்தகுமார் குருசாமி அவர்கள். நம் நாட்டைப் பற்றி கவலைப்பட நம் வாசகர்களில் ஒருவர் நிச்சயம் இருக்கிறார் என்பதை எண்ணும்போது உண்மையில் பெருமிதம் கொள்கிறோம். மற்றவர்களுக்கும் அக்கறை உண்டு என்றாலும் பிரார்த்தனை கிளப்பில் வெளியிட மெனக்கெட்டு கோரிக்கையை டைப் செய்து அனுப்பியிருக்கும் அவரது தேச நலன் குறித்த அக்கறையை நாம் பாராட்டுகிறோம். (அவர் ஆங்கிலத்தில் அனுப்பியிருப்பதை நாம் தமிழில் மொழி பெயர்த்து தந்திருக்கிறோம்.)

நாளிதழ்களில் இது போன்ற செய்திகள் சர்வசாதாரணமாகிவிட்டது
நாளிதழ்களில் இது போன்ற செய்திகள் சர்வசாதாரணமாகிவிட்டது

அவர் பட்டியலிட்டுள்ள பிரச்சனையில் தற்போது கற்பழிப்பு பிரச்சனை நம் நாட்டில் உச்சத்தில் உள்ளது. நாளிதழை திறந்தால் தினசரி ஒரு GANG RAPE பற்றியாவது செய்தி கண்ணில்படுகிறது. சில செய்திகளை படிக்கும்போது சம்பந்தப்பட்ட பெண் எந்தளவு துடித்திருப்பார் என்பதை நினைக்கும்போது இதயமே நொறுங்கிப்போகிறது. இந்த கற்பழிப்பில் சிக்கி பாதிக்கப்படுகிறவர்களில் பெரும்பாலானோர் 18 வயது கூட தாண்டாத பெண்களே என்பது தான் கொடுமை.

==================================================================

ஒரு நிமிடம் ப்ளீஸ்…

மது தளத்தின் வாசகராக / வாசகியாக இருந்து நமது பணிகளில் உறுதுணையாக விளங்குவது என்பதே எத்தனை பெரிய அறம் என்று இறைவனுக்கு தெரியும். எனவே சம்பந்தப்பட்ட எவரும் எது வந்தபோதும் கலங்கவேண்டாம். என்ன சோதனை வந்தாலும் எல்லாம் நன்மையிலேயே முடியும். சோதனைகள் உங்களை பக்குவப்படுத்தி மேன்மைபடுத்தவே செய்யும்.

நம் தள வாசகர்கள் அனைவருக்கும் ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். நீங்கள் அனைவரும் ஒரு வித பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிறீர்கள். காலம் அதை உங்களுக்கு உணர்த்தும்.

நமது பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பித்து அது நிறைவேறிய கதையெல்லாம் ஒவ்வொன்றாக நமக்கு வந்துகொண்டிருக்கிறது. ஒருவரது கோரிக்கை இரண்டு ஆண்டுகள் கழித்து நிறைவேறியிருக்கிறது. எதற்கு இதை குறிப்பிடுகிறோம் என்றால், சற்று பொறுமையாக இருங்கள். ஒவ்வொரு வாரமும் பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையில் கலந்துகொண்டு மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்து வாருங்கள். உங்கள் கோரிக்கையை இறைவன் ஒரு நாள் வெகு சிறப்பாக நிறைவேற்றி வைப்பான். (பிரார்த்தனை நிறைவேறிய கதைகளை தனிப்பதிவாக அளிக்கவேண்டும். நேரமின்மையால் அது தாமதமாகிறது. விரைவில் அளிக்கிறோம்.)

மேலும் இன்னொரு முக்கிய விஷயம்… நம் தளத்திற்கு உதவுபவர்கள் உதவாதவர்கள் என்கிற பேதமெல்லாம் நமக்கு கிடையாது. அப்படி இருந்தால் அது ஒரு வகையில் சுயநலமே என்று நமக்கு தெரியும். ஆகையால் தான் சனி தசையில் பிரச்சனை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் பிரார்த்தனைக்கு கோரிக்கையும் பெயர் ராசி நட்சத்திர விபரத்தையும் அனுப்புமாறு கேட்டுக்கொண்டோம். உங்கள் அனைவருக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்க எப்போதும் நாம் இருக்கிறோம். கவலை வேண்டாம்.

இது தவிர நாளை நடைபெறவிருக்கும் விசேஷ அர்ச்சனை + அபிஷேகத்திற்கு பல வாசகர்கள் தங்கள் பெயர், ராசி நட்சத்திரத்தை அனுப்பியிருக்கிறார்கள். அனைவருக்கும் நாளை அர்ச்சனை செய்யப்படும்.

* இந்த வார பிரார்த்தனை கிளப் பதிவு சற்று பெரியது, முக்கியமானது என்பதால் படிக்கும் அனைவருக்கும் பிரார்த்தனை சமர்பித்திருக்கும் சம்பந்தப்பட்டவர்களின் கோரிக்கையும் பெயர்களும் பிரார்த்தனை நேரத்தில் நினைவில் இருக்கவேண்டும் என்பதால் ஒரு பேப்பரில் சிறு குறிப்பு போல எழுதி வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பிறருக்காக பிரார்த்தனை செய்யும் நல்ல உள்ளங்களுக்கு இறைவனின் அருள் என்றும் உண்டு.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

==================================================================

1) நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் அனைத்திற்கும் மேலாக மன நிம்மதியும் வேண்டும்!

ரைட்மந்த்ரா ஆசிரியர் சுந்தர் அவர்களுக்கும் & வாசகர்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள்.

நான் டிசம்பர் மாத சனி பெயர்ச்சியிலிருந்து மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். என்ன தான் எல்லா பதிவுகளையும் படித்து நல்ல விஷயங்களை உள்வாங்கிக் கொண்டாலும் மீண்டும் சுவரில் அடித்த பந்து போல் பழைய நிலைக்கே செல்கிறது என் மனம்.  மிகுந்த பய உணர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறேன்

இந்த சனி பெயர்ச்சி எனக்கு இரண்டாவது சுற்று. ஏழரை வருடங்கள் எப்படி தாக்கு பிடிப்பேன் என்று தெரியவில்லை. எந்த காரியம் எடுத்தாலும் தடங்கலாக உள்ளது. பண விரயம் மிகவும் அதிகமாக உள்ளது.  தேவை இல்லாத பழிச்சொல், அவமானம் இந்த சனி பெயர்ச்சியில் ஏற்பட்டுள்ளது.

என் வாழ்கையில் அரை நூற்றாண்டு கழியப் போகிறது.  எஞ்சிய வாழ்க்கையாவது சந்தோஷமாக கழிய அந்த ஈசன் அருள் புரிய வேண்டும்.

என் நிம்மதிக்காகவும் சந்தோஷத்திற்காகவும், ஆரோக்கியத்துக்காகவும் என் மகன் ஹரீஷ்ஷின் நல்ல எதிர்காலத்திற்காகவும் நம் வாசகர்கள் பிரார்த்தனை செய்யவும்.

என் மகனுடன் சனிக்கிழமை காலை நடைபெறவிருக்கும் விசேஷ அர்ச்சனை + அபிஷேகத்தில் கலந்துகொள்வேன்.

நன்றி
உமா வெங்கட்

==================================================================

2) சோதனை மேல் சோதனை… போதும் சனி பகவானே!

அன்புள்ள சுந்தர்ஜி,

நம் தள வாசகர் என்ற முறையில் மற்ற அனைவர்க்கும் வேண்டுவது தான் கடமை என்று நினைப்பது உண்டு. மற்றும் நமக்கு  இறைவன் துன்பங்கள் கொடுப்பது நம்மை பக்குவப்படுத்துவதாகவே என்று எண்ணிக்கொண்டு பலவற்றை கடந்து வந்துவிட்டேன்.  இதற்கு பலமுறை நம் தள பதிவுகள் ஆறுதலாகவும், வழிகாட்டியாகவும் இருந்துள்ளது என்பது மிகையாகாது!!

ஆனால் சனி பகவானிடம் விசேஷ பிரார்த்தனை என்றதும் எனக்கு ஒரு வர பிரசாதமாகவும், நான் இப்பொது உள்ள நிலை மிக கடினமான ஒரு சூழல் என்பதாலும் இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கிறேன்.

என் மகள், மகன், நான் என வரிசையாக ஏழரைச்சனித் தாக்கத்தில் ஏற்கனவே 6 வருடங்கள் கழித்து உள்ளோம். இந்த 6 வருடத்தில் கணவர் உட்பட இழக்கக் கூடாத அனைத்தும் இழந்து, தற்போது குறிப்பாக டிசம்பருக்கு பிறகு  ஒரளவு மீண்டும் உயிர் பெற்று வந்திருக்கிறேன்.

இருந்தபோதும் துலாம் ராசி என்றவகையில் எனக்கு கிட்டத்தட்ட இன்னும் 3 வருடம் 71/2 சனியின் தாக்கம் இருக்கிறது.

தற்சமயம் பணியில் என்னுடைய தந்தை போன்ற பழைய முதலாளி அவர்கள் விபத்தில் இறந்ததால், பணிச்சுமை அதிகரித்துவிட்டது. அவர்  இல்லாத வருத்தம்,  அடிக்கடி குடும்பத்தில் அனைவருக்கும் உடல் நலன் பாதிப்பு மற்றும்  சகோதரரின் (33)  திருமண தாமதம் என பல வருத்தங்கள்  தொடர்கின்றன.

ஆரம்பத்திலேயே என் திறமைக்கேற்ற ஊதியம் எனக்கு கிடைத்தது இல்லை. இருந்தபோதும் முதலாளி என் தந்தையின் நண்பர் என்பதால் பாதுகாப்பிற்கு அங்கு பணிக்கு சென்றுக் கொண்டு இருக்கிறேன். பொருளாதாரம் என்ற வகையிலும் எனக்கு சிரம ஜீவனம் தான். பழைய முதலாளி ஒரளவு இருந்த வகையில் வேலை சற்று சுதந்திரமாக இருந்தது. ஆனால் இப்போது அவரின் பணியிலும் பாதி நான் பார்த்து புது முதலாளியிடம் ஒப்படைக்கிறேன்.  இந்த நிலை மாறவும்,  எனக்கு எல்லா வகையிலும் வாழ்வில் ஒரு நல்ல திருப்பம் வரவும் ரைட்மந்த்ரா வாசகர்கள் அனைவரையும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மஹா பெரியவா உள்ளிட்ட அனைத்து மஹான்களின் அருளாலும், திருவருளாலும் நம் தளமும், வாசகர்களும் வாழ்க வளமுடன்!!

– ராதாமணி,
கோவை

==================================================================

3) இத்தனைக்கு பிறகும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது!

ரைட்மந்த்ரா ஆசிரியர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வணக்கம்.

திருநள்ளாறு செல்ல தற்போது  4 முறை வாய்ப்பு வந்தும் என்னால் செல்ல முடிய வில்லை. தங்களின் இந்த பதிவு என்னைப் போன்ற சனி பெயர்ச்சியால் பாதிக்கப் பட்ட ஒவ்வொருவருக்கும் மிகுந்த நட்பலன்களைத்  தரும்.

2011 டிசம்பர் சனி பெயர்ச்சிக்கு சில மாதங்களுக்கு முன்பே வீட்டில் சின்ன சின்ன பிரச்சனைகள். 2012 லிருந்து நானும் அவரும்  சிறுது சிறிதாக பிரிந்து 2013 இல் முற்றிலுமாக பிரிந்து விட்டோம். 2014 இல் இருந்து கோர்ட் கேஸ் போய் கொண்டிருக்கிறது.

2014 டிசம்பரிலிருந்து சனி பகவான் எனது ராசிக்கு ஜென்ம சனியாக உள்ளார். என் கணவருடன் இருந்து வேலையைப் பிரித்து, ஊரை விட்டு பிரித்து, கடைசியில் அவரையே என்னிடமிருந்து பிரிக்கும் அளவிற்கு எனது நேரம் நடந்து கொண்டிருக்கிறது.

இன்னும் 5 வருடங்கள் சனிபகவானின் அருட்பார்வைகள் எனக்கு இருக்கும் ஒரு நல்ல மாற்றத்தை சனி பகவான் எனக்கு கட்டாயம் தருவார்.

வரும் சனிக் கிழமை தெலுங்கு வருட பிறப்பு. நாங்களும் எங்கள் அம்மாவின் குல தெய்வக் கோவிலுக்கு போவதாக உள்ளோம்.

தங்களின் இந்த உதவிக்கு மிக்க நன்றி

– பெயர் ஊர் வெளியிட விரும்பாத வாசகி

==================================================================

4) பறிபோன சொத்து & வேலை

சொத்து வழக்கு ஒன்றில் அநீதி இழைக்கப்பட்டு அதனால் என் சகோதரர் திரு.வெங்கடாசலம் அவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார். எங்கள் சொத்து எங்கள் கையைவிட்டுப் போனது மட்டுமல்ல உரிய விலையும் கிடைக்காது ஏமாற்றப்பட்டுவிட்டோம். மேலும் பத்தாண்டுகளுக்கும் மேல் எங்களை அலைகழித்த வழக்கால் பல செலவுகள் ஏற்பட்டு தற்போது அனைத்தையும் இழந்து நிற்கதியாய் குடும்பம் நிற்கிறது.

இதனால் என் சகோதரருக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு வயிற்று வலியால் துடித்து வருகிறார். சில நேரங்களில் எனக்கு வாழவே பிடிக்கவில்லை. என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன் என்று விரக்தியில் வேதனையில் கூறுகிறார்.

அதே போல என் சகோதரி வசந்தாவுக்கும் துரோகத்தினாலும் புனையப்பட்ட பொய்களினாலும் வேலை போய்விட்டது. அண்ணாவும் தங்கையும் தற்போது குடிதண்ணீருக்கு கூட வழி இல்லாத ஒரு வீட்டில் கோவை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார்கள். நான்கு கி.மீ. தூரம் சென்று தான் தண்ணீர் எடுத்து வரவேண்டும்.

அடுத்தடுத்து இப்படி ஏற்பட்ட சோதனைகளால் அவர்கள் இருவருக்குமே கடவுள் நம்பிக்கை போய்விட்டது. ஆனால், நம் பிரார்த்தனை கிளப் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

இருவரின் பிரச்சனைகள் தீர்ந்து அவர்கள் சௌக்கியமாக சந்தோஷமாக வாழ பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

– என்.சகுந்தலா,
சென்னை.

==================================================================

5) நல்ல வேலை வேண்டும் & குடும்பத்தில் சுபிக்ஷம் நிலவ வேண்டும்!

அனைவருக்கும் வணக்கம்.

2000 வது ஆண்டு சனிப்பெயர்சியின்போது இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் அதற்கு பிறகு வேறொரு மாநிலத்தில் பணி நிமித்தம் செட்டிலாகிவிட்டேன். தற்போது வளைகுடா நாடு ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன்.

தற்போது எனக்கு ஏழரைச் சனி நடந்து வருகிறது. ஏழரைச் சனி என்னென்ன செய்யும் என்று தான் உங்களுக்கு தெரியுமே.

எனக்கு உடனடி தேவை நல்ல சம்பளத்துடன் வாறு இடத்தில நல்ல வேலை ஒன்று.

அதே போன்று என் மனைவி, மகன், மகள் ஆகியோரும் சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் திகழ்ந்து அவரவர் கடமைகளை செவ்வனே நிறைவேற்றி எங்கள் குடும்பத்திற்கு பெருமை தேடித் தரவேண்டும்.

– பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.

=================================================================

6) Please pray for Santhana Prapthi and Parent’s health

Dear Sundar sir and Rightmantra friends,

I am Manju Krishnamurthy from Tirupur. Previously i submitted my prayer for child birth. With blessings of Maha Periyava i was conceived. But the God didn’t shower his blessing on me fully. Sadly my baby died at the time of delivery. I trusted Maha Periyava completely that he will be with me always. But now i feel depressed very much which leads to me negative thinking and some times i don’t want to live. Please pray for me to overcome this trying times and to be blessed with a child.

Also i request you all to pray for my parents health too.

Father : Thiru.Arumugam Mother : Thirumathi.Vadivambal Arumugam

Thank you all….

Regards
Manju Krishnamurthy,
Tiruppur

=================================================================

6) Family prosperity and health!

Dear Sir,

For the Sani Peryarchi please include my parents/brothers names for archanai in Vada Thirunallar.

For my brother who is in Engineering 2nd year it is Ashtama Sani now. And for my parents it is in 5th place but they need all the prayers since their health is not good.

Following are the details.

Father’s Name – Mr.Viswanathan
Mother’s Name – Mrs.Uma Viswanathan

Brother’s Name – Sankaranarayanan @ Ashwin
Thanks for the great work you are doing Sir.

Thanks!!

Prabha,
Hyderabad.

=================================================================

பொது பிரார்த்தனை

காற்றில் பறக்கும் சட்ட ஒழுங்கு & தனிமனித ஒழுக்கம்!

ரைட்மந்த்ரா வாசகர்கள் மற்றும் ஆசிரியருக்கு வணக்கம்.

உங்கள் வட திருநள்ளாறு விசேஷ பிரார்த்தனை பற்றிய பதிவை பார்த்தேன். சனி தசையால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் வாசகர்களுக்காக நீங்கள் இதை செய்யவிருக்கிறீர்கள். என்னுடைய கோரிக்கைகள் சிலவற்றை அனுப்பியிருக்கிறேன். இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

1) குழந்தைகள் கடத்தல் – இப்போதெல்லாம் குழந்தைகள் காணாமல் போவதும் கடத்தப்படுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதில் ஈடுபடுகிறவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். குழந்தைகள் கடத்தல் முடிவுக்கு வரவேண்டும். பெற்றோர்களை பிரிந்த குழந்தைகள் அனைவரும் மீண்டும் பெற்றோரிடம் சேரவேண்டும்.

2) சாலை விபத்து – அஜாக்கிரதையினால் பல சாலை விபத்துக்கள் நடக்கிறது. அடிபட்டு கிடப்பவர்களை காப்பாற்றவேண்டும் என்கிற சிந்தனை கூட இல்லாமல் ‘நமெக்கென்ன’ என்கிற மனப்பான்மையே தற்போது மேலோங்கி நிற்கிறது.

3) தீவிரவாதம் – தீவிரவாதம் தற்போது உச்சத்தில் இருக்கிறது. குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதம். ஈவு இரக்கமின்றி கழுத்தை அறுப்பது, வெட்டுவது என்று இவர்கள் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அணு ஆயுத அச்சுறுத்தல் வேறு.

4) கற்பழிப்பு – கற்பழிப்பு குற்றங்கள் தற்போது நாட்டில் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் நடக்கும் கற்பழிப்புக்கள் மட்டும் கவனைத்தை ஈர்க்கிறது.

மேற்கூறிய சமூக அவலங்கள் தீர உங்கள் பிரார்த்தனையில் கோரிக்கை வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

– நந்தகுமார் குருசாமி,
ரைட்மந்த்ரா வாசகர்

==================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgசனிதசை நடந்து வரும் நமது வாசகர்கள் மற்றும் பிரார்த்தனைக்கு இங்கு கோரிக்கை சமர்பித்திருப்பவர்கள் அனைவருக்கும் சனி பகவான் தனது சோதனையை விலக்கிக்கொண்டு, அருட் கடாட்சத்தை இனி வாரி வழங்கவேண்டும். அவர்கள் இழந்தது அனைத்தும் திரும்ப பெறவேண்டும். சோதனைகள் அனைத்தும் சாதனைகளாக மலரவேண்டும். மேலும் இந்த நாட்டை பீடித்திருக்கும் கற்பழிப்பு, தீவிரவாதம், சாலை விபத்து, குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட சமூக அவலங்கள் அவலங்கள் யாவும் முடிவுக்கு வந்து புனித பூமியாம் பாரதம் சுபிக்ஷமாக அமைதிப் பூங்காவாக திகழவேண்டும்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.சுரேஷ் சிவாச்சாரியார் அவர்கள் மேலும் மேலும் சனீஸ்வரனுக்கு தொண்டு செய்து, ஆலயம் நாடி வரும் அனைவருக்கும் எல்லாம் வல்ல சனீஸ்வரனின் அருளைப் பெற்றுத் தரவேண்டும். அவரும் தனது குடும்பத்தினருடன் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழவேண்டும்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : மார்ச் 22, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : சாதனைச் சிகரம் ‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ புதுக்கோட்டை ராதாபாய் அவர்கள்.

21 thoughts on “சிவபெருமான் தந்த வரமும் சனீஸ்வரனின் மகத்துவமும் – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

 1. சனி பகவானை பற்றய அழகிய பதிவு. சனீஸ்வரனின் பிடியிலிருந்து யாவரும் தப்ப முடியாது என்பதை அறிந்து கொண்டேன். திரு நள்ளாறு போட்டோவை பார்த்த பொழுது நான் எப்படியும் ஒரு முறை அங்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன்.

  இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை எற்கும் திரு சுரேஷ் சிவாச்சாரியார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

  இந்த வாரம் என்னுடைய கோரிக்கையை இங்கு பதிய வைத்ததில் தங்களுக்கு மிக்க நன்றிகள் பல.

  இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் ராதா, மஞ்சு , பிரபா, சகுந்தலா மற்றும் பெயர் வெளியிட விரும்பாத வாசகிகளுக்காக பிரார்த்தனை செய்வோம். மற்றும் பொது கோரிக்கைக்காக பிரார்த்தனை செய்வோம்

  எனக்காக பிரார்த்தனை செய்யும் நல் உள்ளங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .

  இறைவன் நம் கோரிக்கையை கண்டிப்பாக செவி சாய்ப்பார்.

  லோகா சமஸ்தா சுகினோ பவந்து

  ராம் ராம் ராம்

  நன்றி
  உமா வெங்கட்

  1. Namaskaram Uma Venkat.
   Thank you for praying for my brother and sister. It is a miracle that my brother got completely cured of his chronic severe stomach pain. He wanted to end his life due to unbearable stomach pain. Now he regained his faith in God. This miracle is the fruit of Kootu prarthanai, ( People praying for others).
   Thanks again with best wishes
   N Sakuntala

 2. சகுந்தலா அவர்கள் சகோதர சகோதரி நிம்மதி அடைய மஹா சுவாமிகள் திரு பாதம் பணிவோம். மிக வேதனை பட்டது அவர் குடும்ப நிலை பற்றி அறியும் போது. மற்ற நண்பகர்கள் அனைவரும் நிம்மதி அடைய கருணை கடல் ஆன மஹா சுவாமிகள் திரு பாதம் பணிந்து வேண்டுவோம்.

  கற்பழிப்பு குற்றங்கள் அறவே நீங்க மஹா சுவாமிகள் திரு பாதம் பணிவதை தவிர வேறு வழி எல்லை. மிக மிக கொடுமை கற்பழிப்பு. இதற்கு மன்னிப்பு கிடையாது.

  அந்த கிறிஸ்துவ மூதாட்டி அவர்களுக்கு நேர்ந்த கொடுமை மிக மிக வருத்தத்தை உண்டாக்கியது. எல்லோர் மனதை ரணம் அடைய செய்த நிகழ்வு.

  அந்த இயேசு பகவான் கருணைஇனால் அவர் நலம் பெற நாம் வேண்டுவோம்.

  அந்த மூதாட்டி அந்த கொடியவர்கலை மன்னித்தேன் என்றார். அந்த பதர்களுகாக அவர் திரு பாதம் பணிந்து நாம் மன்னிப்பு வேண்டுவோம்.

  மஹா சுவாமிகள் கருணை நிரம்ப வேண்டும்.

  1. Namaskaram SivaSubramanian Sir,

   I am deeply touched by your kind thought. Please accept my sincere thanks to you for praying for us. You will be very happy to know that my brother is completely cured of his stomach pain without taking any medication. This is a miracle due to the well wishers like you praying for us.
   My very best regards.
   N Sakuntala

 3. //சனிஸ்வரன் இல்லை சனைசரண் //

  சனை=மெதுவாக செல்லுதல்

  வேதம்,புராணம் சனிஸ்வரன் என்று பெயருக்கு சான்று இல்லை ….சனைசரண் என்று தான் உள்ளது …காலபோக்கில் பெயர் மற்றம் ஆகி உள்ளது ….

  1. தங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் கூறுவது நான் அறிந்ததே. சனீஸ்வரரை பற்றி மேலும் சில பதிவுகள் அளிக்கவேண்டியுள்ளது. அதில் ஒன்றில் இது பற்றி விரிவாக குறிப்பிடலாம் என்று விட்டுவிட்டேன். சூரியனின் முதல் மனைவியான சம்ஞாவின் புத்திரனான யமன் சனியை உதைக்க, அதனால் சனியின் கால் ஊனமாகி இந்நிலை (மெதுவாக செல்லுதல்) அவருக்கு ஏற்பட்டது.

 4. சுந்தர் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..

  சனி பெயர்ச்சி எல்லோருடைய வாழக்கையையும் எப்படி ஆட்டி வைக்கிறது என்று புரிகிறது. எனக்கும் அதே நிலைமை தான். சனியின் தாக்கத்தை போக்க திரு நள்ளாறு சென்று வருவது பலன் கொடுக்க கூடியது தான், இன்னும் இரண்டு கோவில்கள் உள்ளன. ஒன்று – திருகொள்ளிகாடு (திருவாரூர் – திருத்துறை பூண்டி சாலையில் உள்ளது). மற்றொன்று – குச்சனூர் (தேனி அருகில் உள்ளது). முடிந்தால் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று வரவும்.
  இன்னுமொரு விஷயம் என்ன வென்றால், பசு எங்கு சிவனை பூஜித்து வணங்கியதோ அந்த கோவில்களுக்கு சென்று வருவது கூடுதல் விசேஷம். அதில் ஒரு முக்கியமான ஆலயம் திருவாவடுதுறை. முன் ஜென்மத்தில் பசுவிற்கு தீங்கு செய்திருந்தால் இந்த ஜென்மத்தில் சனியின் தாகம் அதிகமாக இருக்கும் என்பது முன்னோர் வாக்கு.

  நன்றி

 5. சனியின் பார்வைக்கு யாரும் தப்ப முடியாது… உண்மை தான்… அவர் கடமையை அவர் செய்தாலும், சில நேரங்களில், ஏன் இவ்வளவு கஷ்டத்தை கொடுக்கிறாய் பகவானே என்று புலம்ப வேண்டி உள்ளது.

  அழகான பதிவிற்கு நன்றி சுந்தர் சார். வட திருநள்ளாரில் செய்யும் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும். சனி தசையால் அவதிப்படும் எல்லாருக்கும் நல்ல மாற்றங்கள் வர வேண்டும். சனியின் பாதிப்பு குறைந்து நன்மைகள் பல நடைபெற வேண்டும். இதுவே எங்கள் அனைவரின் பிரார்த்தனை.

  தினமும் ஹனுமான் சாலிசா மற்றும் சனைச்சர ஸ்தோத்திரம் படித்தால் சனியின் பாதிப்பு குறையும் என்பதும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணையும், வெற்றிலை மாலையும் சாற்றி வழிபட்டால் நன்மைகள் நடக்கும் என்பதும் நம்பிக்கை. எள் சாதம் செய்து சனீஸ்வரருக்கு நைவேத்யம் செய்த பின் மாற்று திறனாளிகளுக்கு விநியோகம் செய்வதும் நன்மை தரும் என்பதும் நம்பிக்கை.

  எங்கள் அனைவருக்காக ஆர்வமுடனும் சேவை நோக்குடனும் செய்யும் உங்களுக்கு கோடானு கோடி நன்றி. மஹா பெரியவா அருள் உங்களுக்கு பரிபூரணமாக உண்டு.

 6. வணக்கம் சுந்தர். நிச்சயம் மகா பெரியவரின் அருளால் எல்லா கோரிக்கைகளும் நிறைவேறும். நன்றி.

 7. சுந்தர் ஜி
  அருமயான கருத்து நன்றி.

  ஓம் சிவ சிவ ஓம் . ராம ராம ராம .

 8. இந்த வார பிரார்த்தனை கோரிய அனைவருக்காகவும் மற்றும் சனி பெயர்ச்சியால் பாதிக்கப்பட்ட அன்பு வாசகர்களுக்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் ..நன்றி ..

 9. இந்த வாரம் பிரார்த்தனை சமர்ப்பித்திருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்காகவும் மற்றும் பொது பிரார்த்தனைக்ககவும் குருவருளையும், திருவருளையும் வேண்டுவோம்………..

  இன்று வட திருநள்ளாறில் நம் தளம் சார்பாக நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை இனிதே நடந்திருக்கும் என்று நம்புகிறோம்……. நம் தள வாசகர்களுக்காக இத்தகைய சிறப்பு ஏற்பாட்டை செய்த தங்களுக்கு எங்கள் நன்றிகள்……….

 10. எனக்காக பிரார்த்தனை செய்த வாசகர்களுக்கும் தலைமை ஏற்ற திரு சுரேஷ் சிவாச்சாரியாருக்கும் என் நன்றி.

  சனிக்கிழமை காலை அபிஷேகமும் அர்ச்சனைன்யும் நல்லபடியாக நடந்தது. அனைத்தையும் ஏற்பாடு செய்து உரிய வகையில் நடத்தி முடித்ததளத்தின் ஆசிரியருக்கும் என் நன்றி.

  கோரிக்கை சமர்பித்திருந்த நண்பர்களுக்கும் அர்ச்சனைக்கு பெயர்களை அனுப்பியிருந்த அனைவருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து விரைவில் நல்லது நடக்கும் என்பது உறுதி.

  மிக்க நன்றி
  உமா வெங்கட்

 11. சுந்தர் அண்ணா..

  மிகவும் இனிமையான, தெய்வீக தரிசனம் கிடைத்தது. தங்களுடன் இணைந்து சுவாமி தரிசனம் செய்தது மறக்க முடியாத அனுபவம்.

  மிக்க நன்றி.

 12. வாழ்க வளமுடன்

  பொறுத்தார் பூமி ஆள்வர்

  பஞ்சாட்சர மந்திரத்தை சொல்வோம்

  சிவாயநம என்று சொல்வாற்கு அபாயம் ஒன்றுமில்லை

  நன்றி

 13. திரு சுந்தர் சார் அவர்களுக்கு

  1. திருமதி உமாவெங்கட் அவர்களுக்கு ஏற்பட்ட சனி பகவானின் அருட்பார்வயிலிருந்து விலகி நன்மைகள் ஏற்படவும்

  2. கோவை ராதாமணி அவர்களுக்கு சனிபெயர்சியின் பாதிப்பிலிருந்து நலம் உண்டாகவும் மற்றும் தொழில் குடும்பநலம் சீராகவும்

  3.திருமதி வாசகி அவர்களின் தம்பதியர் மீண்டும் இணையவும் தொழில் சிறக்கவும்

  4. சென்னை திருமதி சகுந்தலா அவர்களின் வேண்டுதலான அவர்களின் சகோதரர் திரு. வெங்கடாசலம் அவர்களின் சொத்து மீண்டும் கிடைக்கவும் உடல் நலம் வருமையிநின்று நீங்கி உடல் நலம் பெறவும்

  5. திருப்பூர் திருமதி மஞ்சு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு குழந்தை பாக்யமும் பெறவும் அவரின் பெற்றோரின் உடல் நலம் சீரடையவும்

  6. ஹைதரபாத் திருமதி பிரபா அவர்களின் வேண்டுதளன தந்தை திரு விஸ்வநாதன், தாயார் உமா மற்றும் சகோதரர் சங்கரநாராயணன் ஆகியோருக்கு சனியின் அருட்பார்வை சிறந்த பார்வையாக அமைந்து நலம் பெறவும்

  மற்றும் பொது நலன் கருதி வேண்டிய எல்லோருக்கும் மஹா பெரியவா அவர்களின் ஆசியாலும் எல்லாம் வல்ல இறை அருளாலும் நலம் பெற வேண்டுகிறேன்.

  வரதராஜன்-கோவை

  1. Namasthe Varadharajan Sir,

   My heartfelt thanks to you for your kind thoughts and for praying for us. My brother is completely cured of his stomach pain with out taking any medication. We are supplied water to our house, though once a week. But some thing is better than nothing.
   With my very best regards
   N Sakuntala

 14. திரு வரதராஜன் சார்

  தங்களின் பிரார்த்தனைக்கு நன்றி

  உமா வெங்கட்

 15. Namasthe Sundar Sir,

  Words fail me to thank you adequately, You were extremely generous to include my request to pray for my brother and sister in the Kootu prarthanai club. I thank you, all the readers of our blog Right Mantra.com and Sri Suresh Sivachariyar from the bottom of my heart for praying for my brother and sister, and, my heartfelt thanks to you for doing archana in my brother’s name at Lord Saneeswarar’s temple. My brother is completely cured of his severe stomach pain, We got connection for water supply to our house. (water is supplied once a week! but now my brother need not carry every drop of water from a public tap 4 kilometres from our house.)
  My sincere thank again
  Please accept my regards
  N Sakuntala

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *