Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, June 18, 2024
Please specify the group
Home > Featured > நம் மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் – Coverage Part 1

நம் மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் – Coverage Part 1

print
னவரி 20, ஞாயிறன்று நாம் திட்டமிட்டதைவிட சிறப்பாக படப்பை – மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் முடிவுற்றது. போனஸாக வழியில் இருந்த குன்று முருகன் கோவில் ஒன்று + கல்யாண ஸ்ரீனிவாசப் பெருமாள் & விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றையும் தரிசித்தோம்.

பர்சனல் கமிட்மென்ட் காரணமாக இதற்கு முன்பு நாம் இருமுறை இந்த இடத்திற்கு சென்றபோதும் என் நண்பர்கள் சிலர் கலந்துகொள்ள இயலவில்லை. அவர்களில் நண்பர் சிட்டியும் ஒருவர். மகாவதார் பாபாஜியின் ஆத்யந்த பக்தர் அவர் என்பதால் “அடுத்து எப்போது போகலாம்? சீக்கிரம் பயணத்தை ஏற்பாடு செய்யுங்களேன்….” என்று என்னை அடிக்கடி கேட்டுவந்தார்.

எத்தனை முறை சென்றாலும் அலுக்காத ஒரு இடம் மலைப்பட்டு என்பதால் நானும் தக்க சந்தர்ப்பம் எதிர்பார்த்து காத்திருந்தேன். இதற்கிடையே RIGHTMANTRA.COM சார்பாக ‘ஆலய தரிசனம்’ பகுதிக்காக பல ஆலயங்களை நாம் தரிசித்து வருவதால், மேற்படி மந்திருக்கு நம் தளவாசகர்களையும் நண்பர்களையும் ஒரு முறை அழைத்து சென்றுவிடவேண்டும் என்று விரும்பினேன்.

ஜனவரி 20 இங்கு செல்லவிருப்பதாக கடந்த வாரம் இது குறித்து பதிவு அளித்தேன். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.

பொதுவாக நாங்கள் ஆலயங்களுக்கு சென்றால் – அது சென்னை நகருக்கு வெளியே சற்று தொலைவில் இருந்தாலும் சிக்கனம் + சௌகரியம் கருதி டூ-வீலரிலேயே சென்றுவிடுவோம். ஆனால் இம்முறை நமது தளத்தின் பெண் வாசகர்கள் சிலரும் வர விரும்பியதால் அவர்கள் சௌகரியத்தை மனதிற்கொண்டு CAB ஏற்பாடு செய்தேன். மேலும் நம் நண்பர்களின் மனைவிமார்கள் சிலரும் வர விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆகையால் வேன் ஏற்பாடு செய்வதே சிறந்தது எனப்பட்டது.

அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடித்துவிட்ட நிலையில், கடைசி நேரம் சில நண்பர்களால் அவர்கள் சொந்த விஷயங்கள் மற்றும் கமிட்மெண்ட்ஸ் காரணமாக வர இயலாமல் போனது. இவ்வளவு ஆகும் என்று கணக்கிட்டு வேன் ஏற்பாடு செய்துவிட்ட நிலையில், கடைசீயில் வரும் நபர்கள் குறைந்தால் தனி நபர்கள் அளிக்க வேண்டிய பயணக் கட்டணத்தின் பங்கு அதிகரித்துவிடுமே என்று எனக்கு கவலை ஏற்பட்டது.

இருப்பினும், வரவிருப்பவர்களை பாபாஜியே தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும் என்று விஷயத்தை அவரிடமே விட்டுவிட்டேன். என்ன ஆச்சரியம், வேன் கொள்ளுமளவுக்கு கடைசி நேரத்தில் நபர்கள் சேர்ந்துவிட்டார்கள். இன்னும் ஒரு நபர் கூடுதலாக வந்தாலும் இடமில்லை என்னுமளவிற்கு வேனில் எள் போட்டால் எள்  எடுக்க இடமில்லை.

பெரியவர்கள் 16 பேர் + 2 குழந்தைகள் என கலக்கல் மொத்தம் 18 பேர் இந்த பயணத்தில் கலந்துகொண்டோம்.

மலைப்பட்டு மற்றும் அதன் பசுமை பற்றி என்ன சொல்ல? அனைவரும் அதன் அழகில் மயங்கிவிட்டனர். சொல்லப்போனால் இந்த நகரத்து பரபரப்புக்களிளிருந்து விடுபட்டு பேசாமல் அங்கேயே தங்கிவிடலாம் என்று அனைவருக்கும் தோன்றியது.

சுத்தமான காற்று, குளிர்ந்த தட்பவெப்ப சூழல், போக்குவரத்து நெரிசலற்ற சாலைகள், சற்று அருகிலேயே ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் பிளஸ் அருகே விஸ்வரூபமெடுத்து நிற்கும் அஞ்சனை மைந்தன் என மலைப்பட்டு மற்றும் பாபாஜி மந்திர் இருக்கும் இடமே ஒரு சொர்க்கம் தான்.

இந்த பயணத்தை பற்றி நிறைய எழுதவேண்டும்.

பாபாஜி மந்திர் பயணம் + அங்கு எங்கள் அனுபவம் + பெருமாள் கோவிலில் எங்கள் அனைவருக்கும் கிடைத்த எதிர்பாராத பிரசாதம் + அழகான ஆஞ்சநேயர் + எங்களுடன் வந்த வாண்டுகள் இரண்டும் செய்த அட்டகாசங்கள் உள்ளிட்டவைகளை விவரித்து சற்று விரிவான பதிவை விரைவில் அளிக்கிறேன்.

இப்போதைக்கு இது ஒரு குவிக் அப்டேட்.

மீண்டும் சந்திப்போம். நன்றி.

[END]

10 thoughts on “நம் மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் – Coverage Part 1

 1. சபரிமலை சென்ற காரணத்தால் என்னால் வர இயலவில்லை. ஏற்கனவே ஒரு முறை சுந்தர் அவர்களுடன் சென்று வந்துள்ளதால் அந்த இடம் பற்றி நன்கு அறிவேன். வரமுடியாமல் போனது வருத்தம் தான் ,இது மாதிரி ஒரு இடத்தில இருந்தால் மனிதனுக்கு கோபம் ,ஆசை போன்ற எதுவுமே வராது அந்த அளவு அழகான ரம்மியமான சூழல் ,சென்று வந்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

 2. Sundar anna
  Thanks for the efforts put by you for this wonderful trip!!
  hats off…it was a divine trip!!It was my first visit to dis wonderful place!!
  Will cherish this trip forever!!
  Thanks again:)

 3. அருமையான இடம்! நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

 4. @Sundarji,

  Thanks so much for fulfilling my wish!!!

  Great. I enjoyed the trip with the kids and as well with new people and friends.

  But still, want to go there again and more – Babaji temple at very morning around 8am and enjoy the divine presence plus nature plus want to do meditation and kriya yoga for some time. Thereby, taking myself to new higher level.

  Let’s see how well Babaji is going to bless me for all this to happen.

  God bless all.

  **Chitti**.
  Thoughts becomes things.

 5. சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பயணத்தில் என்னால் கலந்து கொள்ள முடிய வில்லை…

  கண்டிப்பாக பாபா கோவிலுக்கு விரைவில் செல்ல வேண்டும்…

  புகைப்படங்களை பார்க்கும்போது அங்கு விரைவில் செல்ல வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கிறது…

  மாதத்திற்கு ஒரு முறை இப்படி எல்லோரும் ஒன்று சேர்ந்து எங்காவது கோவிலுக்கு செல்வது கண்டிப்பாக மனதிற்கு ஒரு தனி சந்தோஷம் தான் இல்லையா…

  கண்டிப்பாக அடுத்த பயணத்தில் கலந்து கொள்ள வேண்டும்..

  இன்று நேதாஜி பிறந்த நாள்….அவரை பற்றிய ஒரு சிறு பதிவை நம் தளத்தில் ஆவலோடு எதிர்பார்கிறேன்…

  PVIJAYSJEC

 6. Wonderful experience..superb locations…and great feeling….last but not least…Superb curd rice & tamrind rice at Anjaneyar temple :))

  It was nice trip ji…

 7. vanakkam sir,
  neengal sentru vantha kovilkal patriya anupavankalai aavaludam ethir paarkiraen.

  —————————————————————-
  சரூபன் நீங்களே பார்த்துகொண்டு தானே இருக்கிறீர்கள்?

  நேரமோ குறைவு. கண் முன் நிற்கும் பணிகளும் கடமையுமோ மலையளவு.

  கிடைக்கும் கண நேரத்தையும் வீணடிக்காமல் நமது தளத்திற்காக எழுதுவதர்க்கே செலவிட்டு வருகிறேன்.

  இரண்டாம் பாகம் வெளிவரும் என்று நான் கூறியுள்ள அனைத்து பதிவுகளும் விரைவில் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு நிறைவு செய்யப்படும்.

  தங்கள் ஆதரவிற்கு நன்றி!

  – சுந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *