(*இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள அனைத்து புகைப்படங்களும் நம் ரைட்மந்த்ரா அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் இருக்கும் மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி ஜெயமுத்து மாரியம்மன் ஆலயத்தின் ஆடி விழா புகைப்படங்கள்.)
ஆடி என்றவுடன் முதலில் நம் நினைவிற்கு வருவது அம்மன் கோயிலும், வேப்பிலையும்தான். சாகை வார்த்தல், கூழ் ஊற்றுதல் என அனைத்து அம்மன் ஆலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். இந்த ஒரு மாதம், அனைத்து அம்மன்கோவில்களிலும் திருவிழா களைகட்டும். இதன்பொருட்டு ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளையோ நெரிசல்களையோ பெரிதாக நினைக்காது, விழா சிறக்க பிரார்த்திக்கவேண்டும். அம்மனின் அருளாசியை வேண்டவேண்டும்.
இன்றைக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் புற்றீசல் போல மதமாற்றங்கள் நடைபெற்றுவருகிறது. அயல்நாடுகளில் நிதிபெற்று, மிக நேர்த்தியாக திட்டமிட்டு அப்பாவி மக்களை மூளைச்சலவை செய்து இவை நடைபெற்று வருகிறது. நாம் திருத்தலங்கள் செல்லும்போது மிகச் சிறிய கிராமங்களில் கூட இவர்கள் நெட்வொர்க் இருப்பதை கண்டு நாம் அதிர்சியடைந்ததுண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம் இந்து மதத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பதில் பெரும்பங்கு இந்த ஆடிமாத அம்மன் கோவில் திருவிழாக்களுக்கு உண்டு. முட்டுச்சந்தானாலும் சரி, மரத்தடியானாலும் சரி, தெருமுனையானாலும் சரி எங்கெல்லாம் அம்மன் கோவில் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த ஒரு மாதம் திருவிழா களைகட்டும். யார் எடுத்துப் போட்டு செய்கிறார்கள், ஏன், எப்படி, எதுவும் புரியாது. ஆனால் நடக்கும்!
இந்த திருவிழாக்களுக்கு நம்மால் இயன்ற பொருளுதவியை செய்வது மிக மிக அவசியம். இதைப் படிக்கும் யாவரும் உங்கள் ஊரிலோ நீங்கள் இருக்கும் பகுதியிலோ இருக்கும் அம்மன்கோவிலுக்கு சென்று உங்களால் இயன்ற தொகையை இந்த ஆடி மாத உற்சவத்துக்கு நன்கொடையாக அளிக்கவேண்டும். ரசீதை கையேடு பெற்றுக்கொள்ளுங்கள். வேறு ஏதேனும் தேவை அவர்களுக்கு இருப்பின் அவசியம் தயங்காமல் செய்யுங்கள்.
இது போன்ற விழாக்களுக்கு நிதி உதவி அளிப்பது புண்ணியம் என்பதைவிட நம் கடமை என்பதை உணரவேண்டும்.
இது தொடர்பாக கடந்த காலங்களில் சிலருக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். அப்படி இருந்தால் உங்களுக்கு பிடித்த வேறு இடத்தில் செய்யுங்கள். அம்மனுக்கா பஞ்சம் நம் ஊரில்? ஒரு சில விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு நமது உதவியை நிறுத்தக்கூடாது. ஊர்கூடி இழுக்கவேண்டிய தேரில் ஒரு சிலர் இழுப்பது போல பாவ்லா செய்யலாம். இழுக்க வராமலே போகலாம். நஷ்டம் யாருக்கு? நாம் செய்வது அம்மனுக்கு. அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
இன்றைக்கு நகர்ப்புறமாகி (URBANIZATION) விண்ணை முட்டும் கட்டிடங்களோடு இருக்கும் இடங்கள் எல்லாம் அக்காலங்களில் கிராமப்புறமும் வயற்காடுகளும் தான் என்பதை மறக்கக்கூடாது. நீங்கள் அந்தப் பகுதிக்கு வரும் முன்பே அங்கிருந்தபடி அந்த பகுதியை காவல் காத்து வந்தவள் அந்த கிராம தேவதை. அவளையே நாம் அம்மன் என்கிறோம். இன்றைக்கு சென்னை நகரில் இருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் ‘கிராம தேவதை’ உண்டு.
உங்கள் கிராம தேவதையை (உங்கள் பகுதி அம்மனை) புறக்கணித்துவிட்டு என்ன தான் நீங்கள் வேறு தெய்வத்தை கொண்டாடினாலும் அதனால் பலன் ஏற்படப்போவது இல்லை.
ஒவ்வொரு வாரமும் இல்லாவிட்டால் மாதமிருமுறை அதுவும் முடியாவிட்டால் மாதம் ஒரு முறையாவது நம் பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு போகவேண்டும். அம்மனை கண்குளிர தரிசிக்கவேண்டும். கடைசியாக நீங்க சென்றது எப்போது? (எம் தயார் இப்போதும் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் புற்றுக்கோவிலுக்கு சென்று வருகிறார்!)
வருடம் முழுதும் அவளை கொண்டாட நேரமில்லாதவர்கள் அனைவருக்கும் வரப்பிரசாதம் இந்த ஆடி மாதம். ஊரே அவளுக்கு விழா எடுத்து கொண்டாடும் இந்த தருணத்திலாவது அவளை நாம் ஏறெடுத்து பார்ப்போம்.
தற்போது எல்லாம் அம்மன்கோவில்களிலும் விழா கமிட்டி என்று ஒன்றை அமைத்து அதன் மூலம் தான் வசூல் செய்து ஆடி மாத விழாவை கொண்டாடுகிறார்கள். எனவே உங்களால் முடிந்த நன்கொடையை அவளுக்கு அளித்து அவள் அருளை பெறுங்கள். நம் வீட்டு பெண் அவள். அவளை மறக்கலாமா? அவளுக்கு செய்ய கணக்கு பார்க்கலாமா?
கண்கண்ட தெய்வம் அவள்!
ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்
பாத்தா வினைதீரும் பாவமெல்லாம் பறந்தோடும்
காத்தாயி மகமாயி கருணை தெய்வம் மாகாளி
நார்த்தமலை வாழும் எங்கள் நாயகியாம் திரிசூலி
ரைட்மந்த்ரா அலுவலகம் அமைந்திருக்கும் மேற்கு மாம்பலம் பிருந்தாவனம் தெருவில் ஜெயமுத்து மாரியம்மன் என்று ஒரு கோவில் உண்டு. ஒவ்வொரு ஆடி மாதமும் களைகட்டும்.
ஒவ்வொரு ஆண்டும் தத்ரூரப அம்மன் சிலைகளை செய்து ஆர்யாகௌடா சாலை, பிருந்தாவன் தெரு சந்திப்பில் ஒன்றும் கோவில் அருகே ஒன்றும் வைத்துவிடுவார்கள். இந்த ஆடி மாதம் முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணமிருக்கின்றன. ஒவ்வொன்றும் பார்க்க கண்கொள்ளா காட்சி. அதுவும் வெள்ளிக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். அதகளப்படுத்துவார்கள்.
இதையெல்லாம் இந்த எந்திரமயமான உலகத்தில் எடுத்துப் போட்டு செய்வதற்கு நான்கு பேர் இருக்கிறார்களே என்று சந்தோஷப்படுவோம்.
சில நாட்களுக்கு முன்னர் ஒரு நாள் மதியம் ஆடிவிழாவை பார்க்கச் சென்றோம்.
அப்போது முகத்தில் அலகு குத்தி சுமார் 20 பேர் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அவர்களை புகைப்படம் எடுக்க எத்தனித்தபோது, முதலில் அமர்ந்திருந்த ஒரு சிறுமி நமது கவனத்தை கவர்ந்தாள்.
இந்த சிறு வயதில் அலகு குத்தியிருக்கிறாளே… ஏதாவது வேண்டுதலா? அல்லது வேண்டுதல் நிறைவேறியமைக்கு நன்றிக் காணிக்கையா?
அருகே நின்றுகொண்டிருந்த ஒரு பெண் தான் அச்சிறுமியின் தாயார் என்று தெரிந்தது.
“அம்மா… உங்க பொண்ணா?”
“ஆமாம் சார்…”
“ஏன் அலகு குத்தியிருக்கு? வேண்டுதலா இல்லை நன்றிக்கடனா?”
“அவ அண்ணனனுக்கு பேச்சு வராம இருந்தது. அதனால அலகு குத்துறதா வேண்டிக்கிட்டா”
“ஆஹா.. கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா??”
“முதல்ல அவனுக்கு சரியா பேச்சு வரலை சார். திக்கி திக்கி பேசிட்டிருந்தான். நாங்களும் என்னென்னவோ செஞ்சு பார்த்துட்டோம். பேசவே ரொம்ப கஷ்டப்பட்டான். வயசு வேற ஏறிகிட்டே போகுது. இவ, இந்த ஜெயமுத்து மாரியம்மனுக்கு அலகு குத்துறதா போன வருஷம் வேண்டிக்கிட்டா. இப்போ நல்லா பேச்சு வருது…. அதான் அண்ணனுக்காக அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துறா… இது ரெண்டாவது வருஷம் சார்….”
“ஆஹா… ஆஹா… எப்பேர்பட்ட பாசம்…. உலகத்தின் மிகப் பெரிய கோடீஸ்வர சிறுவர்களுள் உன் அண்ணனும் ஒருவனம்மா” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டோம்.
இச்சிறுமியின் அண்ணனை பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால் அவன் அங்கு அப்போது இல்லை. “அவனை பார்க்கவேண்டும் என ஆசைப்படுகிறேன். அழைத்து வரமுடியுமா?” என்று அந்த பெண்ணிடம் கேட்டோம்.
அவர் சென்று அங்கும் இங்கும் தேடினார். அவன் அங்கு இல்லை.
“எங்கேயோ விளையாடிக்கிட்டுருக்கான் போலருக்கு சார்…”
“பரவாயில்லம்மா… உங்க பொண்ணை பார்த்ததே சந்தோஷம் தான்”
“பேர் என்னம்மா?”
“இவ பேர் பவித்ரா… இவ அண்ணன் பேர் மோகன்ராஜ்” என்றார்.
இவள் சாட்சாத் அந்த அம்மனின் சொரூபம் என்பதால் பவித்ராவின் கால்களில் விழுந்து வணங்கினோம். * நாம் இங்கே பவித்ராவின் கால்களில் விழ, அங்கே வேறு ஒருவர் இடறி விழுந்தார். (இந்த இடத்தை நினைவில் வைத்திருங்கள். வேறொரு விஷயத்தை சொல்லவேண்டும். அதை வேறொரு பதிவில் சொல்கிறோம்!)
நாம் போகிற போக்கில் சர்வசாதாரணமாக கடந்து செல்லும் இது போன்ற ஆடித்திருவிழாவுக்கு பின்னே எத்தனை விஷயம் இருக்கிறது பார்த்தீர்களா?
பவித்ராவுக்கு பின்னே அலகு குத்தி அமர்ந்திருக்கும் ஒவ்வொருவர் பின்னேயும் இது போன்ற ஒரு அருளும் மகிமையும் இருக்கும். அது தான் அம்மன். நம்பியவர்களை ஒரு போதும் கைவிடமாட்டாள். ஒரு வகையில் பிள்ளையார் போல. பெரிதாக எதுவும் எதிர்பார்க்கமாட்டாள். அவள் அருளை பெற உள்ளன்போடு வழிபட்டாலே போதும் எனும்போது அலகு குத்தினால்? அருளை வாரிப்பொழிந்துவிட்டாள் !
அன்று மாலை மீண்டும் விழாவை காணச் சென்றபோது, இந்த சிறுவர்களையும் இளைஞர்களையும் கண்டோம்.
காலில் உயரமான ஒரு கட்டையைகட்டிக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருப்பார்கள். இதை கிராமத்து திருவிழக்களில் பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஏன் பெரியவர்களுக்கு கூட இது ஒரு அட்ராக்ஷன்.
இதன் பெயர் கொக்கிலிகட்டை. திருவிழாக்களில் இது மிக முக்கியம். இதை பார்ப்பது மிகவும் விசேஷம் என்று சொல்வார்கள்.
நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அந்த இளைஞர்கள் அம்மன் முன் நின்று நமக்கு போஸ் கொடுத்தார்கள். உங்களுக்காக சில படங்கள்…
ஏற்கனவே நமது இல்லம் அமைந்திருக்கும் ஐயப்பன்தாங்கலில் எழுந்தருளியிருக்கும் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று அடியேனால் முடிந்த சிறிய தொகையை நன்கொடை கொடுத்துவிட்டோம். இங்கே மேற்கு மாம்பலத்தில் இருக்கும் ஜெயதுர்க்கை அம்மன் ஆலயத்திற்கும் நன்கொடை கொடுத்துவிட்டோம். நீங்களும் அவசியம் நன்கொடை கொடுங்கள். அம்மன் அருளை பெறுங்கள்.
பெண்களுக்குரிய விரதங்களில் முக்கியமானது வரலட்சுமி விரதம். ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு (ஆகஸ்டு 12, 2016) அன்று வரலக்ஷ்மி விரதம் வருகிறது. அன்று சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு அன்னமிட்டு புடவை ரவிக்கை சேர்த்து தாம்பூலம் அளித்து நமஸ்கரிக்க, சகல சௌபாக்யங்களும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
அதே போன்று இயன்றவரை உங்கள் பகுதியில் நடக்கும் ஆடித் திருவிழாவில் பங்கேற்று அம்மனை ஆராதியுங்கள். உங்கள் கிரகத்தில் தேகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் விலகி சுபயோகம் கைகூடி, சகல ஷேமங்களும் அடைவீர்கள்! இதற்கு அந்த சமயபுரத்தாளே சாட்சி!
==========================================================
Don’t miss this :
ஞானிகளை சரணடைவதால் நம் தலையெழுத்து மாறுமா?
தெய்வங்களாலும் முடியாததை யார் சாதிப்பார்கள்?
யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?
==========================================================
கிராம தேவதையை அந்தந்த ஊர் அம்மனை ஆராதிப்பது தொடர்பாக மகா பெரியவா பல தருணங்களில் எடுத்துக்கூறியிருக்கிறார். வலியுறுத்தியிருக்கிறார். அவற்றில் அற்புதமான சம்பவம் ஒன்றை பார்ப்போம்.
சந்தோஷம் ….சந்தோஷம்!
”எங்கள் கிராமத்தில் உள்ள சிவாலயம் பல வருஷங்களாகத் திருப்பணி செய்யப்படாமலும் அஷ்டபந்தன மருந்து சார்த்தப்படாமலும் இருக்கிறது” என்று வருத்தத்தோடு சொன்னார் ஓர் அன்பர். “யாராவது திருப்பணி செய்ய முன் வந்தால் அவருக்குப் பல இடையூறுகள் வருவதால், முனைப்பாகச் செயல்படப் பலரும் பயப்படுகிறார்கள்” என்றார்.
ஸ்ரீ மகாஸ்மிவாமிகள் சொன்னார்கள் :”உங்கள் ஊரில் ஒரு கிராம தேவதை – பெண் தேவதை – இருக்கே? முதலில் அந்தத் தெய்வத்துக்கு விசேஷமாக கிராமத்தின் சார்பில் அபிஷேக – ஆராதனைகள் செய்து புது வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து, விரிவாகப் பூஜை செய்து விட்டுச் சிவன் கோயில் திருப்பணி ஆரம்பியுங்கள்….”
பக்தர் கிராமத்தாரிடம் ஸ்ரீ பெரியவாளின் ஆக்ஞையைக் கூறினார்.
கிராமத்தார்களுக்குத் தங்கள் தவறு புரிந்து உடனே கூட்டம் போட்டு நாள் குறித்து கிராம தேவதைக்குக் கோலாகலமாக விழா எடுத்தார்கள். அப்போது ஒரு பெண்ணுக்கு ஆவேசம் வந்து ”சந்தோஷம் ….சந்தோஷம்!…” என்று கூச்சலிட்டு மயக்கம் அடைந்தாள்.
பின்னர் சிவன் கோயில் திருப்பணிகள் எவ்விதத் தடங்கிலுமில்லாமல் நடந்தேறின. கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது .
மகாப் பெரியவாளுக்கு, கிராம தேவதைகளிடம் அத்யந்த பக்தி. ”கலெக்டரைப் பார்த்து மனு கொடுத்து ஆர்டர் வாங்குவதற்கு ரொம்பவும் சிரமப்படணும். ஆனால், சம்பந்தப்பட்ட தாசில்தாரைச் சந்தித்து ஆர்டர் வாங்குவது சுலபம். ஒருக்கால் அவரால் முடியா விட்டால், நல்ல வழியை சொல்லிக் கொடுப்பர். ரெகமண்டேஷன் செய்வார்” என்பார்கள்.
– எஸ்.கோதண்ட ராம சர்மா | ஸ்ரீ மடம் பாலு | ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’
==========================================================
Don’t miss this :
மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !
தெய்வங்களாலும் முடியாததை யார் சாதிப்பார்கள்?
யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?
அடியார்கள் வழியனுப்பு விழாவும், ஏமாற்றத்தில் வெளிப்பட்ட அருளும்! ஆடி ஸ்பெஷல் (3)
திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)
ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)
எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ? ஆடி ஸ்பெஷல் !
அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!
ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
For more information click here!
==========================================================
Also check our earlier articles on Maha Periyava
இந்த குரு பார்க்க கோடி நன்மை உண்டு!
குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும் – குரு பூர்ணிமா SPL
“கடமையை செய், பன்மடங்கு பலனை எதிர்பார்” – இது பெரியவா கீதை!
தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!
நம் தளத்தில் வெளியான மகா பெரியவா தொடர்பான முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
==========================================================
ஸ்ரீ ரமணர் தொடர்புடைய பதிவுகளுக்கு : http://rightmantra.com/?s=ரமணர்
=========================================================
[END]