Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 26, 2024
Please specify the group
Home > Featured > இந்த குரு பார்க்க கோடி நன்மை உண்டு!

இந்த குரு பார்க்க கோடி நன்மை உண்டு!

print
ற்று பெரிய பதிவுகள் எழுதும்போது ஆவலுடன் காத்திருக்கும் உங்களை அப்போதைக்கு கவனித்துக்கொள்ள பெரியவா பதிவுகள் தான் நமக்கு கைகொடுக்கின்றன. நம் தளத்தில் வெளியாகும் மகா பெரியவா தொடர்பான அனுபவங்களுக்காக பலர் ஆர்வமுடன் காத்திருப்பது தெரியும். பெரியவாவின் மகிமைகளில் பலதரப்பட்ட மனிதர்களின் பல வித அனுபவங்களை நாம் பார்த்து வருகிறோம். ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் தனித்தன்மை வாய்ந்தது. அதில் பெரியவா கூறும் தீர்வுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் என்று எண்ணிவிடக்கூடாது. அதுபோன்ற பிரச்சனைகள் உள்ள யாவருக்கும் அவை அற்புதமான தீர்வுகள்.

Periyava

விரைவில் குருபெயர்ச்சி வரவுள்ளது. இது போன்ற கிரகப் பெயர்ச்சி என்றாலே அலறும் அளவுக்கு மக்களை பீதிக்குள்ளாக்கி, இன்னின்ன ராசிகளுக்கு பெயர்ச்சி சரியில்லை என்று கூறிவிடுகிறார்கள். ஆனால் குருவின் அருளிருக்க, எந்த பெயர்ச்சியும் ஒன்றும் செய்யாது. குருவையும் கடவுளையும் தொழுவோம். நம் கடமையை செய்வோம். கிரகங்கள் சோதனையை தந்தாலும் முடிவில் நல்லதையே செய்வார்கள். அவர்கள் நோக்கம் நம்மை பண்படுத்துவது. தண்டிப்பது அல்ல. (அவர்கள் தண்டித்தால் ஒருவராலும் தாங்கமுடியாது என்பது வேறு விஷயம்!)

கீழே வரும் அனுபவத்தில் குருபெயற்சியால் கலங்கித் தவித்த பக்தருக்கு அவர் எப்பேற்ப்பட்ட ஒரு தீர்வை கூறுகிறார் பாருங்கள். மெய்ஞானிகள் ஒரு விஷயத்தை பார்க்கும் பார்வைக்கும் அற்பர்கள் நாம் பார்க்கும் பார்வைக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.

குருபெயர்ச்சி சரியில்லை என்று கருதுகிறவர்கள் முதல் அனுபவத்தில் உள்ள தீர்வையும், குருபார்வை இல்லை என்று கருதுகிறவர்கள் இரண்டாம் அனுபவத்தில் உள்ள தீர்வையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பெரியவாவின் அருளை பெற விரும்புகிறவர்கள், அவரின் உபதேசங்களை கூடுமானவரை கடைபிடிக்கவேண்டும். அப்போது தான் அவரிடம் கேட்பது நமக்கு சித்தியாகும். (பார்க்க : நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் கட்டளைகள் பத்து!)

* காஞ்சி ஸ்ரீமடத்துக்கு சென்று மகா பெரியவாவின் அதிஷ்டானத்தை தரிசிக்க விரும்பும் அன்பர்கள் நம்மை தொடர்புகொண்டால் எப்படி செல்வது, மடத்தின் அன்னதானம் நடைபெறும் நேரம், காஞ்சியில் வேறு எங்கெங்கே செல்லவேண்டும், தெரிந்த ஆட்டோ நண்பரின் அலைபேசி என பல விஷயங்களை பகிர்கிறோம். குருவை பார்க்க கோடி நன்மை உண்டு! காஞ்சி செல்பவர்கள் அவசியம் காமாக்ஷி கோவில் அருகே ஸ்ரீ மடம் சார்பாக நடைபெறும் அன்னதானத்தில் கலந்துகொண்டு அன்னத்தை புசிக்கவேண்டும்!

==========================================================

‘வேல்மாறல் அற்புதங்கள்’ பிரத்யேக தொடருக்கு…

உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா – யாமிருக்க பயமேன் ? (11)

தேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை! – யாமிருக்க பயமேன் ? (10)

==========================================================

ஜன்ம குரு கஷ்டம் தருமா?

  • ஸ்ரீ மடம் தொண்டர்

அன்றைய தினம் குருபெயர்ச்சி. ஒரு பக்தர் பெரியவாளிடம் வந்தார். ”என் ஜாதகப்படி ஜன்ம ஸ்தானத்துக்கு குரு வந்திருக்கு. அதனால் ரொம்ப கஷ்டம் வருமாம். ராமர் காட்டுக்குப் போனதிற்கு காரணம் ஜன்மத்தில் குரு வந்ததுதானாம். சாந்தி பரிகாரம் பண்ணவேண்டும் என்று ஜோஸ்யர் சொல்லுகிறார்” என்றார் பெரியவாளிடம்.

பெரியவா சொன்னார்கள் :

”அப்படி ஒரு பேச்சு இருக்கு. ராமர் காட்டுக்கு போனது ஜன்மத்திலே குரு வந்தபோது தான்னு. அதெல்லாம் சரியில்லே. ராமர் காட்டிலே சௌக்கியமா இருந்தார். தபஸ் பண்ணிண்டு… மகரிஷிகளோடு சம்பாஷணம் பண்ணிண்டு… அவாளுக்கு தரிசனம் கொடுத்துண்டு… ”அது போகட்டும். ராமர் காட்டுக்கு போனதாலே நீங்களும் காட்டுக்கு போகணும். அவ்வளவு தானே? வேதாரண்யம், வில்வாரண்யம், சண்பகாரண்யம், தர்ப்பாரண்யம்னு பல க்ஷேத்திரங்கள் காட்டு க்ஷேத்திரம் இருக்கு. இதிலே ஏதாவது ஒரு ஆரண்யத்துக்குப் போய் இரண்டு மூணு நாள் தங்கி, சுவாமி தரிசனம் பண்ணிட்டு வாங்கோ. உங்களுக்கும் மனசாந்தி. ஜோஷ்யர் சொன்னதும் சரியாகப் போனதுமாதிரி இருக்கும்…” பக்தர் அப்படியே செய்வதாக சொல்லிவிட்டுப் போனார்.

பெண்ணுக்கு கல்யாணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது…

  • ஸ்ரீ மடம் தொண்டர்

”இன்னும் குருபார்வை வரவில்லை என்கிறார்கள் ஜோசியர்கள். அதனால் என் பெண்ணுக்கு கல்யாணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது” என்று பெரியவாளிடம் கவலையுடன் முறையிட்டுக் கொண்டார் ஓர் அன்பர். பக்கத்திலே தேதியூர் வாஞ்சி அய்யர் என்ற ஸ்ரீ மடத்தின் பிரிய சிஷ்யர் நின்று கொண்டிருந்தார். உடனே அவர், ”நீங்க சொல்றது தப்பு. குரு கடாக்ஷம் வந்துவிட்டது. பிரத்யட்ச குருவான பெரியவா சன்னதிக்கு வந்து விட்டீர்கள். இனிமே தடங்கல் இல்லே. சீக்கிரம் கல்யாணம் ஆகும்” என்று ஆறுதலாக அன்புடன் சொன்னார்.

அப்போது ஆவணி மாதம் பதினைந்து தேதிக்கு மேல் ஆகியிருந்தது. ஆவணி முடிவுக்குள் எப்படிக் கல்யாணம் நடக்கும்? அப்புறம் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி கழிந்து தான் கல்யாணம் பேச்சைக் துவக்கலாம் என்று பெண்ணின் தகப்பனாருக்கு சிந்தனை. பெரியவா அனுக்கிரக விஷேசம், வாஞ்சி அய்யர் வாக்கில் வெளிப்பட்டிருக்கிறது. திடீர் திருப்பமாக இரண்டொரு நாளிலேயே விவாகம் நிச்சயமாகி பத்துநாளில் மாங்கல்யதாரணம் நடந்தே விட்டது.

புதுமண தம்பதியை அழைத்துக்கொண்டு தரிசனத்துக்கு வந்த அன்பர், பெரியவாள் சன்னதியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து பரவசப்பட்டார். ”விவாகம் நிச்சயமானதை, பெரியவாகிட்ட நேரில் வந்து சொல்லக்கூட நேரமில்லே. க்ஷமிக்கணும். குரு கடாட்சத்தாலே தான் சீக்கிரமா நல்ல இடத்திலே மாப்பிள்ளை கிடைச்சார்!… பெரியவா கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்கள்.

மாலைகள்…மாலைகள்….!

  • மணச்சநல்லூர் ஸ்ரீநிவாசன்

ணிபுரியும் அலுவலகத்தில் நன்றாக வேலை செய்தால் பல கஷ்டங்களை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும். ‘சார், உங்களைப் போல் இவ்வளவு நறுவிசா வேற யாராலும் இந்த வேலையை செய்திருக்க முடியாது!’ என்று, பத்து கிலோ பனிக்கட்டியை தலையில் கட்டிவிடுவார்கள்.

எனக்கும் ஒரு நிலைமை அப்படி ஏற்பட்டது. புதுச்சேரி நெய்சர் கம்பெனியில் வேலை. அதிகாரிகளுக்கு என்னிடம் பிரியம்.

‘என்ன எம்மாரெஸ்!.. புதுச்சேரியிலேயே குதிரை ஓட்டிக் கொண்டிருந்தால் எப்படி?… ஜெர்மனி போயிட்டு வாங்கோ…’

இரண்டு நாட்கள் சென்றன.

‘அப்படியே இத்தாலிக்கும் விசாவுக்கு அப்ளை பண்ணிடுங்கோ…’

என் நெஞ்சில் குளிர் காற்று வீசியது.

காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரமடம்.

அடியார்களை, மகா சுவாமிகளுக்கு அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருந்தார் பாணாம்பட்டு கண்ணன் என்ற தொண்டர்.

என் முறை வந்தது. மெதுவாக என் பூர்வீகம் மணச்சநல்லூர். நான் வேலை பார்க்கும் நெய்சர் கம்பெனி, பயிற்சி பெறுவதற்காக என்னை ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கிறார்கள். பெரியவர் ஆசிர்வாதம் வேணும்… என்றேன்.

கண்ணனுக்கு சட்டென்று ஒரு யோசனை உதித்தது போலும். ‘வெளிநாட்டிற்கு போவதையெல்லாம் பெரியவா விரும்புவதில்லை. அதனாலே, உங்கள் பிரார்த்தனையை மனசிலே வெச்சிண்டுட்டு, உங்க பெயரை மட்டும் சொல்லுங்க… போதும்…’

கூட்டம் கலையத் தொடங்கியது.

பெரியவாள் கண்ணனை கைச் சொடுக்கினால் அழைத்தார்கள். ‘அதோ அந்த மாலையை எடுத்து… அந்த பெண்ணிடம் கொடு…’

பார்வை படும் தூரத்தில் ஏழெட்டு பெண் குழந்தைகள். எந்த குழந்தையிடம் மாலையைக் கொடுப்பது? ஒவ்வொரு பெண்ணாக சுட்டிக் காட்டி, இவளா, இவளா?’ என்று கண்ணன் கேட்டபோது, இல்லை, இல்லை’ என்றே பதில் வந்தது. கண்ணனுக்கு அலுப்புத் தட்டும் வேளையில். ‘அ…தோ… அந்தப் பொண்ணு…’ என்று சுட்டிக் காட்டினார்கள், மகா சுவாமிகள்.

கண்ணன் மாலையை நீட்டினார். ‘உன் பேர் என்ன குழந்தே?….’

‘சுபாஷிணி…’

‘அப்பா எங்கே?..

‘அதோ!…’

‘ஆமாம்! நான் தான் மணச்சநல்லூர் ஸ்ரீநிவாசன்…!’

‘அதிர்ஷ்டக்காரரையா, நீர்! என்ன, அமோகமான ஆசிர்வாதம்!’

ஜெர்மனியில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, மீனம்பாக்கத்தில் வந்து இறங்கியபோது, என் கழுத்தைக் காணவில்லை. மாலைகள்! மாலைகள்!!

– எஸ்.கோதண்ட ராம சர்மா | ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

For more information click here!

==========================================================

Also check our earlier articles on Maha Periyava

குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும் – குரு பூர்ணிமா SPL

“கடமையை செய், பன்மடங்கு பலனை எதிர்பார்” – இது பெரியவா கீதை!

தப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்!

பெயர் பொருத்தம் பார்த்து பெரியவா செய்து வைத்த கல்யாணம்!

காற்றை நிறுத்திய காத்தவராயன்!

”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!

தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

==========================================================

[END]

One thought on “இந்த குரு பார்க்க கோடி நன்மை உண்டு!

  1. Wonderful article Sundar. First few lines shoes ur concern to guide our readers to utilize the tour to the fullest without roaming troubles. Periyava guides on guru peyarchi r timely guides to readers and extremely beneficial. Guru is not only in temples our gurunathar is also capable our giving the same guru parvai … Wow. Diff angle rare article. Thanks a million

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *