Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > ஒரு பிரார்த்தனை நிறைவேறிய கதை! RIGHTMANTRA பிரார்த்தனை கிளப்

ஒரு பிரார்த்தனை நிறைவேறிய கதை! RIGHTMANTRA பிரார்த்தனை கிளப்

print
சில வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூரை சேர்ந்த நம் தள வாசகி அனுராதா என்பவர் நமது பிரார்த்தனை கிளப் பகுதியில் பிரார்த்தனைக்கான கோரிக்கையை சமர்ப்பித்திருந்தது நினைவிருக்கலாம். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் இருவரும் விலகி தனது 3 வயது மகள் தர்ஷனாவை அதனால் பிரிந்திருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் குழந்தை தர்ஷனா தன்னுடன் சேர பிரார்த்தனைக்கு விண்ணப்பிப்பது போன்று கோரிக்கை அனுப்பியிருந்தார்.

கரூர் பசுபதீஸ்வரர் ஆலய ராஜ கோபுரம் – சமீபத்திய கரூர் பயணத்தின்போது எடுத்தது!

அவர் பிரார்த்தனை கோரிக்கை தொடர்பாக என்னுடன் அவர் முதல் முறை பேசும்போதே எப்படியும் அவரது பிரார்த்தனை நிறைவேறிவிடும் என்று எனக்கு தோன்றியது. ஒருவேளை அவரது ATTITUDE & GRATITUDE காரணமாக இருக்கலாம்.

பொதுவாக தாங்க முடியாத துன்பத்திலும் பிரச்னையிலும் இருப்பவர்கள் தங்கள் பிரச்னை மட்டுமே இந்த உலகில் பெரிது என்கிற எண்ணத்தில் இருப்பார்கள். அதை தாண்டி அவர்களால் சிந்திக்க இயலாது. அது புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் இவரை பொறுத்தவரை இவரது அணுகுமுறையே வித்தியாசமாக இருந்தது. (ATTITUDE). நாம் பதிவளித்தவுடன் மறக்காமல் பதிவில் நம் வாசகர்களுக்கு நன்றி தெரிவித்து பின்னூட்டம் அளித்தார். (GRATITUDE). பிரார்த்தனை நிறைவேறிவிட்டது போன்ற ஒரு மகிழ்ச்சி அப்போதே அவரிடம் தென்பட்டது.

நான் எதிர்பார்த்தது போலவே, தனது பிரார்த்தனை நிறைவேறிவிட்டதாகவும் தானும் தன் குழந்தையும் ஒன்று சேர்ந்துவிட்டதாகவும் கூறி நம் அனைவருக்கும் நன்றி தெரிவித்து சென்ற வாரம் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

அவரது மின்னஞ்சலை படித்தவுடன் நமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அந்த மின்னஞ்சலை பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற திரு.சுவாமிநாதன் அவர்களுக்கும் மறக்காமல் FORWARD செய்தேன். எனது மகிழ்ச்சியை அவரிடமும் பகிர்ந்துகொண்டேன். “எல்லாம் மஹா பெரியவா கருணை” என்றார் திரு.சுவாமிநாதன்.

அடுத்து அனுராதா அவர்களிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அலைபேசியிலும் நமக்கு நன்றி தெரிவித்தார். ஆண்டு விழா பணிகள் எப்படி போய்கொண்டிருக்கிறது என்றும் அதற்கு உதவ விரும்புவதாகவும் கூறினார்.

ஆண்டுவிழா தொடர்பாக ‘நாம் சற்று அகலக்கால் வைத்துவிட்டோமோ….?’ என்று நான் கலவரப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், தானாக அவர் மனமுவந்து நமக்கு உதவி செய்ய விரும்புவதாக கூறியபோது நெகிழ்ச்சியில் நான் கண்கலங்கிவிட்டேன். ஏனெனில், நமது அறப்பணிகளில் தங்கள் பங்களிப்பை வழங்கி தங்களுக்கு புண்ணியம் சேர்க்கவே பலரும் விரும்புகிறார்களே தவிர இந்த தளம் நடத்துவது தொடர்பாக எனக்கு எழும் செலவினங்கள் பற்றியோ அல்லது இது போன்ற விழாக்கள் நடத்துவதில் எனக்கு எழும் செலவினங்கள் பற்றியோ சிந்தித்து அதற்கு உதவ முன்வருபவர்களை ஒரு கை விரல் விட்டு எண்ணிவிடலாம். மேலே முதலில் கூறியபடி தங்களுக்கு புண்ணியத்தை தேடிக்கொள்ளும் முயற்சியில் நம்முடன் இணைய விரும்பும் சிலர் கூட என்னை கீறிப்பார்த்து தான் நம் பணியில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இவர் மனமுவந்து நமக்கு  உதவுவதாக கூறியதும் கண்கலங்கிவிட்டேன்.  அவருக்கு என் நன்றி.

நமது பிரார்த்தனைக்கு ஒவ்வொரு வாரமும் தலைமை தாங்கும் அனைத்து சான்றோரும் சுயநலமற்ற ஒரு வாழ்வை வாழும் உத்தமர்கள் தான். ஒருவரையொருவர் விஞ்சும் தகுதியை அனைவரும் பெற்றிருப்பதை நீங்களே அறிவீர்கள். அவரவர் கர்மா மற்றும் தீவினைகளை மனதில் கொண்டு பல சோதனைகளை தந்து அவற்றை கரைத்து உரிய நேரம் வரும்போது உங்கள் கோரிக்கைகளை இறைவன் நிறைவேற்றுவான் என்பது உறுதி. உங்களுக்கு தேவை, நம்பிக்கை, பொறுமை, நல்ல சிந்தனை & சுயநலமின்மை – இவை மட்டுமே.

நமக்காக இறைவனிடம் மன்றாடி, நமது பிரார்த்தனையை நிறைவேற்றி தரும் பொறுப்பை மஹா பெரியவாவிடம் நாம் விட்டுவிட்டது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். எனவே ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் மஹா பெரியவா அவர்களே தலைமை தாங்குகிறார் என்பது தான் உண்மை. தனது அதிஷ்டானத்தில் இருந்தபடி சதா இறைவனையே அவர் ஜெபித்துக்கொண்டிருந்தாலும் நமக்காக அவர் ஒவ்வொரு ஞாயிறு மாலையும் விசேஷமாக பிரார்த்தனை செய்தும் வருகிறார் என்பதும் உண்மை. வாழும் காலத்திலும் சரி தற்போது அதிஷ்டானத்தில் இருக்கும்போதும் சரி நமக்காக இறைவனிடம் பிரார்த்தித்து வரும் அவருக்கு நாம் செய்யக்கூடிய நன்றி யாதெனில், நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அப்படி நடந்துகொள்வதே.

ஒரு மனிதன் இறைவனுக்கு செய்யக்கூடிய உண்மையான பூஜை எது தெரியுமா?

சதா சர்வ காலமும் கோவில், குளம், பூஜை என்று சுற்றிக்கொண்டிருப்பது அல்ல. இறைவனின் விருப்பப்படியான ஒரு பரோபகார வாழ்க்கையை வாழ்வது தான். அது தான் உண்மையான வழிபாடு!

திருமதி.அனுராதா அவர்களின் மின்னஞ்சலை இத்துடன் இணைத்திருக்கிறேன்…

===================================================

பிரார்த்தனை நிறைவேறியது!

சுந்தர் சார்,

‘மகா பெரியவா தொண்டர்’ திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் தலைமையேற்று பிரார்த்தனை நடத்திய பின்னர் பணி உத்தரவு ஜெயஸ்ரீக்கு கிடைத்தது என நம் தள வாசகி உஷா நெகிழ்ச்சியாய் Aug – 17 அன்று நீங்கள் அளித்த பதிவில் http://rightmantra.com/?p=6233 குறிப்பிட்டிருந்தார்.

பிரார்த்தனை கிளப்பில் Aug – 3 -ல் முறையிட்ட என் கோரிக்கையும் http://rightmantra.com/?p=5981 நிறைவேறி விட்டது. குழந்தை தர்சனா சிங்கப்பூர் வந்து விட்டார். நானும் என் குழந்தையும் சிங்கப்பூரில் மிகவும் மகிழ்வுடன் உள்ளோம். எனது மற்ற பிரச்சனைகள் தீர சில காலம் ஆகலாம். ஆனால் நானும் குழந்தையும் ஒன்று சேரவேண்டும் என்ற உங்கள் பிரார்த்தனை நிறைவேறிவிட்டது.

எங்களுக்காக தலைமையேற்று பிரார்த்தனை செய்த, சுவாமிநாதன் அவர்களுக்கும், அவரின் துணைவியார் அவர்களுக்கும், ரைட் மந்த்ரா குடும்பதினருக்கும் இங்குள்ள நண்பர்கள் மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நன்றி.

பிரசுரமான அனைத்து பிரார்த்தனைகளும் மகா பெரியவாவின் ஆசியுடன் விரைவில் நிறைவேறும். எல்லாரும் மிகுந்த நம்பிக்கையுடன், எல்லாரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்வோம். பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் அனைத்து பெரியவர்களுக்கும் நன்றி.

தன் நலம் பாராமல், பிறர் நலம் பேணும் சுந்தர் சார் அவர்கள் சேவை தொடரவும், அவருக்கு நல்ல வாழ்க்கை துணை அமையவும் வாழ்த்துக்கள்.

உங்கள் பணியில் சிறிதளவு எங்களையும் ஈடுபடுத்தி வாழ்வை செம்மையாக்குவோம்

மிக்க மகிழ்வுடனும், நிறைவுடனும்

அனுராதா & பேபி தர்சனா,
சிங்கப்பூர்

===================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் யார் தெரியுமா?

செந்தமிழரசு, தேவார முரசு  திரு.சிவக்குமார்!

சிவக்குமார் அவர்களின் சொற்பொழிவை எப்போது முதல் முறை கேட்டேனோ அப்போதே  இவரது பரம ரசிகராக மாறிவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரம் பேசமாட்டாரா? இன்னும் கொஞ்சம் நேரம் பேசமாட்டாரா? என்று ஏங்க வைத்துவிடுவார். பேசும்போது நகைச்சுவை இழையோட பேசுவது இவரது சிறப்பு. தேவாரம் மட்டுமல்ல கந்தபுராணத்தையும் கரைத்து குடித்தவர் திரு.சிவக்குமார். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் இவரது சொற்பொழிவு வாரத்திற்கு மூன்று நாட்கள் குறைந்தது நடைபெற்றுவருகிறது.

திரு.சிவக்குமார் சென்னையில் சத்யபாமா பொறியியல் கல்லூரியில் மெக்கானிகல் என்ஜீனியரிங் துறையில் HOD யாக பணியாற்றி வருகிறார். தவிர ‘ஞானத்திரள்’ என்கிற சைவ சமய பத்திரிக்கையும் நடத்திவருகிறார்.

பொதுவாக கல்லூரியில் பேராசிரியராகவோ அல்லது இது போன்ற பெரிய பணிகளில் இருப்பவர்களோ பணி நேரம் போக டியூஷன் எடுப்பது உள்ளிட்டவைகலில் கவனம் செலுத்தி வருவாய் ஆதாரத்தை பெருக்கிக்கொள்ளத் தான் வழி தேடுவார்களே தவிர தனக்கு இறைவன் வழங்கிய சொல்லாற்றலையும் பேச்சாற்றலையும் ஆன்மீகம் தழைக்கவும் சமயம் தழைக்கவும் பயன்படுத்துகிறவர்கள் அரிதினும் அரிது. அப்படியே பயன்படுத்தினாலும் அதிலும் பொருளீட்டும் நோக்கம் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் திரு.சிவாக்குமார் அவர்கள் ‘சைவத் தொண்டே பிறவியின் நோக்கம், சிவனைப் பாடுவதே பிறவிப் பயன்’ என வாழ்ந்து வரும் உத்தமர்.

ஒரு நிகழ்ச்சியில் திரு.சிவக்குமார் அவர்களை சந்தித்தபோது…

மாலை வேளைகளில் பணி முடிந்து வீடு திரும்பியதும் குடும்பத்துடன் தொலைகாட்சி முன்பும், சீரியல் முன்பும், நேரத்தை கழிப்பவர்கள் மத்தியில் கிட்டத்தட்ட மாதத்தில் 25 நாட்கள் சைவ நெறியை பரப்புவதற்கு என்றே தம்மை அர்பணித்துக்கொண்டு, பலன் பற்றி சிந்திக்காமல் உழைத்துவருகிறார் திரு.சிவக்குமார். ஒரு பக்கம் கல்லூரியில் துறைத் தலைவர் பணி மறுபக்கம் சைவத் தொண்டு என தேனீயாய் காலம் கருதாது உழைக்கும் திரு.சிவக்குமார் உண்மையில் சிவனருள் பெற்றவர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக் கூறி, இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டவுடன் மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். இவர் நமது பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை ஏற்பதை நமக்கெல்லாம் கிட்டிய மிகப் பெரும் பாக்கியமாக கருதுகிறோம். நல்ல சிந்தனை, பலன் கருதாது அறப்பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவது, அசைக்க முடியாத தெய்வ நம்பிக்கை என்று நம் வாசகர்கள் இருப்பதன் பலன் தான் இவரைப் போன்றவர்கள் நமாக்காக பிரார்த்தனை செய்யும் பாக்கியத்தை நமக்கு அளித்திருக்கிறது.

இதற்கு முன்பு, கோரிக்கை வைத்த அனைவருக்கும் கூட சேர்த்து பிரார்த்தனை செய்யும்படி திரு.சிவக்குமார் அவர்களை கேட்டுக்கொண்டுள்ளேன்.

ஒரு சாம்பிளுக்கு சிவக்குமார் அவர்கள் நவக்கிரகங்கள் பற்றியும் சிவ நெறி பற்றியும் ஆற்றிய ஒரு உரையின், ஒலி வடிவத்தை கீழே YOUTUBE வீடியோவாக இணைத்துள்ளேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள். (இணையத்தில் இது தான் கிடைத்தது.).

நவக்கிரங்களும் சிவ நெறியும் – பேராசிரியர் திரு.சிவக்குமார் அவர்களின் உரை – YOUTUBE

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

ஒருவருக்கு கடன் பிரச்னை. கடன் பிரச்னை எத்தகைய கொடுமை என்று அதை அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும். நோயைவிட கொடியது கடன் பிரச்னை.  இவரது கடன் பிரச்னை விரைவில் நிச்சயம் தீரும். திட்டமிட்ட வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து எதிர்காலத்தில் சமயத் தொண்டாற்றவேண்டும் என்று இவரை கேட்டுக்கொள்கிறேன்.

மற்றவருக்கு வாழ்க்கை பிரச்னை. அவருடைய வார்த்தைகளிலேயே தெரிகிறது அவரது துயரத்தின் ஆழம். ஏதோ ஒரு நம்பிக்கை ஏற்பட்டு இங்கு நமது பிரார்த்தனைக்கு விண்ணப்பித்திருக்கிறார். ‘மனம் போல வாழ்க்கை’ அமைய இவரை வாழ்த்துகிறோம்.

===============================================================
கடன்பட்டார் நெஞ்சம் இங்கே கலங்கி நிற்கிறது

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்…

என் பெயர்  நடராஜன். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தொண்டப்பாடி வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்தவன். சமீப காலமாக ரைட் மந்த்ராவின் வாசகன்.

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்னையால் நிம்மதியின்றி தவிக்கிறேன். எனது கடன்கள் யாவும் நீங்கி நிம்மதியுடன் வாழ எனக்காக இறைவனை பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
நடராஜன்,
பெரம்பலூர் DT.

===============================================================

விரும்பிய வண்ணம் வேலை வேண்டும்; நல்ல வாழ்க்கையும் வேண்டும்

Hello sir,

Today i saw your website.

Am Anita, i’m trying for Job since 6 months. Still now i didn’t get good job.

My age is 33, i don’t know when i get married or not? and also my father health was not good.my mind is not stable.

Please sir pray for me.

By
Anita
===============================================================

எனது பொது பிரார்த்தனை

வேண்டும் கிராமப்புற கல்வி மறுமலர்ச்சி

நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் பள்ளிக்கூடங்களே இல்லாத கிராமங்களும் ஊர்களும் இன்றும் நம் நாட்டில் பல இருக்கின்றன. பட்டதாரி காணாத குடும்பங்கள் பல இன்றும் நம் தமிழகத்தில் இருக்கின்றன. இன்றும் பல அரசு பள்ளிகள் போதுமான கட்டிட வசதியின்றி ஆசிரியர்கள் இன்றி மரத்தடியிலும் திண்ணைகளிலும் தான் செயல்பட்டு வருகிறது.

பல ஊர்களில் கிராமங்களில் மாணவர்களக்கு செய்முறை பயிற்சி (PRACTICAL CLASS) நடத்த போதுமான அளவு கல்வி உபகரணங்கள் இருந்தும், கட்டட வசதி இல்லாததால், பெரும்பாலான பள்ளிகளில் அவை அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன என்பது தெரியுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி மாணவர்கள் தங்களின் செய்முறை பயிற்சிக்கு 3 கி.மீ. தூரத்தில் உள்ள வேறொரு பள்ளிக்கு தான் இன்றும் செல்கின்றனர் என்பது தெரியுமா?

இந்த நிலை மாறவேண்டும். கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படவேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி பயில அடிப்படை வசதிகள் கிடைக்கவேண்டும்… ஆட்சியாளர்களின் முழு கவனமும் இதில் திரும்பவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

===============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgதிரு.நடராஜன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடன்கள் தீர்ந்து அவருடைய பொருளாதார சூழல் ஏற்றம் பெறவும், செல்வி.அனிதா அவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து, மனம் போல ஒரு வாழ்க்கை அமையவும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நண்பர்களிடம் இவரது வேலை தொடர்பாக பேசியிருக்கிறேன். நல்ல நிறுவனங்களை REFER செய்வதாக கூறியிருக்கிறார்கள். விரைவில் இவரது பிரச்னை தீர்ந்துவிடும் என்று நம்புகிறேன்.

திருக்குறள், சிலப்பதிகாரம், மூதுரை, நாலடியார், கம்பராமாயணம் போன்ற நன்னெறி நூல்களை தந்த தமிழ் சமூகம் இன்று தனது பிள்ளைகளுக்கு போதிய கல்வி அளிக்க முடியாது திண்டாடுகிறது. கல்வி மறுமலர்ச்சி ஏற்பட்டு அனைவரும் ஏற்றத் தாழ்வற்ற கல்வி கற்க வாய்ப்புகள் அமையவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்வோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

============================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : செப்டம்பர் 22, 2013 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசகர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : ‘எண்ணங்களின் சங்கமம்’ நிறுவனர் திரு.ஜெ.பி.

11 thoughts on “ஒரு பிரார்த்தனை நிறைவேறிய கதை! RIGHTMANTRA பிரார்த்தனை கிளப்

  1. திருச்சிற்றம்பலம்
    நமசிவாய வாழ்க

    இன்றைய நாள் இனிய நாளாய் அமைய வாழ்த்துக்கள்,
    அன்புடன் இனிய வணக்கம்

    சிவகுமார் ஐயா பற்றிய கட்டுரைக்கு நன்றி …அவரோயோத்யா ” திருமந்திரம்” சொற்பொழிவும் புகழ் பெற்றது …அன்பர்கள் அதை பார்க்குமாறு பணிவுடம் வேண்டுகிறான் ….

    திருச்சிற்றம்பலம்
    நமசிவாய வாழ்க

  2. திருச்சிற்றம்பலம்
    நமசிவாய வாழ்க

    அன்பான சுந்தர்

    ‘ஞானத்திரள்’ என்கிற சைவ சமய பத்திரிக்கை எப்படி வாங்கவது அல்லது இன்டர்நெட் இல் உள்ளத பற்றி சற்று விவரித்தல் நன்றாக இருக்கும் ….இன்டர்நெட் இல் தேடினான் கிடக்கவில்லை …..மற்றும் திரு சிவகுமார் அய்யா வெப்சைட் இறந்தல்லும் தெரிவிக்கும் ….

    திருச்சிற்றம்பலம்
    நமசிவாய வாழ்க

  3. சுந்தர் சார்

    ஆண்டவனிடம் கொண்டு சேர்க்கும் பிரத்தனை கண்டிப்பாக நிறைவேரும் சார்.. நம் தள வாசகி அனுராதா அவர்களை உதாரணம் சார் ..
    மனசு கலங்குது சார்..

    நன்றி சார்

  4. சுந்தர்ஜி

    இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்று இருக்கும் திரு,சிவக்குமார் அவர்கள் தனது துறைக்கு முற்றிலும் வேறுபட்டு ஆன்மிக பணியில் ஈடுபட்டு இருப்பது மிகவும் வியப்பாக உள்ளது .
    அவர் தம் பெயர்க்கு முன்னால் சிவன் சேர்ந்து இருப்பது போல் வாழ்விலும் அவருடன் சிவத்தொண்டும் சேர்ந்து உள்ளது போலும்!
    அவரை நம் தளம் சார்பாக வணங்கி வரவேற்கிரேன்.

    இந்த வாரம் நம் தளத்திற்கு வந்திருக்கும் பிரார்த்தனைகளுக்கு உள்ளம் உருக நாமும் திரு.சிவகுமார் அவர்களுடன் பிரார்த்திப்போம்.
    திருமதி அனுராதா அவர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
    நன்றி.

  5. வணக்கம் சுந்தர் அண்ணா,
    இந்த ரைட் மந்த்ரா தளத்தோட தலைப்பில் “தேடல் உள்ள தேனிகளுக்கு” என்கிற வாசகர்களுக்காக நீங்கள் பதிச்சி இருக்கீங்க. ஆனால், ஒவ்வொரு பதிவிலும், பதிவிடுகிற ஒவ்வொரு நபர் பற்றிய செய்திகளை சேகரிச்சி, அவர்களை தொடர்பு கொண்டு, அதன் மூலம் கிடைக்கிற தகவல்களை தொகுத்து, ஒழுங்கு படுத்தி அதை பார்த்து மற்றவர்களும் தங்களுடைய வாழ்கையை நல்ல முறையிலும், பயனுள்ளதாக அமைத்து கொள்ள இத்தனை பெரிய முயற்சி செய்து வெளியிடுரிங்க. அதுவும் உங்களுடைய இந்த சென்னை அலுவலக வாழ்க்கைக்கு நடுவில.எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் சமுதாயத்துக்காக உழைக்க நமது எப்படி வேணும்னாலும் உடலை தயார் பண்ணிக்கலாம்.ஆனால், சில விசயங்களை செய்து முடிக்க பணம் என்கிற ஒன்று முக்கியமான தேவை. அதை பத்தி நான் யோசிச்சால் எனக்கு வியப்பு மட்டும் தான் மீதம். இப்படியும் ஒருத்தர் தனது சமுதாயத்திற்காக நல்ல விசயங்களை சொல்ல இந்த அளவு உழைக்க முடியுமா என்கிற வியப்பு.ரைட் மந்த்ரா செடிய பொறுத்த வரை நீங்க தான் “ராஜா தேனீ “என்பது உங்களுடைய உழைப்பு சொல்லாமல் சொல்லுது.இந்த ரைட் மந்த்ரா செடியில பூக்கும் பூவில தேன் அருந்த வர தேனீக்களில் நானும் ஒரு தேனியாக இருக்குறது மட்டும் எனக்கு பெருமை தராது என நினைக்கிறேன்.தேன் மட்டும் அருந்தி விட்டு செடிய பத்தி யோசிக்கமா இருக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன்.நானும் என்னால முடிந்த பங்களிப்ப இந்த தளத்துக்கு தர விரும்புகிறேன். ஆனால், அது என்னோட கர்மாவுக்காக இல்லை. என்னுடைய ஆத்ம திருப்திக்காக. ஏணா சாதாரண உணவு, உடை, இருப்பிட தேவையோட மட்டும் என் வாழ்க்கைய வாழ விருப்பம் இல்லாததல சொல்றேன்.
    நன்றி.

  6. பேராசிரியர் திரு.சிவக்குமார் அவர்களின் உரை மிக அருமையாக உள்ளது ..சிவாய நாம என சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருபோது இல்லை என அவ்வை பிராட்டி சொல்லியது போல சிவனை வணங்கினால் அந்த நவ கிரகத்தை வணங்க தேவை இல்லை என மிக அழகாக சொல்லியுள்ளார் திரு சிவகுமார்..அவர்கள் …

    மேலும் இந்த வாரம் பிரார்த்தனைக்கு விண்ணப்பித்த அனைவரின் பிரார்த்தனைகளும் நிறைவேற வேண்டும் என அந்த இறைவனை பிரார்த்திக்கின்றேன் ..
    முன்பதிவில் பிரார்த்தனை நிறைவேறிய திருமதி, அனுராதா & பேபி தர்சனா,அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை இந்நேரத்தில் நான் தெரிவிக்கின்றேன் ..
    நன்றிகளுடன்..
    சந்திரசேகரன் ..

  7. சிவகுமார் அய்யா அவர்களின் youtube கேட்டேன்.மனதிற்கு நன்றாக இருந்தது. அய்யா அவர்கள் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவது நாம் செய்த புண்ணியம்.
    அவர் குரல் நம்மை கவர்ந்து இழுக்கிறது.
    அனுராதா மேடம் அவர்களின் பிரார்த்தனை நிறைவு பெற்றது மிகவும் சந்தோசமாக உள்ளது.
    நடராஜன் அவர்களின் கடன் பிரச்னை தீரவும், அனிதாவுக்கு நல்ல வேலை கிடைத்து சந்தோஷமான வாழ்கை அமைய வேண்டுவோம்.
    அனிதா ரைட் மந்திரா படிக்க ஆரம்பித்தவுடனே அவருடைய கவலை குறைய ஆரம்பித்து இருக்கும்.
    மேலும் தம்பி jagadesh சொன்னமாதிரி நாமும் நினைக்க ஆரம்பித்தால் தன்னை பற்றி நினைக்காமல் வாழும் சுந்தர் சார் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

  8. நாம் மட்டும் இறைவனிடம் பிராத்தனை செய்வதோடு ,நம்முடைய பிராத்தனையை இன்னும் சில பேர் சேந்து கூட்டு பிராத்தனையாக ஒன்று சேரும் பட்சத்தில் அது கூடிய சீக்கிரம் நிறைவேறுகிறது என்று கண்கூடாக தெரிகிறது ,நமது தளம் மற்றொரு பரிமாணத்தில் சென்று கொண்டு இருக்கிறது வாழ்த்துக்கள்

  9. மிக்க நன்றி சுந்தர் சார்.

    எங்களை வாழ்த்தும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

    திரு.நடராஜன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடன்கள் தீர்ந்து அவருடைய பொருளாதாரம் மேன்மை அடையவும், செல்வி.அனிதா அவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து, மனம் போல ஒரு வாழ்க்கை அமையவும், கிராமப்புற வளர்ச்சி மேன்மை அடையவும் இறைவனை வேண்டி மனம் உருகி பிராத்தனை செய்வோம். வாழ்க வளமுடன்.

  10. சுந்தர் சார்,

    உங்கள் செயல் மேலும் செம்மை படுத்திட நம் மகா பெரியவரின் ஆசி உங்களுக்கு நிச்சயம் உண்டு.

    அனுராதா அவர்களும் அவரின் குழந்தையும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்.

    அதே போல் திரு நடராஜன் அவர்களின் கடன் சுமை குறையவும் மற்றும் அனிதா அவர்களுக்கு புதிய வேலை கிடைத்து மனம் போல் வாழ்க்கை அமையவும் அதே போல் திருவள்ளூர் கிராமத்தில் கல்வி மறுமலர்ச்சி அடைய இந்த வார பிரார்த்தனை கிளப் மூலம் நிறைவேரட்டும்.

    நன்றியுடன் அருண்.

  11. பாரத நாடு நல்லவர்கள் கையில் வாழ……… இறைவா நீங்கள் வழி செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *