Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, October 5, 2024
Please specify the group
Home > Featured > ராமரின் சிவபூஜைக்கு அனுமன் கொணர்ந்த லிங்கம் என்ன ஆனது? Rightmantra Prayer Club

ராமரின் சிவபூஜைக்கு அனுமன் கொணர்ந்த லிங்கம் என்ன ஆனது? Rightmantra Prayer Club

print

சென்ற வாரம் ராமேஸ்வரம் சென்று வந்தது வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று. இந்த ஆண்டு துவக்கத்தில் (பிப்ரவரி 2016) சுமார் ஐம்பது லட்சம் பேர் பங்கேற்ற – பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் – மகாமகம் சென்றபோது கிடைத்த மகிழ்ச்சியை விட மனநிறைவை விட ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்திலும் ஏனைய 22 தீர்த்தங்களிலும் நீராடியபோது கிடைத்த மகிழ்ச்சி அதிகம். மேலும் ராமநாத சுவாமியை தரிசித்தபோது கிடைத்த மகிழ்ச்சி அதையும் விட அதிகம்.

அதிகாலை 5.30 க்கு ராமேஸ்வரம்...!
அதிகாலை 5.30 க்கு ராமேஸ்வரம்…!

ராமேஸ்வரம் ஒரு அற்புதம் நிறைந்த புண்ணிய பூமி. அங்கிருக்கும் ஒவ்வொன்றும் புனிதமானவை. எல்லோராலும் ராமேஸ்வரம் மண்ணை மிதிக்கமுடியாது. பாக்கியம் செய்தவர்கள் மட்டுமே ராமநாத சுவாமியை தரிசிக்க முடியும். ஏதோ நாம் பார்த்துவிட்டதால் தற்பெருமை பேசுவதாக எண்ணவேண்டாம். நடந்ததை கூறுகிறோம். நீங்களே சொல்லுங்கள்.

கன்னியாகுமரி (நாகர்கோவில்) பயணத்தை முதன்முதலில் திட்டமிட்ட போது அதை முடித்துவிட்டு நாம் அடுத்து செல்ல நினைத்தது வேதாரண்யம் என்னும் திருமறைக்காடு தான். காரணம் வேதாரண்யம் பற்றிய அருமையான ஒரு தகவல் + சம்பவம் நம்மிடம் இருக்கிறது. அதை அந்த கோவிலின் பிரத்யேக படத்துடன் அளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் சென்ற வாரம் ‘விபீஷண சரணாகதி’ பற்றிய பதிவை நாம் தயாரித்துக்கொண்டிருந்தபோது ராமேஸ்வரத்தை பற்றியும் அதன் தனிச்சிறப்புக்கள் பற்றியும் அறிந்துகொள்ள நேர்ந்தது. இப்படி ஒரு புண்ணியபூமியை இத்தனை நாள் தரிசிக்காமல் எப்படி இருந்தோம் என்று தோன்றியது. அது ஏக்கமாகவும் மாறியது.

rameswaram-2

‘விபீஷண சரணாகதி’ பற்றிய பதிவில் அளித்த கோதண்ட ராமர் கோவிலையும் நேரில் தரிசிக்க ஆவல் பிறந்தது. அந்த பதிவின் தயாரிப்பின்போது பல சந்தர்ப்பங்களில் நம்மையுமறியாமல் ராமநாமத்தை உச்சரித்தபடியால் பயண திட்டம் மாற்றியமைக்கப்பட்டு (நம் மனம் அதற்கு தூண்டப்பட்டு) நமக்கு ராமேஸ்வரத்தை தரிசிக்கும் வாய்ப்பும் ராமநாதரை தரிசிக்கும் பாக்கியமும் கிடைத்தது. கூடவே விபீஷண சரணாகதி தொடர்புடைய கோதண்ட ராமரையும் தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது. (இந்த ஆலயத்தை பற்றி ஆலய தரிசன பகுதியில் தனிப் பதிவு வரும்! இப்போதைக்கு புகைப்படத்தை இணைத்திருக்கிறோம்!)

விபீஷ்ண பட்டாபிஷேகம் நடைபெற்ற கோதண்டராமர் கோவில்…

இது போன்ற ஒரு பெரிய ஜனத்திரள் அதிகம் வந்து போகும் ஷேத்ரத்திற்கு எந்த வித முன்னேற்பாடும் இன்றி செல்வது என்பது சாதாரண விஷயமா என்ன? இருப்பினும் ‘விபீஷண சரணாகதி’ படலத்தின் மகிமையும் ராமநாமத்தின் சக்தியும் அதை சாத்தியப்படுத்தி, ராமேஸ்வரத்திற்கு நம்மை வரவழைத்தது. ராமநாதரையும் தரிசிக்க வைத்தது. இதற்கு முன் நாம் ராமேஸ்வரம் சென்றிராத நிலையில் யாரையும் அங்கு தெரியாத நிலையில் நமக்கு தங்குமிடம் உட்பட அத்தனை உதவிகளையும் செய்ய எதிர்பாராத வகையில் ஒரு உதவிக்கரம் நீண்டது. (பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் விருந்தினரை பாருங்கள் புரியும்!).

இப்படி இது பற்றி எழுதவேண்டுமானால் எழுதிக்கொண்டே போகலாம். இது பிரார்த்தனைப் பதிவு என்பதால் இதற்கு என்ன தேவையோ அதை தருகிறோம்.

ராமேஸ்வரத்தில் இருந்த ஒவ்வொரு நொடியும் அந்த சுவர்க்கத்தில் இருப்பதைப் போலவே உணர்ந்தோம். அத்தனை பவித்திரமான பூமி. (ராமேஸ்வர தரிசன அனுபவத்தை தனிப் பதிவாக தருகிறோம்.) இப்போதைக்கு முக்கிய விஷயம் ஒன்றை கூறுகிறோம்.

மூலவரை தரிசிக்கும்போது வெளியே வந்த பின்னர் அருகே காசி விஸ்வநாதர் என்று பெயர் தாங்கிய ஒரு சன்னதியை கண்டோம். “இங்கே ஏது காசி விஸ்வநாதர்?” என்று யோசித்தபடி தான் தரிசித்தோம். நமது பிரார்த்தனை கிளப் கோரிக்கைகளை அங்கு இருந்த அர்ச்சகரிடம் கொடுத்து விஸ்வநாதர் பாதத்தில் சமர்பித்து அனைவருக்கும் அர்ச்சனை செய்தோம். (பிரதான சன்னதியைவிட இங்கு கூட்டம் குறைவு!) தொடர்ந்து காசி விஸ்வநாதர் இங்கே எப்படி என்று தெரிந்துகொள்ள விழைந்ததில் கிடைத்த விடை தான் இந்தப் பதிவு.

(நம் தளம் சார்பாக வாசகர்களையும் உழவாரப்பணி உறுப்பினர்களையும் இரண்டொரு மாதத்தில் ராமேஸ்வரத்திற்கு தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருக்கிறோம். வர விரும்புகிறவர்கள் நமக்கு தகவல் தெரிவிக்கவும்.)

ராமர் செய்த சிவபூஜையும் அனுமனின் ஏமாற்றமும்! 

லங்கையில் ராவணனை போரில் ராமபிரான் வென்று வீழ்த்திய பின் வானர சேனைகள் ராமநாமம் கோஷம் எழுப்ப அனைவரும் புஷ்பக விமானத்தில் அயோத்தியை நோக்கி புறப்பட்டனர்.

ramanatha-swamyபுஷ்பக விமானம் பறந்த திசை நெடுகிலும் ராமர் ஒவ்வொரு இடமாக சீதைக்கு காட்டி விளக்கிய படி வந்தார். சேது சமுத்திரத்தை கடக்கும்போது வானரர்கள் கட்டிய சேது பந்தனத்தை (பாலம்) பார்த்த சீதை வியப்பின் உச்சியில் ஆழ்ந்தாள்.

சேதுக் கரையை விமானம் கடக்கும்போது என்ன நினைத்தாரோ ராமர் உடனே விமானத்தை நிறுத்தச் செய்து அங்கே இறங்கினார்.

இராவணன், கும்பகர்ணன் அசுர குலத்தோராயினும் பிறப்பின் அடிப்படையில் பிராமணர்கள் என்பதால் அவர்களை கொன்ற பாவம் தீர, பிரம்மஹத்தி தோஷம் நீங்க, சிவபூஜை செய்ய ராமர் சித்தம் கொண்டார். அதற்கு காசியிலிருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்து அதை பூஜை செய்ய விரும்பினார்.

அனுமனிடம் விஷயத்தை கூறி, காசி சென்று விஸ்வநாதரை தரிசித்து சிவலிங்கம் பெற்று வருமாறு கட்டளையிட்டார்.

காசி சென்ற அஞ்சனா புத்திரன் அங்கு விஸ்வநாதரை நோக்கி தவமிருந்தார். அவர் முன் பிரத்யட்சமான சிவபெருமானிடம், ராமர் சிவலிங்கம் கொண்டு வருமாறு பணித்த செய்தியை கூறியவுடன் சர்வேஸ்வரனும் மகிழ்ந்து அனுமனிடம் ராமர் கேட்டபடி ஒரு லிங்கத்தை தந்து தாமும் பார்வதி சமேதராய் ராமருக்கு சேதுவில் தரிசனம் தருவதாக கூறியருளினர். வெற்றிக்களிப்புடன் காசியிலிருந்து லிங்கத்தை பெற்று சேதுக் கரைக்கு திரும்பலானார் அனுமன்.

இங்கே சேதுக்கரையில் அனுமனின் வரவுக்காக காத்திருந்த ராமன், சிவபூஜைக்கு குறிப்பிட்ட நேரம் கடந்தும் அனுமன் வராததைக் கண்டு, பூஜைக்குரிய முஹூர்த்தம் கடந்துவிடக் கூடாதே என்று பரிதவித்து, முடிவில் சீதையை அழைத்து அவள் கையால் மணலில் லிங்கம் ஒன்றை பிடிக்கும்படி கேட்டுக்கொண்டார். சீதாதேவியும் மணலால் லிங்கம் ஒன்றை உடனடியாக செய்து முடிக்க, ராமர் பெரிதும் மகிழ்ந்து உடனே சமுத்திரத்தில் நீராடி பின்னர் பலவகை மலர்களைக் கொண்டு சிவபூஜையை கிரமமாக செய்து முடித்தார். மேலும் அனைத்து வகையான பிராயச்சித்த பரிகார பூஜைகளையும் அந்த மணல் லிங்கத்தையே பூஜித்து நிறைவு செய்தார்.

இராமர் இவ்விதமாக சிவபூஜை செய்து முடிக்கவும், அங்கே அனுமன் காசியிலிருந்து லிங்கத்தோடு வந்து சேரவும் சரியாக இருந்தது.

தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை இராமரிடம் சமர்பித்து பவ்யமாக நின்ற வேளையில், அருகே மணலால் லிங்கம் ஒன்று எழுப்பட்டிருப்பதையும் அது பூஜிக்க்கப்பட்டதன் அடையாளமாக பூக்களும் வில்வமும் சிதறிக்கிடப்பதையும் கண்டு திடுக்கிட்டு ஏற்கனவே சிவபூஜை முடிந்துவிட்டது என்பதை புரிந்துகொள்கிறார் அனுமன்.

இது பற்றி ராமரிடம் வினவியபோது, ராமர் நடந்ததைக் கூறுகிறார்.

அனுமன் மிகவும் ஏமாற்றமடைய அது விரக்தியாக மாறிவிடுகிறது. இது போன்ற நேரங்களில் வார்த்தைகளை கவனமாக கையாளவேண்டும்.

“நான் இத்தனை தூரம் கஷ்டப்பட்டு கொண்டு வந்த சிவலிங்கத்தை என்ன செய்வது பிரபோ?” என்று அனுமன் கேட்டிருக்கவேண்டும்.

rameswaram

ஆனால் அவர் என்ன சொன்னார் தெரியுமா?

“பிரபோ, மணலால் லிங்கத்தை பிடித்து சிவபூஜை செய்வதானால் அதை முதலிலேயே செய்திருக்கலாமே… என்னை ஏன் வீணாக காசிக்கு அனுப்பவேண்டும்? உங்கள் சிவபூஜையை அருகேயிருந்து காணும் பாக்கியம் அடியேனுக்கு இல்லையா? இல்லை அந்த அருகதையும் எனக்கில்லை என்று முடிவு கட்டிவிட்டீர்களா? உங்களுக்காக அடியேன் இதுவரை பட்ட கஷ்டங்களுக்கு இது தான் பரிசா??” என்று பொரிந்து தள்ளிவிட்டார் சரவெடியாக.

கோசலை மைந்தன் மெல்ல சிரித்தான்.

“ஆஞ்சநேயா… சிவபூஜைக்கு நான் குறித்திருந்த வேளை கடந்துவிடக்கூடாதே என்று எண்ணி தான் சீதையைக் கொண்டு மணலால் லிங்கம் செய்து பூஜை செய்தேன். மற்றபடி நீ கொண்டு வரும் லிங்கத்தை பூஜிக்கக்கூடது என்று அல்ல. இப்போது மட்டும் என்ன? நீ கொண்டு வந்த லிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்தால் போகிறது”

“அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?”

“இந்த மணல் லிங்கத்தை அப்புறப்படுத்திவிட்டு அங்கே நீ கொண்டு வந்த லிங்கத்தை வை”

இதற்காகவே காத்திருந்தாற்போல அனுமன், பாய்ந்து சென்று அந்த மணல் லிங்கத்தை தனது வலக்கையால் தூக்கி அப்புறப்படுத்த முயன்றார். ஒரு இம்மி கூட அந்த லிங்கம் அசையவில்லை. அடுத்து இரண்டு கைகளையும் பயன்படுத்தி தூக்க முயற்சித்தார். ம்…ஹூம்… இப்போதும் ஒரு இம்மி கூட லிங்கம் அசைந்துகொடுக்கவில்லை. இறுதியில் தனது உடலிலேயே சக்தி மிக்கதான தனது வாலைக் கொண்டு அந்த லிங்கத்தை இறுகப் பிணைத்து அப்புறப்படுத்த முயற்சித்தார். அப்போதும் லிங்கம் அசையவில்லை. மாறாக அவர் வால் தான் தேய்ந்து அறுந்து போய் அனுமன் தூரப் போய் விழுந்தார்.

அங்கே சுற்றியிருந்த அனைத்து வானர வீரர்களும் அனுமனைக் கண்டு நகைத்தனர். அனுமனுக்கு அவமானமாய்ப் போய்விட்டது.

அனுமனுக்கு வால் அறுபட்டாலும் சிவலிங்கத்தை தழுவியதால் மனதுக்குள் ஞானம் அரும்பியது. கீழே விழுந்தவர் தெளிந்த ஞானத்துடன் எழுந்தார்.

தாம் ஆத்திரத்தில் தாம் உயிருனும் மேலாக மதிக்கும் இராமபிரானிடம் பேசிய வார்த்தைகளை நினைத்து வருந்தினார். ஓடி வந்து ராமனின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

“அண்ணலே… இந்த எளியோனை மன்னியுங்கள். நான் லிங்கம் கொண்டு வர தாமதித்தாலும் உங்கள் சிவபூஜை குறித்த நேரத்தில் தடைபடாமல் நிறைவேறியதே என்று மகிழ்ச்சியடையாமல் அதற்கு மாறாக நான் கோபம் கொண்டது தவறு தான். என்னை மன்னியுங்கள்….” என்று மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு வருந்தினார்.

அவர் தன் உணர்ந்துகொண்டார் என்று தெரிந்துகொண்ட ராமர் அவரை ஆலிங்கனம் செயது அன்போடு தடவிக்கொடுக்க, அறுபட்ட வால் மீண்டும் ஒட்டிக்கொண்டது.

தொடர்ந்து பேசிய இராமர், “கவலை நீங்குக வாயுபுத்திரா… நீ கொண்டு வந்த லிங்கம் வீண் போகாது. அதை இந்த மணல் லிங்கத்துக்கு வடக்கே பிரதிஷ்டை செய். அந்த லிங்கம் ‘காசி விஸ்வநாதர்’ என்கிற பெயருடன் இங்கே அனைத்து வகையாக சாந்நித்தியத்துடனும் விளங்கும். நீ கொண்டு வந்த காசி விஸ்வநாதரை பூஜிக்காமல் மணலால் பிடித்த இந்த மூல லிங்கத்தை மட்டும் பூஜித்தால் எந்தப் பலனும் இருக்காது…” என்று உறுதியளிக்கிறேன் என்று கூறி அனுமன் காசியிலிருந்து கொண்டு வந்த விஸ்வநாதரை பெருமைப்படுத்தினார் ராமர்.

அனுமன் மிகவும் மகிழ்ச்சியடைந்து தான் கொண்டு வந்த லிங்கத்தை ராமர் கூறியபடியே ஸ்தாபிக்க அதுவே ராமேஸ்வரத்தில் பிரதான சன்னதியின் வலப்பக்கம் உள்ள ‘காசி விஸ்வநாதர்’ ஆயிற்று.

இப்போதும் நீங்கள் ராமேஸ்வரம் சென்றால் மூலவருக்கு அருகே ஒரு தனி சன்னதியில் காசி விஸ்வநாதரை தரிசிக்கலாம்.

அடுத்த நொடி தான் காசியில் அனுமனுக்கு கொடுத்த வாக்கின்படி அங்கே பார்வதி தேவியுடன் பிரத்யட்சமான ஈசன், ராமனின் சிவபூஜையையே ஏற்றுக்கொண்டு அனைவரையும் ஆசீர்வதித்தருளினார்.

இப்படி ராமேஸ்வரத்தில் உள்ள ஒவ்வொரு லிங்கத்தின் பின்னணியிலும் ஒரு பிரமிப்பான சம்பவம் இருக்கிறது.

ராமேஸ்வரத்தில் இவ்விதமாக வெற்றிகரமாக ராமநாதரை ஸ்தாபித்த ராமர் தொடர்ந்து கிஷ்கிந்தை சென்று சுக்ரீவனை வாழ்த்தியருளினார். இடையிடையே சீதைக்கு பல்வேறு இடங்களை காண்பித்த படி சென்றார்.

அணையலை சூழ்கட லன்றடைத் துவழி செய்தவன்
பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கிய
இணையிலி யென்றுமி ருந்தகோ யிலிரா மேச்சுரம்
துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே.
– திருஞானசம்பந்தர் (மூன்றாம் திருமுறை)

பாடல் விளக்கம் : அலைகளையுடைய கடலில் அன்று அணைகட்டிக் கடப்பதற்கு வழி செய்த இராமபிரான், இராவணனின் பருத்த தலைகள் பத்தினையும் தொலைத்ததால் ஏற்பட்ட பழியைப் போக்கிய இணையற்ற இறைவன், என்றும் வீற்றிருந்தருளும் கோயில் இராமேச்சுரம். தனக்கு ஒப்பு ஒருவருமில்லாத அப்பெருமானின் தூய மலர் போன்ற திருவடிகளைப் போற்றித் துதிப்பவர்களின் துன்பம் நீங்கும்.

==========================================================

பாரதி விழா அறிவிப்பு!

bharathiyarமது தளத்தின் பாரதிவிழா வரும் 18/12/2016 ஞாயிறு அன்று காலை 9.00 அளவில் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள நவீன்ஸ் ஹாலில் நடைபெறவிருக்கிறது. அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட விபரங்கள் இரண்டொரு நாளில் தளத்தில் வெளியிடப்படும். வாசகர்கள் அவசியம் குடும்பத்தோடு வந்திருந்து விழாவை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

(மகாகவி பாரதியின் பிறந்த நாள் டிசம்பர் 11 என்றாலும் நிகழ்ச்சி நடத்த மண்டபம், சிறப்பு விருந்தினர்களின் அப்பாயின்ட்மெண்ட் கிடைப்பது உள்ளிட்ட நடைமுறை சிரமங்கள் காரணமாக விழா ஒரு வாரம் தள்ளி நடத்தப்படுகிறது!)

சென்ற ஆண்டு மழை வெள்ள பாதிப்பு காரணமாக பாரதி விழா நடத்த இயலவில்லை. இந்த ஆண்டு அவசியம் நடத்தியே தீரவேண்டும் என்று முடிவு செய்து எளிமையான முறையில் ஏற்பாடுகள் செய்து வருகிறோம். (2017 கோடை விடுமுறையில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெறும்.)

மேற்படி பாரதி விழாவுக்கு வாசக அன்பர்கள் மனமுவந்து பொருளாதார உதவியை நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

==========================================================

நமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு! MUST READ

பிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.

1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.

2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.

3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்!

4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.

5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.

6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.

7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.

ஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன?

நீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று இந்த அரிய இறைத்தொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

==========================================================

ஒரு முக்கியமான விஷயம்!

பிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது. கோவிலில் அர்ச்சனை செய்யவே இந்த விபரங்கள் கேட்கப்படுகிறது!)

கோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணை அவசியம் குறிப்படவேண்டும். அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

நன்றி!

==========================================================

நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : ராமேஸ்வரத்தை சேர்ந்த தம்பி சங்கர் கணேஷ் சாஸ்திரி அவர்கள்!

நம் சமீபத்திய ராமேஸ்வர பயணத்தில் பெருமளவு உதவியர் ராமேஸ்வரத்தை சேர்ந்த தம்பி சங்கர் கணேஷ் சாஸ்திரி அவர்கள். ராமேஸ்வரத்தில் க்ஷேத்ர புரோகிதம் உள்ளிட்ட வைதீக காரியங்களை செய்து தருகிறார். இந்த சிறுவயதில் இத்தனை பொறுப்புடன் அவர் இருப்பது கண்டும் வேதம் கற்று வைதீகம் செய்வது கண்டும் பூரிப்படைந்தோம்.

dsc04645-copy

கும்பகோணத்தில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ராஜ வேத பாடசாலையில் ஏழாண்டுகள் கிருஷ்ண யஜூர் வேதம் படித்த இவர் தற்போது வைதீகத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய தம்பி சேதுவும் வேதம் படித்துக்கொண்டிருக்கிறான். இவர் அப்பா திரு.குமார் அவர்கள். இவர்கள் பூர்வீகமே ராமேஸ்வரம் தான்.

நாம் ராமேஸ்வரம் வருவது தெரிந்தவுடன் நம்மை தொடர்பு கொண்டு சங்கர மடத்தில் அறையை புக் செய்வது முதல் உணவு ஏற்பாடு செய்வது வரை அனைத்தையும் பார்த்துக்கொண்டார். தனது பிஸியான அலுவல்களுக்கு இடையேயும் நமது தேவைகளை கேட்டறிந்து அவற்றை செய்து தந்தார்.

நாம் சென்ற அன்று அவர் கும்பகோணம் செல்லவேண்டியிருந்ததால் நம்முடன் ராமநாதீஸ்வரர் ஆலயத்துக்கு வர இயலவில்லை. இருப்பினும் தீர்த்த ஸ்நானம் மற்றும் அதன் குறித்து நமக்கு சரியாக எடுத்துக்கூறி அது செவ்வனே நடைபெற உதவினார்.

dsc04639-copyஇரண்டாயிரம் ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு நாம் சில்லறைக்கு வழியில்லாமல் விழித்த வேளையில் தனக்கு வாங்கி வைத்திருந்த சில்லறை ரூபாய் நோட்டுக்களை கொடுத்து உதவினார்.

அவருடைய வைதீக தொண்டை பாராட்டும் விதமாக வேதத்திற்கு மதிப்பு கொடுக்கும் விதமாக அவரை நம் தளம் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் எளிமையாக கௌரவித்தோம்.

நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். பிரார்த்தனைக் கோரிக்கைகளை ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரரிடம் சமர்பித்து அர்ச்சனையும் செய்வதாக சொல்லியிருக்கிறார். எத்தனை பெரிய பாக்கியம் இது. அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்…

முதல் பிரார்த்தனை கோரிக்கையை சமர்பித்திருக்கும் முருகானந்தம் அவர்கள் அக்கோரிக்கையை சமர்பித்து பல வாரங்கள் ஆகிறது. இடையே இடம் பெற்ற பல பிரார்த்தனைகளில் அவருடைய கோரிக்கையை வைக்க முயன்றும் அது தடைப்பட்டுக்கொண்டே சென்றது. பல பிறவிகளை சூழ்ந்திருக்கும் கர்மவினைகளை அறுக்க வல்லது ராமேஸ்வரம் என்பதால் இந்த பிரார்த்தனையில் அவருடையது இடம்பெற்றது என்று கருதிகிறோம். எப்படியோ நல்லது நடக்கட்டும். தம்பதிகள் வீட்டில் விரைவில் மழலைச் சத்தம் கேட்கட்டும். அப்புறம் அவருடைய பிரார்த்தனையில் என்ன ஒரு பாசிடிவ்வான சிந்தனை பார்த்தீர்களா? திருமணமாக ஒன்பதாம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் நிலையிலும் அவருக்கு புத்திர பாக்கியம் இல்லை. ஆனால் அதைக் கூட அவர் அம்மையப்பரின் அருளாசியோடு அடியெடுத்து வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். இந்த ஒன்று போதுமே அனைத்தையும் பெற்றுத் தர… நமச்சிவாய!

அடுத்த பிரார்த்தனையை சமர்பித்திருக்கும் நபர் நண்பர் பிரபாகரன். கோவையை சேர்ந்த இவர் ஒரு மாற்றுத் திறனாளி. சக்கர நாற்காலியில் தான் உலவ முடியும். இருப்பினும் அருமையான சிந்தனையாளர். நமது முகநூல் நண்பர். முகநூலை அற்புதமாக பயன்படுத்தி வருபவர். நமது ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ நூலைப் பற்றி கேள்விப்பட்டு அதை நம்மிடம் வாங்கி, பின்னர் அதில் உள்ள பிரார்த்தனை மனுவை நிரப்பி நமக்கு அனுப்பியிருக்கிறார். நாம் சென்ற வாரம் பயணம் புறப்பட்ட அன்று தான் இவர் கோரிக்கை கிடைத்தது. ஈசன் திருவுள்ளம் இந்த பிரார்த்தனையிலேயே இடம்பிடித்துவிட்டது. நல்லது நடக்கட்டும்.

அடுத்து பிரார்த்தனை சமர்பித்திருக்கும் கணேஷ் குமார் என்கிற அன்பரும் கோரிக்கையை சமர்பித்து பல வாரங்கள் இருக்கும். இவர் கோரிக்கையை சமர்பித்து அதற்கு பிறகு இரண்டு மூன்று பிரார்த்தனை பதிவுகள் அளித்துவிட்டோம். இவருடைய கோரிக்கையை சமர்பிக்க முடியவில்லை. இருப்பினும் நமது தளத்திற்கு ஏதாவது செய்ய விரும்பி, இந்த இடைப்பட்ட காலத்தில் இரண்டு முறை தளத்திற்கு தன்னால் முடிந்த நிதியை அனுப்பிவிட்டார். என்ன இவர் நம் பிரார்த்தனையை இன்னும் வெளியிடவில்லையே என்கிற ஆற்றாமையோ வருத்தமோ நம்மிடம் துளியும் ஏற்படவில்லை. “நீங்கள் எங்கு சென்றாலும் என் மகனுக்காக பிரார்த்தியுங்கள் அது போதும்” என்றார். “நான் பிரார்த்தனை செய்யவில்லை என்றாலும் என் பணிகளுக்கு தன்னலம் கருதாமல் உதவுகிறவர்களை ஈசன் ஒரு போதும் கைவிடமாட்டான். அப்படி ஒரு கோரிக்கையை நான் அவரிடம் வைத்திருக்கிறேன்” என்று இடையே ஒரு முறை பேசும்போது சொன்னோம். உண்மையும் அது தான். சில நேரங்களில் மறதி நம்மை ஆட்டுவிக்கிறபடியால் இப்படி ஒரு கேவியட் மனுவை ஈசனிடம் முன்பே தாக்கல் செய்த்துவிட்டோம். இன்று இந்த பிரார்த்தனை பதிவில் அவர் கோரிக்கையை உள்ளே வைத்துவிட்டு, விஷயத்தை சொல்ல அவரை அலைபேசியில் அழைத்து “இந்த வாரம் அவசியம் வருகிறது. மறக்காமல் பாருங்கள் சார்…சீக்கிரம் உங்கள் மகன் நல்ல செய்தி சொல்வான் பாருங்கள்” என்றோம்.

“நானே உங்களை அழைக்கவேண்டும் என்று நினைத்தேன் சார். நீங்கள் சென்ற முறை என்னிடம் கூறியது போல என் மகனுக்கு எர்ணாகுளத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி நியமன ஆணை வந்துவிட்டது. உங்கள் தளத்தை வாசிக்க ஆரம்பித்ததில் இருந்து எங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் என்று எனக்கு தான் தெரியும். அவனுக்கு இந்த ஆறு மாத காலம் PROBATIONARY PERIOD. அது முடிந்து பணி நிரந்தரமாக பிரார்த்தியுங்கள் சார்” என்றார்.

“ஈசனருள் என்றும் உங்களுக்கு உண்டு. நேரமிருக்கும்போது நான் முன்னரே சொன்னது போல, வேலைவாய்ப்பு ஸ்பெஷலிஸ்ட்டான திருவெறும்பூர் எறும்பீஸ்வரரை தரிசித்துவிட்டு வாருங்கள். முடிந்தால் ராமேஸ்வராமும் சென்றுவிட்டு வாருங்கள்” என்று கூறியிருக்கிறோம்.

நாகை மாவட்டம், மற்றும் மயிலாடுதுறை பகுதிகளுக்கு நாம் வந்தால் அவசியம் தனக்கு தகவல் தெரிவிக்கும்படியும் தான் உடனிருந்து அனைத்து வகைகளிலும் உதவுவதாகவும் கூறியிருக்கிறார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி. (இணைப்பில் உள்ள பிரார்த்தனை கோரிக்கை அவர் முன்பு அனுப்பியது. அதை மாற்றத்திற்கு உட்படுத்தாமல் அப்படியே தந்திருக்கிறோம்!).

அடுத்த கோரிக்கை படுக்கையில் வீழ்ந்து கிடக்கும் ஒரு அன்பர் அனுப்பியிருக்கும் கோரிக்கை. படித்துப் பாருங்கள். உள்ளம் உருக்கும் ஒன்று. கை கால்கள் செயலிழந்து போன இவரை கறிவேப்பிலையாய் இவரது தங்கை பயன்படுத்திக்கொண்டு சொத்தையும் அனுபவித்துக்கொண்டு இன்று இவருக்கு எந்த உதவியும் இவரது தங்கையோ தங்கை மகன்களோ செய்யவில்லை. சிறுநீர் கூட வெளியேற வழியின்றி அவஸ்தை படுவதாக கூறியிருக்கிறார். இவரை நேரில் சந்தித்து பிரசாதம் அளித்து ஆறுதல் கூறவிருக்கிறோம். இராமேஸ்வரம் அண்ணல் இவரிடம் கருணை காட்டட்டும். ஊழ்வினைகளை பொசுக்குவதில் ராமநாதர் வல்லவர் என்பதால் இவர் துன்பம் முடிவுக்கு வரும் என்பது உறுதி.

கடைசி கோரிக்கையை சமர்பித்திருக்கும் ராகேஷ் அவர்களை பற்றிய அறிமுகம் தேவையில்லை. நமது உழவாரப்பணிக் குழு உறுப்பினர். நமது பணிகளில் உறுதுணையாக இருந்து வருபவர். தொடர்ந்து பல அறப்பணிகளில் ஆன்மீக பணிகளில் தம்மை ஈடுபடுத்தி வருபவர். ஏனோ தெரியவில்லை. அடுத்தடுத்து பல சோதனைகளை சந்தித்து வருகிறார். தனது அன்புக்கூறியவர்களையே இறைவன் சோதனைக்கு தேர்ந்தெடுக்கிறான். முடிவில் நல்லதே நடக்கும். இந்த சோதனைகளுக்கு துவண்டுவிடாமல் ‘எல்லாம் நீயே’ என இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு அவன் திருவடியை பற்றிக்கொள்வதே நாம் இவருக்கு அளிக்கும் யோசனை. சோதனைகள் அனைத்தும் விரைவில் கதிரவனை கண்ட பனி போல நீங்கிவிடும் என்பது உறுதி.

பொது பிரார்த்தனை… என்ன சொல்ல… நூலறுந்த பட்டம் போல தமிழகம் தலைமையை இழந்து தத்தளிக்கிறது. நல்லாட்சி நடைபெறவேண்டும். நாடும் வீடும் சுபிக்ஷமாய் இருக்கவேண்டும்.

இங்கே பிரார்த்தனை சமர்பித்துள்ள பிரார்த்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பிரார்த்தனை இடம் பெற்ற இந்த பிரார்த்தனையோடு நிறுத்திவிடாமல் ஒவ்வொரு வாரமும் நீங்கள் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று ஒரு பத்து நிமிடம் (பிரதி ஞாயிறு 5.30 PM – 6.௦௦ PM வரை உங்களுக்கு எந்த பத்து நிமிடம் சௌகரியமோ அந்தப் பத்து நிமிடம்) மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்கள கோரிக்கைகள் தானே நிறைவேறும்.

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

1) புத்திர பாக்கியம் வேண்டும்!

ரைட்மந்த்ரா ஆசிரியர் சுந்தர் அவர்களுக்கும் வாசகர்குக்கும் என் அன்பான வணக்கங்கள்.

சிவாய நம

அம்மையப்பரின் அருளாசியோடு நாங்கள் எங்களது 9-ஆம் ஆண்டு திருமண நாளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். எங்களுக்கு கூடிய விரைவில் திருவருளுடனும் குருவருளுடனும் கூடிய ”புத்திர சந்தானம்” அமைய பிரார்த்திக்குமாறு வேண்டுகிறோம்.

எல்லோரும் ஆரோக்கியத்துடனும் அனைத்து செல்வங்களுடனும் நிம்மதியாக வாழ இறைவனை வேண்டுகிறோம்.

இப்படிக்கு,
S. அம்பிகாவதி & முருகானந்தம்,
ஈரோடு – 638004.

2) உடலும் உள்ளமும் நலம் பெறவேண்டும்! சொந்தமும் பந்தமும் சௌக்கியமாக இருக்கவேண்டும்!!

ரைட்மந்த்ரா ஆசிரியர் சுந்தர் அவர்களுக்கும் ரைட்மந்த்ரா பிரார்த்தனை மன்றத்தின் உறுப்பினர்களுக்கும்  வணக்கம்.

அடியேன் ஒரு மாற்றும் திறனாளி. எதையும் பாஸிட்டிவாக பார்ப்பவன். சுந்தர்ஜியின் முகநூல் நண்பர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.’

சமீபகாலமாக எனக்கு சில பிரச்னைகள். சுந்தர் அவர்களின் பிரார்த்தனை பதிவுகளை முகநூலில் பார்ப்பேன். இது நல்லதொரு முயற்சியாக இருக்கிறதே…  சரி, நம் பிரார்த்தனைகளையும் சமர்பிக்கலாம் என்று இங்கு உங்களிடையே சமர்ப்பிக்கிறேன்.

என் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மருந்துகள் சாப்பிடாமல் மருத்துவச் செலவுகள் இல்லாமல் நிம்மதியான வாழ்வு எனது தேவைக்காக ஆவது நடக்க வேண்டும். எனக்கு தகுந்த வாழக்கை வாழ நல்ல சம்பளம் வகுகிற ஒரு வேலை வேண்டும். அனைவருக்கும் என்னால் இயன்ற சேவை செய்யவேண்டும்.

எங்களது குடும்பத்தில் அமைதியாக உறவினர் சகோதரர், அப்பாவின் சொந்தங்களில் உள்ள மனக்கசப்புகள் அகன்று அமைதியாக புரிதலுடன் நிம்மதியாக இருக்க வேண்டும். எனது சகோதரி உஷா, சகோதரர், கிருஷ்ணன், அப்பா ராமன், அம்மா பங்கஜம், அனைவருக்கும் நிம்மதியான ஆரோக்கியமாக இருக்க பிராத்திக்க வேண்டுகிறோம்.

என் சகோதரி உஷா அவர்களுக்கு கடன் பிரச்சனை உள்ளது. அதிலிருந்து அவர் நிவர்த்தி பெறவேண்டும். அதற்காகவும் பிரார்த்திக்கவும்.

மிக்க நன்றி!
R. பிராபகரன்,
சாய்பாபாகாலனி,
கோயமுத்தூர்  – 641038

3) மகனுக்கு நல்ல வேலை வேண்டும்!

சுந்தர்ஜி அவர்களுக்கு என் நமஸ்காரங்கள்.

ரைட்மந்த்ரா படிக்க ஆரம்பித்ததிலிருந்து பல நல்ல மாற்றங்கள் என் வாழ்வில் ஏற்பட்டிருக்கிறது. உங்கள் நூல்கள் அற்புதம். இத்துடன் என்னுடைய பிரார்த்தனை ஒன்றை சமர்பிக்கிறேன்.

என் மகன் செல்வன் பிரவீன் குமார்  (வயது 21) பி.டெக் கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்துவிட்டு நல்ல வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு விரைவில் நல்ல ஊதியத்துடன் அவன் திறமைக்கேற்ற ஒரு நல்ல வேலை கிடைக்க பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
கணேஷ்குமார்,
செம்பொனார் கோவில்,
நாகை மாவட்டம் – 609305

4) Struggling with lots of health issues and organ failure!

Dear Sundar sir and Rightmantra friends and Prayer club members,

I am Prem Singh, (54) residing in Chennai. I do not have family. I got only one sister and her family. She has got two grown up sons. I have given my property to my sister fully on the promise that she will take care of me with their sons. But I don’t get food or manual help from their family. Now they say that if they look at me from a distance they will get health problem. So they do not enter my room. I lost my health due to paralytic stroke in both of my legs and bedridden for the past two years. Now I am passing urine only with the help of tube inserted in my body. Otherwise urine will not come out of my body. Now the doctors say my penis is also infected and hence require a separate hole to remove urine.

So please pray for my health recovery.

– Prem Singh,
T.Nagar, Chennai – 17.

5) Grandma struggling for life

My grandmother Smt.Lakshmi Thiruvengadam’s (65) health is not good for past one week she is not speak now and her mouth has developed some problem. Due to this no one is there for helping her. Please add my wish in prayer Anna.

At this age, it is very pity to see her struggling for her well-being. All I want is her bounce back. I wish to see my grandmother in walking condition and she lead a happy life.

We like ourgrandma very much and she is very much fond of me.

Thanks Anna

Rakesh,
Guduvanjery, Chennai

* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.

** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.

==========================================================

பொதுப் பிரார்த்தனை!

அடுத்தடுத்த இழப்புக்கள் – தத்தளிக்கும் தமிழகம் தலை நிமிரவேண்டும்!

jayalalitha-ammaதமிழக முதல்வர், ‘அம்மா’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவை இன்னும்கூட பலராலும் ஜீரணிக்க இயலவில்லை. அவர் மறைந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன் மூத்த நடிகரும் பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான சோ அவர்களும் மறைந்துவிட்டார். இவர்களை இழந்து வாடும் தொண்டர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இதர நலம்விரும்பிகளுக்கும் இறைவன் சாந்தியையும் சமாதானத்தையும் தருவானாக. இவர்கள் ஆன்மா நற்கதி பெற்று என்றும் இறைவனடியில் நிலைத்திருக்க பிரார்த்திப்போம்.

தமிழகம் ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளில் தவித்து வருகிறது. இந்நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வரின் எதிர்பாராத மறைவினால் நிர்வாகம் ஸ்தம்பித்து போயிருக்கிறது. முதல்வர் மருத்துவமனையில் 75 நாட்களுக்கும் மேல் அனுமதிக்கப்பட்டிருந்தால் ஏற்கனவே சீர்குலைந்திருந்த நிர்வாகம் செய்வதறியாது திகைத்துப் போயிருக்கிறது.

jayalalitha_20120206

இந்நிலையில் முதல்வராக பொறுப்பெற்றுள்ள ஓ.பன்னீசெல்வம் அவர்கள் திறம்பட மாநில அரசை வழிநடத்திச் செல்லவும், மக்கள் பிரச்சனைகளில் அவர் கவனம் செலுத்தவும் இறைவனை வேண்டுவோம். பா.ம.க. தலைவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் உள்ள சில வரிகளையே இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். “இன்னும் நான்கரை ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில், தீர்ப்பதற்கான பிரச்சினைகளும், ஆற்றுவதற்கான பணிகளும் ஏராளமாகவே உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக புதிய அரசு முழுவீச்சில் செயல்பட வேண்டும். யாருடைய வழிகாட்டுதலுக்கும் இடம் தராமல் அரசியல் சட்டத்தை மட்டுமே வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட வேண்டும்.”

இது நம் பொது பிரார்த்தனை!

==========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgதங்களுக்கும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு உடற்பிணி, வேலை வாய்ப்பு, புத்திர சம்பத்து, நல்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இங்கு சமர்பித்திருப்பவர்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டுவோம்.

மறைந்த முதல்வர் ‘அம்மா’ ஜெயலலிதா அவர்களின் ஆன்மா இறைவனடி சேரவும், மூத்த பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர் சோ அவர்களின் ஆன்மா இறைவனடி சேரவும், தலைமையை இழந்து தவிக்கும் தமிழகம் தலைநிமிரவும், புதிய தலைமை மக்களையும் மாநிலத்தையும் சரியாக வழிநடத்திச் செல்லவும் இறைவனை பிரார்த்திப்போம்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் தம்பி சங்கர் கணேஷ் சாஸ்திரி அவர்களின் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும், பெற்றோரும் சகோதரரும்  எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : 2016 டிசம்பர் 11 & 18 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

==========================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

==========================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

==========================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

==========================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

==========================================================

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மன்னார்குடி செண்டலங்கார சம்பத் குமார் ஜீயர் சுவாமிகளின் கைங்கரிய கர்த்தா (உதவியாளர்) திரு.நாராயணன் அவர்கள்.   

avinasi
அவினாசியில் பிரார்த்தனையாளர்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வரும்போது…

சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?

தனிப்பதிவே அளிக்கும் அளவிற்கு குன்றத்தூர், கன்னியாகுமரி, சுசீந்திரம், ராமேஸ்வரம், தேரூர், அவினாசி உள்ளிட்ட பல தலங்களில் அருமையாக சென்ற பிரார்த்தனை நடைபெற்றது. அவசியம் அனைவரும் படிக்கவும். நன்றி!

குமரி முதல் ராமேஸ்வரம் வரை –  ஒரு பிரார்த்தனை பதிவின் பயணம்!

==========================================================

[END]

One thought on “ராமரின் சிவபூஜைக்கு அனுமன் கொணர்ந்த லிங்கம் என்ன ஆனது? Rightmantra Prayer Club

  1. ராமேஸ்வரம் திருத்தலம் பற்றி பல தகவல்களை அறிந்து கொண்டோம். அருமையான பதிவு! மிக்க நன்றி சுந்தர் ஐயா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *