Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, July 19, 2024
Please specify the group
Home > Featured > ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – நம் தள வாசகியின் நெகிழ்ச்சியான அனுபவம்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – நம் தள வாசகியின் நெகிழ்ச்சியான அனுபவம்!

print
பிரார்த்தனை பதிவில் நாம் வழக்கமாக அளிக்கும் கதைக்கு பதில் இந்த வாரம் ஒரு உண்மை சம்பவத்தை அளிக்க எண்ணியுள்ளேன். சில வாரங்களுக்கு முன்பு நமது பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்தனைக்கு மனு செய்திருந்த நம் தள வாசகி திருமதி.உஷா அவர்கள் சமீபத்தில் நமக்கு அனுப்பியுள்ள நெகிழ்ச்சியான மின்னஞ்சலை இணைத்துள்ளேன்.

தனது மகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்க பிரார்த்தனை செய்யும்படி கேட்டிருந்தார். நாமும் அது பற்றி பதிவளித்திருந்தோம். பிரார்த்தனையும் நல்லபடியாக நடந்துமுடிந்தது. (http://rightmantra.com/?p=4209)

அவருடைய மகளுக்கு வேலை கிடைப்பதில் அவர்களை விட நான் அதிக நம்பிக்கையுடனிருந்தேன். அடிக்கடி அது பற்றி கேட்டு வந்தேன். நாட்கள் செல்ல செல்ல, அவர்களுக்கு நம்பிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. வேலை கிடைக்காத விரக்தி அவர் மகளை வாட்டி வருவதாக சொன்னார்.

நமது பணிகளில் துணை நின்று நல்லதையே சிந்திக்கும் இவருக்கு இப்படி ஒரு வருத்தம் என்றால் என் மனது என்ன பாடு படும்?  “சற்று பொறுமையாக இருங்கள். அவனை நம்பினோர் கைவிடப்படார். யாருக்கு எப்போது அருள் செய்யவேண்டும் என்று அவனுக்கு தெரியாதா? மேலும் நாம் என்றும் வணங்கி வரும் மகா பெரியவா இது தொடர்பாக சீக்கிரம் உங்களுக்கு அனுக்ரஹம் செய்வார். நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள். நீங்களே நம்பிக்கை இழந்தால் மற்றவர்களுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்வது?” என்று பலவாறாக தேற்றினேன். அடிக்கடி இது நடந்துவந்தது.

இடையிடையே நம்மிடம் பேசும்போது ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் மற்றும் அதில் இடம்பெறும் கதையும் தன் மனதை நன்கு பக்குவப்படுத்துவதாக கூறினார் உஷா.

அவரது பிரார்த்தனைக்கு உரிய பதில், சற்று தாமதமானாலும் உறுதியாக கிடைக்கும் என்று நான் நம்பினேன்.  உஷா அவர்கள் நாம் இந்த தளம் ஆரம்பித்த நாள் முதல் நமது வாசகராக இருந்து, நமது உழவாரப்பணி, சமூக சேவை உள்ளிட்ட பணிகளிலும் பங்கேற்று துணையாக இருந்து வருகிறார். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நாம் நடத்திய பாரதி விழாவிற்கு குடும்பத்தோடு வந்திருந்து சிறப்பித்தார். அப்போதெல்லாம் அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறர் நலனைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டும் என்ற உறுதி பூண்டு என் நலனை நான் மறந்த நிலையில், எனக்காக, எனது நல்வாழ்வுக்காக, இந்த தளத்திற்காக பிரார்த்திக்கும் நல்லுள்ளங்களில் அவரும் ஒருவர்.

இவருடைய பிரார்த்தனையை மகா பெரியவா அனுக்ரஹித்த விபரத்தை நீங்கள் அறிந்துகொள்ளும பொருட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். நான் தான் அதை பிரார்த்தனை பதிவில் வெளியிட்டால் மற்றவர்களுக்கு நம்பிக்கையாக இருக்குமே என்று இங்கு வெளியிடுகிறேன்.

அவரும் அவர்தம் குடும்பத்தினரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழையாடி வாழையாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிகொள்கிறேன்.

லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக தந்த மகா பெரியவா!

சுந்தர்ஜி மற்றும் ரைட் மந்த்ரா நண்பர்களுக்கு…

பி.காம் முடித்து எம்.பி.ஏ. படித்துக்கொண்டிருக்கும் என் மகள் ஜெயஸ்ரீ வேலை தேடி வந்தாள். விப்ரோ நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணியில் சேர்வதற்கு அப்ளை செய்திருந்தாள். மிகப் பெரிய நிருவனமாதலால் அந்நிறுவனத்தில் சேர்வது அவளது லட்சியமாக இருந்தது.

எனவே அவளுக்கு விரும்பியபடி நல்ல நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்க பிரார்த்தனை கிளப்பின் மூலம் சில வாரங்களுக்கு முன்பு பிரார்த்தனைக்கு மனு செய்திருந்தேன். சுந்தர் அவர்களும் ஒரு சிறப்பான கதை ஒன்றை எழுதி அதனுடன் வழக்கம் போல பிரார்த்தனையை வெளியிட்டார். பிரார்த்தனை  தளத்தில் வெளியான அன்று தான் தாங்கள் மஹா பெரியவா நம் பிரார்த்தனைக்கு பொறுப்பேற்று தனது புன்னகை மூலம் ஆசிர்வதிப்பதை போன்ற போட்டோவை போட ஆரம்பித்தீர்கள்.

(http://rightmantra.com/?p=4209)

இதை என் மகளிடம் சொன்னதும் அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருந்த போதும் அவள் எங்கு சென்றாலும் முட்டு கட்டாகவே இருந்து வந்தது. அவள் மறுபடியும் அவள் விரும்பிய WIPRO நிறுவனத்தில் SELECTION  PROCESSல் கடைசி லெவல் வரை சென்றும் கூட அதில் அவளுக்கு  நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது. நான் செலக்ட் ஆக மாட்டேன் என்று அவளே சொல்லி விட்டாள். “சரி வேறு எதாவது வேலை கிடைக்கும். நம் பிரார்த்தனை வீனாகப்போகாது. கவலை படாதே. மஹா பெரியவா கை விட மாட்டார்” என்று சொன்னேன்.

அதே போல் அவர் கை விடவில்லை. போன வாரம் குரோம்பேட்டை சார்பாக பிக்ஷாவந்தனம் காஞ்சிபுரத்தில் நடந்தது. அது சமயம் என் கணவர் அங்கு சென்று இருந்தார். அங்கு அவர்  மஹா பெரியவாளுக்கு பாத பூஜை செய்வதற்காக நின்றிருந்த சமயம் விப்ரோ வில் இருந்து என் பெண்ணுக்கு INTERVIEW CALL வந்து விட்டது. “You are selected. Come to Guindy office along with your original documents!” என்று.

என்னுடைய பெண் உடனே எனக்கு ஃபோன் செய்து, “அம்மா………  நான் செலக்ட் ஆயிட்டேன் . அப்பா காஞ்சிபுரம் போய் மஹா பெரியவாவை தரிசனம் செய்யும் நேரம் எனக்கு வேலை கிடைத்து விட்டது.” என்று. எனக்கு ஒரே மகிஷ்ச்சி… உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது. கண்களில் என்னை அறியாமல் மஹா பெரியவாளின் கருணையை நினைத்து கண்ணீர் வந்து விட்டது.

இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால், மகாபெரியவாவின் சீரிய தொண்டர் சொற்பொழிவாளர் திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் தலைமையேற்று பிரார்த்தனை நடத்திய பின்னர் இந்த பணி உத்தரவு ஜெயஸ்ரீக்கு கிடைத்தது. சுவாமிநாதன் அவர்கள் கலந்துகொண்ட பிரார்த்தனையில் கோரிக்கைகளை சமர்பித்திருந்தவர்கள் வேறு என்றாலும் பிரார்த்தனை கிளப் திரு.சுவாமிநாதன் அவர்கள் பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமையேற்றது நாம் செய்த பாக்கியம். அதற்காக முயற்சிகள் மேற்கொண்டமைக்கு என் நன்றி.

என் மகளுக்காக பிரார்த்தனை செய்த தங்களுக்கும் நம் தள வாசகர்களுக்கும் இந்த நெகிழ்ச்சியான அனுபவத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

தன்னலம் கருதாமல் பிறர் நலன் கருதும் தங்களுக்கு கோடான கோடி நன்றிகள். இந்த வாரம் நடைபெறும் பிரார்த்தனையில் தங்களுக்காக நல்ல மணமகள் வேண்டி நான் பிரார்த்தனை வைக்கின்றேன். தவறாமல் அதை வெளியிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன். நிச்சயம் மஹா பெரியவா கை விட மாட்டார்.

நன்றி!!

உஷா முரளி,
குரோம்பேட்டை

===========================================================

இந்த வாரம் பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை ஏற்பவர் யார் தெரியுமா?

இவரை பற்றி வெளியான பத்திரிகை செய்தி ஒன்றை அப்படியே தருகிறேன்…. பழனி முற்றோதலுக்கு சென்றபோது இவர் நட்பு நமக்கு கிடைத்தது. எல்லாம் சிவனருள் !!

இரண்டு முறை தான் பேசினேன் இவருடன். அதற்குள் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். ஏதோ பல ஆண்டுகள் பழகியதை போன்று ஒரு உணர்வு – இருவருக்குமே!

பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டவுடன் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்கள்.

ஞாயிறு தாமோதரன் ஐயா தலைமையில் சீர்காழியில் நடக்கும் முற்றோதலில் கலந்துகொள்ள, இன்று மதியம் சீர்காழி புறப்பட்டு செல்கிறேன்.முற்றோதலில் கலந்துகொண்டு விட்டு அப்படியே தோணியப்பரை தரிசித்துவிட்டு வருகிறேன்.

திருவாசகத் தூதுவர் !

திருவாசகத்திற்கு உருகாதோர், ஒரு வாசகத்திற்கும் உருகார். இது பழமொழியாக இருந்தாலும், வளரும் தலைமுறைக்கான பசுமைமொழி. பக்தி ரசம் சொட்ட சொட்ட எளிய இனிய நடையில் திருவாசகத்தை மாணிக்கவாசகர் அளித்துள்ளார்.

இதை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியே தனது தலையாய பணி என பள்ளி மாணவர்களை முதிர் வயதிலும் தேடிச் செல்கிறார், மதுரை தபால் தந்தி நகரரை சேர்ந்த பிச்சையா (68). இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவி கணக்கு அலுவலராக பணிபுரியும் போது, திருவாசகத்தால் ஈர்க்கப்பட்டதால், பணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்து, திருவாசகத் தூதுவராக மாறினார்.

திருவாசகம் என்பது வழிபாட்டு சிந்தனை மட்டுமல்ல. பணிவு, அன்பு, அறிவு இவற்றைத் தான் மாணிக்கவாசகனார் திருவாசகத்தில் வெளிப்படுத்தியுள்ளார், என்கிறார் பிச்சையா.

இவரது கால்படாத பள்ளிகளே மதுரை மாவட்டத்தில் இல்லை, என சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு பள்ளியிலும், விரும்பிய மாணவர்களுக்கு திருவாசக புத்தகத்தை பள்ளிகளுக்கு சென்று, இலவசமாக வழங்கி, அதிலிருந்து போட்டி வைத்து, மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறார்.

யாருடைய உதவியும் இன்றி, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், முதிர் வயதிலும் தனது டூவீலரில் தனக்கன்குளம் அரசு பள்ளிக்கு பயணித்துக் கொண்டிருந்த பிச்சையாவிடம், பேச்சுக் கொடுத்தோம்…

“ஒவ்வொரு கிராமத்திலும் விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் நல்ல இளைஞர்களை உருவாக்கும் பணி உள்ளது. 2002 முதல் அரசு பணியை விட்டுவிட்டு, இதை செய்து வந்தாலும், 2008 முதல் மணிவாசகர் அறக்கட்டளை உருவாக்கி, பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளிப்பதுடன், திருவாசகத்தையும் மாணவர்கள் மனதில் மெழுகுவர்த்திரி போல் ஏற்றி வைக்கிறேன். 9 மாவட்டங்களில் திருவாசகம் போட்டி நடத்தினேன். உயிர் இருக்கும் வரை மாணவர்கள் மத்தியில் திருவாசகத்தை கொண்டு செல்வேன்” என்கிறார்.

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

===========================================================

தங்கைக்கு சந்தானபக்கியமும் உத்தியோக பிராப்தமும் வேண்டும்!

என் நண்பர் சுந்தர் மற்றும் ரைட் மந்த்ரா தோழர்களுக்கு,

என் அன்பான வணக்கம்.

எனது தங்கைக்கு (ஜெயலட்சுமி – செந்தில்குமார் தம்பதி )திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. அவர்களுக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க பிரார்த்திக்குமாறு கேட்டுகொள்கிறேன். எனது தங்கையும், தங்கை கணவரும் முதுகலை ஆசிரியர் பட்டம் பெற்றுள்ளார்கள். தங்கை கணவர் ஒரு தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தில் (தற்காலிகமாக)  வேலை பார்த்து கொண்டிருக்கிறார். தங்கை வீட்டில் தான் இருக்கிறார். எனது உதவியோடு ஓரளவு குடும்ப செலவை சமாளிக்கிறார்கள். இருவரும் இந்த வாரம் ஞாயிற்றுகிழமை ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுகிறார்கள். அவர்கள் இருவரும் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி கிடைக்க பிரார்த்திக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

சக்திவேல், கோவை

===========================================================

Pray for Company’s growth and my betterment of my family situation

Dear sir,

I am a widow and having two children.  I am working in a private company and also as an LIC Agent (recently joined). I wish to pray for my company’s growth and for the betterment of my family situations . Since I am an LIC agent and  for more no of policies and for my sisiter’s marriage and my children’s growth and education kindly pray for us.

Ardent Reader of Rightmantra

===========================================================

எனது பிரார்த்தனை

சிவகங்கையில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தை

என்று தீரும் இந்த கொடுமை?

‘குப்பைதொட்டியில் வீசப்பட்ட குழந்தை’, ‘கழிவுநீர் குழாயில் வீசப்பட்ட குழந்தை’, ‘ரயிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை’ என்று இப்படி அனாதையாக வீசப்படும் குழந்தைகளை பற்றி தினமும் ஒரு செய்தியாவது படிக்க நேர்கிறது. அப்போதெல்லாம் மனம் ஒரு கணம் அந்த குழந்தைகளை எண்ணி கலங்கும்.

இது தொடர்பாக தன்னார்வ அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் ஒன்று மனதில் இருக்கிறது. குழந்தைகளை இப்படி அனாதையாக போட்டுவிட்டு செல்வோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டமியற்றப்படவேண்டும். ஈசன் அருள் புரியவேண்டும்.

இன்று கூட இணையத்தில், சிவகங்கைகையில் குப்பைத் தொட்டியில் இப்படி அனாதையாக வீசப்பட்ட குழந்தை பற்றிய செய்தியை படிக்க நேர்ந்தது. யாரோ இருவர் தங்கள் உடற்பசியை  தீர்க்க செய்யும் தவறுக்கு குழந்தை எப்படி பொறுப்பாக முடியும்? தாய் தந்தை பெயர் தெரியாமல் ஒரு குழந்தை இந்த சமூகத்தில் வளர்வது எத்தனை பெரிய கொடுமை?

இது போன்று முறை தவறி பிறக்கும் ஏதுமறியா குழந்தைகளுக்கு அம்மையப்பனாக இருந்து அருள்பாலிக்கவேண்டும் என்று எங்கள் அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மனை வேண்டிக்கொள்கிறேன். ஆளுடைய பிள்ளைக்கு பால் கொடுத்து ஞானசம்பந்தராக்கிய அன்னை, இந்த குழந்தைகளின் பசியையும் தீர்க்கவேண்டும். இது போன்று குழந்தைகள் அனாதையாக வீசப்படுவது நிற்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

===========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநண்பர் சக்திவேல் அவர்களின் தங்கை ஜெயலட்சுமி – செந்தில்குமார் தம்பதியினருக்கு விரைவில் புத்திரபாக்கியம் கிட்டவும், அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறவும், இரு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி தங்கைக்கு  திருமணமும் செய்து வைக்கும் பொறுப்பில் இருக்கும் பெயர் வெளியிட விரும்பாத நம் தள வாசகிக்கு தன பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றும் வகையில் வசதி வாய்ப்புக்கள் மற்றும் தேவையான உதவிகள் கிடைக்கவும்
பச்சிளம் குழந்தைகள் அனாதையாக குப்பைதொட்டிகளிலும், பேருந்து, ரயில் நிலையங்களிலும் வீசப்படுவது நிற்கவேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

============================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : ஆகஸ்ட் 18, 2013 ஞாயிறு

நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மதுரை DOLPHIN GROUP OF SCHOOLS தாளாளர் திரு.அரு.ராமனாதன்

8 thoughts on “‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – நம் தள வாசகியின் நெகிழ்ச்சியான அனுபவம்!

 1. தங்களது பிரார்த்தனை கிளப்பின் சக்தி இமயத்திற்கும் அப்பாற்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

  வாழ்க உமது தொண்டு. உங்கள் தளத்தின் பெருமையை என்னால் முடிந்த அளவு மக்கள் மத்தியில் சொல்லி வருகிறேன். நிறைய நண்பர்கள் தோழர்கள் தங்கள் பிரார்த்தனை கிளப்பில் சேர்ந்து வருகிறார்கள்.

 2. சுந்தர்… படிப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.

  எதுவும் நம் கையில் இல்லை. மகா பெரியவா என்கிற மகானை எந்த அளவுக்கு நாம் பிரார்த்தனை செய்கிறோமோ அந்த அளவுக்கு அவர் நமக்கு அருள்வார். இதுதான் சத்தியம். இதைப் புரிந்து செயல்பட்டால் நம் ஒவ்வொருவர் வாழ்வில் எல்லாமே நலம்தான்.

  ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

  அன்புடன்,
  பி. சுவாமிநாதன்

 3. சுந்தர்ஜி,
  இந்த வாரம் கதைக்கு பதில் உண்மையான சாட்சி நம் பிரார்த்தனை கிளப்புக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. இது தொடரும் என மனபூர்வமாக நம்புகிறேன். இப்பகுதி இடம் பெறாத அளவுக்கு உண்மைக்கதைகளே நிறைய வேண்டும். அதற்கு மகா பெரியவா அனுகிரகம் செய்வார்.

  நானும் பல நேரங்களில் திருமதி உஷா போல் தான்.நம்பிக்கை குறையாவிட்டாலும் இன்னும் நடக்கவில்லையே என வருத்தப்படுவேன் . பிறகு பல பிரார்த்தனைகளை பார்த்து நமக்கு கொஞ்சம் பரவாயில்லையோ எனத்தோன்றும்.

  எது எப்படியோ ரைட் மந்திராவுக்கு நாளுக்கு நாள் வாசகர்கள் கூடி அனைவரின் பிரார்தனைகலும் நிறைவேறி திருமதி உஷா போல் நன்மை அடையவேண்டும். மேலும் நம்மைவிட சுந்தர்ஜி அவர்களின் பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்ப்பார்.
  பிறர் நலனில் அக்கறை உள்ளவர்க்கு இறைவன் அதிவேகத்தில் அருள் பொழிவார். அவரவர் பிரார்த்தனை நிறைவேறி அனைவரும் வாழ்க வளமுடன் .

 4. திருப்பாற்கடலில், அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர் களைக் காத்த வேதநாயகனே……………! சிவபெருமானே….!

  • வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும்.

  • தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும். என்றும்…..! எங்கள் குறைகள் தீர்க்க வருவிராக.

  • உன்திரு வடிகளைத் நாங்கள் தொழுது வணங்குவோம்.

  -Uday

 5. சுந்தர் சார்

  அருமையான பதிவு

  மஹா பெரியவர் இருக்கும் வரை எந்த விததாலும் நாம் மனம் தளர வேண்டாம் சார்.. அதற்கு உதாரணம் பிரத்தினை கிளப் மூலமா நடக்கும் உண்மை சம்பவங்கள்..

  நன்றி நன்றி

 6. பிரார்த்தனைகள் நிறைவேற மனம் உருக வேண்டுவோம். பிறர் வாழ்வில் நாம் அக்கறை கொண்டால், நம் வாழ்வில் அவன் அக்கறை செலுத்துவான். மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கோம். வாழ்க வளமுடன்.

 7. எனது தங்கைக்காகவும் அவர் குடும்பத்துக்காகவும் பிரார்த்திக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. என் பிரார்த்தனையும் வேண்டுதலும் எப்போதும் உங்கள் அனைவருக்கும் உண்டு.

  நல்லதே நடக்கும்.

 8. பிரார்த்தனைகள் நிறைவேறி
  எல்லோர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி என்றென்றும் பொங்கிட
  எல்லாம் வல்ல பரம்பொருள் அவர்தம் மனக்குறைகளை போக்கி அருள்வாராக !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *