ஒரு நாள் கணவன் அலுவலகம் செல்லும்போது, கீழே ஒரு மருந்து பாட்டில் திறந்தபடி இருப்பதை பார்க்கிறான்.
அலுவலகம் செல்லும் அவசரத்தில் இவன் இருந்தபடியால்…”அந்த மருந்து பாட்டிலை எடுத்து கொஞ்சம் ஜாக்கிரதையான இடத்துல வெச்சிடும்மா செல்லம்….” என்று கூறி விட்டு சென்றுவிடுகிறான்.
சமையற்கட்டில் வேலையாக இருந்த மனைவி, அந்த பரபரப்பில் பின்னர் அதை மறந்துவிடுகிறாள்.
அந்த பாட்டிலின் கவர்ச்சிகரமான நிறத்தால் கவரப்படும் குழந்தை தவழ்ந்து வந்து அதை எடுத்து குடித்துவிடுகிறது. பெரியவர்கள் மட்டுமே சிறிய அளவில் குடிக்ககூடிய சக்தி மிக்க ஹை-டோஸ் மருந்து அது. அதை எடுத்து குழந்தை குடித்தபடியால் மயங்கிவிடுகிறது.
சமையற்கட்டிலிருந்து சற்று நேரம் கழித்து வரும் மனைவி குழந்தை மயங்கி கிடைப்பதையும் அருகே மருந்து பாட்டில் கிடப்பதையும் பார்த்து நடந்ததை புரிந்துகொள்கிறாள்.
அலறியடித்துக்கொண்டு குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.
ஆனால்… பரிதாபம்…. குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டது என்கிறார்.
இவளுக்கு ஒரே அதிர்ச்சி.. துக்கம்… கதறி அழுகிறாள். குழந்தை இறந்த துக்கம் ஒருபுறம்.. கணவனின் முகத்தை எப்படி பார்ப்பது என்கிற பதபதைப்பு ஒருபுறம். விஷயத்தை கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு ஓடிவருகிறான் கணவன். இறந்த குழந்தையை பார்க்கிறான். உடைந்து போய் அழுதபடி காணப்படும் மனைவியை பார்க்கிறான்.
சில வார்த்தைகள் சொல்கிறான்.
அவன் சொன்ன அந்த சில வார்த்தைகள் என்ன? இந்த கதையிலிருந்து நீங்கள் அறிந்துகொள்ளும் நீதி என்ன?
கணவன் சொன்ன அந்த நான்கு வார்த்தைகள் : “கவலைப்படாதே டியர்… நான் இருக்கிறேன் உனக்காக!”
அவன் அந்த வார்த்தைகள் சொன்னதும் ஓடிவந்து அவனை அவனை அணைத்துக்கொள்கிறாள். அழுதபடி அவனுக்கு முத்தங்கள் தருகிறாள்.
கணவனின் இந்த அணுகுமுறைக்கு பெயர் தான் ‘பக்குவம்’.
குழந்தை இறந்துவிட்டது. இனி அது உயிருடன் வராது. உயிர் நீத்த குழந்தையை மனதில் கொண்டு உயிருள்ள தனது மனைவியை வார்த்தைகளால் சாகடிக்க அவன் விரும்பவில்லை. ஏனெனில் அந்த சூழ்நிலையில் அவன் மனைவியை பார்த்து கூறும் ஒவ்வொரு வார்த்தையும் அவளை மிகவும் பாதிக்கும்.
யாரையும் குற்றம் சொல்லி பயனில்லை. மனைவியை எதிர்பார்க்காமல் அவன் தானே அந்த பாட்டிலை எடுத்து பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தால் இந்த துரதிர்ஷ்டம் நேர்ந்திருக்காது.
இவனது துக்கத்திற்கு சற்றும் குறைந்ததல்ல ஒரே குழந்தையை இழந்து தவிக்கும் ஒரு தாயின் துயரம். அந்த நேரத்தில் அந்த பெண்ணுக்கு தேவை கணவனின் அரவணைப்பும் ஆறுதலான சில வார்த்தைகளும் தான்.
அதைத் தான் அவன் அவளுக்கு அந்த கணம் கொடுத்தான்.
நமது பணியிடத்திலும் சரி குடும்ப உறவுகளிலும் வாழ்க்கையின் பல நேரங்களில் நம்மை சுற்றி நடக்கும் தவறுகளுக்கு யார் காரணம், யாரை குற்றம் சொல்லலாம் என்று ஆராய்ச்சி செய்வதிலேயே நாம் காலத்தை கழிக்கிறோம். ஆனால் அதனால் பயன் ஒன்றும் இல்லை.
ஆனால் இதனால் நாம் இழப்பது சில நேரங்களில் சிலவற்றை…. பல நேரங்களில் எல்லாவற்றையும்!!
ஓர் தவறு நடந்துமுடிந்துவிட்டபிறகு எவரையும் காயப்படுத்தாமல் சம்பந்தப்பட்ட கணவனை போல ஒரு பொறுமையான கனிவான அணுகுமுறையை கையாளுங்கள். நீங்கள் எதிர்பார்க்காத பல மகத்தான விஷயங்களை அந்த அணுகுமுறை உங்களுக்கு தரும்.
எனவே இன்றைய தேவை : ‘பக்குவம்’!
=====================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
“என்ன சொன்னே? குடும்பத்துல பிரச்னைன்னு தானே?” MONDAY MORNING SPL 6
“டார்லிங், இன்னைக்கு டின்னருக்கு என்ன?” MONDAY MORNING SPL! 4
மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள் யார் ? MONDAY MORNING SPL 3
உங்கள் வளர்ச்சியை தடுக்கும் நபரை கண்டுபிடிக்கலாமா? MONDAY MORNING SPL 2
குப்பை வண்டிகள் உங்கள் நாளை ஆக்ரமிக்க அனுமதிக்கலாமா? MONDAY MORNING SPL 1
=====================================
[END]
சுந்தர் சார் இனிய காலை வணக்கம்..
அழகான ஆழமான கருத்து சார் …
சோதனைகள் மட்டுமே மனதினை ‘பக்குவம் அடைய செய்யும் சார்
‘சில வார்த்தைகளுக்கு’ உள்ள வலிமை அருமையான தலைப்பு சார்..
நன்றி நன்றி நன்றி
MONDAY MORNING SPL மிகமிக அருமையான பதிவாக அமைந்துவிட்டது .சுந்தர் ஜி நெடுந்தூரம் பயணம் செய்தமையால் என்று “MM SPL “கிடைக்காது என்று நினைத்தேன்.நமக்காக அவரின் உழைப்பு அபாரம்? ..
நம்மை பக்குவப்படித்தும் கதை அருமை .
\\“கவலைப்படாதே டியர்… நான் இருக்கிறேன் உனக்காக!”\\
எல்லோரும் கோபத்துடனும் ,துயரத்துடனும்,இருக்கும் நேரத்தில், இது போன்ற பக்குவம் நிறைந்த வார்த்தைகள் வெளிப்பாடு மிகுந்த ஞானத்தின் அறிவாகும் .
\\\நமது பணியிடத்திலும் சரி குடும்ப உறவுகளிலும் வாழ்க்கையின் பல நேரங்களில் நம்மை சுற்றி நடக்கும் தவறுகளுக்கு யார் காரணம், யாரை குற்றம் சொல்லலாம் என்று ஆராய்ச்சி செய்வதிலேயே நாம் காலத்தை கழிக்கிறோம். ஆனால் அதனால் பயன் ஒன்றும் இல்லை.\\\
RECHARGE DONE .
அருமையான பதிவு பாராட்டுக்கள் .
-மனோகர்
குட் மோர்னிங் சுந்தர் சார்,
வெரி எச்செல்லேன்ட். குட்.
வழக்கம் போல monday spl
இன்றைய உலகில் நம் எல்லோருக்கும் தேவை பக்குவம்.
கணவன் மனைவி இருவருக்கு ஒரே பாதிப்பு தான். அனால் அவன் சொன்ன நான்கு வார்த்தைகளின் மதிப்பு சொல்லில் அடங்காதது.
அந்த நேரத்தில் அவன் அவளுக்கு தெய்வமாகிறான்.
நிறைய பெண்களுக்கு சோதனை தான் மனதை பக்குவ படுத்துகிறது.
அதன்பின் அவர்கள் எதையும் எதிர்நோக்குவதில் சாதுர்யமும் சாமர்த்தியமும் பளிச்சுடுகிறது.
ரைட் மந்திரா ஆண்டு விழா போஸ்டரில் குட்டி விநாயகர் அருமை.
அதை பார்க்கும் போது முழு முதற் கடவுளின் ஆசியுடன் என்று போட்டுள்ளுதால் எல்லாம் சிறப்பாக நடக்கும்.
கற்பனை கதையாக இருந்தாலும் படிக்கும்போது மனதிற்கு இதமாக , ஆறுதலாக உள்ளது. எப்போதும் நல்ல மனைவி என்பவள் எந்த பதவியில் இருந்தாலும் கணவனின் அன்பையும் அங்கிகாரத்தையும் தான் முதலில் எதிர்பார்ப்பாள். இந்த மாதிரி தவறை தான் ஏற்றுகொள்ளும் பக்குவமுள்ள கணவன் மனைவி உறவுகள் இன்று அரிது.இந்த பக்குவம் எல்லோர்க்கும் வர வேண்டும் .
நன்றி
சுந்தர் சார்,
சற்றும் எதிர் பார்க்காத விளைவுகள் நமக்கு இது போல் நடக்கிறது. அந்த நேரத்தில் “பக்குவம்” நிச்சயம் தேவை தான்.
நன்றியுடன் அருண்.
சார் , வணக்கம் . முதலில் மார்னிங் spl மிக மிக நன்று . மேலும் , ஒரு வருடம் ஆனதே தெரியவில்லை . யாருக்கு நன்மை நடத்ததோ இல்லையோ என் குழந்தைகள் உங்களால் தான் பள்ளிக்கு செல்கிறார்கள் . எனவே மிக மிக நன்றி சொல்ல கடமைபடிருகிறேன் . இறைவன் இனி வரும் வருடங்களிலும் உங்களுடன் இருப்பார்க.
வணக்கம் சுந்தர் அண்ணா,
உள்ளத்தை தொடுற மாதிரியான ஒரு பதிவு. ஒரு கஷ்டமான சூழ்நிலையில் கூட, நாம் சொல்லும் வார்த்தை. நம்மோடு இருக்கும் அன்பிற்குரியவர்களை எந்த அளவு பாதிக்கும் என்பதற்கு எடுத்துகாட்டாக அருமையான பதிவு.
சுந்தர்ஜி,
அருமையான பதிவு. எந்த நேரத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக உள்ளது. பொறுமை கடலினும் பெரியது.\\“கவலைப்படாதே டியர்… நான் இருக்கிறேன் உனக்காக என்று கணவனோ மனைவியோ ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறி விடும்.
அந்த ‘சில வார்த்தைகளுக்கு’ உள்ள வலிமை அருமையான தலைப்பு. கருத்துக்கள் பக்குவத்தை கொடுக்கின்றது.
ஆண்டு விழா போஸ்டர் பிள்ளையார் அருமையாக உள்ளார். அவர் அருளால் ஆண்டு விழா சிறப்பாக நடக்கும் அவர் என்றென்றும் உங்களுக்கு துணையாக இருப்பார். வாழ்த்துக்கள்.
முதற்கடவுளின் நல்லாசியுடன் …… முதலாம் ஆண்டு வெல்க வெல்கவென வையகம் வாழ்த்தட்டும். வரும் இராண்டாம் ஆண்டும் இறைவன் ஆசிக்கட்டும்.
வணக்கம் சார்,
உயிரூட்டமுள்ள பதிவிற்கு பல பல நன்றிகள்.
நல்ல கனவன் மனைவிக்கு அருமையான எடுத்துக்காட்டு…
நன்ரி..
ஒரு சிறு கவனக்குறைவினால் எத்துனை பெரிய துயரம் நிகழ்ந்து விட்டது !!!
குழந்தைகள் அதிலும் தமக்கு அருகிலுள்ள பொருட்களை தாமாகவே எடுத்து கையாளும் நிலையில் உள்ள குழந்தைகளை எத்துனை கவனம் எடுத்து பார்த்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை இந்த சன்பவம் உணர்த்தியுள்ளது !!!
அதே சமயம் ஒரு எதிர்பாராத துயர சம்பவம் நடந்தேரியபிறகு எப்பேர்பட்ட மனிதானாக இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு யார் மீது தனது கோபத்தையும் ஆத்திரத்தையும் காட்டி இருப்பான் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று நினைக்கையில் மனம் பதபதைக்கிறது !!!
ஆசை ஆசையாய் வளர்த்த குழந்தை ஒரு புறம் சவமாக
ஆருயிர் மனைவியோ தான் ஈன்றெடுத்த செல்வதை பரிதவிக்க விட்டு செய்வதறியாது கதறிக்கொண்டிருக்கையில்
நிலைமையை நன்கு புரிந்த கணவன் சொன்ன அந்த வார்த்தைகள்
படிக்கும்போதே இப்படியும் ஒரு மனிதரா
குரோதம் குருதியில் ஊடுருவி கொப்பளிக்கும் அந்த நிலையில் இவ்வளவு மனப்பக்குவமா?
நம்பவும் முடியவில்லை – நம்பாமல் இருக்கவும் முடியவில்லை
மனைவி மீது எத்துனை அன்பிருந்தால் அவள் வாய்திறந்து விளக்கும் முன்பாகவே
நிலைமை அறிந்து – நிஜத்தை உணர்ந்து – இனி நடக்க வேண்டியது என்ன என்பதை
சோகமும் துக்கமும் தம் நெஞ்சை அடைத்தபோதிலும்
அதனை வெளிக்காட்டாமல் மனைவியை தன தோளில் சாய்த்து
நான் இருக்கிறேன் உனக்கு – என்று கூறும் அந்த மனப்பக்குவம் நம்மில் எத்துனை பேருக்கு வரும் என்பது கேள்விக்குறிதான்
இப்படியும் நிலைமையை கையாளலாம் என்பதை பசுமரத்து ஆணி போல் பதிவு செய்த சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் !!!
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு