Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > நாளும் கிழமையும் நன்றாய் செல்ல மருந்தொன்று இருக்குதப்பா…!

நாளும் கிழமையும் நன்றாய் செல்ல மருந்தொன்று இருக்குதப்பா…!

print
லுவலகமோ, வீடோ, இந்த சமூகமோ நம்முடன் பழகுபவர்கள் மற்றும் நமக்கு கீழ் உள்ளவர்களை சரியாக மேலாண்மை செய்து உறவுகளை தக்கவைத்துக்கொள்வது நமது காரியங்களை சாதித்துக் கொள்வது அத்தனை சுலபமல்ல. கொடிய காட்டு விலங்குகளிடம் கூட நட்பு வைத்து நம் காரியங்களை சாதித்துக்கொண்டுவிடலாம். ஆனால், இந்த மனிதர்களை டீல் செய்வது தான் மிக மிக சவாலான ஒன்று. யார் எப்போது மாறுவார்கள் என்று சொல்ல முடியாது. நமது வட்டம் விரிவடைய விரிவடைய இந்த சவாலை நாம் அதிகம் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. (என்னைத் தான் சொல்றேனுங்க!) எல்லோருடைய எதிர்பார்ப்புக்களுக்கும் நம்மால் ஈடுகொடுக்க முடியவில்லை. எனவே நாம் அன்றாடம் படிக்கும் சாதனையாளர்களும் ஞானிகளும் மகான்களும் இந்த சவாலை எப்படி அணுகினார்கள் என்பதை பார்த்து பார்த்து நம்மை பக்குவப்படுத்திக்கொள்வது நமது வழக்கம். அந்த வகையில் தினம் தினம் பாடம் தான் நமக்கு.

http://rightmantra.com/wp-content/uploads/2014/02/IMG_5763.jpg

சுவாமி விவேகானந்தர், ஸ்ரீமத் ராமானுஜர், மகா பெரியவா, ஸ்ரீ ரமணர் போன்ற மகான்களின் வாழ்வில் இது போன்ற மனித மற்றும் உறவுகள் மேலாண்மை குறித்த பல பாடங்கள் இருக்கிறது. இவர்களை பற்றி படிக்கும்போது அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களையும் மகிமைகளையும் மட்டும் சிலாகித்துக்கொண்டு மற்றவற்றை விட்டுவிடக்கூடாது. அதற்கும் மேல் பணியாளர்கள் மேலாண்மை & உறவுகள் மேலாண்மை இவற்றை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை பார்க்கவேண்டும். அது நமக்கு பலவிதங்களில் உபயோகமாக இருக்கும். எந்த ஒரு தொழில் சாம்ராஜ்ஜியமும் நல்ல பணியாளர்களைக் கொண்டே உருவாகிறது. அதே போன்று எந்தவொரு குடும்பமும் உறவுகள் மேலாண்மையில் தான் சிறந்து விளங்கும். யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்று சொல்லமுடியாது என்பதால் இது விஷயத்தில் அலட்சியம் கூடாது.

கீழ்காணும் இந்த பதிவு உங்களுக்கு பல விதங்களில் உபயோகமாக இருக்கக்கூடும்.

==========================================================

ற்போது நாம் படித்து வரும் நூல்களுள் ஒன்று சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு. அப்பப்பா… எத்தனை எத்தனை பிரச்சனைகளை அவர் சந்தித்திருக்கிறார். ஒரு பக்கம் மிஷினரிகள் தொல்லை, மறுபக்கம் சொந்த நாட்டிலேயே அவமதிப்பு, இன்னொரு பக்கம் மேல்நாட்டில் திட்டமிட்ட புறக்கணிப்பு, தொண்டர்களுக்கு இடையே நிலவிய கருத்து வேற்றுமை, எல்லாவற்றுக்கும் இடையே வறுமை… இவை அத்தனையையும் லாவகமாக சமாளித்து தான் நினைத்ததை இறுதியில் சாதித்து…. நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. ஒரு சிறு சோதனை வந்தாலே துவண்டுவிடுபவர்களுக்கு சுவாமிஜியின் வரலாறு ஒரு உற்சாக டானிக்.

Swami-Vivekananda copyஅவர் வரலாறு முழுக்க பலவித பாடங்கள் ஒளிந்திருக்கின்றன. ஆளுமைத் திறனை வளர்த்துக்கொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் சுவாமிஜியை படிக்கவேண்டும்.

சாம்பிளுக்கு ஒன்று….

ஒரு நாள் சுவாமிஜி ஒரு குறிப்பிட்ட நபரை மிகவும் புகழ்ந்தார். அதைக் கேட்ட ஒருவர், “ஆனால், சுவாமிஜி அவர் உங்களை மதிப்பதில்லையே!” என்றார். “ஏன் ஒருவர் நல்லவராக இருக்கவேண்டும் என்றால் என்னை புகழ்ந்து தான் ஆகவேண்டுமா?” என்று மறுகணமே கேட்டார் சுவாமிஜி. கேட்டவர் வாயடைத்துப் போனார்.

அது தான் விவேகானந்தர்!!

அடுத்து நமது மகா பெரியவா…

மகா பெரியவாள் தரிசன அனுபவங்களில் வரும் சம்பவம் இது.

சிவசங்கரன் என்பவர் ஸ்ரீ மடத்தின் நெடுநாளைய பக்தர். ஒரு தடவை அவர் தரிசனத்துக்கு வந்தபோது, ஓர் அணுக்கத் தொண்டர், அவரிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டு விட்டார். சிவசங்கரனுக்கு எல்லையில்லாத வருத்தம்.தான் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாகவும் எண்ணினார். உடனே ஓடிச் சென்று பெரியவாளிடம் கம்ப்ளெயிண்ட் செய்கிற அநாகரிகர் இல்லை அவர்.

Maha Swamiபெரியவளுடன் தனித்துப் பேசக்கூடிய வாய்ப்பு வந்தது. ”மடத்துத் தொண்டர்களில் சில பேர்கள் துஷ்டர்களாக இருக்கிறார்கள். தவறு செய்கிறார்கள். பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள். பெரியவா இப்படிப் பட்டவர்களையெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொண்டு எப்படித் தான் சமாளிக்க முடிகிறதோ!…” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி சொல்லிவிட்டார்.

பெரியவாளுக்கு ஒரே சிரிப்பு. ”நீ சொல்லுகிற தகவல் எனக்கு ஒன்றும் புதிதில்லை” என்று ஒரு பார்வை.

பின்னர் சொன்னார்கள் : ”ஆயிரம் பேர் வேலை செய்கிற ஒரு பாக்டரியில் எல்லா தொழிலாளர்களும் திறமைசாலிகளாக, யோக்யர்களாக, ஸின்ஸியாராக இருக்கிறார்களா ? அரசாங்கத்தில் லட்சக்கணக்கான பேர் வேலை செய்கிறார்கள். எல்லோரும் ஒரே லெவலில் இருப்பதில்லை. நிறைய பேர் வேலை சரியாகச் செய்வதில்லை; அல்லது, தப்பும் தவறுமாகச் செய்கிறார்கள். அவர்களை அப்படியே வீட்டுக்கு அனுப்ப முடியல்லே.அவர்களை வைத்துக் கொண்டே தான் ராஜாங்கம் நடக்கிறது. ஏனென்றால், அரசு – அதற்கு ஒரு தலைமை – அவசியம். தலைமை சரியாக இருக்கான்னு பார்த்தாலே போதும். அவ்வளவு தான் முடியும்.

Lors Shiva Familly

”ஸ்ரீ மடம் ஒரு சமஸ்தானம். பல வகையான சிப்பந்திகள் இருக்கத் தான் செய்வார்கள்…” என்று சொல்லிவிட்டு, ”உனக்குப் பரமேசுவரனைத் தெரியுமோ?” என்று கேட்டார்கள்.

சிவசங்கரனுக்கு ஐந்தாறு தெரியும். அவர்களில் யாரைக் குறிப்பிடுக்கிறார்கள் என்பது புரியாமல் விழித்தார்.

”நான் கைலாஸபதி பரமேஸ்வரனைச் சொன்னேன்!… அவர் கழுத்தில் பாம்பு இருக்கு. கையில், அக்னி இருக்கு. காலின் கீழே அபஸ்மாரம் இருக்கு. அவருடைய ருத்ரகணங்கள் எல்லாம் பிரேத, பைசாசங்கள்! இத்தனையையும் தன்னிடத்திலே வைத்துக்கொண்டு தான் அவர் உலகம் பூரா சஞ்சரிக்கிறார். நடனமும் ஆடறார்!

”பாம்பைக் கீழே போட்டுவிட்டால் அது பாட்டுக்குச் சுதந்திரமாகத் திரிந்து எல்லோரையும் பயமுறுத்தும். கடிக்கும்! நெருப்பைக் கீழே போட்டால், வீடு – காடு எல்லாவற்றையும் அழிச்சுடும்! அபஸ்மார தேவதையை போக விட்டால், கண்ட பேர்களையெல்லாம் தாக்கி மயக்கம் போடச் செய்யும். பிரேத – பிசாசங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்!… இப்படி துஷ்டர்களைத் தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருப்பது தான், பரமேசுவரனுடைய பெருமை!…

சிவசங்கரன் அசந்து போய் நின்றார்.பெரியவா எதோ சமாதானம் சொல்லித் தன்னை அடங்குவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால், என்ன தெள்ளத் தெளிவான உலகியலை ஒட்டிய பதிலைக் கூறி விட்டார்கள்!

தெளிவடைய வேண்டியவர் சிவசங்கரன் மட்டுமல்ல. எல்லா பக்தர்களும் தான்!

ராமானுஜர் வாழ்க்கையிலும் ஏன் மகாபாரதத்திலும் கூட இது தொடர்பாக பல தகவல்கள் உண்டு…

பிரபல பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்கள் தினகரன்-வசந்தம் இதழில் குறிப்பிட்ட இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன..

பலர் பணியாற்றும் அலுவலகங்கள் மட்டுமல்ல; சிலரே இருக்கும் வீடுகளிலும் கூட நிர்வாகச் சிக்கல்கள் உண்டு. நிர்வாகம் என்பதற்கு இலக்கணம் வகுத்த மேலைநாட்டு அறிஞர் ஹைமன், ‘தனி மனிதர்களின் முயற்சியை ஒன்று திரட்டி பொதுவான இலக்கை எய்த முயலும் முயற்சி’ (Directing the efforts of Individuals towards a common objective) என்கிறார்.

==========================================================

Don’t miss these articles…

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

==========================================================

ஓரிரு மனிதர்களின் முயற்சியை ஒன்று திரட்டுவதற்குள் நாக்கு வெளியே தள்ளுகிறதே! இந்த அழகில்பல மனிதர்களின் முயற்சியை ஒன்று திரட்டுவதாவது, பொது இலக்கை அடைவதாவது. ஆனால் அந்தக் காலத்தில் இதுமாதிரி சூழ்நிலை இருந்தது இல்லையா? எப்படி சமாளித்தார்கள்? அரசர்களிடம் வேலை செய்கிறவர்கள் வேண்டுமானால், எப்போதும் தலை உருளும் என்ற பயத்தால் அடிபணிந்திருக்கலாம்.

மற்ற இடங்களில்?

கி.மு.1017ம் ஆண்டுவாக்கில் ஒரு மனிதர் மிகச்சிறந்த நிர்வாகத்தை அதிகாரத்தால் அல்ல, அன்பினால் நடத்திக் காட்டியிருக்கிறார். அவர்தான் ராமானுஜர்.

Srirangam-Dasavathara-Sannadhi-Ramanujar-Jayanthi-2014-14

தன் 25ம் வயதில் ஸ்ரீரங்கத்துக்கு வந்த ராமானுஜர் 90 வயதுவரை அங்கேயே இருந்து பிரமாண்டமான ஸ்ரீரங்கம் கோயிலை மிகத் திறமையாக நிர்வகித்தார். இன்றளவும் பின்பற்றப்படும் பல வழிமுறைகளை, காலம் தவறாது துல்லியத்துடன் செய்யும் ஒழுகலாற்றைக் கொண்டு வந்தார். அன்றைய கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல – மக்களின் சமூக, கலாசார, ஆன்மிக வாழ்வுக்கூறுகளை முடிவு செய்யும் அறநிலையங்களும் கூட.

அதுவும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஏகப்பட்ட சொத்து. ரங்கநாதர் பெரும் பணக்காரர். அவரைப் பற்றிய சொல் வழக்கு ஒன்று உண்டு: ‘வெள்ளி புணார், வெங்கலம் ஆளார், எண்ணெய் எரியார், எங்க ரங்கேசர்.’ வெள்ளியெல்லாம் அணிய மாட்டாராம், தங்கம்தான்! கோயில் பாத்திரங்கள் வெங்கலம் அல்ல; வெள்ளி மட்டும். விளக்கெரிக்க எண்ணெயா? பேசக்கூடாது. நெய்யில்தான் விளக்கெரியும்.

sriranganathaswamy srirangam

இத்தனை சொத்தை யாரும் ஸ்வாஹா செய்யாமல் காத்து, எழுபத்திரண்டாயிரம் சீடர்கள், எழுநூறு சந்நியாசிகள், எழுபத்திரண்டு மடாதிபதிகள் இத்தனை பேரையும் கட்டிக்காத்து, வேலை செய்ய வைத்து, போட்டி, பொறாமை இல்லாமல் ராமானுஜர் நிர்வகித்ததைக் கண்டு ஸ்ரீரங்கத்து அரங்கனுக்கே ஆச்சரியம் வந்துவிட்டதாம். ‘‘இத்தனை பேரையும் நன்றாகச் செயல்பட வைத்து திருப்பணி செய்வது எப்படி?’’ என்று கேட்டாராம்.

‘‘உன் பெயரால் செய்வதால்தான்’’ என்று பதில் சொன்னார், ராமானுஜர். திருக்குறுங்குடியில் நடந்த சம்பவம் இது. சம்பவம் நடந்து ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் நமக்கெல்லாம் ஏதோ செய்தி இருப்பது மாதிரி இல்லை?

“நான் செய்கிறேன், என்னால்தான் இதெல்லாம் நடக்கிறது. நான் இல்லாவிட்டால் நாளையே இந்த அலுவலகம் அஸ்தமிக்கும், என் ஒருத்தியால்தான் இந்த வீடே விழாமல் நிற்கிறது” என்று எத்தனை ஈகோ நம் எல்லாருக்குள்ளும்! நாம் இல்லாவிட்டாலும் இந்த உலகம் இதேபோல் சுற்றும், ஒருவேளை நம் அலுவலகமும் வீடும் இன்னும்கூட சிறப்பாக நடக்கலாம். யாரும் தவிர்க்க முடியாதவர்கள் இல்லை என்ற சின்னத் தெளிவு வந்தால் பாதிச் சிக்கல்கள் தீர்ந்து விடும்.

பாரத யுத்தம் முடிந்த பிறகு அர்ஜுனனின் நினைவெல்லாம் அகந்தை பட்டுத் தெறித்தது. எத்தனை மகத்தான போர்! அதன் வெற்றி அவனுடைய வீரத்தால் அல்லவா? அப்போது கண்ணன் அர்ஜுனனை அழைத்தான். ‘‘என் உறவினர்களான யாதவர்கள் என்னைப் பார்க்க வந்து இப்போது திரும்பிப் போகிறார்கள். வழியில் திருடர் பயம். நீ போய் அவர்களை பத்திரமாக விட்டு வா’’ என்றான் கண்ணன்.

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

==========================================================

அர்ஜுனன் யாதவர்களோடு போனான். அடர் காட்டில், நினைத்தது போலவே திருடர்கள் வந்தனர். அர்ஜுனனுக்கு சிரிப்பு வந்தது.

‘‘பாவம், நான் துணைக்கு வந்திருக்கிறேன் என்று தெரியாமல் வந்து விட்டார்கள்’’ என்று நினைத்து, தன் அம்புகளை விடுத்தான். ஒரு அம்புகூட அவன் நினைத்த மாதிரி விழவில்லை. ‘என்ன ஆயிற்று?’ என்று தவித்து நின்றான் அர்ஜுனன். அப்போது செய்தி கேள்விப்பட்ட கண்ணன், எங்கிருந்தோ விரைந்து வந்து போர் செய்து திருடர்களைத் துரத்தினான்.

‘‘பரந்தாமா, பாரதப் போரையே வென்று கொடுத்த என் கைகளா இவை? எனக்கு என்ன ஆயிற்று?’’ என்று கதறினான், அர்ஜுனன்.

‘‘பார்த்தா… உன் திறமை போருக்குத் தேவைப்பட்டது; போர் முடிந்ததும் உன் நேரமும் முடிந்தது. இனி நீ புகழின் உச்சியில் நிற்பவன் அல்ல, இறங்க வேண்டியவன்’’ என்றான் கண்ணன்.

Secret of happy life

“என் திறன், என் செயல், என் நிர்வாகம், என் உழைப்பு எல்லாம் கடவுளின் திட்டம்” என்று நினைத்து தன் தினசரி வேலைகளைச் செய்பவர்களுக்கு நிர்வாகச் சிக்கல்கள் வருவதில்லை. வந்த போதிலும் அதை எளிமையாகத் தாண்டிச் செல்ல அவர்களால் முடிகிறது. திரும்பத் திரும்ப முயலுவதற்கான ஆத்ம சக்தி கை கூடுகிறது. ‘‘இது உருப்படாது’’ என்று விட்டுச் செல்பவர்கள் அல்ல ‘‘இது இப்படித்தான் இருக்கும், இதற்கு நடுவில் என் வேலைகளை முடிந்தவரை செய்வேன், கடவுள் துணையோடு’’ என்று நினைப்பவர்களே ஜெயிக்கிறார்கள்.

எத்தனை உண்மை…! “நான் செய்தேன், நான் செய்தேன்” என்று மார்தட்டும் போது தான் பிரச்சனையே… “எல்லாம் அவன் செயல் நான் ஒரு கருவி” என்கிற எண்ணம் வந்துவிட்டால்… நாளும் கிழமையையும் நன்றாய் செல்ல அதைவிட மருந்தொன்று வேண்டுமா என்ன? ¶

RIGHTMANTRA ARTICLES ARE COPYRIGHTED. PLEASE USE THE SHARE TOOL AT THE BEGINNING AND END OF THE ARTICLE TO SHARE TO YOUR DEAR AND NEAR ONES. DON’T COPY PASTE THE CONTENT.

==========================================================

Also check :

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்!

பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்!

அது என்ன ‘அனுபவ வாஸ்து’ ?

பாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ !

ஏதாவது அதிசயம் நடந்தாதான் என் வாழ்க்கை மாறும்னு சொல்றவரா நீங்க? கண்டதும் கேட்டதும் (8)

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

==========================================================

[END]

10 thoughts on “நாளும் கிழமையும் நன்றாய் செல்ல மருந்தொன்று இருக்குதப்பா…!

  1. மிக மிக அருமையான செய்திகள் ! தேடித் பிடித்துச் சேர்த்த தன்னம்பிக்கை கருத்துக்கள் நிறைந்த அழகான பதிவு! கூடவே இறைநம்பிக்கையும் ஊட்டும் கதைகள் ! அவரவர் நிலைக்கு ஏற்றபடி இதில் எத்தனையோ படிப்பினை இருக்கிறது ! கண்டுகொள்வது நம் திறமை தான் ! மிக்க நன்றி சுந்தர்ஜி !

  2. அருமையான பதிவு
    நிறைய பேருக்கு புத்தி சொல்லும், தன்னை சீர் படுத்தி கொள்ள உதவும் பதிவு.
    அனைவரும் படித்து வீட்டை நம் குடும்ப நலனை காப்பாற்றுவோம்.
    நன்றி

  3. அருமையான பதிவு

    நான் என்ற அகந்தை மனதினுள் நுழையும்போதே வெற்றியும் சென்றடைவதற்கான இலக்கின் வாயிற்கதவுகள் அடைக்கப்படுகின்றன

    எல்லாம் இறைவன் செயல் – அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற தெளிவு பிறந்துவிட்டால் வாழ்க்கையில் தடைக்கற்கள் விலகி மனம் தெளிவுற்று முக்தி வசப்படும்

    எனவே முடிந்தவரை சந்தர்ப்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு செய்ய வேண்டிய காரியத்தை இறைவன் துணையோடு செவ்வனே செய்து வாழ்க்கையில் ஏற்றம் பெறுவோம்

    வாழ்க வளமுடன்

  4. அருமையான தெளிவான பதிவு. எல்லாம் தன்னால்தான் ஆகிறது என்று நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைப்பதில்லை. எல்லாம் அவன் செயல் நான் வெறும் கருவி என்னும் மகத்தான உண்மையை புரிந்து தன் கடமையை செவ்வனே ஆற்றுபவர்களுக்கு இறைவன் துணையாக இருந்து அருள் புரிகிறான்.

    உண்மைதான் சுந்தர். மனிதர்களை புரிந்துக்கொண்டு நற்செயல் ஆற்றுவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு நிறைய பொறுமையும் சகிப்பு தன்மையும் வேண்டும்.

    நமது தளத்தில் இது ஒரு மைல்கல் பதிவு. ஊன்றி படித்து பயன்பெறுவோருக்கு இந்தக்கட்டுரை ஒரு வரப்பிரசாதம். வாழ்த்துக்கள் சுந்தர்!

  5. வாழ்க பல்லாண்டு வளர்க நின்தொண்டு.எமக்கு உம்மோடுகூடி எம்மாலியன்ற சிலநற்பணிகள் அந்த *சாயீசன்* அருள்கொண்டு செயல்படுத்த விருப்பம் தொடர்புகொள்ளுங்கள் *வாஙக பழகலாம்* என்பதுபோல நகைச்சுவைக்காக அவ்வாறு குறிப்பிட்டேன்.எமது தொடர்பு விபரங்கள் கீழ்காணவும் தொடர்பு கொள்ளவும்.

  6. சார், ஐலண்ட் மெசேஜ். இ என்ஜோய்ட் ரீடிங் இட். தங்க யு சோ மச்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *