இந்த பிரார்த்தனை கிளப் எவ்வாறு நடைபெறுகிறது என்று கூட அறிந்துகொள்ள முற்படாமல் பலர் பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்புவது வேதனையளிக்கிறது. நமது நேரம் திரும்பவும் சிலரால் வீணடிக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனை பதிவு ஒரு கடினமான முயற்சி. பிரார்த்தனை பதிவை தயார் செய்கையில் சமர்பிக்கப்படும் கோரிக்கைகள் குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணை அவசியம் குறிப்படவேண்டும்.
நமது நேரம் இதில் பெருமளவு வீணாவதால் அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் இனி பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று ஏற்கனவே நாம் தெரிவித்திருக்கிறோம். இனி இது தீவிரமாக அமுல்படுத்தப்படும்.
நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக கோரிக்கை அனுப்பியிருக்கும் வாசகர்கள் பலர் அலைபேசி எண்ணை அளிக்கவில்லை. கோரிக்கையும் தெளிவாக இல்லை. எப்படி பிரார்த்தனையை நாம் தளத்தில் அளிப்பது?
கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று பிரார்த்தனை செய்யும் நம் வாசகர்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கை அனுப்பியவர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள். எனவே கூடுதல் விபரங்கள் இருந்தால் தான் நினைவில் வைத்திருந்து பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்திக்க முடியும்.
முதலில் இந்த பிரார்த்தனை கிளப் எவ்வாறு செயல்படுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்…!
நாம் நமது தளத்தின் பேட்டிக்காக எத்தனையோ அருளாளர்களை சந்திக்கிறோம். எத்தனையோ மகத்துவம் மிக்க பரிகார ஷேத்ரங்களுக்கு செல்கிறோம். அந்த அருளாளர்கள் மற்றும் அந்தந்த ஆலய அர்ச்சகர்களுடன் நமக்கு கிடைக்கும் நட்பை தொடர்பை ஒரு பொதுவான நோக்கத்திற்கும் இந்த லோக ஷேமதிற்கும் பயன்படுத்தவேண்டும் என்கிற உயரிய எண்ணத்தில் இந்த பிரார்த்தனை மன்றம் துவக்கப்பட்டது.
கூட்டுப் பிரார்த்தனைக்கு என்று ஒரு சக்தி உண்டு. அதை விளக்க ஒரு எளிய உவமையை சொல்கிறோம்.
நீங்கள் நிலத்தில் போர் போட்டு, தண்ணீரை ஓவர்ஹெட் டாங்கில் ஏற்றிவைத்திருக்கிறீர்கள். டாங்கிலிருந்து தண்ணீரை உங்களுக்கு தேவையான இடத்தில் ஒரு பைப் மூலம் பெறுகிறீர்கள். டாங்க் நிறைய தண்ணீர் இருந்தாலும் குழாயை திறந்தால் தானே தண்ணீரை பெறமுடியும்? கூட்டுப் பிரார்த்தனை தான் அந்த குழாய்!
ஏற்கனவே நீங்கள் பல புண்ணிய காரியங்களும் பரிகாரங்களும் செய்திருக்கலாம். ஆனால், கூட்டுப் பிரார்த்தனை என்கிற குழாயைக் கொண்டு தான் தண்ணீரை உடனடியாக பெறமுடியும்.
நமது மாநிலத்தில் பல்வேறு பரிகார ஷேத்ரங்கள் தனித்தன்மை வாய்ந்த தலங்கள் உள்ளன. வாழ்க்கையில் பலவித பிரச்சனைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் சாமானிய மனிதர்களால் நினைத்த நேரத்தில் நினைத்தபடி மேற்கூறிய தலங்களுக்கு செல்ல முடிவதில்லை. அத்தகையோர்களுக்கு உதவும் நோக்கத்திலும் நமது வாசகர்கள் அனைவரையும் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்க வைத்து அவர்களை பிரார்த்தனையில் ஈடுபடுத்துவதன் மூலம் இறைவனிடம் ஒரே நேரத்தில் நமது எண்ண அலைகளை சமர்ப்பிப்பதன் மூலமும் சம்பந்தப்பட்ட பிரார்த்தனையாளர்களுக்கு மட்டுமல்ல பிரார்த்தனையில் பங்கேற்கும் அனைவருக்கும் இறைவைனின் பரிபூரண அனுகிரகத்தை பெற்றுத் தரமுடியும் என்கிற காரணத்தினாலும் இந்த மன்றம் துவக்கப்பட்டது.
இதன் சிறப்பு என்னவெனில், யாரும் இதற்க்காக மெனக்கெட வேண்டியதில்லை. எங்கும் செல்லவேண்டியதில்லை. (அதெல்லாம் நம்மோடது!) தளத்தில் அளிக்கப்படும் பிரார்த்தனை கிளப் பதிவை படித்து ஒவ்வொரு ஞாயிறு மாலையும் 5.30 – 6.00 வரை அவரவர் தாங்கள் இருக்கும் இடத்திலேயே – அவர்கள் அந்நேரம் எங்கு இருக்கிறார்களோ – அது அவர்கள் வீடோ அல்லது கோவிலோ – அந்நேரம் எங்கு இருக்கிறார்களோ அங்கு அமர்ந்து இந்த அரைமணி நேர இடைவெளியில் ஒரு பத்து நிமிடம் இறைவனின் ஏதாவது ஒரு ஸ்லோகத்தை, பாடலை, பதிகத்தை பாடி சம்பந்தப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்தால் போதும். அந்த அரைமணிநேரத்தில் நமது எண்ண அலைகள் பகவானை சுற்றிக்கொண்டிருக்கவேண்டும். பிரார்த்தனை யாருக்காக நடக்கிறதோ அவர்களும் இறைவனின் கவனத்தை ஈர்ப்பார்கள். யார் யாரெல்லாம் பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களும் இறைவனின் கவனத்தை ஈர்ப்பார்கள்.
நமது பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அந்த அர்ச்சகரோ அருளாளரோ நமக்காக அந்நேரம் பகவானிடம் பிரார்த்திப்பார். கோவிலாக இருந்தால் அர்ச்சனை செய்வார். இது எத்தனை பெரிய வாய்ப்பு? பாக்கியம்? (சம்பந்தபட்ட பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர்களுக்கு பிரார்த்தனை விபரத்தை நாம் தனிப்பட்ட முறையில் ஏதோ ஒரு விதத்தில் கொண்டு சென்றுவிடுவோம்!)
சிதம்பரம், காஞ்சிபுரம், வயலூர், குன்றத்தூர், சித்துக்காடு, மத்தூர், திருமழிசை, கோவிந்தபுரம் இப்படி மகத்துவம் வாய்ந்த பல தலங்களில் நமது பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனை நடந்திருக்கிறது.
இப்படித் தான் நமது பிரார்த்தனை மன்றம் கடந்த மூன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
கடந்த பிரார்த்தனை கிளப் எப்படி நடந்தது என்று இறுதியில் விவரித்திருக்கிறோம். படித்துப் பாருங்கள். இது எத்தனை பெரிய வாய்ப்பு? இதை அலட்சியத்துடன் அணுகலாமா? பிரார்த்தனைக்கு கோரிக்கையை அனுப்பியவுடன் அத்துடன் வேலை முடிந்தது என்று பலர் எண்ணுகிறார்கள். இந்த மனப்பான்மையே தவறு.
எனவே பிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது.) பிரார்த்தனையை தளத்தில் வெளியிடலாமா அல்லது வேண்டாமா என்று தெரிக்கவும். அவசியம் அலைபேசி எண்ணை கொடுக்கவும். (பிரார்த்தனை பதிவை தயாரிக்கும்போது ஏதேனும் சந்தேகம் தோன்றினால் கேட்கவே அலைபேசி எண். தளத்தில் அலைபேசி எண் பிரசுரிக்கப்படமாட்டாது. நமது முந்தைய பிரார்த்தனை கிளப் பதிவுகளை படித்தால் அனைத்தும் விளங்கும்.
நன்றி!
==========================================================
இந்த வாரம் பிரார்த்தனை பதிவு இல்லை – ஏன்?
வாசகர்கள் பலர் போதிய விபரங்களை அனுப்பாததால் இன்று அளிக்கப்படவிருந்த நரம்பு கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விஷேஷ பிரார்த்தனை அளிக்கப்படவில்லை. அந்தப் பதிவு அடுத்த வாரம் அளிக்கப்படும். இந்த வாரம் நமது ராணுவ வீரர்களுக்காகவும், நமது விவசாயிகளுக்காகவும் பிரார்த்திக்கவும்.
இவற்றுடன் சேர்த்து உங்களுக்கு தனிப்பட்ட முறையில் யாருக்காகவாது பிரார்த்திக்கவேண்டும் என்கிற எண்ணமிருந்தால் அவர்களுக்காக பிரார்த்திக்கவும். இந்த வாரமும் வயலூர் கோவில் குருக்கள் திரு. கார்த்திகேயன் அவர்களிடம் விஷயத்தை விளக்கி வயலூர் முருகனிடம் பிரார்த்திக்க சொல்கிறோம்.
நரம்பு சமந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான கோரிக்கைகளை விபரங்களை சரியாக அனுப்பாத வாசகர்கள் பலரிடம் மேற்கொண்டு விபரங்களையும் அலைபேசி எண்ணையும் கேட்டு மின்னஞ்சல் இன்று அனுப்பியிருக்கிறோம். அவர்கள் பதில் அனுப்பவில்லை எனில், தெளிவாக உள்ள கோரிக்கைகள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்த வாரம் பிரார்த்தனை அளிக்கப்பட்டுவிடும்.
முன்னரே குறிப்பிட்டது போல பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.ராஜா குருக்கள் அந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவுள்ளார்.
இதற்கிடையே வேறு யாரேனும் நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கான பிரார்த்தனையை சமர்பிக்க விரும்பினால் அவர்கள் கோரிக்கையை வரும் 24/08/2016 க்குள் editor@rightmantra.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். அவரவர் பெயர், ராசி, நட்சத்திரத்துடன் சற்று விரிவாக நமக்கு அனுப்பவும். அவசியம் அலைபேசி எண்ணை அனுப்பவேண்டும். சந்தேகங்களுக்கு நம்மை தொடர்புகொள்ளலாம்.
இது தொடர்பான ஆலய தரிசன பதிவுக்கு : சித்தர்கள் பாடிய, நரம்பு கோளாறுகளை நீக்கும், பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!
– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
M : 9840169215 | E : editor@rightmantra.com
==========================================================
நமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு
பிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.
1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.
2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.
3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்!
4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.
5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.
6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.
7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.
ஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன?
நீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று அரிய சிவதொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.
==========================================================
நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…
முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
==========================================================
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : ஆகஸ்ட் 21 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
==========================================================
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….
We need your SUPPORT. Help Rightmantra in its functioning
==========================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
==========================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
==========================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
==========================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131
==========================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : வயலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பிரதான அர்ச்சகர்களுள் ஒருவரான திரு.கார்த்திகேயன் குருக்கள் அவர்கள்.
சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?
சென்ற பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற, திரு.கார்த்திகேயன் குருக்கள். மிகச் சிறப்பான முறையில் பிரார்த்தனையாளர்களின் பெயர்களில் வயலூர் அக்னீஸ்வரருக்கும் ஆதிநாயகிக்கும் அர்ச்சனை செய்து, ஸ்ரீ ருத்ரம் பாராயணம் செய்து, அம்பாள் திரிசதி ஓதி பிரார்த்தனை செய்தார். அதற்கு அடுத்த வாரம் வயலூர் முருகனுக்கும் பொய்யா கணபதிக்கும் திருப்புகழ் பாடி அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தார். இது பற்றி முகநூலில் கூட பதிவளித்திருந்தார் திரு.கார்த்திகேயன் குருக்கள். அவருடைய சிரத்தைக்கு மிக்க நன்றி. சென்ற வாரம் பிரார்த்தனை பதிவு அளிக்கப்படவில்லை. அதே பிரார்த்தனையை ரிப்பீட் செய்யுமாறு கேட்டுக்கொண்டோம். மூன்றாவது வாரமும் சிரத்தை எடுத்து அனைவருக்கும் பிரார்த்தனை செய்து உதவினார்.
அவருடைய முகநூல் செய்தி :
ஸ்ரீ ஆதிநாயகிபதியின் அருளால் கூட்டு ப்ரார்த்தணை நடந்தது. ஆதி நாயகன் ஆதிரை நாயகனின் அருள் பெறுபவர்களாகிய அண்ணா ப்ருஹ்மஸ்ரீ Rightmantra Sundar
அவர்களும் பாரத தேச வாசிகளும் எல்லா வளமும் பெற்று வாழ பரார்த்த பூஜையில் ப்ரதோஷ புண்ய வேளையில் ப்ரார்த்தித்து கொண்டோம். மேலும் இவரின் அத்யத்புதமாந சேவை சிறக்கவும் வேண்டினோம்.நல்லார் ஒருவரிருக்க அவரால் எல்லோரும் மழை பெறுவர். இன்று பலர் ஸ்ரீ அக்நீஸ்வர ஸ்வாமியின் அருள் மழை பெற்றோம். சந்தோஷகரம்
ஏது பிழை செய்தாலும் தீது
புரியாதெய்வத்தின் அருளால் வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
ஓம் முருகா வயலூர் முருகா!
==========================================================
[END]
Hats off to you Ji and the Gurukkal!
உங்கள் தொண்டிற்கும் அந்த குருக்களின் கடமை உணர்ச்சிக்கும், நம் பேரில் அவர் கொண்ட கருணைக்கும் நன்றிகள் பலப்பல.
வாழ்க வளமுடன்,
ஓம் முருகா! வயலூர் முருகா!
அன்பன்,
நாகராஜன் ஏகாம்பரம்
வெரி நைஸ் போஸ்ட் ஓம் முருகா