Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > தீதும் நன்றும் பிறர் தர வாரா! Rightmantra Prayer Club

தீதும் நன்றும் பிறர் தர வாரா! Rightmantra Prayer Club

print
சென்ற பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பித்த அனைவருக்காகவும் பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று அர்ச்சனை செய்தோம். தொடர்ந்து மறுநாள் திருநாவலூர் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் சென்றோம். அங்கும் சுவாமி சன்னதியில் பிரார்த்தனையை வைத்து அனைவருக்காகவும் அர்ச்சனை செய்தோம். இரண்டு ஆலயங்களிலும் உண்மையில் அப்படி ஒரு அற்புதமான தரிசனம். எனவே கோரிக்கைகள் நிறைவேறினால் சோளீஸ்வரருக்கு மட்டும் அல்ல, திருநாவலூர் பக்தஜனேஸ்வரருக்கும், திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரருக்கும் கூட உங்கள் நன்றியை தெரிவிக்கவேண்டும்.

natarajar

சென்ற வார பிரார்த்தனைப் பதிவை பார்த்துவிட்டு மேலும் பல வாசகர்கள் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக கோரிக்கையும் பிரார்த்தனைகளும் அனுப்பியிருந்தனர். எனவே அவர்கள் பெயரையும் கோரிக்கைகளையும் தனியாக ஒரு பதிவில் வெளியிட விரும்பி இந்த பதிவை அளிக்கிறோம்.

இவர்களுக்கும் சரி முந்தைய பிரார்த்தனை பதிவில் (நரம்பு தொடர்பான பிரச்சனைகள்) கோரிக்கை அனுப்பியிருக்கும் அன்பர்களுக்கும் சரி அனைவருக்கும் இந்த வார இறுதியில் நாம் மேற்கொள்ளவிருக்கும் திருச்சி பயணத்தின்போது செல்லகூடிய அனைத்து ஆலயங்களிலும் பிரார்த்தனையும் அர்ச்சனையும் செய்யப்படும்.

நாம் கேட்டுகொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான். பிரார்த்தனை சமர்பித்ததோடு உங்கள் வேலை முடிந்தது என்று நினைக்காமல் இந்த வாராந்திர கூட்டுப் பிரார்த்தனையில் தொடர்ந்து பங்கேற்று அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து வாருங்கள். அப்புறம் பாருங்கள்…!

இந்த பிரார்த்தனை இரண்டு வாரங்களுக்கு இருக்கும். அடுத்த பிரார்த்தனைப் பதிவு 23/09/2016 வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்படும்.

இன்றைய பிரார்த்தனைப் பதிவில் பகவான் ரமணர் தொடர்புடைய மூன்று அற்புதங்களை பார்ப்போம். குருவைப் பற்றி படிப்பதே பாப விமோசனம் தான்.

ramanar

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்…

ரு முறை ராமசாமிப்பிள்ளை தென்னை மரங்களில் இருந்து இரும்பு துரட்டி போட்டு காய்களைப் பறித்துக் கொண்டிருந்தார்.

பகவான் மலைக்கு செல்வதற்கு கிளம்பியவர் நின்று அதைப் பார்த்துவிட்டு, ”மூங்கில் குச்சியை கட்டி இரும்பு துரட்டிக்கு பதிலா போடப்படாதா! மரத்தைக் காயப்படுத்தறது பாரு இரும்பு துரட்டி! பாவமய்யா நீங்க கேக்காமயே அது இளநீர் தர்றது, அதப்போய் இப்படியா பண்றது!” என்று கூறினார்.

ஆனால் ராமசாமிப்பிள்ளை, ‘பகவானுக்கு ஆத்மீக விஷயம் தான் நல்லா தெரியும். இதெல்லாம் அவருக்கு அவ்வளவா தெரியாது. மூங்கில் கட்டி துரட்டி போட்டா மூங்கில் ஒடஞ்சுரும். நிறைய காய் பறிக்க வேண்டியதிருக்கு. இரும்பு துரட்டி தான் நடைமுறைக்கு சரி’ என்ற எண்ணம் கொண்டவராய் இரும்புத் துரட்டியாலேயே காய்களைப் பறிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்தார்.

பகவான் மலைக்குச் சென்று விட்டு, சிறிது நேரம் கழித்து திரும்பிய போதும் ராமசாமிப்பிள்ளை பறித்துக் கொண்டிருந்தார். பகவான் அருகில் வந்தபோது ஒரு காய் நேராக ராமசாமிப் பிள்ளையின் மூக்கில் விழுந்து ரத்தம் கொட்டியது.

பகவான், ”நான் சொன்னதை கேக்கலை. இப்போ தெரியறதா? நாம செய்ற பாவம் நமக்கு திரும்ப வரும்னு புரியறதா?” என்றார்.

(*மகா பெரியவாளும் இதையேத் தான் வலியுறுத்துவார். வில்வ தளங்களை பறிக்கும்போது ஒவ்வொன்றாக மரத்திற்கு நோகாமல் பறிக்கவேண்டும் என்பார். ஞானிகளை பொறுத்தவரை ஒரே சிந்தனை தான்!)

****************************

சர்வமும் நானே!

க்தர் ஒருவர் பஞ்சாபில் இருந்து வரவழைக்கப் பெற்ற சயவனப்ராஸ் லேகியத்தை பகவானுக்கு சமர்ப்பித்து அதைத் தினம் சிறிது சாப்பிடும்படி பிரார்த்தித்தார். பகவான் புன்முறுவல் புரிந்தார்.

அடுத்த நாள் காலை உணவின்போது எல்லோரது இலையிலும் அது சிறிது பரிமாறப்பட்டு ஒரே நாளில் காலி செய்யப்பட்டது.

அந்த பக்தர் உணவு முடிந்ததும் பகவானிடம் வந்து, ‘பகவானே! நீங்க சாப்பிடணும்னுதான் கொண்டு வந்தேன். ஒரே நாள்லேயே காலி பண்ணிட்டீங்களே!’ என்றார்.

”நான் இந்த ஒரு வாயாலேதான் சாப்பிடறேன்னு நினைக்கிறியா? எல்லா வாயும் பகவானோட வாய்தான்” என்று கூறிப் புன்னகைத்தார்.

****************************

குரு விபூதி!

காவ்ய கண்ட கணபதி முனியின் மனைவி விசாலாட்சிக்கு விபூதி சாப்பிடும் பழக்கம் இருந்தது. நிறைய சாப்பிடுவாள். அவளால் நிறுத்த முடியவில்லை. ஒருமுறை பகவானிடம் தயங்கியவாறே இந்த விபூதி பழக்கத்தை பற்றிக் கூறினாள். இதை எவ்வாறு விடுவது என வினவினாள்.

பகவான் ”இதை ஏன் முன்னாடியே என்கிட்டே சொல்லல?” என்று சொன்னவர், சிறிது விபூதியை விசாலாட்சிக்கு கொடுத்து ”இதை சாப்பிடு! சரியாயிடும்!” என்றார். அன்றிலிருந்து அவளுக்கு அப்பழக்கம் நீங்கி விட்டது.

கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல்
குருவின் உருவம் குறித்த அப்பொழுதே
திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே!
– திருமந்திரம் 

விளக்கம் : கருடனின் உருவம் எண்ணத்தில் தோன்றிய உடனே பாதுகாப்பான இடத்தை அடைந்து பயத்தை அழிக்கும் அதுபோல் குருவின் உருவத்தை மனதில் நினைக்க மூன்று குற்றங்கள் அழிந்து சிவனாக ஆகலாம். பின்குறிப்பு – நல்ல குருவின் வடிவம் எண்ணங்களை அழித்து சிவனைக் காட்டும்.

================================================

நமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு 

பிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.

1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.

2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.

3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்!

4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.

5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.

6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.

7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.

ஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன?

நீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று அரிய சிவதொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

==========================================================

ஒரு முக்கியமான விஷயம்!

பிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது. கோவிலில் அர்ச்சனை செய்யவே இந்த விபரங்கள் கேட்கப்படுகிறது!)

கோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணை அவசியம் குறிப்படவேண்டும். அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

நன்றி!

– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
M : 9840169215  |  E : editor@rightmantra.com

==========================================================

நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.ராஜா குருக்கள் அவர்கள்.

raja-gurukkalகடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் சோளீஸ்வரருக்கு தொண்டு செய்து வரும் திரு.ராஜா குருக்கள் சோளீஸ்வரரின் சக்தி பற்றி சிலாகித்து பேசுகிறார். இவரது குடும்பமே வைதேகத்தில் தோய்ந்த ஒரு குடும்பம் தான். சோளீஸ்வரர் தனக்கு எந்தக் குறையும் வைக்காமல் நன்றாக பார்த்துக்கொள்வதாகவும் இவருக்கு பூஜை செய்ய ஆரம்பித்த முதல் வாழ்க்கைத் தரம் உயர்ந்து தற்போது எந்தக் குறையுமில்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார். இவருக்கு திருமணமாகி சோளீஸ்வரர் அருளால் குழந்தை உண்டு.

ஜூன் மாத மத்தியில் சோளீஸ்வரரை தரிசிக்க சென்றபோது இவரை சந்தித்து பேசி நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்காக நமது வாசகர்கள் நலன் வேண்டி அளிக்கும் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். நிச்சயம் செய்வதாக சொல்லியிருந்தார். ஏற்கனவே முதலில் வெளியிடப்பட்ட பிரார்த்தனை விபரங்களை அவரிடம் அளித்து அவரும் சோளீஸ்வரர் திருப்பாதத்தில் வைத்தார். அனைவருக்கும் அர்ச்சனையும் செய்தார்.

perambakkam

கூடுதலாக சமர்பித்துள்ள வாசகர்களின் விபரங்களை எடுத்துக்கொண்டு நாளை (10/09/2016) மீண்டும் பேரம்பாக்கம் செல்லவிருக்கிறோம்.

இதற்கிடையே வாசகர்கள் நேரில் சென்று ஒரு முறை சோளீஸ்வரரை தரிசித்து தங்கள் நன்றியை தெரிவிக்கவேண்டும். திங்கட்கிழமை விஷேஷம். ஆனால், அன்றைக்கு ராஜா குருக்கள் பரபரப்பாக இருப்பார். சாதாரண நாளன்று சென்று தரிசித்துவிட்டு விபரங்களை கேட்டுக்கொண்டு, அதற்கு பிறகு ஒரு முறை போய்வாருங்கள். நீங்கள் நேரில் போகமுடியாவிட்டாலும் வருந்தவேண்டாம். ஏனெனில் பிரார்த்தனை நடைபெறுவதே நேரில் செல்ல இயலாதவர்களுக்காகத் தானே? ஆனால் பிரார்த்தனை நிறைவேறும் பட்சத்தில் நேரில் சென்று சோளீஸ்வரரை தரிசித்து விட்டு வாருங்கள்.

சிவாய நம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருகாலும் இல்லை!

இது தொடர்பான ஆலய தரிசன பதிவுக்கு : சித்தர்கள் பாடிய, நரம்பு கோளாறுகளை நீக்கும், பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்:

இந்த வாரம் பிரார்த்தனை சமர்பித்திருக்கும் கோரிக்கையாளர்கள் பலர் புதியவர்கள். பிரார்த்தனைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறோம். நரம்பு தொடர்பான பிரார்த்தனை என்பதால் தங்கள் அன்புக்குரியவர்களின் நலன் வேண்டி பலர் பிரார்த்தனை அனுப்பியிருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. சிலர் படும் துன்பத்தை பார்த்தால் “உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்கிற கவரியரசரின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வரும். இறைவன் இவர்களுக்கு ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரட்டும். நிச்சயம் தருவான்.

இங்கே பிரார்த்தனை சமர்பித்துள்ள பிரார்த்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பிரார்த்தனை இடம் பெற்ற இந்த பிரார்த்தனையோடு நிறுத்திவிடாமல் ஒவ்வொரு வாரமும் நீங்கள் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று ஒரு பத்து நிமிடம் (பிரதி ஞாயிறு 5.30 PM – 6.௦௦ PM வரை உங்களுக்கு எந்த பத்து நிமிடம் சௌகரியமோ அந்தப் பத்து நிமிடம்) மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்கள கோரிக்கைகள் தானே நிறைவேறும்.

பொதுப் பிரார்த்தனை… உள்ளம் உருக்கும் ஒன்று. அந்த சிறுமிக்காக நாம் அவசியம் பிரார்த்திக்கவேண்டும்.

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

1) Wife to become alright and debts to be cleared!

Dear Sir,

I request you to do prayer for my wife Lavanniya, she has arthritis problem for last 5 years, I have tried various medicines to cure, but no use so far, because of this I have huge debts, borrowed for interest, suffering with lot of problems in home because of health issues and debts

Kindly do pray for my family health and to clear my debts.

Thanks & Regards
K. Vishwanath Bharathi

2) Son shows improvement and my friend should be happy!

Dear Sir,

I wish to tell you that my son seems a little better for the past two days. He is cheerful and not complaining of the headache his head hitting because of the pain in his head has reduced considerably. I too feel as if a big weight has been lifted off my shoulders. I told my family about this.

In fact I had totally forgotten about my letter to you and the prayers you were doing on my behalf. I also totally forgot to pray with the group on Sunday. Suddenly today it occurred to me that my son is better because you had organized prayers on his behalf.
I request you to please continue your prayers for him so that he is free of the pain.
No news regarding any alliance for my daughter. Please pray that her marriage should be fixed soon to a good person from a good family.

Thank you . I will continue to report the progress.

I have a friend and his wife who are having severe problems in their marriage. Please also pray for them. They do not believe in all this so I do not want to tell them. However, I would like u to pray for them.

Regards,
Maithreyi,
Vadapalani

3) மகன் நலம் பெறவேண்டும்! நன்றாக நடக்கவேண்டும்!!

எனது மகன் ஆர்.நாராயணன் (வயது 28) கடந்த 19.05.2015 இரவு மதுரையில் எங்களது குடும்பம் வசித்துவந்த நிலையில் நடைபெற்ற நிகழ்வினால் தலையில் அடிப்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டு, மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓரளவு உடல் நிலை முன்னேற்றம்கண்டு மருத்துமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அவருக்கு இடது முழங்கால் மற்றும் இடுப்பின் இரு புறங்களிலும் (hetrotropic ossification) எனும் தசை இறுகி எலும்பாக மாறி அசைவுகளுக்கு இடையூறாக இருந்ததை தொடர்ந்து வேலூரில் உள்ள C.M.C. மருத்துவமனையில் கடந்த 09.09.2015 முதல் சிகிச்சை பெற்று அறுவைசிகிச்சை மேற்கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும், ஒரு அறுவை சிகிச்சையும் செய்யபட வேண்டியுள்ளது. தற்சமயம் அவர் C.M.C. மருத்துமனையை சார்ந்த மறுவாழ்வு மையத்தில் (Rehabilitation Insitute) Phsyiotheraphy முதலான சிகிச்சைகள் பெற்று வருகிறார். அவர் முழுமையாக நலம் பெற வேண்டி பிரார்த்திக்க வேண்டுகிறேன்.

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள
கரு. இராமகிருஷ்ணன்,
வேலூர்

4) மனைவி நலம் பெறவேண்டும் !

என் மனைவி சுஜாதா (45) அவர்களுக்கு கால் மூட்டில் பிரச்னை ஏற்பட்டு நடப்பதில் சிரமம் உள்ளது. அவர் ஏற்கனவே ஒரு கால் போலியோவால் பாதிக்கப்பட்டவர். தற்போது நெல்லை அருகே ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சேர்த்து தினசரி ட்ரீட்மென்ட் கொடுத்து வருகிறோம். கொஞ்சம் கொஞ்சமாக தேறிவருகிறார்.

ஒரு பக்கம் மருத்துவமனை அலைச்சல், மறுப்பக்கம் செலவு என நான் சொல்லொண்ணா மன வேதனையில் இருக்கிறேன். அவர் முற்றிலும் நலம் பெற்று, பரிபூரண குணமடைந்து முன்னைப் போல தன் பணிகளை தானே செய்யவேண்டும். எந்தவித துன்பமும் இல்லாமல் குடும்பப் பணிகளை கவனிக்கவேண்டும். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

– எஹ்.எஸ்.ஐயர்,
நெல்லை

5) குடும்பத்தில் அனைவருக்கும் நரம்பு பிரச்சனை தீரவேண்டும்!

என் வீட்டில் எனக்கு, என் கணவருக்கு (கால் நரம்பு COMPRESSION), மகனுக்கு என அனைவருக்கும் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ளன. எனக்கு கால்களில் வெரிகோஸ் வெயின்ஸ் எனப்படும் பாதிப்பு உள்ளது. இதனால் அனைவரும் ஒருவித இறுக்கத்தில் இருக்கிறோம். இறைவனே எங்களுக்கு உற்ற துணை. எங்களுக்கு ஏற்பட்டுள்ள நரம்பு தொடர்பான பாதிப்புக்கள் அனைத்தும் நீங்கி, ஆரோக்கியமாக சந்தோஷமாக நாங்கள் வாழவேண்டும்.

எங்கள் அனைவரின் பெயர், ராசி, நட்சத்திர, விபரங்களை தனியாக அனுப்பியிருக்கிறேன்.

– சுபா பாஸ்கர்,
வில்லிவாக்கம்

6) Suffering from neuropathetic pain!

Dear Sundar and RM friends and visitors,

I have neuropathic pain with the symptoms such as numbness under the right rib cage, stomach cramps and severe pain in the back and left foot. Doctors are saying that it is a neuropathic pain and prescribed few tablets. I have these symptoms for the past 10 months and no medicines cured the illness. I am not able to concentrate on my regular activities and office work due to the pain and the numbness.

I fully believe in our Gurus and the almighty. They will have to cure and relieve me from the aforesaid illness.

Request you to include my name as well in Rightmantra prayer club and pray to Soleewarar.

Thank You.

Regards,
Venkat Subramaniam KS,
Mugalivakkam

7) My child should get cured from brain nerve problems!

Dear Sir,

I request you to do prayer for our child Hari Pranav who has fits (seizure disorder) problem which was diagnosed just a month ago because of excess brain current spike at times and currently under medication and advised for two long years medicines to cure. Afraid it might impact his mental growth which is crucial for 2 yr old baby where 90 percentage of growth depends on brain nerves development.

Kindly do pray for all kids who cannot express the pain or discomfort they undergo and helpless parents who are longing for god’s miracle to cure.

Thanks & Regards,
K. Sundareswaran
Chennai.

* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.

** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.

==========================================================

பொதுப் பிரார்த்தனை!

இரு மாநிலங்களுக்கிடையே நிலவும் பதட்டம் தணிந்து அமைதி ஏற்படவேண்டும்!

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் கடும் பதட்டம் நிலவி வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கர்நாடக அரசு நீரை திறந்துவிட்டிருக்கும் நிலையில், அதை அங்கிருக்கும் சிலர் அரசியல் செய்ய முனைகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் விதமாக பந்த், மறியல், என பலவற்றை அறிவித்து மக்களை அவதிக்குள்ளாக்குகின்றனர். வன்முறை சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்கின்றன. இதையடுத்து கர்நாடகத்திலும் பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் சற்று அச்சத்தோடு உள்ளனர்.

cauvery-protest

இந்த சந்தர்ப்பத்தில் மக்களிடையே பிராந்திய மற்றும் இன ரீதியிலான உணர்வுகளை சிலர் தூண்டிவருகின்றனர். தமிழக அரசு இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் மூலமாக எடுத்து வரும் நிலையில் நாம் அனைவரும் அமைதியாக இருப்பதே நலம். எரியும் தீயில் எண்ணை ஊற்றும்விதமான எந்த செயலையும் செய்யக்கூடாது. இதனால் ஒரு போதும் பிரச்னை தீராது. மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டு தான் போகும்.

cauvery-protest-2

நீருக்காக அண்டை மாநிலங்களை எதிர்பாத்துக்கொண்டிருக்காமல் தமிழக அரசு நமது நீராதாரங்களை வலுப்படுத்தி பல தடுப்பணைகளை ஆற்றின் குறுக்கே கட்டவேண்டும். டிசம்பரில் பெய்த பெருமைழை நீர் அனைத்தும் வீணே கடலில் கலந்துவிட்டது குறிப்பிடத்தக்கது!

இந்நிலையில் நாம் செய்யக்கூடியது சில உண்டு…

* நம் வீட்டில் மழை நீர் சேகரிப்பு முறையை சரியாக பராமரிக்கலாம்.

* பிளாஸ்டிக் கவர்களை பிளாஸ்டிக் குப்பைகளை சாக்கடை மற்றும் நீர்வழித் தடங்களில் கொட்டாமல் இருக்கலாம்.

* வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கலாம்.

* ஏரி, குளம் இவற்றை ஆக்கிரமிப்பு செய்து போடப்படும் லே-அவுட்களில் மனை வாங்குவதோ வீடு கட்டுவதோ தவிர்க்கலாம்.

* தஞ்சை மற்றும் டெல்டா விவசாயி யாரேனும் ஒருவரை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்து (கூட்டாகவோ நண்பர்களுடன் சேர்ந்தோ) அவர் வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவிகளை செய்யலாம்.

* காவிரி போன்ற நதிநீர் பிரச்சனைகளின் போது பிராந்திய உணர்வுகளை தூண்டிவிடாமல் தத்தங்கள் வேலையை பார்த்தபடி இருக்கலாம். (தூண்டிவிடுவதால் பிரச்னை தான் பெரிதாகுமே தவிர ஒரு சொட்டு நீரும் வாங்க முடியாது!) \

இரு மாநிலங்களுக்கு இடையேயும் ஏற்பட்டுள்ள பதட்டம் தணிந்து சகோதரத்துவம் மேலோங்கவும், நாமெல்லாம் இந்தியர் ஒருவரையொருவர் அரவணைத்து செல்லவேண்டும் என்கிற உணர்வு மேலோங்கவும், நம் விவசாயிகளின் பிரச்சனை தீரவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

இதுவே இந்த வார பொது பிரார்த்தனை!

==========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

நரம்பு மற்றும் எலும்பு மற்றும் இதர உடற்பிணி தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இங்கு பிரார்த்தனை சமர்பித்திருப்பவர்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டுவோம். காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பதட்டம் தணிந்து அமைதி ஏற்படவேண்டும். நமக்கு நியாயமாக வரவேண்டிய நீர் எந்த தடையுமில்லாமல் வரவேண்டும்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.ராஜா குருக்கள் அவர்களின் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : செப்டம்பர் 11 & 18, 2016  ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

==========================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

==========================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

==========================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

==========================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

==========================================================

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : வயலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பிரதான அர்ச்சகர்களுள் ஒருவரான திரு.கார்த்திகேயன் குருக்கள் அவர்கள்.  

Vayaloorசென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற, திரு.கார்த்திகேயன் குருக்கள். மிகச் சிறப்பான முறையில் பிரார்த்தனையாளர்களின் பெயர்களில் வயலூர் அக்நீஸ்வரருக்கும் ஆதினாயகிக்கும் அர்ச்சனை செய்து அம்பாள் திரிசதி ஓதி பிரார்த்தனை செய்தார். அதற்கு அடுத்த வாரம் வயலூர் முருகனுக்கும் பொய்யா கணபதிக்கும் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தார். இது பற்றி முகநூளில் கூட பதிவளித்திருந்தார் திரு.கார்த்திகேயன் குருக்கள். அவருடைய சிரத்தைக்கு மிக்க நன்றி. சென்ற வாரம் பிரார்த்தனை பதிவு அளிக்கப்படவில்லை. அதே பிரார்த்தனையை ரிப்பீட் செய்யுமாறு  கேட்டுக்கொண்டோம். மூன்றாவது வாரமும் சிரத்தை எடுத்து அனைவருக்கும் பிரார்த்தனை செய்து உதவினார்.

அவருடைய முகநூல் செய்தி :

ஸ்ரீ ஆதிநாயகிபதியின் அருளால் கூட்டு ப்ரார்த்தணை நடந்தது. ஆதி நாயகன் ஆதிரை நாயகனின் அருள் பெறுபவர்களாகிய அண்ணா ப்ருஹ்மஸ்ரீ Rightmantra Sundar
அவர்களும் பாரத தேச வாசிகளும் எல்லா வளமும் பெற்று வாழ பரார்த்த பூஜையில் ப்ரதோஷ புண்ய வேளையில் ப்ரார்த்தித்து கொண்டோம். மேலும் இவரின் அத்யத்புதமாந சேவை சிறக்கவும் வேண்டினோம்.நல்லார் ஒருவரிருக்க அவரால் எல்லோரும் மழை பெறுவர். இன்று பலர் ஸ்ரீ அக்நீஸ்வர ஸ்வாமியின் அருள் மழை பெற்றோம். சந்தோஷகரம்

ஏது பிழை செய்தாலும் தீது
புரியாதெய்வத்தின் அருளால் வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
ஓம் முருகா வயலூர் முருகா

==========================================================

[END]

3 thoughts on “தீதும் நன்றும் பிறர் தர வாரா! Rightmantra Prayer Club

  1. ஜி,

    மேலே எழுதியிருக்கும் திருமந்திரத்திற்கு பொருள் எழுதினால் நன்றாக இருக்கும்.

    அன்பன்
    நாகராஜன் ஏகாம்பரம்

    1. கருடனின் உருவம் எண்ணத்தில் தோன்றிய உடனே பாதுகாப்பான இடத்தை அடைந்து பயத்தை அழிக்கும் அதுபோல் குருவின் உருவத்தை மனதில் நினைக்க மூன்று குற்றங்கள் அழிந்து சிவனாக ஆகலாம். பின்குறிப்பு – நல்ல குருவின் வடிவம் எண்ணங்களை அழித்து சிவனைக் காட்டும்.

      – பதிவிலும் சேர்த்துவிட்டேன். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *