உழந்தும் உழவே தலை. (குறள் 1031)
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் தான் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
“அலகிலா மறைவிளங்கும் அந்தணர் ஆகுதி விளங்கும்
பலகலையான் தொகை விளங்கும் பாவலர்தம் பா விளங்கும்
மலர்குலாந்திரு விளங்கும், மழை விளங்கும், மனுவிளங்கும்
உலகெலாம் ஒளி விளங்கும் உழவருழும் உழவாலே”
என்று வேள்வி முதல் கல்வி வரை, இயற்கை சிறப்பும், அனைத்தும் உழவெனும் உழைப்பின் சிறப்பாலே ஒளிவிளங்குதாகுக என்று உழவின் பெருமையை அனைத்திற்கும் மேலாக வைத்து போற்றுகிறார் கம்பர்.
ஆனால் அந்த உழவு தொழில் இன்று இருக்கும் நிலை என்ன தெரியுமா? இந்தியாவில் பல்வேறு காரணங்களினால் விவசாயம் செய்ய முடியாது, வாழ வழி தெரியாது ஒவ்வொரு ஆண்டும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் தெரியுமா?
2011 ஆம் ஆண்டு மட்டும் அப்படி தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 14,000 என்கிற அதிர்ச்சி தரும் விபரத்தை தேசிய குற்ற பதிவு குறிப்பிடுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு அரைமணிநேரமும் 46 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாக புள்ளிவிபரம் கூறுகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டு விவசாயிகளில் 9 லட்சம் பேர் விவசாயத்தைவிட்டு வெளியேறிவிட்டனர் தெரியுமா?
பாசனத்திற்கு ஆற்று நீர் இல்லை. வாய்க்காலோ வறண்டு கிடக்கிறது. நிலத்தடி நீர் இல்லை. நீர் இருந்தால் அதை இறைக்க மின்சாரம் இல்லை. சாதாரண கூலி வேலைக்கு சென்றால் கூட ரூ.200/- ஊதியம் கிடைக்கும் இன்றைய காலகட்டங்களில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. வேறு எந்த தொழிலும் ஏமாற்று வித்தையும் அறியாத நம் விவாசாயிகள் இறுதியில் தூக்குக் கயிறை தேர்ந்தெடுக்கும் அவலம் இங்கே மட்டுமே சாத்தியம்.
விளைநிலங்கள் எல்லாம் பிளாட்டுகளாக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், வருங்கால தலைமுறையினர் எதை சாப்பிடப்போகிறார்கள்?
ஆட்சியாளர்களால் வணிகமும், வங்கியும், தொழில்நுட்பமும், பாதுகாப்பும் பெறும் முக்கியத்துவத்தில் நூறில் ஒரு பங்கை கூட விவசாயம் பெறுவதில்லையே?
பல்வேறு சத்துக்களும் சிறப்புக்களும் மிக்க நமது பாரம்பரிய தானியங்களான கம்பு, கேழ்வரகு, திணை, இவைகளை எல்லாம் இன்றைய தலைமுறையினர் மறந்தேவிட்ட சூழ்நிலையில், உடல்நலத்திற்கு சிறிதும் ஒவ்வாத பீட்சா, அரைகுறையாக வேகவைக்கப்பட்ட கோழிக்கறி, கொழுப்பு மிகுந்த பேக்கரி பொருட்கள், சர்க்கரை நோயை ஆரத்தி எடுத்து வரவேற்கும் பாட்டில் பானங்கள் இவைகளுக்கு அடிமையாகிவிட்டனரே நம் இளைய தலைமுறையினர்…
ஏற்கனவே இந்திய விவசாயி அனைத்தையும் இழந்து கோவணத்துடன் நிற்கும் சூழ்நிலையில் அதையும் உருவும் விதத்தில் பன்னாட்டு வர்த்தகத்தை இந்த நாடு ஊக்குவித்து வருகிறது.
செயற்கை உரங்கள், இராசயன உரங்கள் போடாமல் எந்த விளைச்சலும் இல்லை என்கிற அளவிற்கு மண் வளம் கெட்டுப்போய்விட்டது. இது பற்றி எடுத்துக்கூறி வந்த நம்மாழ்வார் போன்றவர்கள் கண்டுகொள்ளப்படாமலே போய் சேர்ந்துவிட்டனர்.
எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கிடையே போர் என்று ஒன்று நடைபெற்றால் அது குடிநீருக்காகவும், உணவுக்காகவுமே நடைபெறும்.
ஐயாயிரம் கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா தற்கொலை செய்து கொள்ளவில்லை…
அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க எவனும் தற்கொலை பண்ணிக்கல..
அந்த கடனைக் கொடுக்கச்சொன்ன நம்ம நிதியமைச்சர் தற்கொலை பண்ணிக்கல..
ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும்.. எங்கள் ஏழை உழவன்.. சில ஆயிரம் கடனை திருப்பிக்கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்..
ஏனெறால் இவனுக்கு மானம் தான் பெரிது..
– இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்
சரி… இந்த கொடுமைகள் தீர நாம் செய்யப்போகிறோம்? சிறுமை கண்டு பொங்கினால் போதுமா? செயல்வீரர்களை அல்லவா எதிர்பார்த்து இந்த உலகம் காத்திருக்கிறது.
எழுதுவதோடு நிற்பவர்கள் நாம் அல்லர். செயலில் காட்டுபவர்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
ஒரு ஏழை விவசாயியை தேர்ந்தெடுத்து, அவனது சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்து அவன் குழந்தைகளை படிக்கவைத்து, ஆளாக்கி அவன் குடும்பத்தை தலைநிமிரச் செய்வது வரை செயலாற்ற நமது தளம் உறுதி பூண்டுள்ளது என்பதை உழவர் திருநாளான இன்று தெரிவித்துக்கொள்கிறோம். தகுந்த பயனாளியை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது.
நம் தளமும் நாமும் வளர வளர இந்த பணி விரிவடைந்துகொண்டே செல்லும்.
ஒரு ஏழை விவாசாயி மனம் குளிர்ந்தால் முப்பத்து முக்கோடி தேவர்களும் மனம் குளிர்ந்ததற்கு ஒப்பாகும்!
நாம் சோற்றில் கை வைக்க, தான் சேற்றில் கால் வைக்கும் விவசாயிக்கு ‘உழவர் திருநாள்’ நல் வாழ்த்துக்கள்!
[END]
Dear Sir,
best of luck Sir, what ever i can will help in this regard.
Regards,
P. Raja
ியர் Mr ுந்தர்,
நன்கு எழுதி உள்ளீர்கள்.
AAனால், காலம் கடந்து விட்டது. அதீத மக்கள் தொகைப் பெருக்கம், அசுரத்தனமான கம்ப்யூட்டர் வளர்ச்சி, இடைத் தரகர்களின் அட்டகாசம் இவையே விவசாயம் அழிய முக்கிய காரணங்கள்.
விவசாயி என்று தான் உற்பத்தி செய்த பொருளை தானே நேரிடையாக விற்று லாபம் காண்கிறானோ அன்று தான் உழவுத் தொழில் மீண்டும் வளரும். அரசாங்கமும் வுழவுத் தொழிலை முதன்மை படுத்தி தகுந்த சந்தை வசதிகளை ஏற்படுத்தினால் மட்டுமே இது சாத்தியம்.
சுந்தர்ஜி
உங்களின் எழுச்சி இந்த நாட்டின் எழுச்சி. உங்களைபோல் உள்ள ஒவ்வொரு இளைஞனின் இந்த சுளுரை தான் ஒரு விடிவு மலர வழி செய்யும்.
இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள். மிகவும் அருமையான பதிவு,
விவசாயிகளின் வாழ்க்கை போராட்டத்தை அருமையாக சித்தரிதிருக்கிறீர்கள்
உழவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
ஒரு ஏழை விவசாயியை தேர்ந்தெடுத்து, அவனது சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்து அவன் குழந்தைகளை படிக்கவைத்து, ஆளாக்கி அவன் குடும்பத்தை தலைநிமிரச் செய்வது வரை செயலாற்ற நமது தளம் உறுதி பூண்டுள்ளது என்பதை உழவர் திருநாளான இன்று தெரிவித்துக்கொள்கிறோம். தகுந்த பயனாளியை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது.
I hereby assure that I will be a part of the welfare activities taken by RM
நன்றி
uma
விவசாயி மகன் ஏன் விவசாயம் செய்யவேண்டும், அவன் ஏன் மற்ற துறைகளை நாடக்கூடாது. வைதீக பிராமணன் மகன் ஏன் கணினி துறையில் சாதனை படைக்கவேண்டும். அவனும் ஏன் வைதீக தொழிலை செய்யக்கூடாது – போன்ற கேள்விகள் இருக்கும்வரை, அவரவர் பரம்பரை தொழிலை எத்தனையோ காரணங்கள் காட்டி வேறு தொழிலுக்கு மாறும்போது எப்படி விவசாயிகள் மட்டும் அதே தொழிலை மீண்டும் மீண்டும் செய்வார்கள். முதலில் நம் பரம்பரை தொழிலை காசுக்காக செய்யாமல் சமூக நோக்குடன் பெருமையுடன் செய்யவேண்டும்.
அவரவர் ஊர்களை விட்டு நம்முடன் அலுவலகத்தில் வேலை செய்யும் பலரை ஏன் சென்னைக்கு வந்தாய் என்று கேட்டால் தெரியும். தமிழ்நாட்டின் இன்றைய தலையாய தொழில் ரியல் எஸ்டேட் மற்றும் சினிமா. ஆனால் இதில் எத்தனை பேருக்கு வீடுகட்டும் தொழில்நுட்பம் மற்றும் கலை சேவை பற்றி தெரியும். எல்லோருக்கும் ஒரே நோக்கம்தான் – பணம் பண்ணுவது.
என்னுடைய கருத்துக்கள் யார் மனதையாவது புண்படுத்தும் விதத்தில் இருந்தால், இதை நம் தளத்தில் வெளியிடவேண்டாம் சுந்தர்.
பல் துலக்கும் பேஸ்ட் முதல் துணி துவைக்கும் சோப்பு வரை உற்பத்தி செய்பவன் வைத்தது தான் விலை ,ஆனால் அப்பாவி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருளுக்கு விலை வைக்க முடியாத நிலை ,நெல்லுக்கும் ,கரும்புக்கும் அரசாங்கம் சொல்லும் விலைக்கு விற்க வேண்டிய அவலம் ,இது மாறினால் தான் விவசாயம் வளரும் ,விவசாயிகளும் வளர்வார்கள்
God Will Grace U.. 🙂
How are you Mr.Pravin?
It is very long since we have spoken it seems.
Hope you are doing well.
thanks.
– Sundar
இதை பற்றி நிறைய எழுதி இன்னும் மக்களிடையே விழிப்பு உணர்வை கொண்டு வர வேண்டும். இதை பற்றி பேச நிறைய இருக்கிறது. இந்த நாட்டில் எல்லாம் (USA) ஒரு வருடம் விவசாயம் செய்து பின் அடுத்த வருடம் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும். ( நிலத்தை அப்படியே போட்டு விட வேண்டும் ) ஆனால் அவர்களுக்கு எந்த அளவு வருமானம் முதல் வருடம் வந்ததோ அதை அரசாங்கம் அடுத்த வருடம் அந்த குடும்பத்திற்கு கொடுத்து விடும். நம் நாட்டில் இதில் அரசாங்கம் செய்ய இன்னும் நிறைய உள்ளது. whole சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும். பேச நிறைய உள்ளது. ஆனால் பேசினால் மட்டும் நம் அரசாங்கம் மாறி விட போகிறதா என்ன!!!!!!!!
எல்லாம் வல்ல ஆண்டவர் நம் நாட்டை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை. (ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் இது நடக்கும்)
அன்பு சகோதரா
உங்கள் வார்த்தைகள் அனைத்தும் சரியே…ஆனால் அன்று மக்கள் படிக்க முன் வரவில்லை விவசாயம் மட்டும் செய்து பிழைத்த வந்தனர்…இன்று…அரசின் பலவித திட்டங்களில்…மக்கள் படிக்க விழையும் போது விவசாயம் செய்வதற்கு கூலி வேலை செய்ய ஆட்கள் எங்கே இருக்கின்றார்கள் சொல்லுங்கள்…விவசாய நிலம் வைத்திருக்கும் முதலாளிகளின் கண்ணீர் கதை இதுதான்…அது தவிர…தொழிற் சாலைகளின் வளர்ச்சியில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுகின்றன…நாட்டின் உள் கட்டமைப்பு திட்டங்களுக்காகவும் நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுகின்றன…இது தவிர…நகரங்களின் எல்லை வளர்ச்சி…ஆகவே…இது விவசாயிகளை நாம் ஒடுக்கவில்லை….காலத்தின் வளர்ச்சியில் நாமே நம் தலையில் மண் அள்ளி போட்டுக் கொண்டு இருக்கிறோம்…
Sundar
You are right. I agree that we need to serve our farmers..At the same time we need to encourage and support to use modern facilities/equipments to improve agriculture. I assure you i will extend my support for atleast one farmer this year. Let me know when you find anyone whom i can serve.
Thanks
Jagankumar S
//At the same time we need to encourage and support to use modern facilities/equipments to improve agriculture.//
Jagan. I agree your point. But what we can do in this regard? It is the duty of the Government which we elect.
– Sundar
Sundar,
Yes.. Govt needs to support and encourage farmers to use modern machinery. However until Govt realizes that, we can keep a target to serve & encourage farmers to get them machinery say provide them loan without any interest. So that they feel like continuing agriculture. I’m sure if knowledgeable selfless people start this kind of movement, there are many to support this.
Jagan,
Yes… we can do some initiative in this regard. Let me see.
Actually what we are doing to our farmers is real service.
– Sundar
என்னதான் நாம் முயற்சி செய்தாலும் ரியல் எஸ்டேட், பிளாட் வாங்குறவன் திருந்தறு வரை விவசாயி பிழைக்க முடியாது.