தன் மனைவி எந்த வேலையும் செய்வதில்லை என்கிற குறை ஒரு கணவனுக்கு இருந்தது. அவளை எப்படியாவது மாற்றவேண்டி ஒரு மனோதத்துவ நிபுணரிடம் சென்று ஆலோசனை கேட்டான்.
டாக்டர் : உங்கள் குடும்பம் எப்படி ஓடுகிறது நண்பரே…
கணவன் : நான் ஒரு வங்கியில் அக்கவுண்டண்டாக பணிபுரிகிறேன்.
டாக்டர் : உங்கள் மனைவி?
கணவன் : அவன் வேலைக்கு செல்லவில்லை. வீட்டில் தான் ஹவுஸ் வொய்ஃப்பாக இருக்கிறாள்.
டாக்டர் : உங்கள் குடும்பத்திற்கு காலை உணவை தயார் செய்வது யார்?
கணவன் : வேற யார்… என் மனைவி தான். அவ தான் வேலைக்கு போகலியே…
டாக்டர் : ஓ… அப்படியா…. காலைல டிபன் ரெடி பண்றதுக்கு எத்தனை மணிக்கு உங்க வீட்ல எழுந்திருக்கிறாங்க?
கணவன் : அவ காலைல 5 மணிக்கே எழுந்துடிச்சிடுவா. ஏன்னா.. சமைக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி வீட்டை கிளீன் பண்ணிட்டு குளிச்சிட்டு அதுக்கு பிறகு தான் சமைப்பா.
டாக்டர் : உங்க குழந்தைங்க எப்படி ஸ்கூலுக்கு போறாங்க?
கணவன் : என் மனைவி தான் அவங்களை கொண்டு போய் விடுவா. அவ தான் வேலைக்கு எங்கேயும் போகலியே.
டாக்டர் : குழந்தைகளை ஸ்கூல்ல விட்டுட்டு வந்ததும் என்ன பண்ணுவாங்க?
கணவன் : மார்கெட்டு போய் காய்கறி, மளிகை சாமான் இதெல்லாம் வாங்குவா. அப்புறம் வீட்டுக்கு வந்து துணி தோய்ப்பா… அயன் பண்ணுவா…. அவ தான் வேலைக்கு எங்கேயும் போகலியே.
டாக்டர் : சாயந்திர ஆபீஸ்ல இருந்து வீட்டு போனவுடனே நீங்க என்ன செய்வீங்க?
கணவன் : நான் ரெஸ்ட் எடுப்பேன். ஏன்னா பகல் முழுக்க வேலை பார்க்கிறேன்ல.
டாக்டர் : அப்போ உங்க மனைவி என்ன செய்வாங்க?
கணவன் : அவ டின்னர் தயார் பண்ணுவா. எனக்கு மருந்து தருவா. குழந்தைகளை சாப்பிட வைப்பா. பிறகு பார்த்திரமெல்லாம் தேச்சு வெப்பா. அப்புறம் வீட்டை கிளீன் பண்ணுவா.
டாக்டர் : உங்க மனைவிதான் உங்களை விட அதிகமா வேலை பார்க்குறமாதிரி தெரியுது. உங்களுக்காவது ரெஸ்ட் கிடைக்குது. அவங்களுக்கு அது கூட கிடைக்கிறதில்லையே….
கணவன் : சாரி சார். என் மனைவி வேலைக்கு போறதில்லேன்னு இனிமே சொல்லமாட்டேன்.
=================================================================
பல வீடுகளில் இது தான் நடக்கிறது. இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் சில வீடுகளில் வேலைக்கு போய்க்கொண்டே இந்த பணிகள் அனைத்தையும் செய்யும் பெண்களும் இருக்கிறார்கள். எவ்வளவு பெரிய விஷயம்! நமக்கு தெரிந்து நம் வாசகியரில் பலர் இப்படித் தான்!!
(சில வீடுகளில் மனைவிக்கு பதிலாக அவர்களை பெற்ற தாய், இந்த பணிகளை செய்யக்கூடும்.)
ஒரு மனைவியின் பணி விடியற்காலை துவங்கி இரவு வரை இடைவிடாமல் நடக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெரும்பாலான ஆண்கள் ‘மனைவி வேலை செய்யலே’ என்று குறைப்பட்டுக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு குடும்பத்தில் இல்லத்தரசியின் பங்கு எத்தனை முக்கியமானது தெரியுமா? குடும்பத்தின் சக்கரம் வேண்டுமானால் கணவனாக இருக்கலாம். ஆனால் மனைவி என்பவள் தான் அச்சாணி.
ஒரு பெண் இல்லத்தரசியாக இருக்க எந்தவித பட்டப் படிப்போ, தகுதியோ தேவையில்லை தான். ஆனால் ஒரு குடும்பத்தில் மிக மிக முக்கியமான பொறுப்பு அது தான். இந்த பொறுப்புக்கான தகுதி படிப்பு மூலம் வருவதல்ல. எல்லாவற்றையும் தாண்டிய ஒரு பொறுப்பு அது.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை? (குறள் 53)
பொருள் : நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.
உங்கள் மனைவியை பாராட்டுங்கள். அவர்கள் செய்யும் பணிகளுக்கு அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். ஏனெனில் அவள் செய்யும் தியாகம் எண்ணிப் பார்க்க இயலாதது. அவ்வப்போது சிறிய எளிய பரிசுகளை வழங்கி அவளை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் குழந்தைகள் முன்னிலையிலோ அல்லது பிறர் முன்னிலையிலோ அவளை கடிந்துகொள்ளாதீர்கள். அவள் ஒருவேளை தவறு செய்தால் தனிமையில் அதை எடுத்துக்கூறுங்கள்.
* மனைவியானவள்… அமைதியாக இருந்தால் அவள் மனதில் ஆயிரக்கணக்கான் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
* அவள்… உங்களை பார்த்தால் நம்மிடம் அன்போடு சில வார்த்தைகள் கூட பேசத் தெரியாத இவரை நாம் ஏன் இந்தளவு நேசிக்கிறோம் என்று அவள் சிந்திப்பதாக அர்த்தம்.
* ‘நான் உங்களுடன் இருக்கிறேன்’… என்று அவள் சொன்னால், அது ஏதோ ஒப்புக்கு சொல்வதல்ல. உண்மையில் எத்தனை அலையடித்தாலும் புயலடித்தாலும் கலங்காது நிற்கும் ஒரு பெரிய பாறை போல உங்களுடன் இருப்பாள்.
அவளை மிகச் சுலபமாக எடுத்துக்கொண்டு (taking for granted) ஒரு போதும் அவளை புண்படுத்தவேண்டாம்.
(“இதைப் படிக்கவே காமெடியா இருக்கு…. எங்க வீட்ல நான் தான் எல்லா வேலையும் பார்க்கிறேன்” என்று அங்கலாய்த்துக்கொள்ளும் அப்பாவி கணவர்களும் உண்டு. அதுக்கு என்ன சார் பண்றது. அதுக்கு பேர் தான் ‘விதி’!)
=================================================================
Also check :
“தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள்!”- ஒரு கணவனின் வாக்குமூலம்!
“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!
கணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்ப்பது என்ன என்ன?
பலத்த காவலை மீறி கோட்டையில் இருந்து தப்பிய பெண் – சத்ரபதி சிவாஜி செய்தது என்ன? MUST READ
சொத்துக்கள் அனைத்தையும் ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை – மகளிர் தின ஸ்பெஷல்!
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!
=================================================================
[END]
இந்த பதிவு ஆண்கள் அனைவரையும் சிந்திக்க வைக்கும் பதிவு. இந்த பதிவை நானும் படித்து இருக்கிறேன்.
இந்த காலத்திலும் பெண்களாகிய நாங்கள் வீட்டு வேலையையும் செய்து கொண்டு, வீட்டில் உள்ளவர்களை திருப்தி படுத்தி அலுவலகத்தில் உள்ள சுமைகளையும் கழுதை பொதி சுமப்பது போல் குடும்ப பாரத்தை தாங்க வேண்டி உள்ளது. வீட்டில் உள்ள ஆண்கள் அலுவலகத்தில் வந்து வீட்டிற்கு வந்தவுடன் ஈஸி சேரில் சாய்ந்து கொண்டு மனைவியை அதிகார தோரணையில் வேலை வாங்குவது இன்றளவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. காலையில் அரக்க பறக்க 4 மணிக்கு எழுந்து அலுவலகம் கிளம்பும் வரை வேலை செய்து இரவு 8 மணிக்கு மேல் வந்து திரும்பவும் வேலை செய்கிறார்கள் பெண்கள் அவரகளுக்கு mechanical லைப் ஆக உள்ளது வாழ்க்கை.
தங்களின் கற்பனை சக்தியில் இந்த பதிவை மெருகேற்றி இருக்கிறீர்கள்.
நன்றி
உமா வெங்கட்
சுந்தர்ஜி
உண்மையான விசயம். நாங்கள் சொல்லமுடிவதில்லை .தாங்கள் பெண்களுக்க பேசியதில் மிக்க சந்தோசம்
NANTRI
ஏப்ரல் முதல் தேதி என்று சுந்தர் சார் நம்மை வைத்து காமடி பண்ணுகிறார். நீங்களும் அதை நம்பி அவரை பாராட்டுறீங்க.
எங்கே போய் சொல்வது இந்த விளையாட்டை.
சரியான நீதிபதி நமக்கு இல்லை
அப்படியா அக்கா சொல்கிறீர்கள்? ஏப்ரல் முதல் தேதிக்காகத்தான் சுந்தர் சார் இந்த பதிவை அளித்தாரா? இருக்கட்டும் இருக்கட்டும்……..
எப்படியோ…..பெண்களின் மனதில் தோன்றும் எண்ணங்களை சரியாக சொல்லியுள்ளார்……. பிழைத்துக் கொள்வார்……..
திட்டமிட்டு கிளப்பப்டும் வதந்தியை நம்பாதீர்கள்!
சுந்தர் அண்ணா.
மிகவும் முக்கியமான பதிவு. அனைவரும் படிப்பதோடு மட்டும் இன்றி, நடைமுறையில் பின்பற்ற வேண்டிய தகவல்கள்.
மிக்க நன்றி அண்ணா..
உண்மையான விஷயத்தை உண்மையாக ஒருவர் சொன்னால் அதை புரிந்துகொள்ளவே யோசிப்பார். அப்படி இருக்கும் போது நம் மகளிர் வாசகர்கள் பெரும்பான்மையனவர்கள் நீங்கள் சொன்ன மாதிரி தான்.
ஆனால் அதை ஆண்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள்.
உங்களுக்கு தீடிரென்று என்னாச்சு எங்களை பற்றி பேச.
ஆனால் நீங்கள் சொன்ன மூன்று விசயங்களும் pengalin உண்மையான kunam.
ithai சொன்ன நீங்கள் எத்தனை ஆண்களிடம் கமெண்ட் வாங்க போகிறிர்களோ தெரியவில்லை.
ஏன் இந்த வேண்டாத விளையாட்டு.
ஏற்கனவே monday மோர்னிங் ஸ்பெஷல் 36இல் ஆண்கள் vs பெண்கள் என்ற தலைப்பில் பெண்களிடம் கமெண்ட் வாங்கிக் கொண்டார் நம் ஆசிரியர் . இப்பொழுது நம்மை பற்றி உண்மையான தகவல் சொல்லி இருக்கிறார். அதற்காக நாம் பெருமை அடைவோம். வாழ பெண் இனம்
நன்றி
உமா வெங்கட்
ஆசிரியரின் கருத்துக்கள் மற்றும் அவருடைய நேர்மறையான கண்ணோட்டம் வரவேற்க்கதக்கவை.
ம்னைவிமார்களின் அருமை அறிந்ததால்தான், அவர்கள் “இல்லத்தரசி” என்றும் “ஹோம்மேக்கர்” என்றும்
கௌரவிக்கப்படுகிராரகள்.
இல்லத்தரசி, homemaker என்ற கௌரவமும் பட்டமும் நாங்கள் கேட்கவில்லை சம்பத் சார்.
உண்மையா உங்க மனதை தொட்டு சொல்லுங்க உங்கள் கண் எதிரில் எங்கள் நிலை என்னவென்று.
இனி நான் எல்லோருக்கும் reply போட ஆரம்பித்தால் ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.
அதனால் இத்துடன் முற்றுபுள்ளி வைக்கிறேன்.
பரிமளம் , பெண்களின் சார்பாக தாங்கள் எழுதிய ஒவ்வொரு பின்னூட்டமும் மகிழ்ச்சி அளிக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை இதே போல் ஒரு பதிவு வரும் நம் ஆஅசிரியரிடமிருந்து ஒரு refreshmentற்காக.
இத்துடன் இந்த பதிவின் பின்னூட்டத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி
நன்றி
உமா வெங்கட்
சுந்தர்
அவர்களுக்கு வணக்கம்.
தங்களுடைய கருத்தினை வரவேற்கிறேன், ஏனெனில் பெண்கள் சமூகத்தின் கண்கள் மட்டுமல்ல நம்மில் சரிபாதி. அவர்களுக்கு உரிய மதிப்பையும் மரியாதையும் அளித்து வாழ வேண்டும்.
அன்புடையீர் வணக்கம் !
அன்றாடம் போகிறபோக்கில் எண்ணிலடங்காமுறை உபயோகிக்கும் ஒவ்வொரு முறையும் அவள் இதயத்தில் ஊசி இறங்கும்.அவளின்றி ஒர் அணுஉம் அசையாது.பின் தூங்கி முன்எழுந்தும் வேலை முடிந்தபாடில்லை.வெளியே சந்திக்கும் பிரச்சநைக்கு வடிகாலும் அவள்தான்.ஒருநாள் நாம் சமைத்தால் சமயலரை போர்க்களம்தான்.காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு போல் நாமே சாப்பிட வேண்டியதுதன்.பார்த்து பார்த்து சமைத்தாலும் ஏதேனும் ஓர் குறை காண்பது வழக்கம்.இவ்வளவு குறை சொன்னலும் சிறு முகசுழிப்பு அவள் காண்பிப்பதில்லை.பொருமையின் சிகரம்.ஒரு நாள் மனைவியாக வாழ்ந்தால்த்தான் மனைவியின் பங்களிப்பு தெரியும்.ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடே பெண்ணடிமைத்தனம்.வலியது மெலியதை அடக்குவது இயல்பு.மெலியது வீருகொண்டெழும்போது தாங்காது.பெண் பத்து மாதம் சுமக்கிராள் ஆண் ஆயுசுக்கும் சுமக்கிரான் யென்பார்கள்.ஆனால் அவளுக்கு அது மறு பிறப்பு.அவள் சும்மா இருந்தால் இவை எப்படி நடக்கும்? அவள் வேலைக்குச் சென்றாலும் வீட்டு வேலை செய்வதுயார்? பால் பக்கெட்டு,செய்தித்தாள் இவ்விரண்டையும் குழந்தையிடம் கொடுங்கள். அது அம்மாவிடம் பாலையும்,அப்பாவிடம் பேப்பரையும் கொடுக்கும்.இது யெப்போது மாறும்.
மிக அழகாக வார்த்தைகளை கோர்த்து பெண்களுக்கு பெருமை கொடுத்தீங்க.
ஒரு நாள் மனைவியாக வாழ்ந்தால் தான் மனைவியின் பங்களிப்பு தெரியும் – அற்புதமான வார்த்தைகள்.
உங்களை போல எல்லோரும் இருந்தால் எங்களுக்கு ஒரு சின்ன முகசுளிப்பு கூட வராது. உலகமே மாறும்.
நிறைய நல்லதோர் வீணைகள் புழுதி படாமல் உங்களை மாதிரி மனிதர்களால் காக்கப்படும்.
எந்த வீட்டில் பெண் கண்ணில் கண்ணிர் வருகின்றதோ அந்த வீடு நிம்மதி அடையாது.
தாய் மீது பக்தி கொள்ளும் ஒருவன் அவன் மனைவி தனக்கு வேலைக்காரி என்று நின்னைகிறான். இல்லை என்றால் மனைவி மிது ஆசை கொண்டு அம்மா மிது அலட்சியம் கொள்கிறான்.
பாரத பூமி பெண்கள் மிது மிகுந்த பக்தி கொண்ட நாடு. ராமர் அம்மா மற்றும் மனைவி மீது கொண்ட அன்பு நாம் அறிந்த ஒன்று.
பகவான் வழி காட்டி உள்ளான். நாம் அதை பின் பற்றுவொம்
நாம் பெண்களை மதிக்க கற்று கொள்வோம்.
நன்று.
பெண்கள் நாட்டுக்கு மட்டும் அல்ல வீட்டுக்கும் கண்கள்.
நன்றி.
கே. சிவசுப்ரமணியன்
Excellent article i could read it only today. U habe a respectful publishing to the great women. Hatts to all responsible women. Hatts off to sundar