Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > காதல் என்றால் என்ன? திருமணம் என்றால் என்ன?

காதல் என்றால் என்ன? திருமணம் என்றால் என்ன?

print
காதல் பற்றியும் திருமணம் பற்றியும் மெய்யான புரிதல்கள் இல்லாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம். ‘சரியான’ வாழ்க்கைத் துணையை அல்லது காதல் துணையை தேர்ந்தெடுப்பது என்பது அத்தனை எளிதல்ல.

காதல் என்றால் என்ன திருமணம் என்றால் என்ன என்பதை அற்புதமாக விளக்கும் ஒரு ஜென் கதை உண்டு. சென்ற மாதம் நமது பேஸ்புக்கில் இது பகிரப்பட்டது தான். இருப்பினும் பலர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதால் சற்று மெருகேற்றி பதிவாக தருகிறோம்.

காதலுக்கும் திருமணத்திற்கும் இதைவிட அற்புதமான விளக்கத்தை எவரும் தர முடியாது!

காதல் Vs திருமணம்

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதல் என்றால் என்ன? திருமணம் என்றால் என்ன? என கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, “அது இருக்கட்டும். முதலில் நீ அருகே உள்ள ரோஜா தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.” என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, “எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? ” என்று கேட்டார்.

சீடன் சொன்னான், “குருவே, தோட்டத்தில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.”

புன்முறுவலோடு ஞானி சொன்னார், “இது தான் காதல்!”.

பின்னர் ஞானி, “சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.”

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், “இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? ”

சீடன் சொன்னான், “இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை”.

இப்போது ஞானி சொன்னார், “இது தான் திருமணம்!”

என்ன நண்பர்களே…. கதையை படித்தவுடன் நீங்கள் தவறவிட்ட ரோஜாச் செடிகளும் ஆசையாய் பறித்த சூரியகாந்திகளும் நினைவுக்கு வருகிறதா?

இந்த கதை தானுங்க எல்லார் வாழ்க்கையிலும் நடக்குது! சரிதானுங்களே…?

 

8 thoughts on “காதல் என்றால் என்ன? திருமணம் என்றால் என்ன?

  1. காதலுக்கும் திருமணத்திற்கும் அருமையான விளக்கங்கள் .

    -மனோகர் .

  2. சுந்தர்ஜி,

    காதல் என்பது மாயை
    கல்யாணம் என்பது பந்தம். தாங்கள் கூறியள்ள விதம் அழகாக உள்ளது.

  3. அருமையான பதிவு !!!

    இன்றைய இளைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியமான பதிவு !!!

    ஆசைக்கும்
    எதிர்ப்பார்ப்புக்கும்
    என்றைக்குமே எல்லை இல்லை !!!

    வாழ்க்கையில் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் ஒன்றைக்காட்டிலும் மற்றொன்று விஞ்சி நிற்கும் – மனம் என்னும் குரங்கை கட்டுப்படுத்தாவிட்டால் காலம் முழுவதும் வேதனை மட்டுமே நமக்கு சொத்தாக இருக்கும் !!!

    வாழ்க வளமுடன் !!!

  4. காதலுக்கும்.திருமணத்திற்கும் இரண்டு வரி அருமையான விளக்கம்

  5. Comment:இது உன்மை அருமை நல்ல இருக்கு கதை விஜய் குரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *