Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, December 8, 2024
Please specify the group
Home > Featured > இல்லறமும் நல்லறமும் கூடவே சொந்த வீட்டையும் அருளும் சிறுவாபுரி பாலசுப்ரமணியர் !

இல்லறமும் நல்லறமும் கூடவே சொந்த வீட்டையும் அருளும் சிறுவாபுரி பாலசுப்ரமணியர் !

print
சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது வடபழனி அருகே சென்று கொண்டிருக்கும்போது ஒரு அலைபேசி வந்தது. பேசியவர் தன் பெயர் மணிவண்ணன் என்றும் தினமலரில் உதவி ஆசிரியராக பணிபுரிவதாகவும் சொன்னார்.  நீண்டநாட்களாக நமது தளத்தை பார்த்துவருவதாக கூறி நமது பணிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். (இவர் நமது தளத்தில் ஒரு சில முறை பின்னூட்டங்களை இட்டிருக்கிறார்).

ஒரு ஐந்து நிமிடம் பேசலாமா என்று கேட்டுவிட்டு தான் நம்மிடம் பேசினார். “சிறுவாபுரி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா சுந்தர் சார்?” என்று கேட்டார்.

“சிறுவாபுரி தெரியும். ஆனால் இதுவரை சென்றதில்லை. செல்லவேண்டும் என்கிற ஆவல் உண்டு. அதற்கான நேரம் இன்னும் வரவில்லை” என்றோம்.

அப்போது ஒரு தகவலை சொன்னார் திரு.மணிவண்ணன். தாமும் தமது நண்பர்கள் சிலரும் தாம் ‘அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு’ என்கிற குழுவை நடத்தி வருவதாகவும், அக்குழுவின் சார்பில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு சிறுவாபுரி முருகனுக்கு அபிஷேகங்கள் செய்துவருவதாகவும், இது தவிர ஒவ்வொரு ஆண்டும் முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தி வருவதாகவும், தங்கள் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற திருமணமாகாகாத பலருக்கு திருமணம் நடைபெற்றிருப்பதாகவும் கூறினார்.

இந்த ஆண்டு திருக்கல்யாண உற்சவம் செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெறவிருப்பதாகவும் நாம் அவசியம் கலந்துகொண்டு நமது பெயரை பதிவு செய்யவேண்டும் என்றும், இது முற்றிலும் இலவசமான ஒரு சேவை என்றும் கூறினார்.

“அவசியம் கலந்துகொள்கிறேன் சார்” என்றோம்.

தொடர்ந்து பேசும்போது… “வரும் ஞாயிறு நீங்கள் ஃப்ரீயா?” என்று கேட்டார்.

“என்ன விஷயம் சொல்லுங்கள் சார்”

“பிரதிமாதம் இரண்டாம் ஞாயிறு எங்கள் ‘அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு’ சார்பாக நடைபெறும் அபிஷேகம் நாளை மறுநாள் நடக்கவிருக்கிறது. முடிந்தால் நீங்கள் அவசியம் கலந்துகொள்ளவேண்டும். வேனில் தான் போகிறோம். நேராக கோயம்பேடு வந்துவிட்டால் அங்கு உங்களை பிக்கப் செய்துகொள்கிறோம்.” என்றார்.

அடடா… என்னே முருகன் அருள் என்று  வியந்தோம். காரணம், இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு வாசகரிடம் பேசும்போது சிறுவாபுரி பற்றிய பேச்சு எழுந்தது. நாமும் அங்கு சென்றதில்லை விரைவில் செல்லவேண்டும். ஏனெனில், வீடுபேற்றை அருளும் தலம் அது. அந்த வீடுபேறு தவிர, இந்த வீடு பேற்றையும் அருள்வதால், முருகனை தரிசித்துவிட்டு அப்படியே நமது தளத்தின் ஆலய தரிசன பதிவுக்காகவும் கவரேஜ் செய்யவேண்டும் என்று விரும்பினோம்.

இதற்கிடையே பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல இப்படியொரு வாய்ப்பா என்று வியந்தோம்.

இந்த பிறவியின் இலட்சியங்களாக நாம் பல உன்னத விஷயங்களை நினைத்துக்கொண்டிருந்தாலும், முருகனின் திருப்புகழ் தலங்களை தரிசிப்பதையும் அவன் அடியார்களின் பெருமையை உலகறியச் செய்வதையுமே பிரதான லட்சியமாக கொண்டிருக்கிறோம். எனவே தேடி வரும் இந்த வாய்ப்பை விடுவானேன்…!

இதற்கிடையே அலுவலகம் வந்து நம்மை ஒரு நாள் சந்திப்பதாக கூறினார். தாராளமாக வாருங்கள் என்றோம்.

Siruvapuri Prasadham
திரு.மணிவண்ணன் நம் அலுவலகத்திற்கு வந்து அளித்த பொக்கிஷங்கள்!

சொன்னதைப் போலவே ஒரு நாள் நண்பகல் அலுவலகம் வந்தார். அப்போது தான் அவரை முதன் முதலில் நேரடியாக சந்திக்கிறோம்.

பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு, தளத்தை பற்றியும் நமது பணிகள் பற்றியும் சிலாகித்துச் சொன்னார்.

“எல்லாம் இறைவன் அருள்” என்றோம்.

தங்கள் ‘அண்ணாமலையார் அறப்பணிக் குழு’ உருவான கதை பற்றி குறிப்பிட்டு திருக்கல்யாண உற்சவத்தை தங்கள் குழு ஏற்று நடத்தியதிலிருந்து நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை பற்றி குறிப்பிட்டார்.

நெகிழ்ச்சியாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது.

இந்த ஆண்டு திருக்கல்யாண உற்சவத்தில் நாம் அவசியம் நம் நண்பர்கள் மற்றும் வாசகர்களுடன் கலந்துகொள்ளவேண்டும் என்றும் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று  அடுத்த ஆண்டுக்குள் நிச்சயம் திருமணம் நடைபெற்றுவிடும் என்றும் கூறினார்.

மேலும் தங்கள் அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு சார்பாக சிறுவாபுரி முருகன் பிரசாதம் மற்றும் தல வரலாறு உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை நமக்கு பரிசளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் இவரது குழுவினர் தைப்பூசத்தின் போதும் திருக்கல்யாண உற்சவதின்போதும் சிறப்பு மலர்களை வெளியிடுகிறார்கள். பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள், ஸ்லோகங்கள், மற்றும் படங்களுடன் சிறப்பு மலர் பெயரைப்போலவே சிறப்பாக இருக்கிறது.

வரும் ஞாயிறு தங்கள் குழுவினருடன் அவசியம் சிறுவாபுரி வந்து முருகனுக்கு நடைபெறு சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்க்கவேண்டும் என்றும் இந்த ஆண்டு சிறப்பு மலருக்கு நமது தளத்தின் படைப்புக்களை அளித்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இவர்களின் அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழுவினர் வணிகநோக்கமின்றி பக்தியையும் சேவையையுமே பிரதானமாக வைத்து செயல்படுகின்றனர்.

அடுத்து சிறுவாபுரி பயணம் பற்றி

இந்த மாதத்தின் இரண்டாம் ஞாயிறு அதிகாலை காலை தயாராகி 6.30 மணிக்கெல்லாம் கோயம்பேட்டில் ஆஜர். அந்த காலை வேளையிலும் கோயம்பேடு பரபரப்பாக இருந்தது.

சற்று நேரத்திற்க்கெல்லாம் வேன் சிறுவாபுரி நோக்கி சீறத் தொடங்கியது. வேனில் அவரது குழுவை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் இருந்தனர்.

Siruvapuri Trip 1

Siruvapuri Trip 3Siruvapuri Trip 2சென்னைக்கு வடமேற்கே சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் மேற்கே பிரியும் 33வது கிலோ மீட்டரில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் தோரண வாயில் அமைந்துள்ளது. இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் சின்னம்பேடு என்று தற்போது அழைக்கும் இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

செங்குன்றத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் தச்சூர் கூட்டு சாலை சந்திப்பு உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ தொலைவு சென்றால் ஆலயத்திற்குச் செல்லும் வழியை அடையலாம். செங்குன்றத்திலிருந்து செல்ல வாகன வசதிகள் உண்டு.

Siruvapuri Temple

நுழைவு வாயிலைக் கடந்து ஆலயத்தை நோக்கிச் செல்லும்போது இரண்டு பக்கமும் பசுமையான நிலங்களும் வாழைத் தோப்புகளும் காணும்போது கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். செல்லும் வழியில் சப்தமாதா ஆலயம், அகத்தீஸ்வரர் ஆலயம், பெருமாள் ஆலயம், விஷ்ணு துர்க்கை ஆலயம் என எண்ணற்ற ஆலயங்கள் இருக்கும் இடத்தில் வடக்கு வாயு மூலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார்.

Siruvapuri Temple 2

கோவிலைச் சென்றடைந்தபிறகு, குழுவினர் அபிஷேகத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யத்  துவங்கினர். பழங்கள் நறுக்கப்பட்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டது. இதர ஏற்பாடுகளை செய்தபிறகு, நாங்கள் அனைவரும் முருகனின் முன்னேர் அமர, முருகனுக்கு அபிஷேகம் துவங்கியது.

Siruvapuri Temple 3

கந்தசஷ்டி கவசம், முருகன் பக்தி பாடல்கள் உள்ளிட்டவற்றை குழுவினர் பாடப் பாட முருகனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக சங்கல்பம் செய்யும்போது, தாளில் நம் பெயர் மற்றும் வாசகர்களின் குடும்பத்தினர் சிலரது பெயர்களை தாளில் எழுதித் தந்தோம்.

சிறுவாபுரி முருகன் அபிஷேகத்தின் போது பார்க்க, அவர் மாமன் பெருமாளைப் போல இருக்கிறார். ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடி எதிரே சிறுவாபுரி முருகனை காண்பித்தால் ஏதோ பெருமாள் கோவிலின் கருவறைக்கு முன்னே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்றே தோன்றும். திருமலையில் ஸ்ரீனிவாசன் எப்படி நிற்கிறாரோ அதே போல இவரும் நிற்கிறார்.

இத்தனை அருகே முருகனின் அபிஷேகத்தையும் அலங்காரத்தையும் காணும் வாய்ப்பு நமக்கு  கிடைக்கும் என்று கனவிலும் கருதவில்லை.

முருகனுக்கு அபிஷேகம் நடக்கும் நேரத்தில் நாம் ஆலயத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வந்துவிடலாமா? வாருங்கள் நம்மோடு.

Siruvapuri Temple 4

தல வரலாறு

முருகப் பெருமான் வள்ளியைத் திருமணம் செய்யச் செல்லும் வழியில் சிறுவாபுரியில் இளைப்பாறிவிட்டுச் சென்றார் என்றும் இந்த ஆலயத்தில் தங்கி அமுது உண்ட இந்திரன் மற்ற தேவர்களுக்கு வீடுபேறு கிடைக்க வேலவன் அருள் புரிந்தார் என்றும் தல வரலாறு கூறுகிறது.

திரேதா யுகத்தில் இராமர் அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்டார். அப்போது யாகப் பசுவாக அனுப்ப வேண்டிய குதிரையை ஏவிவிட்டார். அந்தக் குதிரை வால்மீகி முனிவர் ஆசிரமத்திற்கு வர, அங்கு வளர்ந்த இராமரின் பிள்ளைகள் லவனும் குசனும் அந்தக் குதிரையைக் கட்டிப் போட்டனர்.

இதனை அறிந்த இராமர் உடனே லட்சுமணனை அழைத்து குதிரையை மீட்டு வரச் சொன்னார். அது முடியாமல் போகவே, இராமரே நேரில் சென்று சிறுவர்களிடம் போரிட்டு அவர்களை வென்று குதிரையை மீட்டுச் சென்றார். இராமரிடம் லவனும் குசனும் போர் செய்த இடமே சிறுவாபுரி. இது இராமாயணச் செய்தியாகும்.

Siruvapuri Temple 17

அருணகிரிநாதர், முருகம்மையார்

அருணகிரி நாதர் நான்கு திருப்புகழ்ப் பாடல்களால் இந்த அழகு முருகனைப்பற்றிப் பாடியுள்ளார் என்றால் இந்த ஆலயம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது என்பதை அறியலாம்.

முருகம்மையார் என்ற முருக பக்தர் சிறுவாபுரியில் வாழ்ந்து வந்தார். இந்த அம்மையார் எப்போதும் முருகன் நாமத்தையே உச்சரித்து வந்தார்.

இதனைப் பொறுக்காத இவரின் கணவர் தன் மனைவி முருகம்மையாரின் கரங்களை வெட்டினார். உடனே முருகா என்று அம்மையார் முருகனை நினைத்து அழுதார். விரைவில் முருகன் அம்மையாருக்கு தரிசனம் தந்து வெட்டிய கரத்தை மீண்டும் பழையபடியே சேர்த்து வைத்தார். இந்த அற்புதம் இந்தத் தலத்தில்தான் நடந்தது. இதனை தவத்திரு முருகதாச சுவாமிகள் பாடல் மூலமாக எழுதியுள்ளார். (முருகம்மையாரின் சரிதம் நம் தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளது! முருகா என்றதும் உருகாதா மனம்… Rightmantra Prayer Club)

இராஜகோபுரம்

இந்த ஆலய இராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடன் கம்பீரமாக வருக வருக என்று கூறி பக்தர்களை அழைக்கிறது. உயரமான கொடி மரத்திற்கு முன்னால் மரகதப் பச்சை மயில் வீற்றிருக்கிறது. இதைப் போன்ற பச்சைமயில் அமைப்பு வேறெங்கும் காண முடியாது.

Siruvapuri Temple 6

இந்த ஆலயத்திலிருந்து வெளியில் வரும் வழியிலிருந்து மரத்தால் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. அந்தப் படிக்கட்டுகள் வழியாக ஏறித்தான் மூலவரை தரிசிக்க முடியும். தரிசிக்கும் வழியில் தெற்கு மூலையில் மரகதக் கல்லில் சூரியன் சந்நிதியும் கிழக்கே இராஜகணபதி மரகதக் கல்லில் காட்சி அளிக்கும் சந்நிதியும் உள்ளன.

அடுத்து அண்ணாமலையார். மரகதப் பச்சையில் சந்நிதி கொண்டுள்ளார். அடுத்து முருகன் வள்ளியுடன் திருமணக் கோலத்துடன் காட்சி தருகிறார். நீண்ட காலம் திருமணம் நடக்காதவர்கள் இந்தச் சந்நிதியில் வந்து பூஜைகளும் வழிபாடுகளும் பரிகாரங்களும் செய்தால் விரைவில் திருமணம் கைகூடி வரும். அடுத்து உண்ணாமுலை அம்மன் சந்நிதியில் அனைவரும் பிரார்த்தனை செய்யலாம்.

அடுத்து ஆலயத்தைச் சுற்றி வரும் வழியில் ஸ்ரீ மரகத விநாயகர் சந்நிதியும், அருகில் மகிழம்பூ மரமும் உள்ளன. ஆதிமூலவர் பாலசுப்பிரமணியர் சந்நிதியில் அர்ச்சனை செய்யப்படுகிறது.

Siruvapuri Temple 7

Siruvapuri Temple 8

Siruvapuri Temple 9

Siruvapuri Temple 10வீடு பேறு !

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இது ஒரு பரிகாரத் தலமாகும். இந்த ஆலயத்தை தரிசித்தால் வீடு கட்டும் யோகம் கிடைக்கும் என்றாலும் ஆதிமூலவர் பின்புறத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு செங்கற்களை அடுக்கி வைத்தால் விரைவில் சொந்த வீடுகட்டும் யோகம் உண்டாகும் என்பது இங்கு வரும் பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் ஆலயத்தை தரிசித்தாலே போதும். செங்கற்களை அடுக்குகிறேன் பேர்வழி என்று ஆலயத்தை நாம் அசுத்தம் செய்வதோ பக்தர்களுக்கு இடைஞ்சல் செய்வதோ கூடாது.

ஆதிமூலவரின் பின்னே…. கோவில் தரையை இப்படி செய்வது எந்தவகையில் நியாயம்? இப்படி கல்லை அடுக்குவது மூடநம்பிக்கை!

காரணம், இந்த முருகர் மிக மிக எளிமையானவர். எதிர்பார்ப்பு அற்றவர். இத்தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

முனீஸ்வரர் சந்நிதியும் அபிஷேக மண்டபமும் உள்ளது. பைரவர், சண்டிகேஸ்வரர், ஸ்ரீவெங்கட்ராயர் ஆகியோர்க்கும் தனிச்சந்நிதிகளும் ஈசான்ய மூலையில் நவகிரகங்களும் அமைந்துள்ளன. ஆலயத்தின் பின்புறம் அன்னதானக்கூடமும் திருக்குளமும் உள்ளன.

Siruvapuri Temple 11

மீண்டும் அபிஷேகதிற்கு திரும்புவோம்.

இங்கே அபிஷேகத்தில் அனைவரும் அவரவருக்கு பிடித்தமான பாடலை பாட… நாம் சரவணப் பொய்கையில் நீராடி பாடலை பாடினோம்.

சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் அவனிடம் சொன்னேன் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை

அந்நேரம் சரியாக அலங்காரம் முடிந்து திரை விலக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Valli manavalan 2

Siruvapuri Temple 12

Siruvapuri Temple 14Siruvapuri Temple 15

அரோகரா… சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா… வடிவேல் முருகனுக்கு அரோகரா… தண்டாயுத பாணிக்கு அரோகரா… பஞ்சாமிர்த பிரியனுக்கு அரோகரா போன்ற கோஷங்கள் தான்.

குழுவினர் அனைவருக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. நமக்கும் ஒரு மாலை சூட்டப்பட்டது.

அடுத்து கல்யாண சுந்தரேஸ்வரர் (உற்சவர் திருக்கல்யாண கோல வள்ளி மணவாளன்) தரிசனம்.

இங்கு நம் பெயருக்கு அர்ச்சனை செய்யுமாறு மணிவண்ணன்  கேட்டுக்கொண்டார். அர்ச்சகரிடம் சங்கல்பம் செய்துகொண்டபோது, அர்ச்சகரிடம் நம்மை பற்றியும் நமது கோரிக்கையை பற்றிய விபரங்களையும்  கூறினார். 

அர்ச்சனை முடிந்ததும் முருகனின் திருமேனியை அலங்கரித்த மாலை ஒன்று நமக்கு சூட்டப்பட்டது.

“மாலையோட கோவிலை ஆறு சுத்து சுத்தி வாங்க. கடைசியில கொடி மரம் பக்கத்துல நமஸ்காரம் பண்ணுங்க” என்றார் அர்ச்சகர்.

அடுத்து அண்ணாமலையார் சன்னதி, அம்பாள் சன்னதி, ஆதி மூலவர் சன்னதி என்று அனைத்து சந்நதிகளையும் தரிசித்தோம்.

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

குழுவை சேர்ந்த ஒரு பெரியவர், ஆதிமூலவர் அருகே பாடல்களை பாடினார். நல்ல குரல் வளம் அவருக்கு. அவரிடம் ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ பாடலை பாடுமாறு கேட்டுக்கொண்டோம். மிக மிக அருமையான ஸ்வரத்தோடு அந்த பாடலை பாடி பரவசப்படுத்தினார்.

Siruvapuri Temple 5
நாம் திருவருட்பிரசாதம் பெற்றுக்கொண்டபோது… (இடது ஓரம் திரு.மணிவண்ணன்)

கோவிலை ஆறு பிரதட்சிணம் வந்தோம். கோவில் துப்புரவு பணியாளர்களை ஊக்குவிக்க தவறவில்லை. (நீங்களும் இதை செய்யவேண்டும் என்பதற்காக சொல்கிறோம்!).

Siruvapuri Murugan Prasadham

பிரதட்சிணம் முடிந்ததும் அபிஷேகப் பிரசாதம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ‘அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு’ குழுவினர் ஏற்பாடு செய்த மதிய உணவு அங்கேயே ஒரு தட்டில் தந்தார்கள்.

மறக்க முடியாத ஒரு தரிசனமாக அமைந்தது சிறுவாபுரி முருகனின் தரிசனப் பயணம்.

நாம் தனிப்பட்ட முறையில் முயற்சி எடுத்து சென்றிருந்தால் கூட இத்தனை சிறப்பாக இத்தனை அருகில் இவ்வளவு நேரம் செலவிட்டு அதுவும் முருகனின் மாலைகள் இரண்டை பெற்று கொள்ளும் பாக்கியம் கிட்டியிருக்குமா என்று தெரியாது.

துதிக்காதவர்களைக் கூட தடுத்தாட்கொள்பவன் தண்டபாணி. துதிப்பவர்களை விட்டுவிடுவானா?

செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திரு முகமும்
பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதும மலர்க்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே

‘அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு’வினர்’ மேற்படி அபிஷேகம் + சிறப்பு வழிப்பாட்டை மிக சிறப்பாக திரு.மணிவண்ணன் அவர்கள் மூலம் பணிகளை ஒருங்கிணைத்து செய்து முடித்தனர்.

இதுபோன்று அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு பயணத்தை ஏற்பாடு செய்து, கூடவே அபிஷேகத்தையும் சிறப்பு தரிசனத்தையும் முடிப்பது என்பது சாதாரண விஷயம்  அல்ல. கடந்த பல ஆண்டுகளாக இதை செய்துவருகின்றனர் இக்குழுவினர். பணிகளில் அனைத்து இடங்களிலும் ஒரு வித நேர்த்தி இருப்பதை பார்த்து வியந்தோம்.

‘அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு’ மேலும் மேலும் பல அறப்பணிகளை செய்து வையம் சிறக்க பணியாற்ற வேண்டும் என்று இந்த தருணத்தில் எல்லாம் வல்ல வள்ளி மணவாளனிடம் வேண்டிக்கொள்கிறோம்.

எப்படி செல்வது ?

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து (30கி.மீ) கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை பஸ்களில் சிறுவாபுரி புதுரோடு ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து மேற்கே 3 கி.மீ தூரம் சென்றால் சிறுவாபுரியை அடையலாம்.

Siruvapuri bus

 

செங்குன்றத்திலிருந்து (ரெட்ஹில்ஸ்) சிறுவாபுரிக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. ரெட்ஹில்ஸ் – பெரியபாளையம் பேருந்து (ரூட் எண் 547), சிறுவாபுரி வழியாகத் தான் செல்கிறது.

முகவரி : அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சிறுவாபுரி- 601206 சென்னை திருவள்ளூர் மாவட்டம்.

வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம்.

=============================================================

Valli manavalan

சிறுவாபுரி வள்ளி மணவாள பெருமானுக்கு கல்யாண மஹோத்ஸவம்!

வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள மேற்படி திருக்கல்யாண உற்சவத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் கவனத்திற்கு…

இந்த பிரார்த்தனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கட்டணம் கிடையாது. இதை அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழுவினர் இலவசமாக நடத்துகிறார்கள்.

இந்த ஆண்டு செப்டம்பர் 6–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கல்யாண மகோற்சவ விழா நடக்கிறது. கடந்த முறை கல்யாண மகோற்சவத்தில் பங்கேற்று திருமணம் கைகூடியவர்கள் தம்பதியராக செப்டம்பர் 5–ந்தேதி மாலை 6 மணிக்கு கோவிலுக்கு வரவேண்டும்.

வள்ளி முருகனுக்கு வைக்கப்படும் சீர்வரிசையை கோவிலை சுற்றி தம்பதிகள் எடுத்து வந்து நன்றி செலுத்த வேண்டும். மகோற்சவத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் செப்டம்பர் 6–ந் தேதி காலையில் சிறுவாபுரிக்கு வரவேண்டும். இதற்கு முன்பதிவு ஏதும் தேவையில்லை.

நாம் நமது நண்பர்கள் சிலருடன் மேற்படி திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்க உள்ளோம். நம்முடன் இணைய விருப்பம் உள்ளவர்கள் நம்மை 9840169215 தொடர்புகொள்ளவும்.

நேரடியாக வர விரும்புகிறவர்கள் மேலும் விபரங்களுக்கு 99443 09719 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது இந்த தளத்தை பார்க்கவும் http://www.annamalaiyar.net/

திருக்கல்யாண உற்சவத்தை பற்றிய விரிவான பதிவு நாளை அளிக்கப்படும்!

=============================================================

நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 8

தரிசித்தாலே போதும்….

பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி வருவது நிதர்சன உண்மையாகும்.

Siruvapuri marble

இந்த முருகனை தரிசித்தாலே போதும், சொந்த வீட்டில் குடியேறும் வாய்ப்பும், வாஸ்து தோஷங்கள் கிரகத்தில் இருந்தால் அதை களையும் வாய்ப்பும் கிடைக்கும். இத்தனையும் இந்த முருகனை தரிசித்தாலே போதும்.

டிப்ஸ் தொடரும்…

=============================================================

Also check :

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!

சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

“முதுகுல குத்திட்டாங்க சாமி…!” அழுத மெய்யன்பர். வாரியார் சொன்னது என்ன?

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”

=============================================================

Also check  Sandow Chinnappa Devar’s encounter with Lord Muruga…

மொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி!

“முருகா! முட்டாளே, மவனே, உன்னைச் சும்மா விடமாட்டேன்!!”

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

=============================================================

[END]

14 thoughts on “இல்லறமும் நல்லறமும் கூடவே சொந்த வீட்டையும் அருளும் சிறுவாபுரி பாலசுப்ரமணியர் !

  1. முருகனுக்கு உகந்த நாளான இன்று பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணியர் ஸ்தலத்தை பற்றி தங்களுக்கே உரித்தான சிறந்த உரைநடையில் படிக்க நேர்ந்தது எங்கள் பாக்கியம் என்றே சொல்லவேண்டும்.

    Handholding என்று சொல்வார்களே ஆங்கிலத்தில், அந்த உணர்வு ஏற்பட்டது இக்கட்டுரையை வாசிக்கும்போது.

    நன்றி

  2. சிறுவாபுரி முருகனைப் பற்றி தங்கள் தளம் மூலம் படித்த(தரிசித்த)தில் மிக்க மகிழ்ச்சி. அதுவும் வாரியாரின் பிறந்த நாளில் முருகனின் பதிவைப் படித்து மெய் சிலிர்த்தது. தங்கள் எழுத்து நடையில் பதிவு ஜொலிக்கிறது … அற்புதம் …………….

    திரு மணிவண்ணன் அவர்களால் நமக்கு ஒரு அழகிய பசுமை கொஞ்சும் பதிவு கிடைத்தது. அவருக்கு எமது வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    அனைத்து படங்களும் அருமை.

    கீழ்க்கண்ட சிறுவாபுரி முருகனைப் பற்றிய திருப் புகழ் பாடலை பாடினால் கண்டிப்பாக சொந்த வீடு அமையும்.

    //அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
    அண்டர் மன மகிழ் மீற அருளாலே
    அந்தரி யொடு உடனாடு சங்கரனும் மகிழ் கூர
    ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
    மண்டலமும் முனிவோரும் என் திசையில் உள பேரும்
    மஞ்சினும் அயனாரும் எதிர்காண
    மங்கையுடன் அரிதானும் இன்பமுடன் மகிழ்கூற
    மைந்து மயிலுடனாடி வரவேணும்
    புண்டரிக விழியாளா உயர் தோளா
    பொங்குடலுடன் நாகம் விண்டு வரை இகல் சாடு
    பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
    தந் தரண மணி மார்ப ! செம் பொன் எழில் செரிரூப !
    தண்தமிழின் மிகு நேய முருகேசா
    சந்தததுமும் அடியார்கள் சிந்தையது குடியான
    தண் சிறுவை தனில் மேவு பெருமாளே //

    வாழ்க ,,,, வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  3. மிகத் தெளிவான வர்ணனை. தெள்ளிய நீரோட்டம் போன்ற படிப்போர் மனதை சாந்தமாக அழைத்துச் செல்லும் தங்கள் திறனுக்கு என் வணக்கம். சம்பத்

  4. நமது தளத்தின் படைப்பு முருகன் அருளால் ”அண்ணாமலையார் அறப் பணி குழு ஆண்டு மலரில் பதிவாக வருவதை நினைத்தால் மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது. தாங்கள் படைப்புகள் புததக வடிவில் வருவதற்கு முன்னே தங்கள் படைப்பு ஆண்டு மலரில் வருவது ஒரு முன்னோட்டம்…. தாங்கள் பதிப்பகத் துறையில் காலெடுத்து வைப்பதற்கு முன்னே முருகன் உங்களுக்கு ஆசி வழங்கி விட்டார் திரு மணிவண்ணன் மூலமாக ….

    திரு மணிவண்ணன் தங்களுக்கு பரிசளித்த அனைத்து பரிசுகளும் அருமை.

    அடுத்த பதிவை நாளை எதிர்பார்க்கிறோம்

    வாழ்க …. வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  5. அருமை சுந்தர் ஜி.
    சில வருடங்களுக்கு முன் சிறுவாபுரி சென்று தரிசனம் செய்தோம். அதே வருடத்திலே எங்களுக்கு வீடு வாங்கும்படி அமைந்தது. மறுமுறை சென்று முருகனுக்கு நன்றி செலுத்தி வந்தோம்.

    அடுத்த வருடம் நீங்கள் தம்பதியராய் சென்று அவனுக்கு நன்றி கடன் செலுத்த முருகனை வேண்டுகிறேன்.

  6. சுந்தர்ஜி,
    இன்று முழுவவதும் முருகன் சிந்தனையாகவே இருந்தது. ஏனோ தெரியவில்லை.
    மிக அருமையான பதிவு.
    I felt as though I have jus come back from the temple. By God’s grace will visit very soon.
    Tks for ur prayers at the temple for my daughter.
    God bless.

    Regds
    Ranjini.

  7. சுந்தர் சார்,

    மேலே நீங்கள் சொன்னவயவும் உண்மை… எனக்கு திருமணம் முருகனை கும்பிட பிறகுதான் நடந்தது… வீடும் அவ்வாறே கிடைத்து…
    48 நாட்கள் விரதம் இருந்தேன்…46வது நாள் மாப்பிள்ளை வீட்டார் பார்த்து சென்றார்கள்…48 ஆம்நாள் சம்மதம் சொன்னார்கள்..

    எல்லோரும் கண்டிப்பாக செல்லவேண்டும்…

    அதேபோல் தோரண கணபதி ஆலயம் குன்றதுரில் இருக்கிறது. இது கடன் நிவர்த்தி ஸ்தலம்… எனக்கு அதிக விபரம் தெரியவில்லை…
    தாங்கள் அறிந்து சொல்லவும். எழுத்து பிழை மன்னிக்கவும்.

    நன்றி
    பிரியா

      1. குன்றத்தூர் முருகன் கோயில் அருகில் உள்ள காத்யாயனி அம்மன் கோவிலில் ‘தோரண கணபதி’ அருள் பாலிக்கிறார்.

  8. வணக்கம் சுந்தர் மிக மிக அழகான கட்டுரை .சிறுவாபுரிக்கு சென்று வந்த உணர்வினை தந்தது உங்கள் பதிவு , தங்கு தடை இல்லாத அழகிய நடை வாழ்த்துகள் . இந்த சம்பவம் ஒரு திருப்புமுனையாக உங்கள் வாழ்வில் அமையட்டும்.எதிலும் நீக்கமற நிறைந்து இருப்பவன் கருணை உங்களை நோக்கி பாயட்டும் .வாழ்த்துகள் நன்றி

  9. மிக மிக அருமையான பதிவு. அழகன் முருகனை தரிசித்து யாம் செய்த பாக்கியம். சிறுவாபுரி பற்றி முழுமையாய் தெரிந்து கொண்டோம். சகலமும் சித்தி பெறும் சிறுவாபுரி முருகனை தரிசித்தால் ..ஏனெனில் முருக பெருமான் நமக்கு வேண்டிய வீடு பேற்றை அளித்து, நாம் வீடுபேறு அடைய நம்மை ஆட்கொள்கிறான்.

    திருவண்ணாமலை – நினைத்தாலே முக்(த்)தி
    சிறுவாபுரி – நினைத்தாலே சித்தி

    உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
    மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

    சகலமும் சித்தி பெற சிறுவாபுரி முருகனை சரண் அடைவோம்.

    நன்றி அண்ணா..

  10. சிறுவாபுரிக்கு சென்று வந்து உடனே வீடு கட்டியவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். சென்னையில் என் தங்கை குடியிருந்த வீட்டுக்கு அருகில் இருந்தவர் அப்போதெல்லாம் வாரம் தோறும் சிறுவாபுரி சென்று வருவார். பின்னால் அவர்கள் ஊரப்பக்கம் அருகே சொந்த வீடு வாங்கி சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன்.

    நானும் விரைவில் செல்லவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.

    அண்ணாமலையார் ஆன்மீக வழிப்பட்டுக்குழுவின் சார்பாக முருகனின் திருமண மாலை தங்களுக்கு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள்.

    புகைப்படம் ஒவ்வொன்றும் அருமையிலும் அருமை. சிறுவாபுரியின் அழகை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  11. அருமையா கோயில் சிறுவாபுரி. நேற்று 2 ம் முறையாக சென்று வந்தேன். எனது தம்பிக்கு திருமணமாகவும் 16 வருடத்தில் 10வீடு மாறிய எனக்கு சொந்தவீடும் நோய் தீரவேண்டியும் பிரார்த்தித்து வந்துள்ளேன். 15.02.17.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *