Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)

தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)

print
கா பெரியவா மடத்து ஊழியர்களையும், தன் அணுக்கத் தொண்டர்ளையும் எந்தளவு தாய்ப் பறவை தனது குஞ்சுகளை காப்பது போல காத்திருக்கிறார் என்பதை அறியும்போது மெய்சிலிர்க்கிறது. அது பற்றி பல்வேறு சம்பவங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். படித்திருப்பீர்கள்.

Maha Periyava pointing finger“TAKE CARE OF YOUR EMPLOYEES. THEY WILL TAKE CARE OF YOUR  PROSPECTS” என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. அது எத்தனை ஆழ்ந்த பொருள் உடையது தெரியுமா? மகா பெரியவாவை பொறுத்தவரை மடத்து ஊழியர்கள் மற்றும் அணுக்கத் தொண்டர்களுக்கு அவர் தான் பிரத்யட்ச தெய்வம். அவர்களின் நலனில் அவர் கடைசி வரை அத்தனை அக்கறை எடுத்துக்கொண்டார்.

தாயுமானவன் தந்தையானவன்!

இது நடந்தது 1975 ல்.

திரு.சந்திரமௌலி சாஸ்திரிகள் அப்போது பெரியவாவின் உத்தரவுக்கிணங்க ஜொன்னவாடா காமாட்சியம்மன் கோவிலில் அம்பாளுக்கு நித்திய பூஜைகள் செய்து வந்தார். அவர் மூன்றாவது மகள் ஹேமலதா காஞ்சியில் உள்ள தன் தாய் வீட்டுக்கு அப்போது தலைப்பிரசவத்திற்கு வந்திருந்தார். பிரசவத்திற்கு நாள், நேரம் குறித்து அது சமயம் பார்த்து மருத்துவமனையில் அட்மிட் ஆகும் வழக்கமெல்லாம் அப்போது கிடையாது. பிரசவ வலியெடுத்தால் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வார்கள். அவ்வளவு தான்.

இங்கே தந்தை டி.ஆர்.சந்திரமௌலி சாஸ்த்திரிகள் ஜொன்னவாடாவில் இருக்க மகள் ஹேமலதா அவர்கள் வீட்டில் படுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடிரீன்று பச்சை பட்டுடுத்தி, நெற்றியில் குங்குமமும், மல்லிகை பூவும் சூடி ஒரு சுமங்கலி தோன்றினாள். “என்னம்மா.. இங்கே படுத்திருக்கே? உடனே ஹாஸ்பிடல் போ…. கிளம்பு கிளம்பு தாமதிக்காதே!” என்று அப்பெண்மணி துரிதப்படுத்தியதையடுத்து, இவர் ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல உடனே ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவை பிடித்து காஞ்சி மருத்துவமனையில் அட்மிட் ஆனார். (அது கனவா அல்லது நனவா என்று இன்று வரை தன்னால் கூறமுடியவில்லை என்று கூறுகிறார் திருமதி.ஹேமலதா!)

ஆனால், அங்கே இருந்த மருத்துவர்கள், “நீ ஏன்மா இப்போ வந்து அட்மிட் ஆகுறே… உனக்கு தான் பிரசவ வலியே வரலியே…. உனக்கு இன்னும் நாள் இருக்கு…” என்றனர்.

Chandramouli Sastrigal
திரு.சந்திரமௌலி சாஸ்திரிகளுடனான சந்திப்பின் போது….

இவர் பிடிவாதமாக, “இல்லே டாக்டர் பரவாயில்லே. எனக்கு அட்மிஷன் போட்டுடுங்க…” என்று கூற, வேறு வழியின்றி அட்மிஷன் போட்டனர்.

அடுத்த 20 வது நிமிடம் பிரசவ வலியோ இதர சிரமங்களோ எதுவுமின்றி, ஹேமலதா ஒரு அழகான ஆண் மகவுக்கு தாயானார். குழந்தை சுகப் பிரசவம். மருத்துவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.

அந்த குழந்தை தான் சென்ற பாகத்தில் நாம் குறிப்பிட்ட ஸ்ரீராம். ஸ்ரீராம் அவர்கள் தற்போது தனியார் நிறுவனமொன்றில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது கல்வி, மற்றும் வளர்ச்சியில் மகா பெரியவாவின் பங்கு நிறைய உண்டு. அதை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

பெரியவாவின் உத்தரவுக்கிணங்க, ஜொன்னவாடா காமாட்சிக்கு பூஜை செய்ய திரு.சந்திரமௌலி சாஸ்த்ரிகள் சென்ற நிலையில், அவரது மகள் பிரசவத்திற்கு உதவ பெரியவாவின் எண்ணத்திற்கேற்ப காஞ்சி காமாட்சியே வந்ததில் என்ன விந்தை இருக்கமுடியும்?

பரமேஸ்வரன் மட்டும் தாயுமானவனா என்ன? நம் உம்மாச்சி தாத்தாவும் தான்!

திங்கள் போல் மழலை முகம் பார்த்து
தென்றல் போல் மெதுவாய் மடி சேர்த்து
முத்தங்கள் கனிவாய் தரும்போது
எண்ணிக் கொள் என்னையும் மறவாது
நான் தாயுமானவன் தந்தையானவன்
அன்பு சேவகன் அருமை நாயகன்!

=====================================================================

உழவாரப்பணி அறிவிப்பு!

நம் தளத்தின் அடுத்த உழவாரப்பணி (சென்னை புறநகர்) வரும் 24/05/2015 ஞாயிறன்று நடைபெறும். பணி நடைபெறும் கோவில் மற்றும் இதர விபரங்கள் வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும். மேற்படி பணியில் கலந்துகொள்ள விருப்பப்படும் அன்பர்கள் நமக்கு தகவல் தெரிவிக்கவும்.

Rightmantra Sundar | Mobile : 9840169215
E-mail :
editor@rightmantra.com  | Website : www.rightmantra.com
Facebook : Righmantra Sundar (Personal)  | www.facebook.com/RightMantra (Official)

=====================================================================

மனதுக்கினிய வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் அற்புதமான ஒரு பரிகாரத் தலம் பற்றிய பதிவு இது!! கெட்டியாக பிடித்துக்கொண்டு கரை சேருங்கள்!!!

நல்லதொரு வேலை; இனியில்லை கவலை! இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்!!

=====================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…

மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35)

நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)

அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு!  குரு தரிசனம் (33)

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!!  குரு தரிசனம் (32)

சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)

“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

=====================================================================

Also check short series on Kalady & Sornaththu Manai :

வையம் செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)

சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)

பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)

ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!

=====================================================================

Articles on Ramana Maharishi

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

=====================================================================

Articles about other Gurus in Rightmantra.com

‘பரப்பிரம்மம்’ நிகழ்த்திய லீலைகள் – பிரம்மேந்திரர் ஜெயந்தி ஸ்பெஷல்!!

மனித முயற்சி + குருவருள் = திருவருள்! (ஞானானந்தம்-2)

ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!! 

“மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச்சைக்காரன் ஓடி வந்து உதவி செய்வான்!” – யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி SPL

“எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

=====================================================================

Ragavendra Drama

Articles about Sri Ragavendra Swamy

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து  இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

=====================================================================

[END]

4 thoughts on “தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)

  1. மஹா பெரியவாளின் அணுக்ரகங்களை நினைத்தாலே பரம புண்ணியம். அவரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்காவிட்டாலும் அம்மகான் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்ற பெருமை போதும். அவரின் அருட்பார்வை நம் மீது விழுந்தாலே சகலரும் சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம். குருவின் திருப்பாதங்களே சரணம்.

    ஓம் நம சிவாய!

  2. இந்த ” குரு தரிசனம்” நாங்கள் “கோடி புண்ணியம் ” பெறுவோம் என்பது உறுதி..

    இன்னும் மெய் சிலிர்கிறது அண்ணா..என்ன சொல்வதென்று தெரியவில்லை அண்ணா..

    உழவார பணி அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் அண்ணா..

    ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்..

    மிக்க நன்றி

  3. குருவின் மகிமையை படிக்கும் பொழுது கண்கள் பனிக்கின்றது. குரு வார பதிவிற்காக வாரா வாரம் காத்திருக்கிறோம்

    நம் எல்லோருக்கும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் குரு பாதம் பணிவோம். குருவின் படம் அருமை.

    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *