Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > பக்கத்து வீட்டு துணிங்க அழுக்கா இருக்கா? MONDAY MORNING SPL 38

பக்கத்து வீட்டு துணிங்க அழுக்கா இருக்கா? MONDAY MORNING SPL 38

print
ரு கணவனும் மனைவியும் அப்பார்ட்மெண்ட் ஒன்றுக்கு புதிதாக குடி பெயர்ந்தனர். ஒரு நாள் மனைவி விழித்தவுடன், பக்கத்து அப்பார்ட்மெண்ட் பெண்மணி, தனது துணிகளை துவைத்து காயப்போட்டுக்கொண்டிருப்பதை பார்க்கிறாள்.

“ஏங்க… அங்க கொஞ்சம் பாருங்களேன்….. பக்கத்து வீட்டுக்காரி துணி காயப்போடுறா… துணியெல்லாம் எவ்வளவு அழுக்கா இருக்கு பாருங்க… துணியை துவைக்கவே மாட்டா போலிருக்கு. அப்படியே நனைச்சி பிழிஞ்சி காயப்போடுவா போலருக்கு… நான் எவ்ளோ துவைச்சாலும் குறை சொல்வீங்களே… இதெல்லாம் பார்த்துக்கோங்க…” என்றாள் தன் கணவனிடம்.

Clothes Hanging

அவள் சொல்வதை அவள் கணவன் சிறிதும் சட்டை செய்யாமல் அவன் பாட்டுக்கு தான் படித்துக்கொண்டிருந்த நியூஸ் பேப்பரில் மூழ்கியிருந்தான்.

“என்னங்க… நான் பாட்டுக்கு ஏதோ சொல்லிகிட்டிருக்கேன்… நீங்க பாட்டுக்கு ஏதோ… படிச்சிக்கிட்டுருக்கீங்க.”

‘அட ராமா…இங்கேயும் ஆரம்பிச்சிட்டாளா…’ என்று முனகியபடி “இதெல்லாம் நமக்கு ஒரு விஷயமா டியர் ? அவளோட வாஷிங் பவுடர், ரொம்ப விலை மலிவானதா இருக்கும் இல்லே அவளுக்கு துவைக்க தெரியாம இருக்கலாம். நீ போய் ஒரு நாள் சொல்லிகொடுத்துட்டு வா”

ஒவ்வொருமுறையும் பக்கத்து வீட்டுக்காரி துணிகளை காயப்போடும்போதும் இவள் “அங்கே பாருங்க… எவ்வளவு அழுக்கா இருக்கு” என்று இவள் கூறுவது வழக்கமாக இருந்தது.

ஒரு நாள் வழக்கம் போல, அவள் காலை எழுந்திருக்கும்போது ஆச்சரியத்தில் உறைந்து போனாள். ஆம்… இம்முறை பக்கத்து வீட்டு துணிகள் நன்கு சுத்தமாக வெளுத்து காணப்பட்டன.

“ஒரு வழியா அவ துவைக்க கத்துகிட்டா போலருக்கு… இப்போ பாருங்க துணிங்க இப்போதான் சுத்தமா இருக்கு!”

“இல்லே… நான் தான் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் எழுந்திரிச்சு….”

அவள் ஒரு வித சந்தேகத்துடன்…. “சீக்கிரம் எழுந்திரிச்சு….???”

“நம்ம வீட்டு ஜன்னல் கண்ணாடியை நல்லா வாஷ் பண்ணினேன்!”

மற்றவர்களை குறை கூறக் கிளம்பும் முன் நம்மை ஒரு முறை நாம் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளவேண்டும்.

finding fault

==============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==============================================================

[END]

 

10 thoughts on “பக்கத்து வீட்டு துணிங்க அழுக்கா இருக்கா? MONDAY MORNING SPL 38

  1. இன்னிக்கு ஒரு 100 பேராவது கண்ணாடியை பார்ப்பாங்கனு நெனக்குறேன் சுந்தர் சார் நெறய பேர் இப்டிதான் இருக்காங்க (எங்க வீட்ல கூட இப்டிதான் சார் )

  2. இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறதென்றால் ” நாம் நம்மை பற்றி முழுவதும் அறியாமல் பிறரை குறை கூறுவதில் முழுமையாக உள்ளதால் எல்லாம் தவறாகவே தெரிகிறது. ஆகவே பிறரைக் குறை கூறுவதை நிறுத்திவிட்டு நம்மை நாம் திருத்திக் கொள்ள முயல வேண்டும் ” என்பது நன்கு புரிகிறது.

    MONDAY+MORNING+spl =சூப்பர்.

    -மனோகர்

  3. மற்றவர்களை குறை கூறக் கிளம்பும் முன் நம்மை ஒரு முறை நாம் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளவேண்டும். நம்குரைகளையும் பார்த்துக்கொள்ளவேண்டும் ..

  4. தங்கள் பதிப்பு அருமை.. மற்றவரை குறை கூறும் முன்பு நாம் நம் தவறுகளை திருத்தி கொள்ளவேண்டும் . மற்றவரை ஆள்காட்டி விரலால் சுட்டி காட்டும் போது ,மற்ற மூன்று விரல்கள் ( கட்டை விரல் தவிர்த்து ) ஏனைய விரல்கள் நம்மை நோக்கி இருப்பதன் தத்துவம் இது தான்- நன்றி சுந்தர்ஜி

  5. வணக்கம் சுந்தர் சார்
    வழக்கம் போல monday spl அருமை.
    நல்ல தத்துவம் உள்ள கதை.
    மனோகரன் சார், செந்தில்சிகாமணி சார் இருவர் சொல்லியதும் முற்றிலும் உண்மை.
    நன்றி சார்.

  6. டியர் சுந்தர்ஜி,
    Monday Morning Spl as usual சூப்பர்.

    நாராயணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *