மேற்படி உழவாரப்பணியிலும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் பங்கேற்க நமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நானும் நண்பர் குட்டி சந்திரனும் மயிலை கபாலீஸ்வரர் கோவில் சென்றோம்.
கூட்டத்தின் முடிவில் உழவாரப்பணி துவங்கியது. எங்களால் இயன்ற பணிகளை செய்துகொண்டிருந்தோம். துப்புரவு பணிகளுடன், பணிக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது, குடிக்க கேன் தண்ணீர் ஏற்பாடு செய்வது என்று மற்றவர்கள் கவனிக்க முடியாத பணிகளில் நாம் ஈடுபட்டோம்.
அப்போது ‘அண்ணாமலையார் உழவாரப்பணி’ மன்றத்தின் சார்பாக வந்திருந்த திரு.ஜெயராமன் என்பவரை சந்தித்தோம்.
ஒரு ஓரமாக அமர்ந்தபடி உழவாரப்பணிக்கு வந்திருந்த அன்பர்களின் கைப்பை மற்றும் உடமைகளை பாதுகாப்பது, பணிக்கு தேவையான பிரஷ், துடைப்பம், கந்தல் துணி, வாஷிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை எடுத்து தருவது என்று உட்கார்ந்த இடத்திலிருந்தே தன்னால் இயன்ற கைங்கரியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார் அவர்.
உட்கார்ந்த இடத்திலிருந்து? ஆம்… அவருக்கு இரு கால்களும் கிடையாது. பத்தாண்டுகளுக்கு முன்னர் நுங்கம்பாக்கத்தில் ரயில்வே லைனை கிராஸ் செய்தபோது ரயிலில் சிக்கி தொடைக்கு கீழே அனைத்தையும் இவர் இழந்துவிட்டார். உயிர் பிழைத்ததே அதிசயம் தான்.
விபத்தை தொடர்ந்து இவரது அன்றாட வாழ்க்கை போரட்டமாகிவிட, மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மூத்த மகன் வீட்டில் சேர்க்கவில்லை. இளைய மகனின் அரவணைப்பில் தற்போது இருக்கிறார்.
விபத்துக்கு முன்னர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் டிரைவராக பணியாற்றி வந்த இவர், தற்போது அதே வங்கியிலேயே FIILING CLERK ஆக பணிபுரிகிறார். போக்குவரத்துக்கு ட்ரை சைக்கிள் பயன்படுத்துகிறார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இது போன்ற உழவாரப்பணிகளில் பங்கேற்று தன்னால் இயன்ற உதவிகளை செய்துவருகிறார்.
விதியை எண்ணி இவர் வருந்தினாலும், இரு கால்களை இழந்த நிலையிலும் கயிலைநாதனுக்கு தொண்டு செய்து வரும் இவரது பக்திக்கும் தொண்டுக்கும் முன்னர் நம்முடைய பணியெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது மட்டும் புரிந்தது.
உழவாரப்பணியை பொருத்தவரை ஓரிருமுறை வந்து விட்டாலே இறைவனுக்கு ஏதோ பெரிய தொண்டு செய்துவிட்டதாக சிலருக்கு எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. அதற்கு பிறகு அந்த ஆர்வம் குறைந்துவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இவரை போன்றவர்களை பார்க்க நேர்ந்ததே நாங்கள் செய்த புண்ணியம் என்போம்!
சரி தானே ?
[END]
நிச்சயமாக………….. இவரை போன்றவர்களை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான். இத்தகவலை எங்களுக்காக வழங்கியதன் மூலம், மேலும் நன்மையை அடைவீர்கள்………….திரு. ஜெயராமன் அவர்களைப்பற்றி படிக்கும் போதே கண்கள் பணித்தன…………..
வணக்கம் சார்,
திரு. ஜெயராமன் அவர்களை ஆண்டவன் உங்களை சந்திக்க செய்ததே அவர் செய்யும் உழவாரப்பணியை பார்க்கத்தான்.
இரு கால்களை இழந்த நிலையிலும் கயிலைநாதனுக்கு தொண்டு செய்து வரும் இவரது பக்திக்கும் தொண்டுக்கும் முன்னர் நம்முடைய பணியெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை நான் ஒத்துகொள்கிறேன்.
பதிவின் இறுதியில் தாங்கள் சொன்ன கருத்தை தயவுசெய்து மாற்றி கொள்ளுங்கள். ஒருதரம் கோவில் உழவாரப்பணியை கையில் தொட்டு விட்டாலே அவர் வாழ்க்கை முழுதும் அந்த பணிக்கு தொண்டு செய்யவே விரும்புவார்கள். அவரவர் சொந்த பிரச்சனைகளை கொண்டு கடவுள் சோதனை அவர்களுக்கு கொடுக்கிறாரே தவிர வேறு எந்த காரணமும் இருக்க முடியாது.
சொல்ல முடிந்த, சொல்ல முடியாத பல பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கலாம் உங்கள் பாஷையில் சொன்னால் (நடக்கவே முடியாத அளவுக்கு காலில் கட்டப்பட்டு இருக்கும் குண்டுகள்). எல்லோரும் சுந்தர் சார் அல்ல. எது வந்த போதும் கடமை செய்ய.
அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளில் இருந்து மீண்டு அவரவர் எண்ணப்படி உழவாரப்பணி செய்ய ஆண்டவன் அவர்களுக்கு உதவி செய்வார்.
உங்கள் மனதை நோகும்படி எழுதிருந்தால் மன்னியுங்கள்.
நன்றி
இந்த பதிவில் கடைசியில் மேற்கூறிய கருத்துக்களையும் நாம் கூறியது ஒரு ஆக்கப்பூர்வமான நோக்கிலே தானே வேறு ஒன்றும் இல்லை.
இத்தனை கஷ்டத்திற்கு இடையிலும் இவர் இறைவனுக்கு தொண்டு செய்ய முன்வரும்போது நாமும் இயன்றவரை முயற்சிக்கவேண்டும் என்பதை உணர்த்தவே நாம் இங்கு இதை பதிவு செய்தோம்.
மற்றபடி எது வந்தபோதும் நான் கடமையை செய்வதாகக் கூறியமைக்கு நன்றி. நான் அப்படி நினைக்கவில்லை.
– சுந்தர்
இரு கால்களை இழந்த நிலையிலும் கயிலைநாதனுக்கு தொண்டு செய்து வரும்திரு.ஜெயராமனுக்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
regards
uma
மிகவும் அருமையான பதிவு
வாழ்க வளமுடன்
இராமாயணத்தில் ராமருக்கு அணில் எவ்வாறு உதவி புரிந்ததோ அவ்வாறு இருகின்றது .ஐயாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் .உங்கள் பதிவிற்கு நன்றி