Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > சுந்தரர் அவதரித்த தலத்தில் ஒரு சுகானுபவம்!

சுந்தரர் அவதரித்த தலத்தில் ஒரு சுகானுபவம்!

print
வாசகர்களுக்கு வணக்கம். இரண்டு நாட்களாக நாம் சென்னையில் இல்லை. திடீர் பயணம். இன்று காலை தான் சென்னை திரும்பினோம்.

இந்த வார கூட்டுப் பிரார்த்தனைக்கு தலைமையேற்றிருக்கும் சோளீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.ராஜா குருக்களை சந்தித்து பிரார்த்தனை விபரங்களை, அன்பர்களின் பெயர் ராசி நட்சத்திர விபரங்களை அளிக்க கடந்த சனிக்கிழமை காலை பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில் சென்றிருந்தோம். அவரை சந்தித்து பட்டியலை அளித்து அப்போதே ஒரு அர்ச்சனை அனைவரின் பெயர்களுக்கும் செய்தோம். மறுநாளும் அதாவது ஞாயிறு மாலை பிரார்த்தனை நேரத்திலும் அனைவருக்கும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது அவசியம் செய்வதாக சொன்னார். பேரம்பாக்கம் பயணத்தை வெற்றிகரமாக முடித்தபிறகு அன்றிரவு திடீர் பயணமாக அவசரமாக வடலூர் செல்லவேண்டியிருந்தது. எனவே சனிக்கிழமை இரவு சென்னையிலிருந்து  வடலூர் புறப்பட்டுவிட்டோம். திடீர் பயணம் என்பதால் தளத்தில் அது பற்றி எதுவும் தகவல் அளிக்க முடியவில்லை. முகநூலில் மட்டும் அளித்திருந்தோம்.  இன்று அதிகாலை தான் சென்னை திரும்பினோம்.

DSC00122
பேரம்பாக்கம் சோளீ ஸ்வரரிடம் சமர்பிக்கப்பட்ட பிரார்த்தனைகள்…

இந்த பயணத்தில் நீண்ட நாட்களாக நாம் தரிசிக்க விரும்பிய சுந்தரரின் அவதாரத் தலமான திருநாவலூர், ஈசன் அவரை தடுத்தாட்கொண்ட திருவெண்ணெய்நல்லூர் இரண்டு தலங்களுக்கும் சென்றிருந்தோம். பின்னர் நடுக்காவிரி சென்று பெரியவா அருளால் பிறந்த கணு அவர்களை சந்தித்தோம். (Please check : தேடி வந்து துயர் தீர்த்த தெய்வம் – சாட்சியாய் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி!)

என்ன சொல்வது… எப்படி சொல்வது? மேற்படி இரண்டு ஆலயங்களிலும் அப்படி ஒரு தரிசனம், ஒத்துழைப்பு. இத்தனைக்கும் இங்கு யாரையும் நமக்கு தெரியாது. நம்மை தெரிந்தவரும் இல்லை. அறிமுகப்படுத்தி வைப்பவரும் இல்லை. அடிக்கடி நாம் சொல்வது போல, ‘நாம் பின் சொல்ல ஈசன் தான் முன் சென்று கொடுக்கும் அறிமுகத்தை விடவா வேறு யாராவது கொடுத்துவிட முடியும்?’ எனவே தான் திட்டமிடாத இந்த பயணம் கூட மகத்தான வெற்றிப் பயணமாக விளங்கியது. (ஒரு பயணம் வெற்றிப் பயணம் என்று கூறுவதற்கு அளவுகோல் என்ன? அதை வேறொரு பதிவில் சொல்கிறோம்!)

DSC00228

இந்த திருத்தல பயணத்தில் தோண்ட தோண்ட கிடைத்த வைரச் சுரங்கமாய் அத்தனை விஷயங்களை அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம். நாம் தரிசித்த தலங்களில் எல்லாம் இந்த வார (நரம்பு தொடர்பான பிரச்சனைகள்) பிரார்த்தனைக்கு கோரிக்கைகளை சமர்ப்பித்த அத்தனை பேருக்கும் மிகச் சிறப்பாய் அர்ச்சனை செய்ய முடிந்தது.

பேரம்பாக்கம் சோளீஸ்வரர் தவிர, திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், நடுக்காவிரி காவிரிக்கரை பிரசன்ன கணபதி ஆகிய மூன்று தலங்களிலும் இந்த பிரார்த்தனை நடைபெற்றது அர்ச்சனையும் நடைபெற்றது நாம் செய்த பாக்கியம் என்றே சொல்லவேண்டும்.

இந்த ஆலய தரிசன அனுபவங்களை பட்டியலிட வேண்டுமென்றால் அதற்கு ஒரு பிறவி போதாது. அப்படி ஒரு ஆத்மானுபவம்.

DSC00233 copy

திருநாவலூரில் பக்தஜனேஸ்வரர் ஆலயத்தின் உள்ளே மிகப் பெரிய பெருமாள் சன்னதி ஒன்று உள்ளது. (பாடல்பெற்ற தலங்களில் இது போன்ற அமைப்பு அபூர்வம். காஞ்சி, தில்லை, திருப்பழனம், திருப்பத்தூர் உள்ளிட்ட 12  தலங்களில் தான் சிவாலயத்திற்கு உள்ளே வைணவ ஆலயம் இருக்கும்.)

பக்தஜனேஸ்வரரை தரிசித்துவிட்டு, அங்கு அமைந்திருக்கும் சுக்கிர பரிகார மூர்த்தியான ஸ்ரீ பார்க்கவீஸ்வரரை நமக்கு காண்பித்த ஆலயத்தின் அர்ச்சகர் சந்திரசேகர குருக்கள் அடுத்து மனோன்மணி அம்பாளையும் தரிசித்துவிட்டு வரதராஜப் பெருமாளை தரிசிக்க செல்லலாம் என்றார்.

“ஆமா சுவாமி… வரும்போதே கவனித்தேன். மிக அற்புதமான பெருமாள் சன்னதி இருந்தது. சுவற்றில் திருநாமம் சாத்தப்பட்டிருந்தது. என்ன ஏதென்று விசாரிக்கவேண்டும் என்று நினைத்தேன்” என்றோம்.

IMG_20160828_122308
திருநாவலூர் சந்திரசேகர குருக்கள் நமது பிரார்த்தனை கோரிக்கைகளை படிக்கும்போது…

பொதுவாக எந்தக் கோவிலுக்கு செல்ல நேர்ந்தாலும் அதன் தல வரலாற்றையும் சிறப்பையும் ஓரளவாவது தெரிந்துகொண்டு தான் செல்வோம். ஆனால், இது எப்படி தவறியது என்று தெரியவில்லை. அதுவும் ஒரு வகையில் நன்மைக்கு தான். இல்லையெனில், இப்படி ஒரு ஆனந்த அதிர்ச்சி கிடைத்திருக்குமா?

சுவாமியையும் அம்பாளையும் தரிசித்துவிட்டு வரதராஜப் பெருமாள் சன்னதிக்கு வந்தோம். எப்போதும் 12.30 க்கெல்லாம் நடை சாற்றிவிட்டு கிளம்புபவர், அன்று மட்டும் சாத்தாமல் இருந்தது பெரிய அதிசயம்.

பெருமாள் இங்கு அத்தனை அழகு. ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் நின்ற திருக்கோலம். நமக்கு ஹரிஹர பேதம் கிடையாது என்பதால் கண்குளிர தரிசித்தோம்.

பொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும்,
நின்றுலகம் தாய நெடுமாலும், – என்றும்
இருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன்
ஒருவனங்கத் தென்று முளன்

என்று பொய்கையாழ்வார் பாடியதைப் போல நமக்கு இருவரும் ஒருவரே.

இந்த சன்னதிக்கு சேவை சாற்றி வரும் பட்டரின் பெயர் சேஷாத்ரி பட்டர்.  பக்தஜனேஸ்வரரை தரிசித்து முடித்தவுடனேயே அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் என அனைவரையும் கௌரவித்ததில் அங்கேயே கொண்டு சென்ற அனைத்தும் தீர்ந்துபோய்விட்டது. சேஷாத்ரி பட்டர் சாந்தம், சிரித்த முகம். நம்மிடம் வஸ்திரம் எதுவும் இருக்கவில்லை. ஒரே ஒரு துண்டு இருப்பது நினைவுக்கு வந்து அதை கொண்டு வந்து அவரை கௌரவித்தோம். அதையே பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார் அவர். விரைவில் மீண்டும் திருநாவலூர் வருவதாகவும் அப்போது  மீண்டும் சந்திப்பதாகவும் கூறியிருக்கிறோம்.

இங்கிருக்கும் பக்தஜனேஸ்வரர், வரதராஜப் பெருமாள் இரண்டும் கோவில்களும் அத்தனை அருமையாக இந்த பட்டர்களால் சிவாச்சாரியார்களால் பார்த்துக்கொள்ளப்படுகின்றன. இது போன்ற அதிக வருவாயில்லாத கோவில்களில் சேவை சாற்றுபவர்களை பார்த்துக்கொள்வது நமது கடமை.

(பராமரிப்பது என்பது வேறு. பார்த்துகொள்வது என்பது வேறு. பராமரிப்பு என்பதை ஒரு அரசு தான் செய்யமுடியும். ஆனால், பார்த்துகொள்வதை யார் வேண்டுமானாலும் செய்யமுடியும்.)

சில நேரங்களில் குடிசைகளில் கூட சாணமிட்டு மெழுகி அங்கே ஏதோ ஒரு சுவாமி படத்தின் முன்பு விளக்கேற்றுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், பெரிய பங்களாக்களில் வாசல் கூட தெளிக்கமாட்டார்கள். இப்போது புரிந்ததா?

மற்றபடி திருநாவலூர் ஒரு சுக்கிர பரிகாரத் தலம், பூராட நட்சத்திரப் பரிகாரத் தலம். இன்னும் நிறைய. விரிவாக பின்னர் எழுதுகிறோம்.

மற்ற அப்டேட்டுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும்.

(நமது முகநூலில் நரம்பு தொடர்பான கூட்டுப் பிரார்த்தனை குறித்த அப்டேட்டுக்களை பார்த்து பலர் அவர்களுக்கும் அவர்களது உற்றார் உறவினர்களுக்கும் இதே போல நரம்பு பிரச்னைக்காக போல பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் ஆப், மெஸ்ஸஞ்சர் என பலரும் பலவிதங்களில் இந்த கோரிக்கைகளை அனுப்பியிருப்பதால் அனைத்தையும் எடுத்து ஒருங்கிணைக்க சிரமமாக உள்ளது. எனவே நரம்பு தொடர்பான கோரிக்கைகளை புதிதாக சமர்ப்பிக்க விரும்புகிறவர்கள் editor@rightmantra.com என்கிற மின்னஞ்சலுக்கு அந்த கோரிக்கைகளை சற்று தெளிவாக சம்பந்தப்பட்டவர்களின் பெயர், ராசி, நட்சத்திரம் கோத்திரம் இவற்றுடன் அவசியம் அனுப்பவும். அப்போது தான் மீண்டும் சேர்க்க இயலும். அலைபேசி எண்ணை அவசியம் குறிப்பிடவும்.)

=======================================================

We need your help…

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

=======================================================

Also check :

பிரார்த்தனைக்கு வந்த சோதனை!

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

அடியாரின் பொருட்களை கொள்ளையடித்த ஈசன்- எங்கு, ஏன் ?

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

பிள்ளைகளுக்கு நீங்கள் மறக்காமல் சேர்க்க வேண்டிய ‘சொத்து’ என்ன தெரியுமா?

‘தீயவை மாள, பிணிகள் அகல, எதிர்கால சந்ததியினர் சிறக்க, தளம் சார்பாக ஒரு தடுப்பூசி!’

ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய திருஞானசம்பந்தர் குரு பூஜை!

எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??

திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

மனக்கவலைக்கு மருந்தாகும் திருமுறைகள்!

பிள்ளைகளுக்கு  என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?

ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!

கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….

பள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு!

‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கரை புரள, சிவலோகத்தில் சில மணித்துளிகள்…!

======================================================

Something different….

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

======================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *