Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, April 16, 2024
Please specify the group
Home > Featured > பாலசங்கரன் நடத்தி தந்த பிள்ளையார் பூஜையும் அபிஷேகமும்!

பாலசங்கரன் நடத்தி தந்த பிள்ளையார் பூஜையும் அபிஷேகமும்!

print
பூவிருந்தவல்லி மார்க்கெட் பகுதியில் உள்ள சிறிய பிள்ளையார் – செல்வ விநாயகர். ‘மார்க்கெட் பிள்ளையார்’ என்று இவருக்கு பெயர். ஒரு காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய பிள்ளையார் கோவில் இது. பெங்களூர் ரமணியம்மாள், வாரியார் ஸ்வாமிகள் போன்றவர்கள் எல்லாம் இங்கு வந்திருந்து கச்சேரி செய்திருக்கிறார்கள் என்பதை சென்ற பதிவிலேயே விளக்கியிருந்தோம்.

நமது ‘பூஜை காணாத பிள்ளையாருக்கு பூஜை செய்து திருவிளக்கேற்றும் கைங்கரியம்’ தொண்டின் ஒரு பகுதியாக பூவிருந்தவல்லியில் மார்கெட் பகுதியில் உள்ள ‘மார்க்கெட் பிள்ளையார்’ அடையாளம் காணப்பட்டு அங்கு சென்ற வாரம் அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

DSC07113

Pillaiyar Abishekam 1

இந்தக் கோவிலை பொறுத்தவரை நித்ய பூஜைகள் தவறாமல் நடைபெற்று வந்தாலும் வருவாய் இல்லாத கோவில் இது. திரு.பாலசுப்ரமணிய குருக்கள் என்பவர் சுய ஆர்வத்துடன் பல நேரங்களில் தனது கைக்காசை இட்டு இந்த கோவிலுக்கு தொண்டு செயதுவருகிறார். அவரது மகன் கணேஷ்குமார் என்பவரும் இவரும் மாறி மாறி வந்து பிள்ளையாருக்கு பூஜை செய்கிறார்கள். நாம் இந்த கோவிலை இறுதி செய்வதற்கு முன்பு அந்த வழியாக செல்லும்போதெல்லாம் செல்வதுண்டு. அப்போது இவர்கள் இருவரையும் மாறி மாறி கோவிலில் பார்த்தோம்.

DSC07114

இந்த கோவிலில் சென்ற ஜுன் மாதம் ஞாயிற்றுக் கிழமை 26 ஆம் தேதி அன்று நமது தளத்தின் சார்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

முன்னரே அறிவித்திருந்தபடி வருவதற்கு ஒப்புக்கொண்ட ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு அபிஷேகப் பொருளை கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டோம். அனைவரும் அதன்படியே நம்முடன் பேசி அவர்களால் இயன்றதை கொண்டு வந்தனர்.

DSC07117 copy

பஞ்சாமிர்தத்திற்கு பழம், அபிஷேகத்திற்கு அபிஷேக பொடிகள் அடங்கிய செட், இளநீர் என அனைவரும் அவர்களால் இயன்றதை கொண்டு வந்தனர். நாம் பசும்பால் மற்றும் பசுந்தயிர் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். காரணம் சற்று அலைந்து திரிந்து பெறவேண்டியவை அவை. சென்னை நகருக்குள் மாடு வளர்க்கக்கூடாது என்று மாநகராட்சி அதிகம் கெடுபிடி செய்கிறபடியால் அபிஷேகத்திற்கு பசும்பால் கிடைப்பது குதிரைக்கொம்பாய் இருக்கிறது. நாம் எப்படியோ அலைந்து திரிந்து இரண்டையும் ஏற்பாடு செய்த்துவிட்டோம். இது தவிர பிள்ளையாருக்கு சுண்டல், மற்றும் சர்க்கரைப் பொங்கல் தயாரித்து எடுத்து வரும் பொறுப்பையும் நாமே எடுத்துக்கொண்டோம்.

DSC07120

ஜூன் 12 ஞாயிறு அன்று தான் குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபத்தில் நமது குழுவினரின் உழவாரப்பணி நடைபெற்ற படியால், இந்த கைங்கரியத்திற்கு குறைவான எண்ணிக்கையில் தான் நம் குழுவினர் வருவார்கள் என்று தெரிந்தது. அடுத்த வாரம் வேறு அரியத்துறையில் உழவாரப்பணி என்பதால் வரமுடிந்தவர்க்ள மட்டும் வாருங்கள் என்று கேட்டுக்கொண்டோம். மொத்தத்தில் ஐந்தாறு பேர் தான் வருவதாக ஒப்புக்கொண்டனர்.

முதலில் வாசகி சசிகலா அவர்கள் வர, அவர்களிடம் அருகே இருந்த வாழைப்பழ மண்டியில் இடம் ஏற்படுத்திக்கொடுத்து பஞ்சாமிர்ததிற்கு பழம் நறுக்கச் சொன்னோம். (பழங்கள் வாங்கி வரும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.) அவர் அந்த வேலையில் ஈடுபட்டிருக்கும்போதே அடுத்தடுத்து வாசகர்கள் வந்து சேர்ந்தனர்.

DSC07123

சன்னதி வாசலில் நீர் தெளித்து கோலம் போட்ட பின்னர் அபிஷேகம் துவங்கியது.

வாசகர்கள் சசிகலா, தாமரை வெங்கட், பரிமளம், ராகேஷ், செந்தில்குமார், மௌலி ஆகியோர் இந்த அபிஷேகத்தில் கலந்துகொண்டனர்.

திரு.மௌலி ஸ்வாமிக்கு தேவையான மாலைகள், மற்றும் குருக்கள் இருவருக்கும் சபை மரியாதை செய்யத் தேவையான வஸ்திரம் முதலியவற்றை வாங்கி வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார். திரு.ராகேஷ் பூஜைக்கு தேவையான அர்ச்சனை (தேங்காய் பூ பழம்) செட் வாங்கி வந்தனர். ஏனைய வாசகியார் பூக்களை வாங்கி வந்தனர். பரிமளம் அவர்கள் அபிஷேகப் பொடிகள் செட் வாங்கி வந்தார்.

அருகம்புல் இல்லாமல் ஆனைமுகன் பூஜையா? அருகே இருந்த கடையில் அருகம்புல் ஒரு கட்டு வாங்கி வந்தோம்.

சற்று நேரத்திற்கெல்லாம் குருக்களின் குட்டிப் பேரன் குருநாதன் (இரண்டாம் வகுப்பு படிக்கிறான்) தனது தந்தை கணேஷ் குமார் குருக்களுடன் (இவரும் இந்த கோவில் குருக்கள் தான்) வந்து தாத்தாவுடன் அபிஷேகத்திற்கு உதவியாக சேர்ந்துகொண்டான்.

Pillaiyar Abishekam 2

காலை 8.00 மணிக்கு அபிஷேகம் துவங்கியது.

இவனைப் பார்த்தவுடன் ‘அடடா இந்த குழந்தைக்கு எதுவும் வாங்கி வரவில்லையே சபை மரியாதை செய்யும்போது இந்த குழந்தையை எப்படி விடுவது? பார்க்கவே சங்கர கடாக்ஷத்துடன் இருக்கிறானே..’ என்று தோன்ற, நண்பர் மௌலியிடம் அருகே ஏதேனும் ஜவுளிக்கடை திறந்திருந்தால் அக்குழந்தைக்கு ஏதாவது டிரஸ் வாங்கி வரும்படி கேட்டுக்கொண்டோம். காலைவேளை அதுவும் மணி 8.30 இருக்கும். ஒரு ஜவுளிக் கடையும் திறந்திருக்கவில்லை. இருப்பினும் மௌலி அவர்கள் அலைந்து திரிந்து எப்படியோ அக்குழந்தைக்கு ஏற்ற மேல் சட்டை ஒன்றை வாங்கிவந்தார்.

அதன் பின்னர் தான் நமக்கு பூஜையில் லயிக்க முடிந்தது.

ந்தது, உன் தன்னை; கொண்டது, என் தன்னை; சங்கரா! ஆர் கொலோ, சதுரர்? அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்; யாது நீ பெற்றது ஒன்று, என்பால்?
தந்தது, உன் தன்னை; கொண்டது, என் தன்னை; சங்கரா! ஆர் கொலோ, சதுரர்? அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்; யாது நீ பெற்றது ஒன்று, என்பால்?

(பூவிருந்தவல்லி மார்க்கெட் பிள்ளையார் கோவில் குருக்களின் பேரக்குழந்தை குருநாதன்! எத்தனை கடாக்ஷம் பார்த்தீர்களா? சாட்சாத் அந்த பாலசங்கரனே வந்தாற்போல இருந்தது. இந்த படத்தில் ஒரு விஷேஷம் உள்ளது. பின்னணியில் உள்ள விநாயகர் விக்கிரகத்தின் பின்புறம் உள்ள ஓவியம், அருகவே இருந்த சித்தி புத்தி விநாயகர் கோவிலின் ஓவியம். மஹா பெரியவா அந்த கோவிலுக்கு வந்திருந்ததாக குருக்கள் தகவல் சொன்னார். ஹைவேஸ் பிரச்னையில் கோவில் அகற்றப்பட்டபோது, வேறு இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. அப்போது பாலாலயம் செய்யப்பட்ட இந்த சித்திரத்தை கொண்டு வந்து இந்த பிள்ளையாரின் பின்னால் வைத்துவிட்டார் குருக்கள்.)

தொடர்ந்து பிள்ளையாருக்கு அபிஷேகப் பொடி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் என அனைத்து அபிஷேகமும் ஒரு விடாமல் நடைபெற்றது.

இறுதியில் வஸ்திரம் அணிவித்து பிரசாதம் நைவேத்தியம் செய்யப்பட்டது.

நோட்டில் எழுதிக்கொண்டு சென்ற நமது வாசகர்களின் பெயர்களுக்கு சங்கல்பம் செய்யும்போது...
நோட்டில் எழுதிக்கொண்டு சென்ற நமது வாசகர்களின் பெயர்களுக்கு சங்கல்பம் செய்யும்போது…

அலங்காரத்துக்கு பின் நடைபெற்ற பூஜையில் அனைவரும் சங்கல்பம் செய்து கொண்டோம். அந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருந்த வாசகர்களின் பெயர்களுக்கும் சங்கல்பம் செய்யப்பட்டது.

அஷ்டோத்திர அர்ச்சனை முடிந்த பிறகு பிரசாத விநியோகம் நடைபெற்றது. அந்த பகுதியில் இருந்த வியாபாரிகள் மற்றும் வழிப்போக்கர்கள் அனைவருக்கும் பிராசாதம் கொடுக்கப்பட்டது.

DSC07134

பசுக்களுக்கு சுண்டல் தரலாம் என்றால் அந்த நேரம் பசுக்களை அங்கு பார்க்கமுடியவில்லை. (பூஜை துவங்கும் முன்பே பசுக்களுக்கு பழம் வாங்கித் தந்து கோ-சம்ரட்சணம் செய்த்துவிட்டபடியால் தனியாக செய்யவேண்டிய அவசியம் இருக்கவில்லை.)

அனைவரும் ஆர்வமுடன் பிரசாதம் வாங்கி உண்டனர். அடியார்கள் உண்ண உண்ண நம் வினைகளும் சேர்ந்து உண்ணப்பட்டன என்று தான் கருதுகிறோம்.

DSC07136

இறுதியில் பாலசுப்பிரமணிய குருக்கள் மற்றும் அவர் மகன் கணேஷ் குமார் மற்றும் பேரன் குழந்தை குருநாதன் ஆகியோரை கௌரவித்தோம். அவர்களுக்கு வஸ்திரம், துண்டு, இனிப்புக்கள் மற்றும் தாபூலத்துடன் சிறிது ரொக்கம் வைத்து தரப்பட்டது.

குருநாதனை கௌரவிக்கும், “அப்பாவுக்கும் தாத்தாவுக்கு இதே மாதிரி அடிக்கடி வந்திருந்து பூஜையில் ஹெல்ப் பண்ணனும். நல்லா படிக்கணும். நல்ல பேர் எடுக்கணும் என்ன…” என்று கேட்டுக்கொண்டு கௌரவித்தோம்.

Sankara 2

இந்த கோவில் நண்பர் மௌலி அவர்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தேவையான சிறு சிறு உபகாரங்களை, (எண்ணை, கரெண்ட் பில்) போன்றவற்றை இவர் இனி பார்த்துக்கொள்வார். அது தவிர குருக்களுக்கும் மாதாமாதம் சம்பாவனை கொடுக்கச் சொல்லி கேட்டுக்கொண்டுள்ளோம்.

பிரசாதம் பெற்றுக்கொண்ட போது...
பிரசாதம் பெற்றுக்கொண்ட போது…

அடுத்த கோவில் விரைவில் அடையாளம் காணப்பட்டு அங்கும் இதே போன்ற கைங்கரியம் நடைபெறும். நம் வாசகர்கள் யார் வேண்டுமானாலும் இதில் இணைத்துக்கொள்ளலாம்.

(* இதே போல உங்கள் பகுதிகளில் பூஜை காணாத, வருவாய் இல்லாத பிள்ளையார் கோவில் இருந்தால் நமக்கு தெரியப்படுத்தவும். நாம் வந்து நேரில் பார்த்து ஆனைமுகன் அருளால் பூஜைக்கும் அபிஷேகத்திற்கும் ஏற்பாடு செய்கிறோம்.)

==========================================================

திருச்சி பயணம்!

திருவருள் துணைக்கொண்டு இன்று (புதன்) இரவு பெற்றோருடன் திருச்சி பயணம். எங்கள் குலதெய்வம் வயலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கும் அப்படியே அருகே உள்ள புலிவலம் வியாக்ரபாதீஸ்வரர் கோவிலுக்கும் நாளை வியாழன் செல்லவிருக்கிறோம். ஒரு நாள் பயணம் என்பதால் எத்தனை ஆலயங்களை தரிசிக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால் மாலை, நாம் பிறந்த ஊரான திருவானைக்கா சென்று அன்னை அகிலாண்டேஸ்வரையையும் ஜம்புகேஸ்வரரையும் தரிசிக்கவிருக்கிறோம். முருகனருளால் வெள்ளிக்கிழமை காலை சென்னை திரும்பிவிடுவோம். பிரார்த்தனை பதிவுடன் வெள்ளிக்கிழமை சந்திக்கிறோம்.

நன்றி!

ரைட்மந்த்ரா சுந்தர்,
ஆசிரியர், www.rightmantra.com
M : 9840169215 | E : editor@rightmantra.com

==========================================================

Also check ….

விநாயகனே வினை தீர்ப்பவனே – பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் பிள்ளையார்!!

பூவிருந்தவல்லி மார்க்கெட் பிள்ளையார்!

தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்!

தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)

வாக்கு தரும் நல்வாழ்வு தரும் – பிள்ளையாருடன் துவங்கும் புத்தாண்டு!!

வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!

குன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்!

அருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்!

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here! 

==========================================================

Also check :

மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)

நெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)

தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)

==========================================================

அன்னதானம் என்கிற அருந்தவம்!

வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

==========================================================

Also check…

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

எது உண்மையான தர்மம்?

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

“எல்லாம் அவ பாத்துப்பா!”

==========================================================

[END]

3 thoughts on “பாலசங்கரன் நடத்தி தந்த பிள்ளையார் பூஜையும் அபிஷேகமும்!

  1. இந்த பூஜையில் கலந்து கொண்டு விநாயகரின் திருவருள் பெற நம் வாசகர்கள் கொடுத்து வைத்துள்ளோம்.
    நன்றி

  2. பிலீஸ் கெட் மீ மொபைல் நம்பர் ஆப் குருக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *