Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > கடனில் சிக்கித் தவிப்போரை மீட்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்!

கடனில் சிக்கித் தவிப்போரை மீட்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்!

print
நோயில்லா உடலும், கடனில்லா வாழ்க்கையுமே நிம்மதி என்கிற வீட்டின் திறவுகோல். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இரண்டுமே அத்தனை சுலபமில்லை. நோயில்லா வாழ்வு கூட லட்சத்தில் சிலருக்கு சாத்தியம். ஆனால் கடனில்லா வாழ்வு என்பது கோடியில் ஒருவருக்கு கூட சாத்தியமில்லை என்னும் அளவிற்கு கடன்கள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன.

Thirucherai Runa Vimosnar 6

Thirucherai Runa Vimosnar 4காலையில் கடனுடன் எழுந்திருப்பதைவிட இரவு பட்டினியோடு படுக்கச் செல்வதே மேல் என்று கூறுவார்கள். கடனில்லா வாழ்வே வாழ்வு.

இன்றைக்கு வீடு வாங்குவது முதல் சாதாரண டூ-வீலர் வாங்குவது வரை அனைத்துமே கடன் தான். திட்டமிட்டோ திட்டமிடாமலோ நாம் அனைவரும் கடன்பட்ட வாழ்க்கை தான் வாழ்கிறோம்.

சிலர் அர்த்தத்துடன் கடன்பட்டிருப்பார்கள். சிலர் அர்த்தமற்று கடன்பட்டிருப்பர்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.

கடனில் கூட அர்த்தமுள்ள கடன் அர்த்தமற்ற கடன் என்று இருக்கிறதா என்ன என்று உங்களுக்கு தோன்றலாம்.

உண்டு!

உதாரணத்திற்கு அக்கா, தங்கை, பிள்ளைகளின் திருமணத்திற்கு பட்ட கடன், வீடு கட்டியதில் பட்ட கடன், உற்றவர்களுக்கு மருத்துவச் செலவு பார்த்ததில் கடன், பிள்ளைகளை படிக்க வைப்பதில் ஏற்பட்ட கடன் இப்படி அர்த்தமுள்ள செலவுகளை செய்து ஒருவருக்கு ஏற்படும் கடன் அர்த்தமுள்ள கடன். இவை பெரும்பாலும் சுபச் செலவு, மருத்துவச் செலவு, கல்வி சார்ந்தே இருக்கும்.

இந்தப் பதிவு இப்படி அர்த்தத்துடன் கடன்பட்டு தவிப்பவர்களுக்காகத் தான் அளிக்கப்படுகிறது.

கிருஷ்ண பரமாத்மா கோவர்த்தனகிரியை ஒற்றை ஆளாய் தனது சுண்டுவிரலில் தாங்கிப் பிடித்ததை போல சிலர் ஒற்றை ஆளாய் தங்கள் குடும்பத்தை தாங்கிப் பிடிக்கவேண்டி தாங்கள் கடனில் சிக்கி தவித்து வருவார்கள். அப்படிப்பட்ட தியாக தீபங்கள் எத்தனையோ பேர் உண்டு. நம் தள வாசகர்களில் கூட பலர் அப்படி உண்டு. அத்தகையோர் கலங்கவேண்டாம். இதோ உங்களுக்கு என ஒரு கோவில், உங்களுக்கு என்றே ஒரு பதிவு. உங்களுக்கு என்றே ஒரு பதிகம். அவர்கள் பெயர்களை அனுப்பினாலும் சரி அனுப்பாவிட்டாலும் சரி… அவர்களுக்காக நமது பிரார்த்தனை நிச்சயம் உண்டு!

வேறொரு ரகத்தினர் இருக்கிறார்கள். மது, மாது, சூது, ஆடம்பரம், பேராசை, சோம்பேறித்தனம் முதலியவற்றால் தாங்களே தேடிச் சென்று கடன் என்னும் சுழலில் விழுந்து தவிப்பவர்கள். இவர்களை யாரும் காப்பாற்ற முடியாது. அவர்கள் தான் அவர்களை காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.​ (ஒருவேளை இவர்கள் மனந்திருந்தி இறைவனிடம் சரணடைந்தால் அவன் மன்னிக்கக்கூடும்!)

Thirucherai sara parameswarar

மேற்படி கடன் பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்காகவே அருள்பாலிப்பவர் தான் திருச்சேறையில் எழுந்தருளிருக்கும் ஸ்ரீ செந்நெறியப்பர் எனும் ஸ்ரீ சாரபரமேஸ்வரர்.

திருச்சேறையில் எழுந்தருளியிருக்கும் செந்நெறியப்பரின் பேரைச் சொன்னாலே புண்ணியமாம். இவரை நினைத்து துதித்தாலோ அதுவே பெரும் பாக்கியமாம். திருநாவுக்கரசர் சொல்கிறார்.

எத்தனை அழகான வரிகள் தெரியுமா?

என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு தென்கிழக்கே, கும்பகோணம் – திருவாரூர் வழித்தடத்தில், கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் காவிரியின் உப நதியான முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது திருச்சேறை என்னும் இந்த பாடல் பெற்ற தலம்.

தேவாரப் பாடல் பெற்ற தலம் என்பதிலேயே 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்பது விளங்கும். (சம்பந்தரும், நாவுக்கரசரும் வாழ்ந்த காலம் கி.பி.6 ஆம் நூற்றாண்டு).

Thirucherai Runa Vimosnar 1

Thirucherai Runa Vimosnar 2மனிதனுக்கு செம்மை தரும் நெறியை, ‘முக்தி நெறியை அளித்தருளும் இறைவன் வெளிப்படும் தலம் இது’ என்ற பொருளில் திருச்சேறை பெருமானுக்கு ”செந்நெறியப்பர்” என்ற பெயர் வழங்கப்படுவதும் சிறப்பானதாகும். பஞ்ச க்ஷேத்திரம் எனும் பெருமாள் கோயில் அருகில் இருப்பதால் நமது இறைவன் ஸ்ரீ செந்நெறியப்பரையும் ஸ்ரீ சாரபரமேஸ்வரர் என அழைக்கலாயினர்.

இந்த ஆலயத்திற்கு செல்லவேண்டும் என்பது நீண்டநாட்கள் அவா. ஜனவரி மாதம் 26 ஆம் தேதி திருவாரூர் சென்றபோது அது நிறைவேறியது. அன்று திருவாரூரில் தங்கியிருந்து திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பல திருக்கோவில்களை தரிசித்தோம். அப்போது தரிசித்த தலங்களுள் ஒன்று திருச்சேறை.

Thirucherai Runa Vimosnar 3

Thirucherai Debt Releif temple 2நமது தளத்தின் ஆலய தரிசன பதிவுக்காக இந்த கோவிலுக்கு சென்றபோது சுந்தரமூர்த்தி குருக்களை சந்தித்தோம். நமது தளம் சார்பாக அவரை கௌரவித்து, அந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பிய வாசகர்கள் மற்றும் கடன் ப்ரச்சனையில் சிக்கியிருப்பதாக தெரிவித்த சில வாசகர்கள் பெயருக்கு அர்ச்சனை செய்தோம்.

Thirucherai Runa Vimosnar 11

Thirucherai Runa Vimosnar 14மிக சிறப்பாக சுந்தரமூர்த்தி குருக்கள் உடனிருந்து அர்ச்சனை செய்து வைத்தார். அவரை நம் தளம் சார்பாக கௌரவித்து நாம் எழுதிய நூலையும் பரிசளித்தோம்.

நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, கடனில் சிக்கி தவிக்கும் வாசகர்களுக்காக நடைபெறவுள சிறப்பு பிரார்த்தனையில் அவர்களுக்காக ருண விமோச்சனரிடம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்.

Thirucherai Runa Vimosnar 12

இந்த வாரம் இடம்பெறக்கூடிய பிரார்த்தனை கிளப் சிறப்பு பதிவு கடன் பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பர்களுக்கு நடைபெறவுள்ளது. திரு.சுந்தரமூர்த்தி குருக்கள் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவுள்ளார். பிரார்த்தனையாளர்கள் பெயர்ப்பட்டியல் இன்னும் இரண்டொரு நாட்களில் கோவில் அலுவலகத்துக்கு அனுப்பப்படவுள்ளது. 11 வது வார இறுதியில் அபிஷேகம் ஏற்பாடு செய்யவுள்ளோம்.

இங்கு தனி சந்நதியில் ருண விமோச்சனராய் அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்வதாக ஐதீகம்.

“படிக்க மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாத் தான் இருக்கு. ஆனா இதுனால ஏதாவது எங்களுக்கு பலன் இருக்குமா என்ன? எங்க பிரச்னை தீர்ந்துடுமா? அந்தளவு பிரச்சனையில் நொந்து நூலகியிருக்கோம் சார்…” என்று உள்ளுக்குள் விசும்பலா?

இதை படியுங்களேன்…!

ஒரு முக்கியப் பிரமுகரும் சிவராத்திரியும்!

சிவராத்திரி அன்று அனைத்து சிவாலயங்களும் விடிய விடிய திறந்திருந்து சுவாமிக்கு நான்கு கால பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோவில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஆங்காங்கு பலர் அமர்ந்துகொண்டு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகளை படித்துக்கொண்டிருந்தனர்.

வழக்கறுத்தீஸ்வரருக்கு அபிஷேகமும் ஆராதனையும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க மறுப்பக்கம் பக்தர்கள் கூட்டம் வருவதும் போவதுமாக இருந்தது.

சுவாமிக்கு விளக்கேற்றும் தீப மேடையில் பக்தர்களோடு பக்தராக ஒருவர் அமைதியாக விளக்கேற்றிக்கொண்டிருந்தார். அவரை அங்கிருந்தவர்கள் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. தெரிந்த ஒருசிலரும் கண்டுகொள்ளவில்லை. வழக்கில் சிக்கித் தவித்து பதவியும் இழந்து தண்டனையும் பெற்றவர் அவர். தற்போது பிணையில் இருக்கிறார். வழக்கிலிருந்து தம்மை காக்கவேண்டி வழக்கறுத்தீஸ்வரிடம் ஏற்கனவே சரணடைந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. திங்கட்கிழமை சிவராத்திரி என்பதால் கோவிலுக்கு வந்து விளக்கேற்றிக்கொண்டிருந்தார்.

அடுத்த நாள் காலை (மார்ச் 8) அவர் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவரை வழக்கிலிருந்து மதுரை உயர்நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்தது.

அந்த நபர் : முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி!

மீண்டும் திருச்சேறைக்கு வருவோம்…

இத்திருக்கோயில் சோழர் காலத்தில் குலோத்துங்க சோழன் எனும் சோழ மகாராஜாவால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் புராதன பழமையும், சிறப்பும் திருக்கோயிலாகும். இவ்வாலயம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும்.

புராண வரலாற்றுப்படி இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தமது ஆத்மார்த்த மூர்த்தியாக இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில், ஸ்ரீ விநாயகருக்கு அருகில் ஒரு லிங்கம் ஸ்தாபித்து, வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்தி ஈஸ்வரராக விளங்கக் கூடிய ஸ்ரீரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆகும். (ரிண – கடன், விமோசனம் – நிவர்த்தி, கடன் நிவர்த்தி செய்யும் ஈசன் – ரிண விமோசன லிங்கேஸ்வரர்)

Thirucherai Runa Vimosnar 7

Thirucherai Runa Vimosnar 8மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் தன்னுடைய ஜீவிதத்தில் சுகமாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப் படுகிறார்கள். ஒருவர் பிறக்கும் போது நல்ல ஆரோக்கியத்துடனும், அறிவு உள்ளவராகவும், கல்வியுடையவராகவும் இருந்தாலும், வறுமை இருக்குமானால் அவரால் சுகத்தை அனுபவிக்க முடியாது. ஆகையால் அப்பேற்பட்ட வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி, செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே ஸ்ரீரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆகும். இவ்விறைவரை 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11வது வாரம் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் பிரார்த்தனை நிறைவேறும். கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும், மக்கட்பேறு, கல்வி, பொருள் என அனைத்தும் கிடைக்கும் என்பது திண்ணம்.

Thirucherai Runa Vimosnar 16

திருக்கோயில் அமைப்பு

கிழக்கு நோக்கிய சந்நிதி அமைப்புடையது. கோயிலின் முன்பு சந்நிதி காணப்படுகிறது. அமுதத்தின் ஒரு சொட்டு விழுந்ததால் ஏற்பட்டது இத்திருக்குளம் என்று பொருள்பட ”பிந்துசுதா” என வழங்க பெறுகிறது. சிறிய ராஜகோபுரம் நம்மை இனிதே வரவேற்கிறது. முதல் பிரகாரத்தில் உள் நுழைந்தவுடன் அலங்கார மண்டபம் காணப்படுகிறது. முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் செந்நெறியப்பர் எனும் சாரபரமேஸ்வரர் ”என்று வந்தாய் எனும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே” என்ற அருள் நோக்கோடு நமக்கருள சித்தமாக விளங்குகிறார். மூலதான கோட்டத்தின் அமைப்பை காணும்போதுதான் இத்தலத்தின் தொன்மையும், பழமையும் புலப்படும்.

Thirucherai Runa Vimosnar 9

மேற்கு பிரகாரத்தில் தல விநாயகரும், அவரையடுத்து ஸ்ரீ மார்க்கண்டேயரும், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான, மக்களின் வறுமையை போக்கி செல்வத்தை கொடுப்பதுமான ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் சந்நிதியாகும். இவருக்கு அடுத்து ஸ்ரீ பால சுப்பரமணியர் சந்நிதியும் பாங்குற அமைந்துள்ளது.

இத்தலத்தின் சிறப்பை வெளிப்படுத்தக்கூடிய மற்றொரு அம்சம், மற்ற எங்குமில்லாத சிறப்பு இத்தலத்தில் மட்டுமே மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவதுர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சந்நிதியில் காட்சியளிப்பது சிறப்பாகும். இத்துர்க்கையை வெள்ளிகிழமை தோறும் இராகு காலத்தில் வழிபாடு செய்வது சாலச் சிறந்ததாகும்.

நவக்கிரகத்தை தரிசித்து, நடராஜப் பெருமான் சன்னிதிக்குச் சென்றால் ஸ்ரீ பைரவர் அருள் காட்சியளிக்கிறார். எந்த சிவாலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு இங்குள்ள ஸ்ரீ பைரவருக்கு அப்பரால் பாடபெற்ற தனி தேவார பாடல் இங்கு மட்டுமே உள்ளது. மற்றும் இடது மேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் உள்ளது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பாகும்.

Thirucherai Runa Vimosnar 17

”விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருங்கை
தரித்ததோர் கோலே கால பயிரவனாகி வேழம்
உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே”

சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் கூறும் தேவாரப் பாடலாகும். ஸ்ரீ பைரவருக்கு அஷ்டமியன்று வடைமாலை சாற்றி, சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் காரியானுகூலம், வழக்கு விவகாரங்களில் வெற்றி, நவக்கிரக தோஷங்கள் நீங்குதல் ஆகியவற்றின் பிரார்த்தனா மூர்த்தியாய் ஸ்ரீ பைரவர் விளங்குவது மிகச் சிறப்பான அம்சமாகும்.

வெளிபிரகாரத்தில் மூலவர் சாரபரமேஸ்வரருக்கு இடப்பால் இறைவி அம்பிகையாக ஞானவல்லி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இறைவன் நெறிப்படுத்திய வாழ்க்கையின் ஞானத்தை அருள்பவர் அவனது துணைவியராக ஸ்ரீ ஞானவல்லி அம்பாள் அமைந்துள்ளதாக புராணச் செய்தி மூலம் அறிய முடிகிறது.

Thirucherai Runa Vimosnar 10

சூரியபூஜை

தக்க யாகத்தில் தான் செய்த தவறுக்கு கழுவாய் தேடி, சூரியன் பல இடங்களிலும், இறைவனை வழிபட்டான் அவ்வாறு சூரியன் பூஜித்த தலங்களில் ஸ்ரீ சார பரமேஸ்வரர் தலமும் ஒன்றாகும் என்பது இத்திருக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். ஆண்டு தோறும் மாசி மாதத்து 13, 14, 15 தேதிகளில் காலையில் இங்கே சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீது, அம்பிகையின் பாதங்களில் நேரடியாக படுகிறது. இந்த மூன்று நாட்களிலும் மாலை வேளைகளில் கண்டியூரில் சூரிய பூஜை நிகழ்வதும் குறிப்பிடத்தக்கது. மாசி மாதம் முழுவதும் காலையில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

நித்தியப்படி பூஜை மற்றும் திருவிழாக்கள்

இத்திருக்கோயிலில் தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆடி, பூரம், நவராத்திரி விழா, கந்த சஷ்டி விழா மற்றும் அஷ்டமியன்று பைரவருக்கு விஷேச பூஜைகள், பிரதோஷங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

தலவிருட்ஷம் 

இவ்வாலயத்தின் தல விருட்ஷம் மாவிலங்கை ஆகும். இந்த மரம் வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுமின்றி காணப்படும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றாலும் சிறப்புடைய இவ்வாலயத்தின் ”பிந்துசுதா தீர்த்தம்” கோயிலின் முன்புறமாகவும், ”மார்க்கண்டேயத் தீர்த்தம்” தெப்பக்குளமாகவும், ”ஞான தீர்த்தம்” கேணியாகவும் அமைந்துள்ளன.

இத்திருக்கோயில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பட்டியலைச் சேர்ந்த, அருள்மிகு சாரநாதப் பெருமாள் திருக்கோயிலுடன் இணைந்த திருக்கோயிலாகும். சாரநாதப்பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. திருச்சேறை செந்நெறியப்பரை தரிசிக்க செல்பவர்கள் இதே ஊரில் எழுந்தருளியிருக்கும் சாரநாதப் பெருமாளையும் தரிசிக்கவேண்டும்.

இத்தகைய அருமை பல பெற்ற அரனாரின் அருள் நிலையமான செந்நெறியப்பர் திருக்கோயிலை அடைந்து, ஞானாம்பிகா சமேத சாரபரமேஸ்வரரையும், ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரையும் வணங்கி இருமையின் பங்கணையும் பெற்றின்புற இறைவன் திருவருள் பெருக!

To download the Runa Vimosana Padhigam please click the following link :
http://rightmantra.com/wp-content/uploads/2016/03/rina-vimosana-padhigam.pdf

*******************************************************************

  • கடன் பிரச்சனை தொடர்பான பிரார்த்தனையில் கோரிக்கை சமர்பிக்கவிருப்பவர்கள் வரும் புதன்கிழமைக்குள் பெயர்களை சமர்பிக்கவேண்டும். தங்கள் பிரார்த்தனை விபரத்துடன் தங்கள் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம், அலைபேசி எண் இவற்றுடன் நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவேண்டும்.

*******************************************************************

Rightmantra needs your support!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Paypal id : ‘rightmantra@gmail.com’

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

*******************************************************************

Also check :

நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!

ஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!

அபயம் தருவான் அஞ்சனை மைந்தன் – காக்களூர் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் தரிசனம் !

நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா….

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

சுந்தரர் வெள்ளை யானை மீதேறி கயிலைக்கு புறப்பட்ட அற்புத காட்சி – ஒரு சிறப்பு பார்வை!

அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!

திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

*******************************************************************

Prayer articles:

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!

உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?

ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்!

*******************************************************************

[END]

3 thoughts on “கடனில் சிக்கித் தவிப்போரை மீட்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்!

  1. கடன் குறித்து நீங்கள் கூறும் ஒவ்வொரு வரியும் உண்மை. என் கணவர் ஆரம்பித்தில் க்ரெடிட் கார்டு வாங்கி செலவு செய்ய, அது பல்கிப் பெருகி அதை அடைக்க எட்டு வருடங்களுக்கு மேல் ஆனது. இந்த காலகட்டங்களில் எத்தனையோ தியாங்களை செய்து அந்தக் கடனை அடைத்தோம். கடனில் சிக்கித் தவிக்கும் வாசகர்களுக்கு இந்தப் பதிவு ஒரு பெரிய பரிசு.

    திருச்சேறை செந்நெறியப்பர் குறித்த திருநாவக்கரசரின் பாடல் வரிகள் அற்புதம்.

    பதிவின் இடையே, மிகப் பெரிய விஷயத்தை (முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கிலிருந்து விடுதலை ஆனது) சர்வ சாதரணமாக நுழைத்திருக்கிரீர்கள். அதுவரை பதிவை மேலோட்டமாக படித்து வந்தவள், அதற்கு பிறகு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

    இந்த பிரார்த்தனைக்கு வினப்பிக்கும் அனைத்து வாசகர்களும் நோயற்ற உடலும் கடனில்லாத வாழ்க்கையும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  2. சுந்தர் அண்ணா நான் இலங்கை நாட்டை சேர்ந்தவன், உங்களுடைய தளத்தை இரு வருடமாக படித்து வருகின்றேன். கடந்த 2 நாட்களாக வேல்மாறல் மகா மந்திரமும் படித்து வருகின்றேன். இப்போதும் கூட உங்களுடைய பழைய பதிவுகளை அடிக்கடி பார்ப்பேன். நான் வங்கி மற்றும் தெரிந்தவர்கள் என் சிலரிடம் கடன் பட்டு இருக்கிறேன். வங்கி கடன் அடைக்க முடியாமல் உங்களுக்கு மெயில் அனுப்பும் இந்த தருணத்தில் கூட மிகுந்த மன அழுத்தத்திலும் கவலையிலும் இருக்கின்றேன். அத்தோடு வேலை இல்லாத பிரச்சனும் கூட எனக்கு இருக்கின்றது அண்ணா.

  3. வழக்கறுத்தீஸ்ஸ்வரர் மகிமைக்கு மேற்கண்ட சம்பவம் உதாரணமாக ஏற்று கொள்ள முடியவில்லை.விவாதத்திற்கு உரியது..தவிர்த்திருக்கலாம்.

    தெய்வம் நின்று கொல்லும்.

    மாறாக நியாயமான கோரிக்கைகள் வெற்றி பெற்றதை மேற்கோள் காட்டிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *