Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > அம்பாள் அனுக்ரஹம்! பெரியவா கடாக்ஷம்!!

அம்பாள் அனுக்ரஹம்! பெரியவா கடாக்ஷம்!!

print
மது ரைட்மந்த்ரா அலுவலகத்தில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை பற்றிய பதிவு இது. ஆயுத பூஜை என்பதே செய்யும் தொழிலை தெய்வமாக பாவித்து கொண்டாடப்பட்டு வரும் ஒன்று. அதுவும் நம் தளத்திற்கு என்று தனி அலுவலகம் துவக்கிய பின்பு வரும் முதல் ஆயுத பூஜை என்பதால் நிச்சயம் சற்று வித்தியாசமாக கொண்டாடவேண்டும் என்று விரும்பினோம். ஆனால், எப்படி என்று தான் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

பூஜைக்கான ஏற்பாடுகள் மற்றும் பர்சேஸிங்கில் முந்தைய தினம் திங்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் ஆரிய கௌடா சாலையில் இருக்கும் சுப்ரமணி தெருவில் உள்ள ‘ஸத்குரு ஸபா’ என்கிற வேதபாடசாலைக்கு சென்றோம். இந்த பாடசாலையில் சுமார் 17 வித்யார்த்திகள் தங்கி வேதம் படித்து வருகிறார்கள். இந்த பாடசாலையில் உள்ள கோ-சாலை பசுக்களுக்கு நாம் தீவனம் வாங்கித் தருவது வழக்கம். இங்கு இரண்டு பசுக்களும் கன்றுகளும் உள்ளன.

Padasalai Students 3

Padasalai Students 2
ஒரு பிரதோஷ பூஜையின் போது…
 பூஜையில் பெரியவாவுக்கு வில்வ அர்ச்சனை

பூஜையில் பெரியவாவுக்கு வில்வ அர்ச்சனை
ஆதி சங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடிய போது இப்படித் தான் இருந்திருப்பாரோ?
ஆதி சங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடிய போது இப்படித் தான் இருந்திருப்பாரோ?
அவர்கள் முகத்தில் தெரியும் அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை உண்டா?
அவர்கள் முகத்தில் தெரியும் அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை உண்டா?

Padasalai Students 8Padasala Studentsஇங்கு அடிக்கடி சென்று பசுக்களை தரிசித்து, கன்றுகளுடன் விளையாடி, மாணவர்களையும் சந்தித்து அவர்களுடன் நேரத்தை செலவிட்டு அவர்களுடன் ஒரு தோழன் போல பழகி வருகிறோம். அவர்களின் சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்யும் பாக்கியமும் நமக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்து வருகிறது. இதன் மூலம் பாடசாலையை நிர்வகித்து வரும் திரு.பாலசுப்ரமணிய கனபாடிகள் அவர்கள் நமக்கு நன்கு அறிமுகமானார்.

அவரை நேரில் சந்தித்து நமது பூஜைக்கு அழைப்பு விடுக்கலாம் என்று தோன்ற அவரை சந்தித்து நமது அலுவலகத்தில் செவ்வாய் மாலை ஆயுத பூஜை கொண்டாடப்படவிருப்பதை கூறி அவரும் அவரது திருமதியும் அவசியம் நம் பூஜைக்கு வந்திருந்து நம்மை ஆசீர்வதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

தனக்கு வேறொரு அலுவல் இருப்பதாகவும் வேண்டுமானால் மாணவர்களை அனுப்பி வைப்பதாகவும் கூறினார். ‘பொற்காசு எடுக்கச் சென்றால் புதையலே கிடைத்தது போல’ மகிழ்ந்தோம். அனைத்து மாணவர்களையும் (17 பேர்) அவர் அனுப்பி வைக்க தயார் என்றாலும் நமது அலுவலகம் சிறியது என்பதல 10 பேர் வந்திருந்து சிறப்பித்தாலே போதும் என்றும் கூறி நன்றி தெரிவித்தோம்.

இந்த கலியுகத்தில் அதுவும் 2015 ல் வேதம் படிக்கும் இம்மாணவர்கள் நம்மை பொருத்தவரை நிஜ ஹீரோக்கள். கொண்டாடப்பட வேண்டியவர்கள். இம்மாணவர்களை அலுவலகம் வரவழைத்து அனைவருக்கும் ஆயுத பூஜை பையை கொடுத்து, மீதியுள்ள ஏழு மாணவர்களின் பைகளையும் அவர்களிடமே தருவதாக பிளான்.

வேதபாடசாலை மாணவர்கள் பங்கேற்ற ரைட்மந்த்ரா அலுவலக ஆயுத பூஜை!

மாணவர்கள் வருவது உறுதியானவுடன் நமது ஏற்பாடுகள் துரிதமடைந்தது. ஏற்கனவே மாணவர்களுடன் நமக்கு நல்ல அறிமுகம் என்பதால் அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று நமக்கு தெரியும். எனவே ஆப்பிள், சீதாப்பழம், சுவீட், காரம், பொரி & கடலை மிக்ஸ் என பைகள் தயார் செய்யப்பட்டது.

நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் ஏற்கனவே தளத்தில் நமது ஆயுத பூஜை பற்றி கூறி வருமாறு தகவல் தெரிவித்தாயிற்று.

Rightmantra Ayudha Pooja 2

Rightmantra Ayudha Pooja 8

Rightmantra Ayudha Pooja 4Rightmantra Ayudha Pooja 5

Rightmantra Ayudha Pooja 18செவ்வாய் மாலை நண்பர் குட்டிசந்திரனை அனுப்பி மாணவர்களை அழைத்து வரச் செய்தோம். மாணவர்கள் வரும்போது நமது அலுவலகத்தில் கீழ் சென்று எதிர்கொண்டு அவர்களை வரவேற்று அழைத்து வந்தோம். “உங்கள் வருகையால் எங்கள் அலுவலகம் புனிதமடைந்தது!” என்று கூறி அவர்களை வணங்கி வந்திருந்த நம் நண்பர்கள் அனைவரிடம் அவர்களை அறிமுகம் செய்துவைத்தோம்.

மாணவர்கள் முதலில் அமர்ந்து வேதம் ஓதினார்கள். ஸ்ரீ ருத்ரம், ஸ்ரீ சூக்தம், புருஷ சூக்தம், துர்கா ஸ்தோத்ரம் முதலியவற்றை ஓதினார்கள். அதை ஓரமாக நின்று உள்ளம் நெகிழ்ந்து கேட்டுக்கொண்டிருந்தோம். நடப்பது எல்லாம் நமக்கு கனவு போல இருந்தது. காரணம் பொதுவாக பாடசாலை மாணவர்களை வெளியே அனுப்ப மாட்டார்கள். நமக்காக அவர்கள் வந்திருந்தது நம்மை நெகிழச் செய்தது.

Rightmantra Ayudha Pooja 6

Rightmantra Ayudha Pooja 7Rightmantra Ayudha Pooja 9Rightmantra Ayudha Pooja 10

Rightmantra Ayudha Pooja 12Rightmantra Ayudha Pooja 14Rightmantra Ayudha Pooja 15மாணவர்களும் கடமைக்காக இல்லாமல் ஆர்வமுடன் வந்திருந்து வேதம் ஓதி, முறைப்படி பூஜை செய்து பட்டையை கிளப்பிவிட்டார்கள். நம்மையும் பெருமைப்படுத்திவிட்டார்கள். நம் தளம் சார்பாக வேத வித்துக்களுக்கு ஆயுத பூஜை பை கொடுக்கப்பட்டது.

மகாவிஷ்ணுவின் தசாவதாரம் போல பத்து மாணவர்கள் வந்திருந்தனர். அவர்கள் பாதம் பட்டதால் நம் அலுவலகம் பவித்திரம் பெற்றது என்பதே உண்மை.

Rightmantra Ayudha Pooja 16

Rightmantra Ayudha Pooja 17Rightmantra Ayudha Pooja 21Rightmantra Ayudha Pooja 20அவர்களுக்கு உரிய மரியாதைகள் செய்து, அவர்களை கொண்டே வந்திருந்த நம் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் உழவாரப்பணி குழுவினருக்கும் ஆயுத பூஜை பிரசாத பையை கொடுத்தோம். இது அவர்கள் மட்டுமல்ல நாம் கூட எதிர்பார்க்காத ஒரு பாக்கியம்.

‘அம்பாள் அனுக்ரஹம்! பெரியவா கடாக்ஷம்!!’ வேறு என்ன சொல்ல?

Rightmantra Ayudha Pooja 22

Rightmantra Ayudha Pooja 19

Rightmantra Ayudha Pooja 1

சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந தேவம் தேவோ ந கலு குசல ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வாம்-ஆராத்யாம் ஹரி-ஹர-விரிஞ்சதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத-புண்ய:ப்ரபவதி

பி.கு.:  முன்னதாக சரஸ்வதி படம் ஒன்றை வாங்கி பூஜையில் வைக்க முடிவு செய்திருந்தோம். ஆனால், என்ன தோன்றியதோ திடீரென்று முப்பெரும் தேவியர் (துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி) மண் பொம்மைகளை வாங்கி வந்து அலுவலகத்தில்  வைத்தோம். அடுத்த ஆண்டு நமது இல்லத்து கொலுவில் அவற்றை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  மகா பெரியவாவின் அறிவுரைக்கேற்ப, அடுத்த ஆண்டு முதல் நமது இல்லத்தில் நிச்சயம் கொலு வைக்கப்படவிருக்கிறது. (இடையில் சில பல காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது).

நல்லது நடக்கட்டும்! மங்களம் உண்டாகட்டும்!! சுபம் சுபம்!!!

=============================================

ஒரு வேண்டுகோள்!

அடுத்தடுத்த அறப்பணிகள் மற்றும் செலவினங்களால் தளம் தற்போது கடும் நிதிச்சுமையில் இருக்கிறது. ஊருக்கு நடுவே இருக்கும் குளத்து நீர் எப்படி அனைவரின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறதோ அது போன்றது தான் ரைட்மந்த்ரா கணக்கில் இருக்கும் பணமும் தகுதியுடைய பல விஷயங்களுக்கு தவறாமல் செல்லும். வாசகர்கள் மனமுவந்து நன்கொடை அளித்து, தளம் தொய்வின்றி தொடரவும் நம் பணி சிறக்கவும் உதவ வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். சில வாசகர்கள் நமக்கு உதவ விருப்பம் தெரிவித்திருந்தும் அதை செய்ய அவர்களுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. அப்படிப்பட்டவர்கள் இப்போது செய்தால் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

உங்கள் உதவிக்கரத்தை எதிர்நோக்கும்…

அன்பன்,
ரைட்மந்த்ரா சுந்தர்

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=============================================

Also check :

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!

=============================================

ஒரு கனவின் பயணம்!

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

=============================================

[END]

 

One thought on “அம்பாள் அனுக்ரஹம்! பெரியவா கடாக்ஷம்!!

  1. இது தான் இது தான் ஆயுத பூஜை கொண்டாட்டம். கொண்டாடப்படவேண்டியவர்களை அழைத்து வந்து கொண்டாடிவிட்டீர்கள். புகைப்படங்களை பார்க்கும்போது நானும் அங்கே இல்லையே என்று தோன்றுகிறது.

    ராம நாமத்தின் மகிமையை பரப்பிக்கொண்டிருக்கும் பாம்பே ஞானம் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த நம் அலுவலகத்தில், இன்று வேதம் படிக்கும் மாணவர்கள் வந்திருந்து ஆயுத பூஜை செய்திருக்கிறார்கள். வளர்ச்சி என்றால் அது இது தான் வளர்ச்சி.

    தாங்கள் நல்லது நினைத்தால் அதை நடத்திக்கொடுக்க திருவருள் சித்தமாக இருக்கிறது என்பது புரிகிறது.

    மாணவர்கள் ஒவ்வொருவரின் முகங்களில் தான் எத்தனை எத்தனை மலர்ச்சி. ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கல்வெட்டு. குறிப்பாக கொலு முன்பாக மாணவன் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் (அந்த கமெண்ட் சூப்பர்!) கண்ருகுட்டிகளுடன் மாணவர்கள் விளையாடும் புகைபப்டமும், பசுக்களுடன் போஸ் கொடுக்கும் புகைப்படமும் உண்மையில் கவிதை.

    தாங்கள் மேன்மேலும் உயர்ந்து தளமும் வளர்ச்சியடைந்து பார்ப்பவர் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *