தனக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்க்காத ஜான் அந்தோணி முற்றிலும் நிலை குலைந்துவிட்டார். விரைவில் விதவையாகப் போடும் தனது மனைவிக்கென்று இதுவரை எதையுமே தான் சேர்த்து வைக்காதது அவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
இராணுவத்தினருக்காக இதற்கு முன்பு ஒரு சில நாடகங்களை அரங்கேற்றியிருந்தாலும் அவருக்கு எழுத்து திறமை ஒன்றும் பெரிதாக வெளியே காண்பிக்கப்படவில்லை. ஆனால், தனக்கு உள்ளே ஒரு மிகப் பெரிய நாவலாசிரியர் ஒருவர் உறங்குவது அவருக்கு தெரியும். எனவே தன் மனைவிக்கு எக்கச்சக்கமாக ராயல்டியை விட்டுச் செல்லவேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் ஒரு நாள் டைப்ரைட்டரில் அமர்ந்து தனது மனதில் இருந்த ஒரு கருவை கதையாக்கம் செய்யத் துவங்கினார். அதை தன்னால் பப்ளிஷ் செய்ய முடியுமா? சந்தையில் விற்க முடியுமா? என்றெல்லாம் அவருக்கு தெரியாது. அவர் அப்போது இருந்த நிலையில் வேறேதுவும் அவருக்கு தோன்றவில்லை. அவற்றுக்கு வழியும் இல்லை.
அது 1960 ஆம் ஆண்டு. மருத்துவ அறிக்கையின் படி, ஒரு குளிர்காலம், ஒரு வசந்த காலம் மற்றும் ஒரு கோடைக்காலம் இவை தான் அவரது வாழ்க்கையில் இன்னும் பாக்கியிருக்கிறது. அதாவது இன்னும் சில மாதங்களில் அவர் தன் பயணத்தை இந்த உலகிலிருந்து முடித்துக்கொள்வார். அடுத்த இலையுதிர் காலத்திற்குள் தன் உயிர் தன் உடலிலிருந்து இலை உதிர்வது போல உதிர்ந்துவிடும் என அவருக்கு தெரியும்.
ஆனால் அந்த ஒரு ஆண்டு இடைவெளிக்குள், ஜான் அந்தோணி கிட்டத்தட்ட 6 நாவல்களை எழுதி முடித்துவிட்டார். (வெற்றிகரமான மிகப் பெரிய நாவலாசிரியர்கள் சிலரின் வாழ்நாள் படைப்பே இவ்வளவு தான்!).
ஆச்சரியத்தக்க வகையில் ஒரு வருடம் கடந்த பின்னர் கூட ஜான் அந்தோணிக்கு எதுவும் ஆகவில்லை. அவர் இறக்கவில்லை. ஆம்…அவர் மூளையில் ஏற்பட்டிருந்த கட்டி தானாகவே கரைந்து இறுதியில் போயேபோய்விட்டது.
அதற்கு பிறகு வெற்றிகரமாக தனது நாவலாசிரியர் பணியை தொடர்ந்தவர் தனது வாழ்க்கையில் மொத்தம் 70 க்கும் மேலான BEST-SELLER நாவல்களை எழுதிக் குவித்தார். இவரது முழுப் பெயர் (ஜான் அந்தோணி பர்ஜஸ் வில்சன்.)
சற்று யோசித்து பாருங்கள்… அவருக்கு மூளையில் புற்றுநோய்க் கட்டி தோன்றி மருத்துவர்கள் அவருக்கு ஒரு வருட நாள் குறிக்கவில்லை என்றால் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பாரா?
கடும் சோதனைகள், துன்பங்கள் என்று நாம் கருதும் பெரும்பாலானவை உண்மையில் நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய வரங்களே!
நாம் அனைவரும் கிட்டத்தட்ட மேற்சொன்ன ஜான் அந்தோணி போலத் தான். உள்ளுக்குள் எண்ணற்ற திறமையை வைத்திருப்போம். ஆனால் வெளியே இருந்து ஏதேனும் ஒரு ‘அவசர நிலை’ அறிவிப்பு வந்தால் மட்டுமே அதை வெளிப்படுத்துவோம்.
ஜான் அந்தோணிக்கு ஏற்பட்டிருந்த நிலை உங்களுக்கும் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்.
“இன்னும் ஒரு வருடம் தான் நீங்கள் உயிர் வாழ்வீர்கள் என்றால், அந்த வாழ்க்கை எந்தளவு தனித்துவத்துடன் வித்தியாசமாக இருக்கும்? நீங்கள் என்ன செய்வீர்கள்?” இந்த கேள்விக்கு ஆத்மார்த்தமான ஒரு பதிலை தயார் செய்யுங்களேன். ஒருவேளை உங்கள் மிகப் பெரிய வெற்றிப் பயணம் இதை படித்த பிறகு தொடங்கக்கூடும்.
வாழ்த்துக்கள்!!
======================================================================
It’s better LATE than NEVER!
வாழ்க்கை என்பதே சவால்களும் போராட்டமும் நிறைந்தது தான். பிரச்னைகளும் துன்பங்களும் நமக்கு தோன்றவில்லை என்றால் நமது உண்மையான திறமையும் ஆற்றலும் வெளிவராமலே போய்விடும்.
‘மந்திரத்தில் மாங்காய் காய்க்கவேண்டும்’ என்கிற எண்ணம் எப்போதும் எந்த விஷயத்திலும் நமக்கு இருக்கக்கூடாது. நம்மால் முடிந்ததை நாம் செய்தால், நம்மால் முடியாததை இறைவன் செய்வான். நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைக்கவேண்டும். அதைத் தான் இறைவன் விரும்புவான்.
இந்த தளத்திற்கு வாசகர்கள் அளிக்கக்கூடிய உண்மையான CONTRIBUTION என்பது பணமோ இதர உதவிகளோ அல்ல. நம் நோக்கம் அதுவும் அல்ல. நாம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான்… இந்த தளத்தின் பதிவுகளை படித்து அவற்றின் கருத்துக்களை உங்கள் நடைமுறை வாழ்வில் செயல்படுத்தி, வெற்றி காணவேண்டும். அதுவே நமக்கு பெருமை. வாழ்க்கையில் நாளை சாதித்த பிறகு “உங்கள் சாதனைக்கு காரணம் என்ன? இதில் உதவியவர்கள் யார்?” என்று உங்களிடம் கேள்வி கேட்டால், நமது தளத்தின் பெயரை குறிப்பிடும் அளவுக்கு நீங்கள் இருக்கவேண்டும். அது தான் நீங்கள் செய்யும் உண்மையான கைம்மாறு. இந்த தளத்தின் மூலம் குறைந்தபட்சம் 10,000 சாதனையாளர்களை இந்த சமூகத்தில் உருவாக்க உறுதி பூண்டிருக்கிறோம். அதற்கு ஆகும் காலத்தை பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால் இலக்கை அடைந்தே தீருவோம். இதைப் படிக்கும் நீங்களும் அதில் ஒருவராக இருக்கவேண்டும்!
‘திறமைசாலிகள்’ அனைவரும் ஏதோ ஒரு வகையில் எதற்கோ அடிமைப்பட்டு முடங்கிக்கிடக்கிறார்கள். எனவே நாம் பந்தயத்தில் வேகமாக ஓடி வெற்றிக் கோப்பையை கைப்பற்ற இதுவே சரியான தருணம். IT’S BETTER LATE THAN NEVER. விழித்துக்கொள்ளுங்கள்! வெற்றி பெறுங்கள்!!
======================================================================
Please check :
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
======================================================================
Also check earlier Monday Morning Special articles:
======================================================================
சுவாரஸ்யமான, மனநிறைவான வாழ்க்கை வேண்டுமா? – MONDAY MORNING SPL 84
‘அணுகுமுறை’ என்கிற மந்திரச்சொல் – MONDAY MORNING SPL 83
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? – MONDAY MORNING SPL 82
அகத்தின் அழகு முகத்தில் தெரியும், எச்சரிக்கை! MONDAY MORNING SPL 81
பராசக்தியின் உடலில் தோன்றிய கொப்புளங்கள் – MONDAY MORNING SPL 80
சிரித்தவர்களை பார்த்து சிரித்த நிஜ ஹீரோ – MONDAY MORNING SPL 79
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78
ஒரு சிறிய பேட்ஜ் செய்த அற்புதம் – MONDAY MORNING SPL 77
மனுஷனா பிறந்துட்டு எதுக்குங்க மாட்டைப் போல உழைக்கணும்? MONDAY MORNING SPL 76
நல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்? MONDAY MORNING SPL 75
வாழ்க்கையில் உயர என்ன வழி? – MONDAY MORNING SPL 74
கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73
மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா? – MONDAY MORNING SPL 72
பல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71
ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70
நீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா? MONDAY MORNING SPL 69
திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68
வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66
உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65
முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
======================================================================
[END]
கடும் சோதனைகள் என்று நாம் கருதும் நிகழ்வுகள் பல நேரங்களில் நம் முன்னேற்றதிற்காகவே. இதை நானும் அனுபவ பூர்வமாக பார்த்திருக்கிறேன்.
நன்றி
சங்கர்
ஜான் அந்தோணியின் கதை கேள்விப்பட்டிராதது. வியக்கவைப்பது. நம்மை சிந்திக்கவைப்பது.
உண்மை தான்… சோதனைகளே என்றும் சாதனைக்கு படிக்கட்டுக்கள்.
நீங்கள் சந்திக்க போகும் சாதனையாளர்களில் நான் ஒருத்தியாக கண்டிப்பாக இருப்பேன் என்று நம்புகிறேன். நான் மட்டுமல்ல நம் ஒவ்வொரு வாசகரும் இருப்பார்கள்.
நன்றி
உமா வெங்கட்
It’s a great example for self confidence and self belief.
Each one of us should read this article without fail. Superb edition.
Let us follow it and pledge to bring the best out of us.
நம்பிக்கை, உழைப்பு, கடவுள் அருள் , நல எண்ணம், பெரியவர்கள் ஆசி, இந்த ஐந்தில் ஒன்று இல்லாது இருந்தாலும் முன்னேற முடியாது.
மிக அருமை தங்கள் கட்டுரை.
முடிந்தால் தங்கள் திங்கள் கட்டுரைகளை பிரிண்ட் செய்து பொது மக்கள் கூடும் பகுதியில் தரலாம். நண்பர்கள் உதவி உடன்.
நன்றி
கே. சிவசுப்ரமணியன்
நல்ல யோசனை
மேலும் நமது தள வாசகர்கள், நமது தளத்தின் திங்கள் கிழமை சிறப்பு பதிவின் பிரதி எடுத்து, அவரவர்கள் இருக்கும் இடத்தின் அருகாமையில் உள்ள பள்ளிகளில் கொடுத்து, அப்பள்ளிகளின் தகவல் பலகையில் display செய்ய கேட்டு கொள்ளலாம்.
மானவர்களின் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமை திறன் வளர மிகவும் உபயோகமாக இருக்கும்
இவற்றை புத்தங்கங்களாக்க தகுந்த பதிப்பாளரை தேடி வருகிறேன் சார். நன்றி.
திரு.சம்பத் குமார் அவர்கள் சொல்வது போலவும் செய்யலாம். முயற்சிக்கிறேன்.
– சுந்தர்
வாழ்க வளமுடன்
வாழும் வரை போராடு …………………
நன்றி
தங்கத்தைப் புடம் போடும்போது அதிலுள்ள மாசுகள் நீங்கி அது ஒளி வீசுவதைப் போல நமக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையும் நம்மைப் பக்குவப் படுத்தவும் நமக்குள்ளிருக்கும் சாதனையாளரை வெளிக்கொணரவும் உதவுகிறது என்று இந்தப் பதிவின் மூலம் உணர்ந்து கொண்டோம்…..நன்றிகள் பல………….
மிகவும் பயன் உள்ள நல்ல பதிப்பு.இதை பிரிண்ட் செய்து ஒவ்வரு வீட்டிலும் ஒட்டி வைத்தல் நம் தினம் பார்க்கும்போது நமக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும்.
நன்றி
ஐயா வணக்கம்
கடந்த பத்து தினங்களாக உங்கள் பதிவுகளை படித்து கொண்டு வருகிறேன் மக்களின் அறியாமையை நீக்கும் விடிவௌ்ளியாய் துருவநட்சத்திரமாய் ஜொலிக்கிறது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அடைபட்டு இருள் சூழ்ந்து இருக்கிற திறமையை ஆண்மீக சக்தி கொண்டு திறந்து தன்னம்பிக்கை கொண்டு வாழ உங்கள் பதிவு பேருதவியாக இருக்கும் நானும் பங்களிக்கிறேன்
SundarJi,
Excellent one..
Thanks,
Ramesh