Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > தட்டுங்கள்… இந்தக் கதவு நிச்சயம் திறக்கும்!

தட்டுங்கள்… இந்தக் கதவு நிச்சயம் திறக்கும்!

print
‘அடி மேல் அடி, இடி மேல் இடி, எங்க தான் ஓடுறது எப்படித் தான் ஜெயிக்கிறது? எங்கே போனாலும் செக் வெக்கிறாங்களே… ஒண்ணுமே புரியலியே…’ – இந்தக் கேள்விகளோடு பலர் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நாமும் இதே கேள்விகளோடு ஒரு காலத்தில் ஓடிக்கொண்டிருந்தவன் தான்.

நண்பர் ஒருவர் சமீபத்தில் அலைபேசியில் நம்மிடம் சில நிமிடங்கள் பேசவிரும்புவதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். மதியம் அழையுங்கள் என்று சொல்லியிருந்தோம். அதே போல மதியம் நம்மை தொடர்புகொண்டபோது “அலுவலகத்தில் பிரச்னை மேல் பிரச்னை. என்ன செய்தாலும் இறுதியில் என் கழுத்தை பிடிக்கிறார்கள். என் வேலையே போய்விடும் போலிருக்கிறது. என்ன செய்வது எங்கு போவதென்று ஒன்றுமே தெரியவில்லை….” பேசிக்கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் அழுதே விட்டார்.

அவரை சற்று ஆசுவாசப்படுத்தினோம். “ஜி… உங்ககிட்டே சொல்றதா வேணாமான்னு கூட யோசிச்சேன். உங்களை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும்னு தோணிச்சு” என்றார்.

“பிரச்னையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு நமது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்புகொள்ளலாம்” என்றோம்.

நமது நூல்களை அது வெளியான சமயத்திலேயே அவர் வாங்கியிருந்தாலும் அவர் படித்தாரா என்று தெரியவில்லை. “படிச்சிருந்தாலும் சரி படிக்கலேன்னாலும் சரி…. பரவாயில்லை மீண்டும் அதை ஒருமுறை படிங்க” என்றோம்.

சுயமுன்னேற்ற நூல்கள் என்பவை படித்துவிட்டு ஷெல்பில் வைக்கும் ரகம் அல்ல. உடலில் சேரும் அழுக்குகளை நீக்க எப்படி தினசரி சோப்பு போட்டு குளிக்கிறோமோ அதே போல அவற்றை அடிக்கடி வாசிக்கவேண்டும். அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்கள், பிரச்னைகள், சவால்கள் இவற்றை பொறுத்து மனமானது பல நேரங்களில் பலவீனமாகிவிடும். விளைவு தன்னம்பிக்கை போய்விடும். தன்னம்பிக்கை மட்டும் ஒருவருக்கு போய்விட்டால் கடவுளே அவர்கள் முன் வந்து நின்றாலும் அதனால் ஒரு பயனும் இல்லை. (இது ரொம்ப அர்த்தமுள்ள வரிங்க!)

அவருக்கு உடனடியாக தேவை நம்பிக்கை தான். எனவே அவருக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டி சில எளிய விஷயங்களை சொன்னோம். பயன்படுத்திக்கொண்டு மேலே ஏறி வரவேண்டியது அவர் கையில்.

நண்பர் மட்டுமல்ல அவரை போன்று, தொடர்ந்து அடிமேல் அடி… எப்படி போனாலும் இடி.. கீழே விழ குழி என்று பலர் இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் மீண்டு வர, வாழ்வில் ஜெயிக்க வழியே இல்லையா?

ஏன் இல்லை…? ஒன்றல்ல.. இரண்டல்ல… பல வழிகள் இருக்கின்றன.

கீழே நாம் அளித்துள்ள இந்த நிஜக் கதை பலருக்கு உபயோகமாக இருக்கும்.

தட்டும்போது திறக்காத கதவுகளே, பல புது துவக்கங்களுக்கு காரணமாக அமைகின்றன. அது எத்தனை உண்மை என்பதை இந்தக் கதையிலிருந்தே உணரலாம்.

தட்டுங்கள்… இந்தக் கதவு நிச்சயம் திறக்கும்!

ங்கே இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைப் போல, அமெரிக்காவிலும் ஒருவர் இருந்தார். அவர் பெயர் வாஷிங்டன் கார்வர். விவசாயிகள் நலம் காக்க – விவசாய நிலங்கள் லாபம் ஈட்ட இவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் மொத்தம் ஐநூறுக்கும் மேற்பட்டவை. அவருடைய வரலாறு சாதாரண வரலாறல்ல. பலருக்கு வாழ்க்கைப் பாடம்.

வாஷிங்டன் கார்வர் 1864 ஆம் ஆண்டு ஒரு வெள்ளையர் வீட்டு பண்ணையில் அடிமையாய் பணிபுரிந்து வந்த ஆப்பிரிக்க அமெரிக்க தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தார். தந்தையின் அரவணைப்போ அன்போ இன்றியே வளர்ந்து வந்த கார்வரை விதி புரட்டி போட்டது. இவரையும் இவரது தாயாரையும் அவரது சகோதரியையும் கொள்ளையர்கள் கடத்திச் சென்றுவிட்டனர். இவரை மட்டும் கொள்ளையர்கள் ஒரு வெள்ளையரிடம் ஒரு குதிரையை வாங்கிக்கொண்டு விற்றுவிட்டனர். அவர் இவர் மீது பரிதாபப்பட்டு மீண்டும் இவர் வளர்ந்த வீட்டிலேயே கொண்டு வந்து சேர்த்துவிட்டு சென்றார்.

இவரது முதலாளி இவரது விசுவாசத்தையும் நேர்மையையும் பார்த்து இவர் கல்வி கற்க ஏற்பாடு செய்தார். ஏற்கனவே பெற்றோரை இழந்து வறுமையில் வாடும் தாம், படித்தால் தான் முன்னேறமுடியும் என்பதை உணர்ந்த கார்வர் ஆர்வமுடன் கல்வி பயின்றார். பென்சில் வாங்கக் கூட வழியில்லாத இவர், பணக்கார மாணவர்கள் பயன்படுத்திவிட்டு வீசியெறியும் கட்டைவிரல் நீளமே உடைய பென்சில்களை சேகரித்து அதைக் கொண்டு எழுதிப் பழகினார்.

If you love enough11 வயது நெருங்கும் சமயம், தனக்கு ஆரம்ப கல்வியை அளித்த சூசன் மற்றும் மோசஸ் தம்பதியினரிடம் விடைபெற்று உயர்நிலை கல்வி கற்க, மிசௌரிக்கு இடம்பெயர்ந்தார். அப்போதெல்லாம் கறுப்பின மக்களுக்கு என தனி பள்ளிகள். ஒரே ஒரு அறை. அதில் ஒரே ஒரு ஆசிரியர். அங்கு தான் இவர் உயர்நிலை கல்வியை கற்றார்.

படிப்பு செலவுக்கு லாண்டரி, சலூன், ஹோட்டல், குதிரைப் பண்ணை முதலியவற்றில் வேலை பார்த்து பொருளீட்டினார். பின்னர் 1891 ஆம் ஆண்டு அயோவா விவாசயக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டமும் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் அதே கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். இவரது திறமையை கண்டு வியந்து இவருக்கு புக்கர் டி வாஷிங்டன் தனது டஸ்க்கீஜீ பல்கலைக்கழகத்தின் இயக்குனர் பொறுப்பை அளித்தார்.

தான் வாழ்வில் சாதித்து நல்ல நிலைமைக்கு வந்துவிட்டாலும் தன் இனமக்கள் அடக்கியாளப்பட்டு கொண்டிருப்பது கார்வருக்கு வேதனையை தந்தது.

கறுப்பின மக்கள் எந்த விதத்திலும் முன்னேற விடக்கூடாது என்பதில் வெள்ளையர்கள் உறுதியாக இருந்து அவர்கள் மீது பல வரிகளை போட்டு அவர்கள் வளர்ச்சியை ஒடுக்கி வந்த நேரம் அது.

பல்வேறு வரிகளை கறுப்பின மக்கள் மீதும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மீதும் போட்டாலும் நிலக்கடைலைக்கு மட்டும் வரி போடவில்லை. ஏனெனில், நிலக்கடலை விளைநிலங்கள் பெரும்பாலும் வெள்ளையர்களிடமே இருந்தது.

இதைக் கண்ட கார்வர் தமது மக்களிடம் நிலக்கடலை பயிரிடும்படிக் கூறினார். நிலக்கடலை நல்ல விளைச்சல் தந்து வரியில்லா  விற்பனை மூலம் நல்ல லாபம் அனைவருக்கும் கிடைத்தது. மக்கள் மகிழ்ந்தார்கள். “ஓ… அப்படியா சங்கதி” என்று விஷயத்தை புரிந்துகொண்ட அரசாங்கம், நிலக்கடலைக்கும் வரிபோட்டது. லாபம் கிடைத்து வந்த ஒரே விலை பொருளையும் விற்க முடியாத நிலைமை.

========================================================

Don’t miss these articles…

அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா?

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்!

========================================================

என்ன செய்வதென்று கறுப்பின மக்கள் கையைபிசைந்த நேரம் கார்வரை காணவில்லை. எங்கோ தலைமறைவானார்.

பிரச்னையை சமாளிக்க முடியாமல், கார்வர் தலைமறைவாகிவிட்டதாக பேச்சு எழுந்தது. சக கறுப்பின மக்களுக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது.

ஒரு சில வாரங்கள் கழித்து திரும்ப வந்தார் கார்வர்.

“கடலையை அப்படியே விற்றால் தான் வரி செலுத்த வேண்டும். அதன் மூலம் பல்வேறு பொருட்களை நாம் தயாரித்து விற்கலாம். அதற்கான பல வழிகளை நான் கண்டு பிடித்துள்ளேன். தின்பண்டங்கள் முதல் லிப்ஸ்டிக் வரை 28 பொருள்களை நாம் கடலையிலிருந்து செய்ய முடியும். இப்படி விற்றால் நாம் வரியால் பாதிக்கப்பட மாட்டோம்” என்றார்.

அவர் கூறுவதை யாரும் நம்பவில்லை. அந்த மனநிலையிலும் அவர்கள் இல்லை.

Carverஒரு நாள் தனது பிறந்தநாள் என்று கூறி, கறுப்பின முக்கிய பிரமுகர்களை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். விருந்தில் பல சுவையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. விருந்து பிரமாதமாக இருந்தது. அனைத்தும் நல்ல ருசி என்று சொல்லி அனைவரும் ஒரு பிடிபிடித்தனர்.

“உணவுப் பொருள்கள் அவ்வளவும் வேர்க்கடலையைக் கொண்டே தயாரிக்கப்பட்டன” என்று கார்வர் கூறியதும் அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள்.

பிறகு மக்கள் வேர்க்கடலையை அவர் கூறிய முறைப்படி மதிப்பு மிக்கதாக உருமாற்றம் செய்தார்கள். நல்ல லாபம் அடைந்தார்கள்.

நிலக்கடலையைக் கொண்டு கார்வரின் வழிகாட்டுதலின் படி சமையல் எண்ணெய், சோப்புகள், வாசனைத் திரவியங்கள், மை முதலான 300 க்கும் மேற்பட்ட துணைப் பொருட்களை உற்பத்தி செய்து பொருளாதாரத் தேவைகளைச் நிறைவேற்றிக்கொண்டனர். வெள்ளையர்கள் இதை செய்ய முயன்று தோற்றுப் போனார்கள்.

“இப்படி வேர்க்கடலையில் இவ்வளவு பொருள்கள் தயாரிக்கலாம் என்று எப்படி உங்களுக்குத் தோன்றியது?” என்று கேட்டபோது, “மனிதன் ஒவ்வொரு கதவாக அடைத்தான். எனவே நான் இயற்கையின் கதவைத் தட்டினேன். இயற்கை எனக்கு அள்ளிக் கொடுத்தது!” என்று பதிலளித்தார்.

எத்தனை அர்த்தமுள்ள பதில் தெரியுமா?

அளவற்ற ஆற்றல் இந்த பிரபஞ்சத்திடம் உள்ளது. கேட்போருக்கு அள்ளித் தர அது எப்போதும் தயாராக உள்ளது. தேடல் இருப்பவர்களுக்கு தான் அது தட்டுப்படும். இது புரியாதவர்கள் பத்தோடு பதினொன்றாக வாழ்க்கையை கழிப்பார்கள். புரிந்தவர்களோ ஆயிரத்தில் ஒருவராக மாறுவார்கள். செயல்படுத்துபவர்களோ கோடியில் ஒருவராக ஜொலிப்பார்கள்!

நீங்கள் பத்தோடு பதினொன்றா? ஆயிரத்தில் ஒன்றா? அல்லது கோடியில் ஒருவரா?

எல்லாம் உங்களிடம் தான் இருக்கிறது. கடவுளின் கைகளில் அல்ல.

கார்வரின் இடத்தில் ஒருவேளை நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று நன்கு யோசித்துப் பாருங்கள். சாதனையாளர்களின் சிந்தனைக்கும் நமது சிந்தனைக்கும் உள்ள வித்தியாசம் புரியும்!

A humble request to the respectable copy cats. Don’t use our works if you don’t want to promote us or support us in our mission!

=======================================================

Support Rightmantra to sustain!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

Also check :

விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!

உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?

ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)

உயர உயர பறக்க வேண்டுமா?

எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??

யார் மிகப் பெரிய திருடன் ?

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

========================================================

[END]

6 thoughts on “தட்டுங்கள்… இந்தக் கதவு நிச்சயம் திறக்கும்!

  1. அருமையான பதிவு சுந்தர்ஜி !!

    ஒரு ஆங்கில பழமொழி நினைவுக்கு வருகிறது – “Pray in storm – Keep on Rowing ”
    பிரார்த்தனையே எல்லா கஷ்டங்களுகான தீர்வு!!!

    தொடரட்டும் உங்கள் பதிவுகள்!!!

    நெ வீ வாசுதேவன்

  2. கார்வரின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் உலகமே நம் வசம் ஆகும்… மிகவும் அழகிய பதிவு. இந்த பதிவை படிக்கும் அனைவருக்கும் தன்னம்பிக்கை என்ற வேர் துளிர்த்து இருக்கும்.

    *******

    “உங்கள் தன்னம்பிக்கையும் , சுய மதிப்பையும் பிரக்ஞையோடு படிப்படியாக வளர்த்து எடுப்படதைவிட அதிக முக்கியமான வேலை உங்களுக்கு வேறெதுவும் இல்லை. உயர்ந்த நிலையிலான தன்னம்பிக்கை எல்லையற்ற சாத்தியக்கூறுகள் நிரம்பிய ஓர் உலகத்தை உங்களுக்குத் திறந்து விடும். நீங்கள் எப்படிப்பட்ட தன்னம்பிக்கை நிறைந்த மனிதராக ஆக விரும்புகிறீர்களோ , அப்படிப்பட்டவராகப் பேசவும், நடக்கவும், சிந்திக்கவும், நடந்து கொள்ளவும் செய்வதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கையை உங்களால் அதிகரித்துக்கொள்ள முடியும்” – பிரையன் ட்ரேசி & ஜே சுரேந்திரன்

    **********
    வாழ்க வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

  3. Really it is great to read a Great man history. Confidence will increase tremendously after reading it.

    Thanks to Right Mantra Sundar for publishing motivational articles Wonderful Job

  4. வாஷிங்க்டன் கார்வரின் வரலாற்றை படிக்க படிக்க சில்ரிப்பாக இருக்கிறது.

    எத்தகைய ஒரு சூழலில் அவர் வளர்ந்திருக்கிறார். விதியையும் பிறப்பையும் காரணம் காட்டி முடங்கிப் போகாமல், தானும் உயர்ந்து தனது குடியையும் உயர்த்திய இவர் கடவுளுக்கு சமம்.

    “நீ எதையாவது ஆழமாக உண்மையாக நேசித்தால் அது ஜடப்பொருளாக இருந்தாலும் உன்னுடன் பேசும்” என்று அவர் கூறியுள்ள பொன்மொழி நூற்றுக்கு நூறு உண்மை.

    உண்மையில் வாழவேண்டும் என்று முடிவு செய்தால் அவர்களுக்கு எத்தனையோ வழிகள் உண்டு என்கிற கவியரசு கண்ணதாசனின் வார்த்தைகளுக்கு நேரடி உதாரணம் இவர்.

    நல்லதொரு சாதனையாளரை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *