Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?

உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?

print
ம் தள வாசகர்களுள் ஒருவர் திரு.நாகராஜன் ஏகாம்பரம். சென்ற செப்டம்பர் மாதம் சிறுவாபுரியில் நடைபெற்ற வள்ளி மணவாளப் பெருமான் திருக்கல்யாண உற்சவத்தில் உறவினருக்காக பிரார்த்தனை செய்ய வந்திருந்த அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நம்மை அலுவலகத்தில் சந்திக்கவேண்டும் என்று நம்மிடம் நேரம் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் FAMILY மற்றும் WORK PLACE COMMITMENTS காரணமாக வார நாட்களில் அவரால் வரமுடியவில்லை. ஜனவரி 31 ஞாயிறு காலை நாம் மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வரவேண்டியிருந்ததால், முடிந்தால் அன்று காலை 9.00 மணியளவில் அலுவகத்தில் சந்திக்கலாம் என்றோம். ஒப்புக்கொண்டார்.

சொன்னபடி ஜனவரி 31 ஞாயிறு காலை நம் அலுவகத்துக்கு வந்தார். பரஸ்பரம் நல விசாரிப்புக்கு பின்னர் சிறிது நேரம் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். பெரியவா பற்றி பேச்சு திரும்பியது. நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

நம் பயணத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பான பதிவை ரைட்மந்த்ராவில் பார்த்து தான் மிகவும் வேதனைப்பட்டதாக தெரிவித்தார்.

“நான் சுயமுன்னேற்ற பதிவுகள் அளிப்பதாலேயே எனக்கு பிரச்னைகளே இல்லை என்றும் எனது பயணம் ஏதோ SMOOTH SAILING என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல. சராசரி மனிதனைவிட எனக்கு பிரச்சனைகள் அதிகம் உண்டு. என் பயணத்தில் உள்ள கஷ்டங்களை, சவால்களை சிலர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அதை பதிவு செய்தேன். மற்றபடி நான் மிக மிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்… நல்லதே நினைப்போம்….” என்றோம்.

Robin_Sharma

தம்மைப் போன்ற வாசகர்களுக்காகவாவது தளத்தை தொடர்ந்து நடத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“இறைவன் விட்ட வழி” என்றோம். அப்படி சொன்னதற்கு காரணம் இருக்கிறது.

சரி விஷயத்திற்கு வருகிறோம்.

திரு.நாகராஜன் ஏகாம்பரம் ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிகிறார். ஒரு இனிய குடும்பத்தின் தலைவர். இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

பிறந்தோம் வளர்ந்தோம் மறைந்தோம் என்று இல்லாமல் இந்த பூமிக்கு தன்னால் இயன்ற ஏதேனும் செய்ய விரும்பி பசுமை தழைக்க முற்படும் ‘POLLUTION FREE GREEN LIFE’ என்கிற ஒரு அமைப்பை துவக்கியிருக்கிறார். பசுமை மற்றும் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவதே இதன் பணி.

ஒரு மாபெரும் லட்சியத்தை கைக்கொண்டு மிகப் பெரியதொரு பயணத்தில் இறங்கியிருப்பவர் தனது பாதையில் ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

“தளத்தில் ஒரு பதிவை அளிக்கிறேன்.. உங்களுக்கு மட்டுமல்ல மேலும் பலருக்கு அது உபயோகமாக இருக்கும்” – சில யதார்த்தமான விஷயங்களை அவருக்கு கூறி நம்பிக்கையூட்டினோம்.

நாம் வழக்கமாக அனைவருக்கும் பரிசளிக்கும் திருக்குறள் நூலை அவருக்கு பரிசளித்து, “இதை கெட்டியாக பற்றிக்கொள்ளுங்கள்… வாழ்க்கைப் படகில் இது துடுப்பு போன்றது” என்றோம்.

நமக்கு விருப்ப சந்தாவாக தன்னால் இயன்றதொரு தொகையை அளித்தவர் தொடர்ந்து ஒரு போஸ்டரை பரிசளித்தார்.

RMS - Nagaraj ekambaram

“சில மாதங்களுக்கு முன்னர் வடாரண்யம் (திருவாலங்காடு) சென்றபோது அங்கு இந்த வாசகத்தை பார்த்தேன். மனதுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. இதைக் கொண்டு காரைக்கால் அம்மையாரையும், மஹாலக்ஷ்மியையும் வைத்து இரண்டு போஸ்டர்கள் செய்தேன். ஒன்றை எனது வீட்டில் லேமினேட் செய்து வைத்துவிட்டேன். மற்றொன்றை யாராவது ஒரு பொருத்தமான நபருக்கு தர விரும்பினேன். நீங்கள் தான் நினைவுக்கு வந்தீர்கள். எனவே பத்திரமாக எடுத்து வைத்து தற்போது உங்களுக்கு தர எடுத்து வந்தேன்” என்றார்.

ஆஹா… என்னவொரு அற்புதமான படம். அருமையான வாசகம்.

vendathakkadhu

நம் மூலம் அவருக்கு ஒரு மெஸ்ஸேஜ். அவர் மூலம் நமக்கு ஒரு ஒரு மெஸ்ஸேஜ். இது எந்தை ஈசனின் திருவிளையாடல்…

வேண்டத்தக்க தறிவாய் நீ!
வேண்ட முழுதுந்தருவாய் நீ!!
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீயே அருள் செய்தல் வேண்டும்!!

நான் எதிர்பார்த்த DIVINE’S CALL இதோ திரு.நாகராஜ் மூலம் கிடைத்துவிட்டது.

இதோ அவருக்காக (உங்களுக்காகவும்) நாம் அளிக்கும் பதிவு!

*****************************************

உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?

யாராலும் உங்களை தடுத்து நிறுத்த முடியாது.

ஆனால் உங்களை குறைகூற முடியும்.
உங்கள் வேகத்தை குறைக்க முடியும்.
உங்களை தளர்ச்சியடையச் செய்ய முடியும்.
உங்கள் பாதையில் தடைகள் ஏற்படுத்த முடியும்.

ஒருபோதும் உங்களை தடுத்து நிறுத்த முடியாது.
ஆம்… யாராலும் உங்களை தடுத்து நிறுத்த முடியாது.

ஆனால் உங்கள் செயலுக்கு உள்நோக்கம் கற்பிக்க முடியும்.
உங்களைப் பற்றி பிறரிடம் புறங்கூற முடியும்.
உங்கள் கால்களை இடறிவிடமுடியும்.
உங்களை அவநம்பிக்கை கொள்ளச் செய்யமுடியும்.

ஒருபோதும் உங்களை தடுத்து நிறுத்த முடியாது.
ஆம்… யாராலும் உங்களை தடுத்து நிறுத்த முடியாது.

ஆனால் உங்களை திசைதிருப்ப முடியும்.
உங்களுக்கு தவறான ஆலோசனை கூற முடியும்.
உங்களுக்கு தவறான திசையை காட்டமுடியும்.
முடியவே முடியாது என்று நிரூபிக்க பிரயத்தனப்பட முடியும்.

ஒருபோதும் உங்களை தடுத்து நிறுத்த முடியாது.
ஆம்… யாராலும் உங்களை தடுத்து நிறுத்த முடியாது.

ஏன் தெரியுமா?

அது உங்கள் மட்டுமே முடியும்.
ஆம்… உங்களை தடுத்த நிறுத்த உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும்.
உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் நீங்களே பொறுப்பு.

உங்களுக்கு என்ன நடந்திருந்தாலும் சரி, உங்களிடம் யார் என்ன சொல்லியிருந்தாலும் சரி, அது பற்றி நீங்கள் என்ன நினைத்துக்கொண்டிருந்தாலும் சரி… இதை நீங்கள் புரிந்துகொண்டு உங்கள் வெற்றிக்கான பொறுப்பை உங்கள் மீது ஏற்றிக்கொண்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

இது நம் அனைவருக்கும் பொருந்தும்.

BECAUSE THIS IS DIVINE’S CALL.

================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

================================================

Also check…

ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)

உயர உயர பறக்க வேண்டுமா?

வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?

எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??

‘வாழ்க்கைத் துணை’ (LIFE PARTNER) என்றால் என்ன?

பாசமுள்ள பார்வையிலே ‘கடவுள்’ வாழ்கிறான்… சரித்திரம் கூறும் உண்மை நிகழ்வு!

யார் மிகப் பெரிய திருடன் ?

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

================================================

[END]

8 thoughts on “உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?

  1. மிகவும் சிறப்பான பதிவு சுந்தர் அண்ணா…………

  2. மிகவும் அருமை சுந்தர் .. கடவுள் உங்களோடு இருக்கிறார் என்பதற்கு இதை விட வேறு என்ன வேண்டும். .. நீங்கள் நினைத்ததை அடைந்தே தீருவீர்கள்.. கவலை வேண்டாம்.

    நன்று.

  3. தங்கள் பதிவை படித்ததும், Whatsappஇல் படித்த message தான் ஞாபகம் வருகிறது. நம்மிடம் இருக்கம் பணம் சொற்பம், அனால் மற்றவர் / உறவினர் நினைப்பது மடி நிறைய பணம். அதே போல், நாம் எதாவது நல்லதோ பாசிடிவ ஆகவோ சொன்னால் , நாம் எதோ சூப்பராக இருப்பதாக நினைப்பதும் இயற்கை. ஆனால் நீங்கள் படும் பாடு புரிந்துகொள்ள முடிகிறது. என்னை போல் உண்மையான நண்பர்கள் / வாசகர்கள் உங்களுடன் இருக்கும் வரை கவலை பட வேண்டாம். மஹா பெரியவளின் ஆசீர்வாதமும், சாயி பகவன் அருளும் இருக்கும் வரை நீங்கள் (அல்ல நாம்) வெல்வது உறுதி. வாழ்த்துக்கள்.

  4. Hi ji,
    Great that you have got it at the right time.
    **
    yes as rajkumar sir says, that everyone tells good inspiring things to people – need not be doing.having phenomenal things in their life.
    In fact, Robin Sharma too has said the same in one of his books – he tells, “there’s a myth out there that people do these kind of motivational talks/write books are enlightened beings who spend their days in bliss and transcendence, offering the words of truth from the mountaintop. you should know that I’m very human. I struggle daily with my limitations, my fears. I see myself work in progress and continually challenge myself to use each day as a platform to evolve into the higher reaching of my inner life.”
    **
    And under the heading of who’s responsible for our success/failure, all lines are superb.
    yes, like Swami Vivekananda says, If we desire something, no one can stop us from achieving it. As in you’re a follower of him, you will achieve the magnitude of success soon ahead.
    Efforts you had put into this site for the past 4-5years – will surely reap into as good things, good future for site, readers and you.
    ***
    God bless.
    **
    Chitti.

  5. பொருத்தமான நபருக்கு சரியான நேரத்தில் அருமையான வாசகம் (இது கடவுளின் குரல் அன்றோ ) கொண்ட காலெண்டரை பரிசளித்த திரு நாகராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் . தாங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைவதற்கு ஈசன் வழி நடத்துவார். உங்கள் சேவை உள்ளம் சிறக்க வாழ்த்துகள்

    நம் வாசகர்களின் வாழ்வில் தாங்கள் ஓர் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வாசகர்களின் மனதில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். எங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் விதத்தில் இந்த தளம் பல அரிய பதிவுகளை கொடுத்துள்ளது. இன்னும் பல அரிய பதிவுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்
    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  6. உண்மையிலேயே அந்த ஈசனே, நானே உங்களுடன் இருக்கிறேன் கவலை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறான் திரு நாகராஜன் மூலம்.

    அற்புதமான படம். அருமையான வாசகம்.

    நம் வெற்றிக்கும் தோல்விக்கும் நாமே பொறுப்பு என்பதை மிக அழகாக தங்கள் நடையில் விளக்கியிருக்கிறீர்கள்.

    ராபின் ஷர்மா அவர்களின் மேற்கோள் அபாரம். தங்கள் பயணத்தில் உள்ள சவால்களை அது உண்மையில் புரியாதவர்களுக்கும் புரியவைக்கும்.

    அதை இங்கு நினைப்படுத்திய சிட்டி அவர்களுக்கு நன்றி.

    ராஜ்குமார் அவர்களின் கருத்து தான் என் கருத்தும். எங்களை போன்ற வாசகர்கள் இருக்கும் வரை எதற்கும் கவலைப்படவேண்டாம். உங்கள பயணத்தில் துணைநிற்போம்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *