Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!

மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!

print
து ஒரு கோடைக்காலம். மும்பையிலிருந்து பெங்களூருக்கு சென்றுகொண்டிருந்த உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில் நான் பெங்களூரு செல்வதற்காக குல்பர்காவில் காத்துக்கொண்டிருந்தேன். ட்ரெயின் வந்ததும் எனக்கு பெர்த் ஒதுக்கப்பட்டிருந்த இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரிசர்வ்டு கோச்சில் ஏறினேன். கோச் ஆல்ரெடி நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அன்-ரிசர்வ்டு பயணிகளும் நிறைய பேர் ஏறியிருப்பது புரிந்தது. நான் என் சீட்டில் அமர்ந்ததும் ரயில் நகர ஆரம்பித்தது.

அடுத்த ஸ்டேஷன் ஷஹாபாத் வந்த சற்று நேரத்திற்கெல்லாம் டிக்கட் பரிசோதகர் வந்தார்.

IMG_4210

“டிக்கெட்… டிக்கட்… ” அனைவரிடமும் டிக்கெட்டை கேட்டு பரிசோதித்துக்கொண்டு வந்தார்.

“சார்… கடைசி நேரத்துல டிக்கெட் கன்பார்ம் ஆகலை… வேற வழியில்லாம ஏறிட்டோம்”

“சார்… முந்தின ட்ரெயினை மிஸ் பண்ணிட்டேன்… இதோ பாருங்க டிக்கெட். நாளைக்கு கண்டிப்பா நான் பெங்களூரு போயே ஆகணும் சார்…”

ரிசர்வ்டு கோச்சில் ஏறியதற்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். டி.டி.ஆர் அவர்கள் கூறியதையெல்லாம் கேட்டாலும் தன் கடமையை சரியாக செய்தார். அனைவருக்கும் அபராதமும் புது டிக்கெட்டும் அவர் பாட்டுக்கு கொடுத்துக்கொண்டிருந்தர். கீதை படித்திருப்பார் போல.

என் பக்கம் திடீரென திரும்பியவர் “டிக்கெட் எங்கே?” என்றார்.

“நான் ஏற்கனவே உங்களிடம் என் டிக்கெட்டை காண்பித்துவிட்டேன்”

“மேடம்… நான் உங்களைச் சொல்லவில்லை. உங்கள் பெர்த்துக்கு கீழே ஒளிந்துகொண்டிருக்கிறாளே அந்த பெண்ணை சொன்னேன்.”

அப்போது தான் யாரோ என் பெர்த்துக்கு கீழே ஒளிந்துகொண்டிருப்பது எனக்கு புரிந்தது.

“ஹே… வெளியே வா….” டிக்கெட் பரிசோதகர் சற்று கடுமையான குரலில் அதட்ட, அடுத்த சில வினாடிகளில் சுமார் 14 வயதுள்ள அந்த டீன் ஏஜ் பெண், நடுங்கிக்கொண்டே பெர்த்துக்கு அடியில் இருந்து மெல்ல தலையை நீட்டியபடி வெளியே வந்தாள்.

ஒல்லியான கருமையான தேகம். மருண்ட விழிகள். அவள் பயத்தில் நடுங்கிக்கொண்டிருப்பது பார்த்தாலே புரிந்தது. அழுதழுது கண்கள் வறண்டிருந்தன. அணிந்திருந்த ஆடைகள் ஆங்காங்கே கிழிந்திருந்தன. தலைமுடி வாரப்படாமல் பரட்டையாக இருந்தது.

“ம்… இடத்தை காலி பண்ணு… வாடி (WADI JUNCTION) ஸ்டேஷன்ல இறங்கிடு… இல்லே நானே வெளியே தள்ளிடுவேன்… ” வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை பிடித்து இழுத்தார். அந்தப் பெண் நகர மறுத்தாள்.

இந்த போராட்டம் நடைபெற்றுகொண்டிருக்கும்போதே வாடி ஸ்டேஷன் வந்துவிட்டது. டீ… காபி… சாப்பாடு… என பெட்டிகளை மொய்த்த வியாபாரிகளிடம் ஆளாளுக்கு வாங்கிக்கொண்டிருந்தனர்.

இருட்ட ஆரம்பித்துவிட்ட முன்னிரவு நேரம். இந்த நேரத்தில் இந்த சின்னப் பெண்ணை இங்கு இறக்கிவிட்டாள் அவள் எங்கே போவாள்?

பரந்து விரிந்த எனது பொதுவாழ்வில் இந்த சூழல் எனக்கு புதிது. பார்த்துக்கொண்டிருந்த எனக்கு சங்கடமாக இருந்தது. அதற்கு மேல் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை.

பக்கத்தில் டிக்கெட் செக்கிங் செய்துகொண்டிருந்த டி.டி.ஆரிடம் “சார்… அந்த பொண்ணுக்கு நான் டிக்கெட் எடுக்குறேன். அவளை ஒன்னும் செய்யாதீங்க…”

என்னை ஒரு மாதிரியாக பார்த்த டி.டி.ஆர்…. “டிக்கெட் எடுத்து கொடுக்குறதுக்கு பதில் ஒரு பத்து ரூபா கொடுத்தீங்கன்னா அந்த பொண்ணு சந்தோஷப்படுவா…”

train poor girl

“சார்… ஏற்கனவே இருட்ட ஆரம்பிச்சுடுச்சு… இந்த நேரத்துல அந்த பொண்ணை இறக்கி விட்டா எங்கே போவா?”

“நீங்க வேறம்மா… இவங்களுக்கு இது தான் பொழைப்பே. இந்த ட்ரெயின்ல இருந்து இறங்கி வேற ட்ரெயின்ல ஏறுவாங்க. அப்புறம் வேற… டிக்கெட் எடுத்துக் கொடுத்தா கூட போகமாட்டாங்க. எதுக்கு உங்க காசை வேஸ்ட் பண்றீங்க? அதுக்கு பதிலா கையில அஞ்சொ பத்தோ கொடுங்க… வாங்கிட்டு பேசாம போயிடுவாளுங்க….”

நான் அவர் கூறியதை பொருட்படுத்தவில்லை.

“நீ எங்கேம்மா போகணும்?” என்றேன் அந்த பெண்ணை பார்த்து.

அவள் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தாள். என் மீது நம்பிக்கை வரவில்லை போல.

டி.டி.ஆர். சிரித்தார். “நான் தான் சொன்னேன்ல…. அனுபவம் தான் உங்களுக்கு சரியான வாத்தியாரு… ஹும்… ”

அவர் சொல்வது உண்மையாகவே இருக்கட்டுமே. சில நூறு ரூபாய்கள் செலவு செய்வதால் நாம் ஒன்றும் பெரிதாக இழந்துவிடமாட்டோம். பெங்களூருக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்துட்டால் … அவள் எங்கே இறங்க விருப்பப்படுறாளோ அங்கே இறங்கிக்கொள்ளட்டும் என்று கருதி டி.டி.ஆரிடம் அபராதத்தை செலுத்தி, அவளுக்கு டிக்கெட் எடுத்தேன்.

எங்கள் சீட்டில் மற்றவர்களை கொஞ்சம் நகரச் செய்து அவளுக்கு உட்கார இடம் ஏற்படுத்திக் கொடுத்தேன். வேண்டா வெறுப்பாக நகர்ந்தார்கள்.

ஆனால் அவளோ உட்கார மறுத்து அப்படியே நின்றுக்கொண்டிருந்தாள். அவளுக்கு சாப்பாடு வரவழைத்து டின்னர் பாக்ஸை அவளிடம் கொடுத்தேன்.

அவள் எதற்கும் மசியவில்லை. என்னிடம் பேசவுமில்லை.

“இங்கே பாரும்மா… நீ வாயை திறந்து சொன்னா தான் எனக்கு எதுவும் புரியும்… நீயா சொல்லாதவரை எனக்கு எப்படி தெரியும். இந்தா உன்னோட டிக்கெட். நீ எங்கே இறங்கணும்னு நினைக்கிறியோ அங்கே இறங்கிக்கோ”

அவளும் நின்றபடியே இருந்தாள். நேரம் செல்ல செல்ல, பலர் கோச்சில் ஆங்காங்கு கீழே படுத்துக்கொண்டார்கள். பெர்த்தில் இருந்தவர்கள் தங்கள் பெர்த்தில் ஐக்கியமானார்கள்.

நான் அப்படியே தூங்கிப்போனேன். விழித்துப் பார்த்தபோது காலை மணி 6.00 ஐ நெருங்கிக்கொண்டிருந்தது.

அந்த பெண்ணை பார்த்தேன். உட்கார்ந்தபடி கோழித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் வழியில் எங்கும் இறங்கவில்லை என்று புரிந்தது. பக்கத்தில் இருந்த டின்னர் பாக்ஸ் காலியாக இருந்தது. பரவாயில்லை, வாங்கிக்கொடுத்ததை சாப்பிட்டிருக்கிறாள் என்பதை அறிந்தபோது திருப்தியாக இருந்தது.

அதற்குள் முற்றிலும் விடிந்துவிட்டது. பெங்களூருக்கு சில ஸ்டேஷன்களே இன்னும் பாக்கி என்பதால் கம்பார்ட்மெண்ட் காலியாக ஆரம்பித்தது. எனக்கு எதிரில் காலியாக இருந்த இடத்தை காட்டி அவளை அமரச் சொன்னேன்.

சற்று நேரம் கழித்து அந்த பெண் அச்சம் அகன்று மெதுவாக என்னிடம் பேச ஆரம்பித்தாள்.

அவள் பெயர் சித்ராவாம். வட கர்நாடகத்தில் உள்ள பிதார் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவள். அவள் தந்தை ஒரு கூலித் தொழிலாளி. பிறந்ததிலிருந்தே தாயை இழந்துவிட்ட துரதிர்ஷ்டசாலி இவள். அவள் தந்தை இரண்டாம் திருமணம் செய்துகொண்டு சித்தி மூலம் இரண்டு மகன்களை பெற்றார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தந்தை இறந்துவிட, சித்தியின் கொடுமை இவளால் தாள முடியாது போய்விட்டது. இவளுக்கு சாப்பாடே போடாமல், அடி அடியென்று அடித்து வீட்டு வேலையை செய்யச் சொன்னாள். ஒரு கட்டத்தில் இந்த கொடூர வாழ்க்கை சலித்துவிட, வீட்டை விட்டு வெளியேறி வந்துவிட்டாள். வந்தவளுக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. பெங்களூரு ரயிலில் ஏறிவிட்டாள்.

ரயில் பெங்களூரை அடைந்துவிட, நான் சித்ராவுக்கு குட்பை சொல்லிவிட்டு கம்பார்ட்மெண்ட்டை விட்டு இறங்கினேன்.

**************************************************************

Don’t miss this:

ஒரு கப் பால் – உண்மைக் கதை!

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

‘கலைவாணி’ என்னும் கறுப்பு வைரம்!!

**************************************************************

என்னுடைய டிரைவர் வந்து என்னுடைய லக்கேஜை எடுத்துக்கொண்டார். நான் பின்தொடர்ந்து கார் பார்கிங்கிற்கு சென்றேன். யாரோ என்னை கவனிப்பது போன்ற உணர்வு. திரும்பிப் பார்த்தால்… சித்ரா! என்னையே வைத்த கண் வாங்காமல் சோகமாக பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால், என்னால் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? ஒரு கழிவிரக்கம் காரணமாக அவளுக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்தேன். அவ்வளவே. ஆனால் இவளோ தனக்கு கடன்பட்டவளாக என்னை ஆக்கிவிடுவாள் போலருக்கிறதே? இதென்ன வம்பாப் போச்சே…

நான் நடக்க ஆரம்பித்து பார்கிங் சென்று காரில் ஏறி அமர்ந்தேன்.

வெளியே சித்ரா என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். முன்பின் தெரியாத நகரத்தில் அவளுக்கு என்னைவிட்டாள் வேறு யாரும் இல்லை என்று புரிந்தது. மேலும் என் மீது ஏற்பட்ட நம்பிக்கை மற்றும் அன்பின் காரணமாக என்னுடன் ஒட்டிக்கொண்டுவிட்டாள்.

எனக்கு மனதை என்னவோ செய்தது.

நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? வாடி ஸ்டேஷனில் இரவு 7.30 க்கு இந்த பெண் தன்னந்தனியாக இறங்குவது பற்றி நாம் கவலைப்பட்டோம். ஆனால் பெங்களூர் போன்ற மெட்ரோ நகரில் அவள் பாதுகாப்பை பற்றி யோசிக்கவில்லையே. இங்கு இவளுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாமே…!

“வந்து கார்ல ஏறிக்கோம்மா”

என் டிரைவர் அவளையும் என்னையும் புரியாமல் பார்த்தார்.

“நேரே ராம் வீட்டுக்கு வண்டியை விடுப்பா…”

ராம், ஆதரவற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக காப்பகம் நடத்தி வருகிறார். அவரது சேவையை பார்த்து அவரை ஊக்கப்படுத்தவேண்டி அவரது காப்பகத்திற்கு எங்கள் நிறுவனத்திலிருந்து CSR மூலம் பொருளாதார உதவிகள் செய்துவருகிறோம்.

DSC01655

தற்போதைக்கு சித்ரா அங்கு தங்கியிருக்கட்டும். என் டூரெல்லாம் முடித்துவிட்டு வந்த பிறகு இவள் எதிர்காலம் பற்றி முடிவு செய்துகொள்ளலாம் என்பது என் திட்டம்.

சித்ராவை அந்த காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்த லேடி சூப்பர்வைசர் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து சித்ராவுக்கு புது துணிமணிகள் வாங்கிக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

“சித்ரா… இங்கே உனக்கு எல்லா பாதுகாப்பும் உண்டு. இங்கேயிருந்து எங்கேயும் போய்விடாதே. அடுத்த முறை நான் உன்னை சந்திக்க வரும் வரையாவது இங்கே நீ இருக்கவேண்டும்” என்று சித்ராவிடம் கேட்டுக்கொண்டேன்.

சித்ரா அங்கு தொடர்ந்து இருப்பாளா மாட்டாளா என்கிற சந்தேகம் எனக்கு இருந்து வந்தது. சொன்னது போல இரண்டு வாரம் கழித்து நான் அங்கே சென்றபோது நான் ஆச்சரியப்படும் வகையில் சித்ரா அங்கே மிகவும் சந்தோஷமாக இருந்தாள். நான் சென்றபோது காப்பகத்தில் சின்ன குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துகொண்டிருந்தாள். என்னை பார்த்ததும் மலர்ந்த முகத்துடன் எழுந்து நின்றாள்.

சூப்பர்வைசர் சொன்னார்… “சித்ரா மிகவும் நல்ல பெண் மேடம். இங்கு உள்ள குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதுடன், கிச்சனில் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறாள்…. அவள் ஊரில் அவள் நல்ல மாணவியாம். பள்ளிக்கூடம் சென்று படிக்க அவளுக்கு ஆசை… ஆனால் அவள் கிராமத்தில் அவள் குடும்பத்தினர் அதற்கு அனுமதிக்கவில்லை”

தொடர்ந்து பேசியதில் “சித்ராவை பள்ளிக்கு அனுப்பலாம்” என்று ராம் சொன்னார்.

“அவள் படிப்பு முடியும் வரை அவள் படிப்பு செலவை நான் ஏற்றுகொள்கிறேன்” என்று கூறி அவளை பக்கத்தில் இருந்த உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துவிட்டோம்.

சித்ராவுக்கு ஒரு நல்ல இடம் கிடைத்துவிட்டது. அவள் ஒரு புதிய திசையை நோக்கி தன் பயணத்தை துவக்கிவிட்டாள் என்பதை அறிந்து நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

அதற்கு பிறகு நான் மிகவும் பிசியாகிவிட, காப்பகம் சென்று வருவது படிப்படியாக குறைந்துபோனது. ஆனால் அடிக்கடி ராமை தொடர்புகொண்டு சித்ராவை பற்றி விசாரிப்பேன்.

IMG_0034

பத்தாம் வகுப்பு தெரிவில் அவள் 85% மார்க்குகள் எடுத்தாள். அவளை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல ஷெல்டர் சென்றிருந்தேன். அவள் மேற்படிப்பு படிப்பதாக இருந்தால், நான் படிக்க வைக்க தயாராக இருந்தேன். ஆனால் அவள் மறுத்துவிட்டாள். “அக்கா… என் நண்பர்களிடம் பேசி நான் ஒரு முடிவு செய்திருக்கிறேன். நான் கம்ப்யூட்டர் படிப்பில் டிப்ளோமா படிக்க விரும்புகிறேன். இதன் மூலம் படித்து முடித்தவுடனேயே எனக்கு வேலை கிடைக்கும்!” என்றாள்.

எத்தனை சீக்கிரம் பொருளாதார தன்னிறைவு பெறமுடியுமோ அத்தனை சீக்கிரம் அதை பெற விரும்புகிறாள் என்று புரிந்தது.

சொன்னபடி மூன்றாண்டுகளில் டிப்ளோமா படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டாள் சித்ரா. ASSISTANT TESTING ENGINEER ஆக அவளுக்கு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. முதல் மாத சம்பளம் வாங்கியவுடனேயே ஒரு புடவையும் ஸ்வீட் பாக்ஸ்ஸும் வாங்கிக்கொண்டு வந்து என் அலுவலகம் வந்து என்னை பார்த்தாள். அவளது பண்பை நினைத்து சிலிர்த்துப்போனேன்.

இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன். தனது முதல் மாத சம்பளம் முழுவதையுமே காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் ஏதேதோ வாங்கி தருவதில் செலவிட்டிருக்கிறாள் என்று.

இப்போது வேறு ஒரு பிரச்னை முளைத்தது. ராம் என்னை தொடர்புகொண்டு “மேடம்… உங்களுக்கே தெரியும் அந்த ஷெல்டர் படிக்கிற ஸ்டூடண்ட்ஸ்க்கு மட்டும் தான்னு. சித்ரா வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டதால மேற்கொண்டு ஷெல்டர்ல எப்படி வெச்சுக்கிறதுன்னு தெரியலே… ” ராம் தயங்கி தயங்கி சொன்னார்.

“சித்ராகிட்டே சொல்லி ஷெல்டர்ல தங்கியிருக்குறதுக்குன்னு தனியா ஏதாவது ஒரு அமௌண்ட்டை மாசாமாசம் தரச் சொல்றேன் கவலைப்படாதீங்க” என்றேன்.

அவளுக்கு கல்யாணம் ஆகி கணவன் வீட்டுக்கு போகிற வரைக்கும் இந்த இடம் தான் அவளுக்கு பாதுகாப்பானது என்பது என் அபிப்ராயம்.

“அவளுக்கு ஏதாவது பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிற திட்டம் இருக்கா மேடம்?” ராம் கேட்டார்.

அட இது வேறயா… நானே அவளுக்கு ஒரு கார்டியன் போல ஆகிட்டதாலே… இது போன்ற பொறுப்புகள் தேடி வருகிறது போல என்று சிரித்துக்கொண்டேன். ஆனால், என்னைப் பொருத்தவரை இறைவன் பிரச்னையை அளித்தலும் அவனே தீர்வையும் தந்துவிடுவான்.

ஒன்னு நான் அவளுக்கு ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும். இல்லே அவளா ஒரு லைஃப்-பார்ட்னரை தேடிக்கணும். இது தான் தீர்வு.

“ராம்… அவளுக்கு இப்போ வயசு 20 தானே ஆகுது. கொஞ்ச வருஷம் அவ வேலைக்கு போகட்டும். பின்னால அது பத்தி முடிவு பண்ணிக்கலாம்… Btw, உனக்கு தெரிஞ்சு நல்ல பையன் யாராச்சும் இருந்த எனக்கு சொல்லு” என்றேன்.

ஒரு நாள் டெல்லியில் இருந்தபோது சித்ராவிடம் இருந்து அழைப்பு வந்தது. “அக்கா… என் கம்பெனில என்னை யூ.எஸ். அனுப்புறாங்க. நான் யூ.எஸ். போலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்கா. அதுக்கு முன்னே உங்களை பார்த்து BLESSINGS வாங்க விரும்பினேன். ஆனால் நீங்களோ பெங்களூரில் இல்லை போலிருக்கு….” என்றாள்.

“ஆமாம்மா…. நான் இப்போ டெல்லில இருக்கேன். நீ நல்லபடியா போய்ட்டு வா… ஆல் தி பெஸ்ட்!”

ஆண்டுகள் உருண்டோடின. சித்ராவிடமிருந்து அவ்வப்போது மின்னஞ்சல் வரும். அவள் பணியில் அவள் பட்டையை கிளப்புகிறாள் என்று மட்டும் எனக்கு தெரியும். யூ.எஸ்.ஸின் பல முக்கிய நகரங்களில் நடைபெற்ற ப்ராஜக்ட்டுக்கு அவள் நிறுவனம் அவளை அனுப்பியது. யூ.எஸ். வாழ்க்கையை அவள் மிகவும் என்ஜாய் செய்கிறாள் என்று மட்டும் புரிந்தது. அவள் எங்கேயிருந்தாலும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

san-francisco copy

அடுத்த சில ஆண்டுகள் கழித்து யூ.எஸ்.ஸில் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற ‘கன்னட கூட்டா’ என்கிற அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்ற நான் சென்றிருந்தேன். யூ.எஸ்.ஸில் வசிக்கும் பல கன்னடர்கள் அந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஒரு பிரபல ஹோட்டலில் உள்ள கன்வென்ஷன் ஹாலில் தான் அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே அந்த ஹோட்டலிலேயே தங்க முடிவு செய்தேன்.

விழா நல்லபடியாக முடிந்து நான் பேசிவிட்டு ஹோட்டல் அறையை செக் அவுட் செய்து விமான நிலையத்துக்கு புறப்பட ஆயத்தமானேன். ரிசப்ஷன் கவுண்டர் சென்று என் பில்லை செட்டில் செய்ய முயன்றபோது, ரிசப்ஷனில் இருந்த பெண், “நீங்க ஒரு பைசா கூட கொடுக்கவேண்டாம் மேடம். உங்கள் பில் மொத்தத்தையும் அந்த பெண் செட்டில் செய்துவிட்டார். அவளுக்கு உங்களை நிச்சயம் தெரிந்திருக்கவேண்டும் என்று கருதுகிறேன்.”

திரும்பிப் பார்த்தால்… அங்கே சித்ரா. ஒரு நல்ல நீட்டான புடவை கட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள். பாப் தலையுடன் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தாள் சித்ரா. அவள் அருகே டிப்டாப்பான ஒரு இளைஞர் நின்றுகொண்டிருந்தார்.

அவள் கண்களில் அத்தனை மகிழ்ச்சி, பெருமிதம். என்னை பார்த்தவுடன் வேகமாக என்னிடம் வந்து என்னை கட்டியணைத்துக்கொண்டவள் எனது கால்களை தொட்டுக் கும்பிட்டாள்.

ஒரு கணம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போன எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வார்த்தைகள் நாவினின்று எழ மறுத்தன.

சித்ரா இந்தளவு முன்னேறி வந்திருப்பது எனக்கு பேருவகையை தந்தது.

“சித்ரா எப்படிம்மா இருக்கே… உன்னை பார்த்து எவ்ளோ நாளாச்சு? நான் இங்கே இன்னைக்கு வந்திருக்கேன்னு உனக்கு எப்படி தெரியும்?”

“அக்கா… நான் இங்கே சான் பிரான்சிஸ்கோவுல தான் இருக்கேன். இந்த ‘கன்னடா கூட்டா’ அமைப்புல நானும் மெம்பரா இருக்கேன். உங்களுக்கு சர்ப்ரைஸ் தர நினைச்சேன். உங்க ஷெட்யூலை தெரிஞ்சிக்கிறது எனக்கு ஒன்னும் கஷ்டமா இல்லை”

“ஓ… இண்டரெஸ்ட்டிங்… அப்புறம் உன்கிட்டே நிறைய கேட்கனும்னு நினைச்சேன்… உன் வேலை எப்படி போய்க்கிட்டுருக்கு? இந்தியா வந்தியா? உன்னோட வருங்கால கணவரை முடிவு பண்ணிட்டியா? எல்லாத்துக்கும் மேல… இந்த ஹோட்டல் பில்லை நீ ஏன் கட்டினேம்மா?”

“இல்லே அக்கா. இங்கே யூ.எஸ். வந்ததுலே இருந்து நான் இந்தியாவுக்கு இன்னும் போகலே. இந்தியாவுக்கு வந்தா உங்களை பார்க்காம எப்படிக்கா வருவேன்? அக்கா அப்புறம் உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்லணும். நீங்க என் கல்யாணத்தை பத்தி ரொம்ப கவலைப்பட்டீங்கன்னு எனக்கு தெரியும். நான் எந்த கம்யூனிட்டின்னு நீங்க கடைசி வரைக்கும் கேட்கலே. அதுனால எனக்கு மாப்பிள்ளை தேடுறது உங்களுக்கு ரொம்ப கஷ்டம்னு எனக்கு தெரியும். ஒருவழியா நானே என் Mr.Right ஐ கண்டுபிடிச்சிட்டேன். இவர் என் கொலீக். இவரும் நானும் இந்த இயர் எண்ட்ல மேரேஜ் பண்ணிக்கப்போறோம்கா… நீங்க அவசியம் எங்க கல்யாணத்துக்கு வந்து எங்களை வாழ்த்தனும்கா”

நான் ஒருவித ஜென் நிலையில் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“அக்கா… நீங்க மட்டும் எனக்கு உதவி பண்ணலேன்னா நான் இப்போ என் நிலைமை என்னன்னு எனக்கே தெரியாதுக்கா. ஒருவேளை பிச்சை எடுத்துகிட்டிருக்கலாம், இல்லை யார் வீட்லேயோ பத்து பாத்திரம் தேச்சுக்கிட்டுருக்கலாம்… இல்லை பாலியில் தொழில்ல தள்ளப்பட்டிருக்கலாம்.. இல்லை தற்கொலை பண்ணி செத்துக்கூட போயிருக்கலாம்… நீங்க தான் என் வாழ்க்கையையே மாத்தினீங்க… உங்களுக்கு நான் என்னென்னைக்கும் கடமைப்பட்டிருக்கேன்கா..”

“இல்லை சித்ரா…. உன்னோட வெற்றி படிக்கட்டில் நான் ஒரு படி. அவ்வளவு தான். இன்னைக்கு நீ இருக்குற இந்த நிலைமைக்கு காரணம், உனக்கு அடைக்கலம் கொடுத்த அந்த ஷெல்டர், உன்னை நல்லா படிக்க வெச்ச அந்த ஸ்கூல், உன்னை யூ.எஸ். அனுப்பிய உன் கம்பெனி, எல்லாத்துக்கும் மேலே உன்னோட விடாமுயற்சி உழைப்பு நன்றியுணர்ச்சி இப்படி பல படிகள் தான் நீ இன்னைக்கு இருக்குற இந்த நிலைமைக்கு காரணம்! ஒரே ஒரு படி மட்டும் கடைசியா வர்ற END RESULT க்கான பலனை எடுத்துக்கிறது நியாயமில்லை…”

“அது உங்களோட பார்வை அக்கா… ஆனா நான் அதை ஏத்துக்கமட்டேன்….”

நான் என் மனதில் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு வந்தேன்… “சித்ரா நீ உன்னோட புது வாழ்க்கையை ஆரம்பிக்கப்போறே… பணத்தை சேர்க்கணும்… நீ எதுக்கு ஹோட்டல் ரூம் பில்லை கட்டினே?” என்றேன்.

கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி மீண்டும் என்னை கட்டிக்கொண்ட சித்ரா, “அக்கா… நீங்கள் எனக்கு மும்பை to பெங்களூரு டிக்கெட் எடுத்தீங்களே அதுக்காக…!”

வாழும் வாழ்க்கையே மிகச் சிறந்த வழிபாடு!

*********************************************************************

இது கற்பனை கதையல்ல… நிஜக்கதை!

Infosys Co-Founder Mrs.Sudha Murthy
Infosys Co-Founder Mrs.Sudha Murthy

ஆம்… ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் தலைவர் நாராயணமூர்த்தி அவர்களின் மனைவி திருமதி.சுதா மூர்த்தி அவர்கள் எழுதிய ‘BOMBAY TO BANGALORE’ (PENGUIN BOOKS) என்கிற நூலில் ஆங்கிலத்தில் எழுதிய உண்மை சம்பவத்தை உங்களுக்காக தமிழில் மொழிபெயர்த்து சாரி ‘உயிர்பெயர்த்து’ தந்திருக்கிறோம். ஆங்கில எழுத்துருவின் சுருக்கம் கீழே தனியே தரப்பட்டுள்ளது. நூலில் உள்ள ORIGINAL TRANSCRIPTION சற்று பெரிதாக விரிவாக இருக்கும்.

(இந்த பதிவு இனி இணையத்தில் பிரபலமாகக்கூடும். அந்நேரங்களில் நம் ரைட்மந்த்ரா தான் இதை முதலில் மொழிபெயர்த்து அளித்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! ஏனெனில்… நம்ம மக்கள் சிலரே திருப்பதிக்கே லட்டு கொடுக்கும் வேலையை சின்சியரா செய்வார்கள்!!)

பொதுவாக இது போன்ற பதிவுகளை அளித்துவிட்டு இறுதியில் நமது கருத்துக்களை அளிப்பது நம் வழக்கம். ஆனால், இந்த முறை பொறுப்பை வாசகர்களிடம் விட்டுவிடுறோம். இந்த பதிவைப் பொறுத்தவரை ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் நீதிகள் ஒளிந்திருக்கின்றன. எனவே வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதியவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

நன்றி!

********************************************************************

Help us to run this website…

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

********************************************************************

Sudha Murthy, chairperson, Infosys Foundation is known for her ability to glean interesting stories from the lives of ordinary people. The following is extracted from her latest collection, ‘Bombay to Bangalore’

Bombay to Bangalore!

It was the beginning of summer. As I boarded the Udyan Express at Gulbarga, I saw that the 2nd class reserved compartment was jam-packed with people. I sat down and was pushed to the corner of the berth. The ticket collector came in and started checking people’s tickets. Suddenly, he looked in my direction and asked, what about your ticket? ‘I have already shown my ticket to you’, I said.

‘Not you madam; the girl hiding below your berth’. I realized that someone was sitting under my berth. When the TC yelled at her, the girl came out of hiding. She was thin, scared and looked like she had been crying profusely. She must have been about 13 or 14 yrs old. The TC started forcibly pulling her out from the compartment.

Suddenly, I had a strange feeling. ‘Sir, I will pay for her ticket’, I told the TC. He looked at me and said, ‘Madam, if you give her 10 rupees, she will be much happier with that than with the ticket.’ I didn’t listen to him but bought her a ticket to the last destination, Bangalore, so that the girl could get down wherever she wanted. Slowly, she started talking. Her name was Chitra. She lived in a village near Bidar. Her father was a coolie and she had lost her mother at birth. Her father who had remarried, died a few months ago. Since her step mother started ill treating her, she left home in search of a better future. By this time the train had reached Bangalore. I got down from the train and then I saw Chitra watching me with sad eyes. I took compassion on her and took her to our friend Ram’s place. Ram managed shelter homes for boys and girl which were supported by Infosys.

Chitra had found a home and new direction in her life. I always enquired about her well-being over the phone. Her progress was good and I wanted to sponsor her college studies. But she said, ‘ No, Akka. I would like to do diploma in computer science so that I can immediately get a job.’ She came out with flying colours in her diploma and obtained a job in a software company. With her first salary, she bought me a saree and a box of sweets.

One day, when I was in Delhi, she called me up to say that her company is sending her to the USA. She wanted to take my blessings but I was here in Delhi. Years passed. Chitra was doing very well and was sending me e-mails regularly.

Years later, I was in San Francisco attending the ‘Kannada Koota’, organized by the Kannada speaking families of California. I was staying in the same hotel where the Kannada meet was taking place. When I checked out of the hotel room and went to the reception to settle the bills, the receptionist said, ‘Ma’am, you don’t have to pay. The lady over there has already paid your bill.’ I turned around and found Chitra there, standing with a young man. She was looking very pretty in short hair. Her eyes were beaming with happiness. She hugged me and touched my feet. I was overwhelmed with joy. I was very happy to see the way things had turned out for Chitra.

But I came back to my original question; ‘Chitra, why did you pay my hotel bill?’ Suddenly sobbing, she hugged me and said: ‘Because you paid for my ticket from Bombay to Bangalore!

=========================================================

Also check :

கார்பரேட் அடிமைக்கு கிடைத்த ‘பளார்’ – ஒரு உண்மை சம்பவம்!

கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

அன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்!

நண்பா… நீ மனிதனல்ல தெய்வம்!

ஒரு நடிகைக்கு தந்தை எழுதிய கடிதம்! MUST READ

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

=========================================================

[END]

7 thoughts on “மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!

  1. உதவி பெற்ற அந்த பெண் தான் பெற்ற உதவியை நன்கு உபயோகித்ததனால் தான் வெற்றி பெற முடிந்தது. மேலும் நன்றி மறவாமை, இது தான் அந்த பெண் தனக்கு உதவிய பெண்ணுக்கு செய்த மிக பெரும் மரியாதை என்று நான் நினைக்கிறன்.

  2. கடவுள் நேரில் வரமாட்டார். இது போன்ற மனித தெய்வங்கள் மூலமாகத்தான் நிறைவேற்றுவார்.
    தன்னம்பிக்கை கதைகளின் superhit இந்த பதிவு.
    சாதரணமாக படிக்க ஆரம்பித்து இரக்கம், வேதனை, பச்சாதாபம், ஆசிரமத்தில் சேர்ந்தபிறகு ஒரு நிம்மதி, மார்க் லிஸ்ட் பார்த்து சந்தோசம், அவள் முன்னேற்றத்தில் ஒரு பெருமிதம் இறுதியாக நன்றியுணர்ச்சி என ஒரு மிக பெரிய வரலாறே படித்த திருப்தி.
    எங்கள் உணர்வுகளின் மொத்த சங்கமம். நன்றி.

  3. நம் தளத்தில் வெளியான பதிவுகளில் மிகச் சிறந்த பதிவு இது என்பேன். படித்து முடித்தா போது மனதிற்குள் எழுந்த இனம் புரியாத ஒரு உணர்வு, மனதை மிகவும் லேசாக்கிவிட்டது.

    என்ன சொல்ல, மிகப் பெரிய நிறுவனத்தின் தலைவராக இருந்து இரண்டாம் வகுப்பில் பயணம் செய்திருக்கிறார் சுதா மூர்த்தி அவர்கள். அவர் தான் இன்போசிஸ் தலைவர் என்பதே சக பயணிகளுக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.

    யார் எப்படி போனால் எனக்கென்ன, எனக்கு என் வேலையும் குடும்பமும் தான் முக்கியம் என்று நடமாடும் மனிதர்கள் உள்ள நாட்டில் தாய்மைக்கே உரிய உணர்வுடன் சித்ராவை காப்பாற்றி கரை சேர்த்து அதற்கு காரணம் நான் அல்ல என்று கூறியிருக்கும் சுதாமூர்த்தி அவர்கள் ஒரு கர்மயோகி என்றால் மிகையாகாது.

    சித்ராவும் கிடைத்த உதவியை நன்கு பயன்படுத்திக்கொண்டு, நன்றி மறவாத நல்ல பண்பை வாழ்க்கை நெடுகிலும் கடைப்பிடித்து தானும் உயர்ந்துவிட்டார்.

    அவருக்கு இருந்த அந்த நன்றியுனற்சினால் தான் அவர் மேலும் மேலும் உயர்ந்தார் என்பது உண்மை.

    தனக்கு கிடைத்த முதல் சம்பளத்தில் சுதா அவர்களுக்கு புடவையும் இனிப்பும் வாங்கிக்கொடுத்ததோடு மட்டுமல்லாமல், தன்னை ஆதரித்த காப்பகத்துக்கும் சம்பளத்தை செலவு செய்த அந்த நல்லுள்ளத்துக்கு நல்லது நடக்காமல் போய்விடுமா என்ன?

    எண்ணம் போல வாழ்க்கை என்பது சித்ரா அவர்களின் வாழ்க்கையே உதாரணம். இறுதியில் நீங்கள் கொடுத்திருக்கும் ஒற்றை வரி பன்ச் சூப்பர்.

    பதிவின் ஒவ்வொரு வரியிலும் பிரேமிலும் உங்கள் சிரத்தை தெரிகிறது.

    இது போல மேலும் பல பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

    நல்ல அற்புதமான பதிவுக்கு நன்றி

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  4. Thanks Sundar ji…
    A very touching article.. How a simple act of kindness bears a life changing effect.. The person who receives can truly understand it..
    It inspires to do small acts of care and kindness…
    Thanks to Mrs. Sudha Moorthi…

  5. 1.நாம் நல்ல நிலையில் இருக்கும் போது மற்றவர்களுக்கு உதவ வேண்டும்-சுதா அவர்கள் மாதிரி.
    2.நாம் பட்ட கஷ்டங்களில் இருந்தும்,நமக்கு கிடைக்கும் உதவிகளில் இருந்தும் (நன்றியுணர்வுடன் ) பாடம் கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும்-சித்ரா அவர்கள் மாதிரி.

  6. Dear SundarJi,

    Speechless.. great act by both personalities… lot learned from this article and inspiring to help others in real need.

    Rgds,
    Ramesh

  7. கருணையால் மட்டும் செய்யப்படும் உதவி – எதையும் பிரதி உபகாரம் எண்ணி செய்யாத குணம் – அத்தகைய உதவி செய்பவர் கடவுளாய் ஒருவருக்கு தெரிவார்.அது தான் இந்த சம்பவம். நன்றி சுந்தர்ஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *