சிவனுக்காக கண்விழிப்பதாகட்டும் இல்லை சிவனுக்காக காத்திருப்பதாகட்டும் இரண்டுமே மகத்துவம் மிக்கது. சிவனுக்காக காத்திருப்பவர் வேறு எதற்காகவும் காத்திருக்க வேண்டிய நிலை வாழ்வில் வராது.
எனவே நாளைய தினத்தை பயன்படுத்திக்கொண்டு விரதமிருந்து சிவனருளை பெறுங்கள். சிவராத்திரி விரதத்தின் பலன்கள் மற்றும் விரத முறைகளை பற்றி ஏற்கனவே நாம் பல பதிவுகளில் விளக்கியிருக்கிறோம். அவற்றை படியுங்கள்.
சிவராத்திரி விரதத்திற்காக அலுவலகத்தில் விடுப்போ அல்லது பர்மிஷனோ எடுக்க யோசிக்கவேண்டாம். முக்கியத்துவமே இல்லாத பல விஷயங்களுக்கு நாம் அலுவலகத்தில் விடுப்போ அல்லது பர்மிஷனோ எடுக்கிறோம். சிவனுக்காக எடுப்பதில் தவறில்லை. இருப்பினும் அவரவர் பணியின் முக்கியத்துவத்தை கவனித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு சோறிடும் முதலாளியை எந்தவிதத்திலும் சங்கடப்படுத்தாமல் நடந்துகொள்ளுங்கள்.
இரவு முழுதும் கண்விழித்து சிவராத்திரி விரதமிருப்பது அவசியம். இருப்பினும் அடுத்த நாள் அலுவலகம் சென்றே தீரவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவர்கள் கலங்கவேண்டியதில்லை. இதோ அவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. நாளைய தினம் சென்னையில் பல இடங்களில் ‘தர்ம ரக்ஷன சமிதி’ என்னும் அமைப்பு மாலை 6.00 மணியளவில் பூஜை மற்றும் சிவராத்திரி சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனையை ஏற்பாடு செய்துள்ளது. மாலை 6 மணிக்கு தொடங்கும் வழிபாடு இரவு 8.30 க்குள் முடிந்துவிடும்.
எங்கெங்கு நடைபெறுகிறது, சம்பந்தப்பட்டவர்களின் அலைபேசி எண் உட்பட அனைத்தும் அடங்கிய நோட்டீஸ் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இரவு முழுதும் கண்விழித்து விரதமிருக்கமுடியாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இந்த பூஜையில் கலந்துகொண்டு சிவனருள் பெறுங்கள். இதில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் இல்லை.
‘தர்ம ரக்ஷண சமிதி’ சார்பில் சென்னை மதனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ ஆனந்த விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் சிவராத்திரி சிறப்பு வழிப்பாட்டில் நாம் அவசியம் பங்கேற்க வேண்டும் என திரு.ஸ்ரீராமுலு அவர்கள் நம் வீடு தேடி வந்து அழைப்புவிடுத்திருக்கிறார். மேலும் நிகழ்ச்சியல் நாம் அவசியம் பங்கேற்று பேசவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். திரு.ஸ்ரீராமுலு மற்றும் சரவணன், வைதேகி மாமி ஆகியோர் இதன் பொருட்டு நேற்று நமது இல்லம் வந்திருந்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று சென்னை மதனந்தபுரத்தில் நடைபெறவிருக்கும் பூஜையில் கலந்துகொள்ளவிருக்கிறோம்.
இரவு, சென்ற ஆண்டைப் போலவே திருவெண்பாக்கம் (பூண்டி) செல்லவிருக்கிறோம். (Check : சிவனோடு சில மணி நேரம் – ஊன்றீஸ்வரரோடு கழிந்த நம் சிவராத்திரி!)
(சிவராத்திரி சிறப்பு பதிவு 3 ம் இன்று மாலையே அளிக்கப்பட்டுவிடும்!)
Dharma Rakshana Samiti
==============================================================
Also check :
கல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1
சென்ற ஆண்டு அளித்த சிவராத்திரி ஸ்பெஷல் தொடர் மற்றும் இதற்கு முன்பு நாம் அளித்த சிவராத்திரி சிறப்பு பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=சிவராத்திரி&x=6&y=12
==============================================================
[END]
ஓம் நம சிவாய………அவரருளாலே அவர் தாள் வணங்குவோம்…….
சிவராத்திரி அன்று இறை நாம சங்கீர்த்தனத்தில் கலந்து கொண்டு இறை அருள் பெறுவோம்.
தர்ம ரக்ஷன சமிதி அழைப்பில் கலந்து கொள்வதற்கு அனைவருக்கும் ஓர் அறிய வாய்ப்பு., தகவல் வெளியிட்ட தங்களுக்கு மிக்க நன்றி
ஓம் நம சிவாய …சிவாய நமஹ
நன்றி
உமா வெங்கட்