மாளவ தேசத்தில் உள்ள கல்யாணபுரம் என்ற நகரில் கார்கவன், வைணவன் என்கிற இரண்டு வணிகர்கள் வசித்து வந்தார்கள். வணிகர்களுக்கு உரிய எந்த தர்மத்தையும் பின்பற்றாமல் அடுத்தவர்களை வஞ்சித்து ஏமாற்றி பொருளீட்டி, அந்த பொருளை கொண்டு அனேக குற்றங்களை செய்து மலையென பாவங்களை குவித்து வந்தார்கள்.
இவர்கள் பகலில் வியாபாரிகள் போல திரிவார்கள். சக வியாபாரிகளிடம் மெல்ல பேச்சு கொடுத்து அவர்கள் சொத்து மற்றும் பண இருப்பு விபரங்களை, செல்வத்தின் அளவுகளை நைசியமாக தெரிந்துகொண்டு, இரவு சென்று அதை கொள்ளையடித்து வாழ்ந்து வந்தார்கள். தருணங்களில் கொலை கூட செய்துவிடுவார்கள்.
வரலாற்று தகவல் : மாளவ தேம் – தற்போதைய மத்தியபிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் குறிப்பாக குஜராத் மற்றும் தென் கிழக்கு ராஜஸ்தான் ஆகியவற்றை ஒட்டிய பகுதி மால்வா பகுதிகள் என்று அழைக்கப்படுகின்றன. இது ராஜஸ்தானுக்குத் தென்கிழக்கில் மத்திய பிரதேசத்தில் உள்ள விந்திய பீடபூமிப் பகுதியைக் குறிக்கும்.
இருவரும் வசித்து வந்த வீடு ஒரு வனாந்திரத்தில் இருந்தபடியால் அந்த வழியே செல்வோர்களையும் இவர்கள் விட்டுவைத்ததில்லை. கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்து வந்தார்கள். இவர்களால் மாங்கல்யத்தை இழந்த பெண்கள் அநேகம். தோடுக்காக செவிகள் கொய்யப்பட்ட பெண்கள் கணக்கில்லை.
ஒரு நாள் பக்கத்து பட்டணத்தில் நடைபெற்ற சந்தையில் பொருட்களை வாங்குவதற்காக வந்த வெளியூர் வியாபாரிகள் சிலர், ஊர் எல்லையில் உள்ள இடைச்சி வீட்டில் தங்கி இளைப்பாறினார்கள்.
இதை எப்படியோ தெரிந்துகொண்ட இரு பாதகர்களும் அங்கே சென்று அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போதே மயக்கப் புகை போட்டு அவர்களை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு, அவர்களுடைய பணம், மற்றும் பொருட்களை எல்லாம் கொள்ளையடித்துக்கொண்டு தப்பித்தார்கள்.
அடர்ந்த கானகம் ஒன்றின் வழியே இவர்கள் செல்லும்போது, வழியில் தென்பட்ட ஒரு சிவாலயத்தில் தங்கி இளைப்பாறினார்கள்.
அப்போது அங்கேயே அவர்கள் கொள்ளையடித்த பொருட்களை பங்கு பிரிக்க முடிவு செய்தார்கள். அந்த அரையிருட்டில் ஒன்றும் சரியாக தெரியாததால், இடைச்சி வீட்டில் கொள்ளையடித்துக்கொண்டு வந்த நெய் பானையில் இருந்து கொஞ்சம் நெய்யை எடுத்து அங்கிருந்த விளக்கில் ஊற்றி ஒரு திரியையும் திரித்துப் போட்டு அதை விளக்கேற்றி, அந்த வெளிச்சத்தில் பணத்தை பிரித்துக்கொண்டார்கள். பின்னர் இருவரும் தப்பித்துவிட்டார்கள்.
அந்த நேரம் சரியாக பொழுது விடிந்துவிட்டது. இங்கே இடைச்சி வீட்டில் தங்கியிருந்த வியாபாரிகள் அனைவரும் மயக்கத்தினின்று விடுப்பட்டு தங்கள் பொருட்கள் அனைத்தும் கொள்ளை போனதை அறிந்து கூக்குரலிட்டார்கள்.
கிராமத்து மக்களுக்கு தங்கள் ஊரில் வந்து தங்கிய வியாபாரிகளிடம் இப்படி கொள்ளை நடைபெற்றது மிகுந்த கோபத்தை வரவழைத்தது. திசைக்கு நான்கு பேர், கத்தி கம்புகளை எடுத்துக்கொண்டு திருடர்களை தேடி புறப்பட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக காட்டில் சுற்றிக்கொண்டிருந்த மேற்படி இருவரையும், சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். அவர்களிடம் இருந்த மூட்டைகளை பறித்து பிரித்துப் பார்த்தபோது வியாபாரிகள் பறிகொடுத்ததாக சொன்ன பொருட்கள், பணம் என அனைத்தும் இருந்தது.
இருவரையும் நையப்புடைத்த மக்கள், தலையாரியிடம் அவர்களை ஒப்படைத்தனர். அவர்களை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு இரவு முழுதும் காவல் காத்துவிட்டு மறுநாள் அரசன் முன் கொண்டு சென்று இருவரையும் நிறுத்தினர்.
இருவரும் கொலை, களவு முதலிய பஞ்சமா பாதகங்களை கூசாமல் செய்பவர்கள் என்பதை விசாரித்தறிந்த அரசன், இருவருக்கும் உடனடியாக மரண தண்டனை விதித்தான்.
தண்டனைக் கூடத்தில் இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதும் அங்கே தோன்றிய சிவகணங்கள் இருவரையும் விமானத்தில் ஏற்றிக்கொண்டு கயிலை நோக்கி விரைந்தனர்.
பஞ்சமா பாதகர்கள் இருவரும் கயிலையிலேயே வெகு காலம் தங்கியிருந்து பின்பு எல்லையற்ற இன்பம் வழங்கக்கூடிய சிவப்பதத்தில் இரண்டற கலந்துவிட்டனர்.
இது எப்படி சாத்தியப்பட்டது?
வியாபாரிகளிடம் கொள்ளையடித்த போது, அவர்கள் கூடவே திருடி எடுத்து வந்த நெய்யை கொண்டு, சிவாலயத்தில் ஒரே ஒரு தீபம் ஏற்றிய காரணத்தால் அவர்களுக்கு அளவற்ற நற்பலன்களை அளிக்கக்கூடிய சிவபுண்ணியம் கிடைத்து சிவலோகப் ப்ராப்தி கிடைத்தது. அப்படியிருக்க உள்ளன்போடு பக்தி செலுத்தும் அன்பர்கள் தாங்கள் மனமுவந்து சிவாலயத்தில் ஏற்றும் தீபத்திற்கும் அவர்கள் ஈட்டும் சிவப்புண்ணியத்திற்கும் கிடைக்கும் பலனை சொல்ல முடியுமா என்ன?
சிவபுண்ணியத்தின் மகிமை இத்தகையது என்று கூறவே கூற இயலாது. அது அத்தனை மகத்துவம் மிக்கது என்று கூறி முடித்தார் கண்வ மகரிஷி.
இக்கதை உணர்த்தவரும் நீதி என்னெவென்றால், எப்படிப்பட்ட தீயவர்களுக்கும் உய்ய சந்தர்ப்பம் இருக்கிறது. அவர்கள் அவர்களையும் அறியாமல் சிவபுண்ணியம் செய்திருந்தால். அப்படியிருக்கும் உள்ளன்போடு சிவத்தொண்டு செய்து சிவன் கழலை சிந்தித்து வருபவர்களை அவன் விட்டுவிடுவானா?
ஒரு போதும் நம்பிக்கை இழக்காதீர்கள். ஈசன் ஒரு சோதனையை தருகிறான் என்றால், வேறு ஏதோ மிகப் பெரிய பிரச்சனையிலிருந்து உங்களை காப்பாற்றுகிறான் என்று பொருள்.
கவலை வேண்டாம். கலங்கவேண்டாம்.
மந்த ரம்மன பாவங்கண் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.
– திருஞானசம்பந்தர் (மூன்றாம் திருமுறை)
பாடல் விளக்கம் : மந்தர மலை போன்ற பாவங்களைச் செய்து பாசங்களால் கட்டுண்டவர்களும், திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் அவர்களது கொடியவினைகள் தீர்ந்து போகும். அவர்கட்குச் செல்வமும் பெருகும் . அத்தகைய சிறப்புடையது நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமான ` நமச்சிவாய ` என்பதாகும் .
….. சிவபுண்ணியக் கதைகள் தொடரும்
========================================================
சிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…
வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)
பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)
தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)
கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)
==========================================================
Rightmantra needs your help….
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check கர்மா Vs கடவுள் earlier episodes…
கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)
விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)
கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)
நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)
ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)
கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)
==========================================================
Similar articles…
சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?
ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!
கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!
‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!
பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?
சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!
ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!
தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!
பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?
நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?
கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?
==========================================================
[END]
ஈசன் மிக பெரிய சோதனையை தருகிறான் என்றால் வேறு எதோ மிக பெரிய பிரச்சனையில் இருந்து விடுவிக்கிறான் என்று பொருள்.
சிவ புண்ணிய கதைகள் ஐந்தும் மிகவும் அருமை. ஒரு வரி கதைகள் மாதிரி படித்தவுடன் கற்பூரம் மாதிரி பற்றிகொள்கிறது.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
சுந்தர்ஜி
இது என்ன நியாயம் . பல பாவங்கள் செய்து விட்டு திருடிய நெய்யை சிவபெருமான்
கோவில்லுக்கு விளக்கு ஏற்தினால் பாவம் கரைந்து போய் சிவபதம் கிடைக்கும் என்றால், முன் பிறப்பில் இதை விட கொடிய பாவம் செய்து இந்த ஜென்மம் எடுத்து இருக்கிறேனா ?
ப்ளீஸ் விளக்கம் தேவை;
சரியான கேள்வி. அணுவளவு சிவப்புண்ணியம் கூட எப்படி அளவற்ற பலன்களை தருகிறதோ அதே போன்று அணுவளவு சிவாபராதமும் மலையளவு பாவம் தரக்கூடியது. உங்கள் கேள்விக்கு விரிவான பதில் அடுத்தடுத்து வரும் பதிவுகளில் வரும். பொறுமை.