“குலண்டம் என்கிற நாட்டில் கபித்தபுரம் என்கிற பட்டணம் இருக்கிறது. அங்கு கண்டன் என்கிற பெயருடைய ஒரு அதர்மி இருந்தான். அவனுக்கு தொழிலே திருட்டு தான். அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கும் பட்டணங்களுக்கும் சென்று பொருட்களை திருடி வந்து வேற்றூர்களில் அவற்றை விற்று வாழ்ந்து வந்தான்.
இவ்விதம் ஒரு நாள் பொருட்களை திருடிக்கொண்டு மூட்டைக்கட்டி தூக்கி வரும்போது, மாலை வேளை நெருங்கிவிட்டது. இருள் மெல்ல சூழ்ந்துகொண்டிருந்தது. ஏற்கனவே களைத்து போயிருந்தவன் அந்த மூட்டையை வைத்துக்கொண்டு நடக்க முடியாமல் தவித்தான். என்ன செய்வதென்று யோசித்தவன், வழியில் தென்பட்ட ஸ்ரீ மத்ஸ்யேச்வர சுவாமி சன்னதியிலுள்ள வறண்ட திருக்குளத்தில் இறங்கி, குளத்தின் மணற்பாங்கான பகுதியில் குழியை தோண்டி யாரும் அறியா வண்ணம் அந்த பொருட்களை புதைத்துவிட்டு வந்துவிட்டன. மறுநாள் எடுத்துக்கொள்ளலாம் என்பது அவன் எண்ணம்.
மறுநாள் வந்து பார்த்தபோது, முந்தைய தினம் எந்த இடத்தில புதைத்தோம் என்பது அவனுக்கு சரியாக தெரியவில்லை. இதனால் மனம் வருந்தியவன் அக்குளத்தில் உள்ள செடிகொடிகளை நீக்கி, சேற்றையெல்லாம் வாரி வாரி கரையில் போட்டான். கிட்டத்தட்ட பல மணிநேரம் செலவிட்டு முழு குளத்தையும் தூர் வாரியவன், கடைசியில் தனது பொருட்களை கண்டுபிடித்துவிட்டான்.
அவற்றை கொண்டு போய் பல இடங்களில் விற்று சுகபோக வாழ்வு வாழ்ந்து வந்தான். மூப்படைந்து கடைசியில் ஒரு நாள் மாண்டு போனான்.
அவன் உயிர் துறந்த அடுத்த நிமிடம் அங்கே தோன்றிய சிவகணங்கள் அவனை விமானத்தில் ஏற்றிக்கொண்டு கயிலை நோக்கி விரைந்தார்கள். கயிலை முழுதும் அப்போது வாழை, கமுகு மரங்கள் உள்ளிட்ட பலவித மரங்களால்தோ, மங்கள தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்போது கயிலையின் அடிவாரத்தில் இருந்த நான் (வாமதேவர்) கண்டனை ஏற்றிக்கொண்டு வந்த சிவகனங்களிடம், “மகத்துவம் பொருந்திய சிவகணங்களே இந்த புண்ணியசாலி யார் ? இவன் செய்த புண்ணிய செயல் எத்தகையது?’ என்று கேட்டேன்.
அதற்கு சிவதூதர்கள், “வாமதேவரே, இவன் நம் பெருமானின் கோவிலுக்கு சொந்தமான வறண்ட குளத்தில் உள்ள சேற்றை எல்லாம் வாரி வாரி வெளியே போட்டான். இதனால் தூர்க்கப்பட்ட அக்குளத்தில் பின்னர் மழை பெய்தபோது நீர் நிரம்பியது. அந்த புண்ணிய காரியத்தின் மகத்துவத்தால் இவனுக்கு சிவலோக ப்ராப்தி கிடைத்திருக்கிறது. இவன் வருகைக்காகவே இன்று கயிலையும் விசேஷமாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது!” என்றனர்.
அதைக் கேட்ட நான், “ஓம் நம சிவாய : சிவபுண்ணியத்தின் மகத்துவம் இத்தகையதா? வியப்பாக இருக்கிறதே” என்று என் உவகையை தெரிவித்து பின்னர் என் தவத்தை தொடர்ந்தேன்” – என்று முடித்தார் வாமதேவர்.
நண்பர்களே, திருட்டுப்பொருளை மீட்க வேண்டி ஒரு திருடன் தன்னையுமறியாமல் சிவாலயத்தின் குளத்தை தூர் வாரியதால் கிடைத்த புண்ணியத்தை பார்த்தீர்களா? அப்படியெனில் அவன் ஆலயத்தில் உழவாராப்பணி செய்பவர்கள் அடையும் நற்கதி பற்றி கூறவும் வேண்டுமா?
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும் குறள் 335)
பொருள் : வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.
சிவபுண்ணியத்தில் இது திருப்பணி செய்தவர்கள் பற்றிய கதை. திருப்பணி செய்தவர்கள் பற்றி இன்னும் பல கதைகள் இருக்கிறது. அவற்றை அடுத்தடுத்து வரும் சிவபுண்ணியத் தொடர் பதிவுகளில் பார்ப்போம்.
=======================================================
பதி புண்ணியம், பசு புண்ணியம்
“புண்ணியம் பதி புண்ணியம், பசு புண்ணியம் என இருவகைப்படும். பதி (இறைவன்) புண்ணியம் சிவபுண்ணியம் என்றும் கூறப்படும். சிவபுண்ணியம் என்பது சிவபெருமானை நினைத்துச் செய்யும் நற்செயல்களாகும். சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நோக்கித் செய்யும் நற்செயல்கள் பசு (உயிர்) புண்ணியம் எனப்படும். பதி புண்ணியங்கள் ஒருபோதும் அழிவில்லாமல் என்றும் நின்று முக்தியைக் கொடுக்கும். பசு புண்ணியங்களுக்கும் பலன் உண்டு. ஆனால், அப்பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியப் பயன் சிவபெருமானால் அனுபவிக்கப் படாததால் அழிவில்லை. அதன் பயன், உயிர்களுக்கு நிலையான இன்பத்தைத் தருவதே ஆகும்’ என்கிறது சைவ சித்தாந்தம்.
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
– திருமந்திரம்
….. சிவபுண்ணியக் கதைகள் தொடரும்
=======================================================
அடுத்த உழவாரப்பணி!
நமது அடுத்த உழவாரப்பணி, வரும் ஜூன் 12 ஞாயிற்றுக்கிழமை குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் மணிமண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. வரும் ஜூன் 25 ஆம் தேதி இங்கு சேக்கிழார் விழா நடைபெறவிருக்கிறது. எனவே அதையொட்டி இந்த உழவாரப்பணி ஜூன் 12 அன்று நடைபெறுகிறது. (கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் இங்கு உழவாரப்பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.)
பணியில் கலந்துகொள்ள விரும்பும் அன்பர்கள் நேரடியாக வளாகத்திற்கு காலை 7.00 மணிக்குள் வரவேண்டும். வடபழனி, போரூர், தாம்பரம், பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் இருந்து குன்றதூருக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது. குன்றத்தூர் பஸ் டெப்போவில் இறங்கி நடந்து வந்துவிடலாம்.
காலையில் காஃபி & பிஸ்கட்டும், மதியம் மதிய உணவும் வழங்கப்படும்.
முன்னதாக ராகு-கேது தலமான திருநாகேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடைபெற்ற பின்னர் உழவாரப்பணி துவங்கும்.
கலந்துகொள்ள விரும்பும் அன்பர்கள் அவசியம் நமக்கு அலைபேசியில் எஸ்.எம்.எஸ். மூலம் தவகல் தெரிவிக்கவும்.
முகவரி : தெய்வச் சேக்கிழார் மணிமண்டபம், பெரிய தெரு, குன்றத்தூர், சென்னை – 600 069.
தொடர்புக்கு : ‘ரைட்மந்த்ரா’ சுந்தர், ஆசிரியர், Rightmantra.com
M : 9840169215 | E : editor@rightmantra.com
=======================================================
சிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…
திருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)
வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)
பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)
தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)
கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)
==========================================================
Rightmantra needs your help….
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check கர்மா Vs கடவுள் earlier episodes…
கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)
விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)
கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)
நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)
ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)
கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)
==========================================================
Similar articles…
சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?
ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!
கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!
‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!
பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?
சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!
ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!
தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!
பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?
நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?
கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?
==========================================================
[END]
அப்பாடா! மூன்று மாதங்களுக்கு பிறகு கிடைத்துள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம். வாசகர்கள் அனைவரும் பங்கு பெற்று உழவாரப்பணியின் பலனை அடைய வேண்டுகிறோம்.
ரைட் மந்த்ரா ஒரு சத்சங்கம். அதனால் முடிந்தவரை மாதம் ஒரு முறை எதாவது ஒரு விதத்தில் வாசகர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டுகிறேன்.
சிவபுண்ணியக் கதை ஒவ்வொன்றும் அத்தனை அருமை. கதைக்கு பொருத்தமான ஓவியம், புகைப்படம் என்று (சில சமயம் இரண்டுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை- அத்தனை அழகு) தொடர் அட்டகாசம்.
சிவபுண்ணியம் குறித்த கருத்துக்கள், சம்பவங்கள பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
தளத்தின் உழவாரப்பணி குறித்த தகவல்களை பதிவுகளை படிக்கும்போதெல்லாம் இந்த பக்கியசாளிகளுடன் சேர்ந்து பணி செய்யும் பாக்கியம் நமக்கு இல்லையே என்று எங்க வைக்கிறது. நம் தளத்தின் பதிவுகள் படித்த பாதிப்போ என்னவோ, எங்கள் பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு அடிக்கடி சென்று கூட்டி, பெருக்கி, கோலமிட்டு வருகிறேன். மிகுந்த மனநிறைவை அது தருகிறது.
நம் குழுவினருடன் பணி செய்ய ஆவலாக இருக்கிறேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்