Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 27, 2024
Please specify the group
Home > Featured > பக்திக்கும் பாசத்திற்கும் உதாரணமாக இதோ பரமேஸ்வரன் புகழ் பாடும் ஒரு அன்னை !

பக்திக்கும் பாசத்திற்கும் உதாரணமாக இதோ பரமேஸ்வரன் புகழ் பாடும் ஒரு அன்னை !

print
ன்னை ராஜம்மாளை பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அவரை உடனடியாக பார்க்க வேண்டும்… அவரது கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும் என்கிற வேட்கை என்னுள் பல மடங்கு எழ ஆரம்பித்துவிட்டது.

நான் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறேன். மனித மனதின் ஆற்றல் அளவிடற்கரியது. ஒருமுக சிந்தனையோடு நல்ல எண்ணங்களுடன் ஒன்றையே நினைத்து அந்த நினைவு நாடி நரம்பு இவைகளுக்குள் எல்லாம் ஊடுருவினால் நாம் நினைத்தது நம்மை தேடி வரும்.

மனதின் இந்த சக்தியை ஆக்கப்பூர்வமான நம்மை உண்மையில் உயர்த்தக்கூடிய நமக்கு பெருமை சேர்க்கக்கூடிய விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். அற்ப விஷயங்களுக்கும் நிலையில்லாதைவகளை பெறுவதற்கும் பயன்படுத்தவே கூடாது. இல்லையெனில் கடவுள் தோன்றி வரம் கேட்டால் “எனக்கு வெள்ளரிக்காய் பச்சடி பிடிக்கும்.  எனவே வெள்ளரிக்காய் வேண்டும்” என்று கேட்பது போலாகிவிடும்.

அன்னை ராஜம்மாளை பார்த்தே தீரவேண்டும் என்கிற வேள்வித் தீ உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த நேரத்தில்  அவரின் மகள் உமையாளிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பழனியில் அம்மா அடுத்த வாரம் திருவாசகம் முற்றோதல் ஏற்பாடு  செய்திருக்கிறார். அதில் வேண்டுமானால் வந்திருந்து கலந்துகொள்ளுங்கள். ஞாயிற்றுகிழமை தானே? என்றார்.

“என்ன ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமா? அது கஷ்டமாயிற்றே” என்றேன்.

மறுநாள் பேசும்போது சொன்னார்…. “சிவனடி. திரு. தாமோதரன் ஐயா அவர்கள் நடத்தும் திருவாசகம் முற்றோதலில் கலந்துகொள்ள அன்னை ராஜம்மாள் ஞாயிறு  வரவிருப்பதாகவும், குடியாத்தம் சென்றால் அன்னையை தரிசிக்கலாம்” என்று கூற, மகிழ்ச்சியில் துள்ளி குதித்தேன்.  தளத்திலும் அது பற்றி அறிவித்தேன். நண்பர் முத்துக்குமாரும், மனோகரனும் நம்முடன் வருவதாக சொன்னார்கள்.

இதையடுத்து நேற்று குடியாத்தம் புறப்பட்டு சென்றோம். திருவள்ளுவர் மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் அன்னையை சந்தித்தேன். ஆனந்தக்கண்ணீர் வடித்தேன். என்ன பிறவியில் செய்த பாக்கியமோ அன்னையை பார்த்ததும் அவரிடம் ஆசி பெற்றது.

நேற்றைய நாள் எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்துவிட்டது. எமக்கு மட்டுமல்ல நம்முடன் வந்திருந்த நண்பர்களுக்கும் தான்.

அன்னையை கண்டது, சிவத்திரு.தாமோதரன் ஐயாவை கண்டது, அவர்களிடம் ஆசிபெற்றது, நமது பிரார்த்தனை கிளப் சார்பாக கோரிக்கைகள் அனுப்பியவர்களின் பெயர் பட்டியலை அன்னையிடம் தந்து ஆசிபெற்றது… அதற்க்கு அன்னை நம்மிடம் சொன்னது… … நாம் அன்னைக்கு பரிசளித்தது…. அன்னை நமக்கு அளித்தது …. தாமோதரன் ஐயாவிடம் ஆசிபெற்றது…. இரண்டாம் முறையாக இங்கும் பட்டாம்பூச்சி வந்தது… முற்றோதலுக்கு வந்திருந்த பலர் அன்னையின் கால்களில் அவர் நடக்கும் வழி எங்கும் விழுந்து விழுந்து வணங்கி ஆசிபெற்றது… சொல்ல பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கின்றன. அடுத்த பதிவில் விரிவாக நமது குடியாத்தம் பயணம் பற்றி புகைப்படங்களுடன் சொல்கிறேன்.

(எனது புகைப்படங்களை நானே இந்த தளத்தில் வெளியிடுவதை விரும்புவதில்லை. அது சரியும் அல்ல. இருப்பினும் அன்னையிடம் ஆசிபெற்றபோது அன்னை நமக்கு சூட்டிய மலர்மாலையை நீங்கள் கண்டால் மாலை பெற்ற எமக்கு கிடைத்த மகிழ்ச்சியைவிட, இந்த தளத்தை உங்களுடைய தளமாக பாவித்து வரும் நீங்கள் அதிகம் மகிழ்ச்சியடைவீர்கள் என்பதால் இங்கு  வெளியிடுகிறேன். மன்னிக்கவும்.)

சரி…

யார் இந்த ராஜம்மாள்?

அப்படி என்ன பெரிய யோகி இவர்?

சமூகத்துக்கு அப்படி என்ன செய்துவிட்டார்?

பக்தியில் என்ன அவ்வளவு பெரியவரா?

இவரை பார்ப்பதே பாக்கியம் என்று சொல்லுவது சற்று ஓவராக இல்லையா?

இப்படி பல பல கேள்விகள் உங்களுக்குள் வரலாம்.

இதோ தினமலரில் சென்ற வாரம் இடம் பெற்ற கட்டுரை ஒன்றை இங்கு தருகிறேன். படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்.

=============================================

பழநி அம்மா…பழம் நீயே அம்மா!

கடந்த 12ம் தேதி வெள்ளிக்கிழமை பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் தொடர்பான விழா.அலங்கரிக்கப்பட்ட மாணிக்கவாசகர் முன் திருவாசகம் பாடப்படுகிறது.அந்த பாடலில் மனம் உருகியபடி நின்ற பக்தர்களில் ஒருவர் வித்தியாசமாக காணப்பட்டார்.

சுமார் 80 வயதை தொட்ட தோற்றத்துடன் காவி உடையை போர்த்திக்கொண்டு தன்னை மறந்து திருவாசகத்தை கண்ணில் நீர் பெருக உருகி, உருகி பாடிக்கொண்டிருந்தார்.

யார் இவர் என்ற கேள்விக்கு விடை தஞ்சை குடவாசலில் இருந்து ஆரம்பிக்கிறது.

ஊருக்கே சோறுபோடும் தஞ்சை தரணியில் குடவாசலில் பிறந்திட்ட ராஜம்மாளுக்கு அவரது தந்தையும், தாயும் சோறு ஊட்டும்போது, கூடவே தேசபக்தியையும், தெய்வ பக்தியையும் சேர்த்தே ஊட்டினர்.

விளைவு தேசபக்தி மிகுந்த வீரமங்கையாய் வளர்ந்தார்.

அப்போது சுதந்திர போராட்ட காலமாகும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தகவல் தொடர்பு மிகக்கடினமாக இருந்தது. ஆற்றாங்கரையில் நாணலோடு நாணலாக பல மணி நேரம் காத்திருக்கும் வீரர்கள் அடுத்த கட்ட செயலுக்கான கடிதத்திற்கு காத்திருப்பார்கள், இவர்களையும் இவர்களிடம் தொடர்பு கொள்பவர்களையும் பிரிட்டிஷ் போலீசார் கடுமையாக தண்டிப்பார்கள்.

அந்த தண்டனைக்கெல்லாம் பயப்படாமல் தலைவர்களுக்கும், வீரர்களுக்குமான கடித போக்குவரத்திற்கு துணையாக இருந்தவர் இவர். அந்தக் காலத்தில் எம்.ஏ தமிழ் இலக்கியம் படித்தவர். பிறகும் தொடர்ந்து படித்து மூன்று எம்.ஏ.,பட்டம் பெற்றவர்.

எத்தனையோ வேலை வந்தபோதும் கணவர், குழந்தைகள் பார்ப்பதற்காக எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். நான்கு பெண், ஒரு மகன் அரசு அதிகாரியான கணவர் என்று குடும்பம் சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென ராஜம்மாளின் கணவர் இறந்து விட பித்துப்பிடித்தது போலாகிவிட்டார்.

ஆனாலும் பிள்ளைகளுக்காக வாழவேண்டுமே என்பதற்காக ஒரு வைராக்கியத்துடன் கணவரது அலுவலகத்தில் அரசு வேலையை வாரிசு அடிப்படையில் தொடர்ந்தவர் தன் படிப்பு காரணமாக அந்த வேலையில் மேலும் உயர்வு பெற்றார். பிள்ளைகளை பிரமாதமாக படிக்கவைத்து நல்ல வேலையில் சேர்த்தார் மகன் வெளிநாட்டில் இருக்கிறான், எல்லோரும் வேலை, குடும்பம் என்று செட்டிலாகிவிட்டனர்.

அனைவரையும் நல்ல படியாக கரை சேர்த்தாகிவிட்டது இனி நாம் என்ன செய்யலாம் என்று யோசித்த போது சிறு வயது முதலே அவருக்குள் ஈர்ப்பினை ஏற்படுத்திய திருவாசகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொள்வது என முடிவு செய்தார்.

கணவரது பென்ஷன்.தனது பென்ஷன், மகன் வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணம் என்று வரக்கூடிய, பெறக்கூடிய வருமானம் அனைத்தையும் திருவாசகத்தின் உயர்வுக்கே வழங்கி வருகிறார்.

ஆங்கில கலப்பு இல்லாமல் அழகாக சொற்பொழிவு ஆற்றும் திறன் கொண்ட ராஜம்மாள் திருவாசகம் பற்றி யார் எங்கு பேசக்கூப்பிட்டாலும் போய் இலவசமாக பேசிவிட்டு வருவார், யாரைப் பார்த்தாலும் அழகிய திருவாசகம் புத்தகம் ஒன்றை பரிசளிப்பார்.

திருவாசகத்தில் என்ன இல்லை ஒரே ஓரு முறை படித்துப்பாருங்கள் உங்கள் வாழ்க்கை முறையே மாறும் என்று சொல்லும் ராஜம்மாள் இதற்காக தனது வீட்டையே திருவாசக முற்றோதல் இல்லமாக மாற்றியுள்ளார்.

ஆசி பெற வந்த குழந்தையை வாரி அணைக்கும் அன்னை

ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடு அதுவும் எளியவர்கள், அடியவர்கள் யாருடனாவது பகிர்ந்து கொள்கிறார், தனக்கான உணவை தானே தயாரித்துக் கொள்கிறார். மேடையில் அமர்ந்து திருவாசகம் சொல்ல ஆரம்பித்தால் சப்பணமிட்டு போட்ட காலைக்கூட பிரிக்காமல் 13 மணி நேரம் எப்படி உட்கார்ந்தாரோ அதே நிலையிலேயே பேசிமுடிக்கும் தெம்பும், திராணியும் உள்ள இவருக்கு தற்போது எண்பது வயதாகிறது.ஆனாலும் ஒரு கணமும் சோர்ந்து இருக்காது சுறு,சுறுவென ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்.

பழுத்த சிவப்பழம் போல காட்சி தரும் ராஜம்மாளை ஒரு பெண் துறவியாகவே கருதி பழநியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டு “பழநி அம்மா’ என்றே வணங்கி அழைக்கின்றனர்.

இந்த வயதில் இவர் இப்போது ஒரு பெரிய விஷயத்தை தனது தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு உள்ளார். கேட்டால் நானா செய்கிறேன் இறைவன் செய்கிறான் நானொரு கருவி என்கிறார் எளிமையாக. அது என்ன காரியம் என்கிறீர்களா.

வருகின்ற 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பழநியில் திருவாசகத்தை முழுவதும் ஓதும் திருவாசக முற்றோதல் என்ற பெரிய விழாவினை நடத்த உள்ளார். சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமாக இந்த விழாவினை நடத்த எண்ணியுள்ளார். இந்த விழாவில் சிவ.தாமோதரன் கலந்து கொள்கிறார். மேலும் பல்வேறு துறவிகளும் ஆன்மிக பெரியவர்களும், அடிகளார்களும் கலந்து கொள்கின்றனர். திருவாசகத்தை பல்வேறு வடிவத்தில் முற்றோதல் செய்வது நடைபெறும். திருவாசகத்தை முழுமையாக நுகர இது ஒரு அற்புதமான வாய்ப்பு. மாணவர்களும், இளைஞர்களும் பெரிய அளவில் கலந்து கொள்ளவேண்டும் என்று எண்ணியுள்ளார்.

(நன்றி : முருகராஜ், Dinamalar.com)

=============================================
(வரும் ஞாயிறு (ஜூலை 28) அன்று பழனியில் நடைபெறவிருக்கும் திருவாசகம் முற்றோதலில் கலந்து கொள்ள நமக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் அன்னை. திருவருள் துணை கொண்டு நாமும் நண்பர்களும் வரும் ஞாயிறு பழனி செல்கிறோம்!)

=============================================

=============================================

[END]

14 thoughts on “பக்திக்கும் பாசத்திற்கும் உதாரணமாக இதோ பரமேஸ்வரன் புகழ் பாடும் ஒரு அன்னை !

  1. ஒருமுக சிந்தனையோடு நல்ல எண்ணங்களுடன் ஒன்றையே நினைத்து அந்த நினைவு நாடி நரம்பு இவைகளுக்குள் எல்லாம் ஊடுருவினால் நாம் நினைத்தது நம்மை தேடி வரும் என்ற வார்த்தைக்கேற்ப உங்கள் எண்ணங்கள் எல்லாம் ஜெயமாகும்.
    அம்மா அந்த காரைக்கால் அம்மா போலவே உள்ளார்கள்.
    எல்லாம் அவன் செயல் என்று சொல்வீர்கள் அம்மாவின் ஆசிவாதமும் உங்களுக்கு பெரும் பேறு பெற்ற சந்தோசமும் உரித்தாகுக.
    அம்மாவின் வாழ்க்கை வரலாறும் ஓய்வு பெற்றபின் அவர் வாழ்கை சென்ற விதமும் தற்போது பழனியில் பெரிய விழாவாக உருவெடுத்துள்ளது

  2. நான் இன்னும் அந்த கண்கொள்ளா ஆனந்த கட்சியை கண்டது ,விழுந்து வணங்கி ஆசிபெற்றது இன்னும் என் கண்முண்ணே நிற்கிறது .இந்த பிறவிபாக்கியம் ,நான் என்னை உணர்த்திய,அறிந்த,நிகழ்வுகள்.அங்கு நிகழ்ந்த அதிசயங்கள். அப்பப்பா அந்த ஈசன் பெரும் கருணை எண்ணே அதிசயம் .

    நேற்று திருவண்ணாமலை கிரிவலம்.அம்மையப்பனை நேரில் வலம்வந்தோம்.
    எல்லாம் அவன் அருள்.கடவுள் சித்தம் .பரமரகசியம் என்பதை உணர்ந்தேன் .
    எல்லாம் ஈசன் செயல் .திருவாசகம் அனுபவிப்பது எத்துனை பெரியபாக்கியம் .
    ஆனந்த கண்ணீரில் மிதந்துகொண்டு எழுதுகிறேன் .
    நன்றியுடன்…
    -மனோகர்

  3. அன்னையின் ஆசி கிடைத்தது நம் தளத்தின் பாக்கியம். சுந்தருக்கு கிடைத்த ஆசி நம் எல்லோருக்கும் உண்டு. குடியாத்தம் பதிவிற்காக காத்திருக்கிறேன்.

  4. சுந்தர்ஜி,

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பதற்கு இணங்க அவன் அருள் தங்களுக்கு இருப்தால்தான் அவரிடம் ஆசி பெரும் பாக்கியம் கிடைத்து இருகின்றது.திரு முத்துக்குமார் மற்றும் மனோகர் அவர்களும் தங்களுடன் சேர்ந்து கொடுத்து வைத்தவர்கள். அவரிடம் ஆசி பெரும் போது கிடைத்த மாலை கூடிய விரைவில் மண மாலையாக மாற போகின்றது. பட்டாம் பூச்சி மறுபடியும் வந்தது என்றதும் மயிர் கூச்சலரிகிறது. நாங்கள் வர இயலாவிட்டாலும் தங்களுடைய போஸ்ட் நேரில் பார்த்தது போன்று EFFECT கொடுத்து உள்ளீர்கள். யான் பெற்ற இன்பம் வையகம் பெருக என்று எல்லோருக்கும் நல்லதையே நினைக்கும் தாங்கள் நீடுஷி நோய் நொடி இல்லாமல் சகல சம்பத்தும் கிடைத்து வாழ வாழ்த்துகின்றேன்.

    உங்களது தாய் தந்தைக்கும் என்னுடைய நமஸ்காரங்கள்.

  5. சுந்தர், நேற்று உண்மையிலேயே நம் வாழ்கையின் பொன்னாள் தான். நம் வாசகர்களின் பிரார்த்தனை கோரிக்கைகள் எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்து விட்டது. அய்யா மற்றும் அன்னை யின் ஆசிர்வாதத்தாலும், அந்த ஈசனின் அருளாலும் நிச்சயம் நம் எல்லோருடைய கஷ்டங்களும் தீர்ந்துவிடும். எல்லை இல்லா அந்த பரம்பொருளுக்கு நாம் நன்றியுடன் என்றென்றும் இருப்போம்.

  6. Palaniyandar அருளுடன் தங்கள் மகிழ்சிகள் பெருக வாழ்த்துக்களுடன்…

  7. எட்ட முடியாத உயரத்திற்கு சென்று கொண்டு இருக்கின்றீர்கள். அதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
    ***
    நீங்களும், நம் தளமும், நம் வாசகர்களும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
    ***
    திருவாசகத்தை பற்றி ஒன்றும் தெரியாது. எப்படி திருக்குறளை உங்கள் பதிவுகள் மூலம் அதன் சக்தியை உணர்ந்தேனோ, அதேபோல் இப்போதும் உணர்வேன் என்று நினைக்கிறேன்.
    ***
    எப்போது மனிதன் ஒருவன் தனக்கென்று வாழாது, பிறர்க்காக வாழ ஆரம்பிக்கின்றானோ அப்போதே அவனை சுற்றி ஒரு சொர்க்கத்தை உருவாக்கி விடுன்கிறான்.
    ***
    வாழ்க வளமுடன்.
    ***
    **சிட்டி**.

  8. தவறவிட்ட தருணத்திற்காக வருந்திகிறேன்……கிடைக்கபோகும் சந்தற்பதிருக்காக காத்திருக்கிறேன்…இந்த பிரவிபலனை அடைய……
    .
    மாரீஸ் கண்ணன்

  9. அன்புள்ள சுந்தர்

    எனக்கு என்ன எழுதுவது என்று தெரிவில்லை அனால் நான் மெய் சிலிர்த்துபோனேன் , தயவு செய்து இதுபோல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றால் எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .

    நன்றி

  10. வணக்கம் சுந்தர். நமது அன்னை ராஜம்மாள் அவர்களை எனக்கு வெகு அருகில் (கோவையில் இருந்து பக்கம் ) உள்ள பழனியில் சந்திக்க வருகிறீர்கள். 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவாசக முற்றோதல் என்ற பெரிய விழா (திருவிழா) நடக்கும் நேரம் மற்றும் இடம் பற்றி தகவல் தெரிந்தால் நாங்களும் கலந்து கொள்ள வசதியாக இருக்கும். ஆண்டவன் முருகன் அருள் இருந்தால் நிச்சயம் நடக்கும். நாங்களும் கலந்து கொள்ள முயற்சிக்குறோம். மிக்க நன்றி.

    1. இன்று இரவு அழைப்பிதழை இந்த பதிவில் இணைக்கிறேன்.
      நன்றி.
      – சுந்தர்

  11. மீண்டும் ஒளவைப்பாட்டியை பார்பதைபோல் உணர்கிறேன் !!!

    திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் !!!

    சுந்தர் அவர்களே உங்களின் விரிவான திருவாசக பதிவிற்காக காத்திருக்கிறோம் !!!

    திருசிற்றம்பலம்!!!

  12. திருமதி ராஜம் அவர்களின் திருவாசகத்தில் அவர்களுக்குள்ள ஈடுபாட்டை படித்து மெய் சிலிர்த்தேன். அவர்களை குருங்காலீஸ்வரர் முற்றோதலின் பொழுது சந்தித்து ஆசி வாங்கியது மறக்க முடியாத நிகழ்ச்சி;. நான் அப்பொழுது மிக பெரிய vibration ஐ உணர்ந்தேன். மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். திருவாசகம் என்று யாரவது உச்சரித்தாலே நான் பரவசமாவேன் அந்த அளவுக்கு மாணிக்க வாசகர் மேல் உள்ள பற்று காரணம்.

    அருமையான பதிவு

    நன்றி
    உமா

  13. நானும் அந்த இனிய பெருதற்கரிய நிகழ்வில் கலந்தேன் பேரின்பம் பெற்றேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *