விதியை வென்று சாதனை படைத்த வீரன்!
கரோலி டகாக்ஸ். நீங்கள் இதுவரை இப்படி ஒரு பெயரை கேள்விப்பட்டிருப்பீர்களா என்பது சந்தேகமே. ஆனால், ஹங்கேரி நாட்டில் இவர் ஒரு தேசிய ஹீரோ. அந்நாட்டில் அனைவருக்கும் இவரைப் பற்றியும் இவரது உத்வேகமூட்டும் கதை பற்றியும் தெரியும். இவரது வரலாற்றை படித்த பின்னர், நீங்களும் இவரை மறக்கமாட்டீர்கள்!
1930 களில் ஹங்கேரி நாட்டின் ராணுவத்தை சேர்ந்த கரோலி டகாக்ஸ் ஒரு மிக பிரபல துப்பாக்கி சுடும் வீரர். டோக்கியோவில் 1940 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டி துவங்க ஓரிரு ஆண்டுகள் இருக்கும் சூழ்நிலையில் அந்த எதிர்பார்ப்பு தகர்ந்துபோனது. ஒரு முறை சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தபோது ஒரு கையெறி குண்டு தவறுதலாக வெடித்து இவரது வலது கை உருக்குலைந்து சிதறிவிட்டது. துப்பாக்கி சுடுவதில் வலது கை எந்த அளவு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியும்.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேல் மருத்துவமனையில் இருந்த டகாக்ஸ் தனது அரும்பெரும் கனவுகள் இரண்டும் (ஒன்று கையை இழந்தது மற்றொன்று ஒலிம்பிக்கில் பங்குபெறும் வாய்ப்பு பறிபோனது) ஒரே நேரத்தில் உருக்குலைந்து போனதை எண்ணி கலங்கினார். அது போன்றதொரு நிலை வேறு எவருக்கேனும் ஏற்பட்டால் பெரும்பாலானோர் ‘எல்லாம் முடிந்தது. இனி எனக்கு என்ன இருக்கிறது?’ என்று சுயபச்சாதாபத்தோடு எஞ்சிய வாழ்நாளை கழிப்பார்கள்.
‘WINNERS NEVER QUIT. QUITTERS NEVER WIN’ அல்லவா? சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒரு போதும் தங்களை வீழ்த்திவிட முடியாது என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை வெற்றியாளர்களுக்கு எப்போதும் உண்டு. ‘இனி முடியாது’ என்று விட்டுவிடுவது (QUITTING) ஒரு போதும் OPTION அல்ல என்று அவர்களுக்கு தெரியும்.
டகாக்ஸ் வெற்றி வீரன் ஆயிற்றே? யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்றை அவர் செய்தார். தன்னம்பிக்கையுடன் எழுந்து நின்றார். தன்னை தூசி தட்டிக்கொண்டார். இடது கையால் எப்படி சுடுவது என்று பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டார்.
“என்ன? இது கையால் துப்பாக்கி சுடுவதா? முடியுமா?” என்ற கேள்வி எழுந்தபோது, “ஏன் முடியாது?” என்று திருப்பிக்கேட்டார்.
தன்னிடம் இல்லாததை (பல வெற்றிகளை தந்த வலது கை) பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, இருப்பது மீது (அசைக்க முடியாத மனவுறுதி மற்றும் அவரது இடது கை) அக்கறை செலுத்த ஆரம்பித்தார்.
மாதக்கணக்கில் தானே இடது கையால் சுடுவதற்கு பயிற்சிகள் மேற்கொண்டார். ஆனால், வெளியுலகத்திலிருந்து தன்னை மறைத்துக்கொண்டு. தான் என்ன செய்கிறோம் என்பதை வெளிப்படுத்தாமல். காரணம், யாராவது அவரது நம்பிக்கையை குலைக்க முயற்சிக்கக் கூடும் என்பதற்காகத் தான்.
பல ஆண்டுகளுக்கு பின்னர் அதாவது 1939 ஆம் ஆண்டு, ஹங்கேரி நாட்டின் தேசிய துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றபோது அங்கே தான் அவரை பார்க்கமுடிந்தது.
(1940 ஆம் வருடம் நடக்கக் கூடிய ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அவர் பயிற்சியில் ஈடுபட்டபோது 1938 ஆம் ஆண்டு அவருக்கு விபத்து ஏற்பட்டு வலக்கை பறிபோனது. , வலக்கை இழந்த நிலையில் இடக்கையில் பயிற்சி மேற்கொண்டு 1939 ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டின் தேசிய துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றபோது அதில் பங்கேற்க தோன்றினார்! பிற்பாடு 1940 & 1944 ஆண்டுகள் உலகப்போரின் காரணமாக ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டது!)
அந்த போட்டி மைதானத்தில் அவரை பார்த்த சக துப்பாக்கி சுடும் வீரர்கள் அவரை நோக்கி வந்து அவருக்கு நிகழ்ந்தவற்றுக்கு தங்கள் அனுதாபத்தை தெரிவித்ததோடு தன்னை தேற்றிக்கொண்டு இந்த போட்டியை காண நேரில் வந்தமைக்கு பாராட்டினர்.
“நான் போட்டியை பார்க்க வரவில்லை. பங்கேற்க வந்தேன்” என்று சொல்லி அவர்களுக்கு வியப்பை தந்தார் டகாக்ஸ். எவரும் எதிர்பாராத வண்ணம் அந்த போட்டியில் அவர் வென்றபோது அவர்களுக்கு மேலும் வியப்பை தந்தார்.
இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1940 மற்றும் 1944 இல் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை. துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்கிற டகாக்ஸ்ஸின் கனவு நனவாவதற்கான சாத்தியம் கடைசி வரை தோன்றவில்லை. கனவு கனவாகவே போய்விடுமோ என்று தான் அனைவருக்கும் தோன்றியது. ஆனால், டகாக்ஸ், இடைப்பட்ட இந்த காலத்தை வீணாக்காமல், பயிற்சி செய்துகொண்டே இருந்தார். கடைசியில் 1948 ல், லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். தனது 38 வது வயதில் டகாக்ஸ் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்று ஒரு புதிய சாதனை படைத்தார். நான்கு ஆண்டுகள் கழித்து அதாவது 1952 இல் பின்லாந்தில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார்.
வெற்றியாளர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தங்கள் பாதைகளில் பயணத்தில் என்ன நேர்ந்தாலும் அவர்கள் முடங்கிவிடமாட்டார்கள். பீனிக்ஸ் பறவை போல எழுந்துவிடுவார்கள். கீழே விழுவார்கள். ஆனால் விழுந்து கிடைக்கமாட்டார்கள். உடனே சுதாரித்துக் கொண்டு எழுந்துவிடுவார்கள். BOUNCING BACK என்பதைவிட BOUNCING QUICKLY என்பது தான் அவர்கள் தாரக மந்திரமாக இருக்கும்.
தோல்வி, நம்பிக்கை துரோகம், விபத்து, பின்னடைவு என எல்லாம் அவர்களுக்கும் ஏற்படும். ஆனால் இவை எதுவும் தங்களை பாதிக்க அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். எந்த பள்ளத்தில் விழுந்தாலும் நிலைகுலைந்து விழுந்து கிடைக்காமல், “இதிலிருந்து வெளியேற நிச்சயம் ஏதேனும் வழியிருக்கும்!” என்று வெளியேறுவதற்கு ஏதேனும் வழி தென்படுகிறதா என்று பார்ப்பார்கள். அவர்களது தேடலே அவர்களுக்கு வழியையும் காண்பிக்கும். விட்ட இடத்திலிருந்து மறுபடியும் தொடர்வார்கள்.
விழுந்தவுடன் உடனே எழுந்துவிடவேண்டும் அது தான் முக்கியம். இல்லையென்றால் உங்கள் உத்வேகம் குறைந்துவிடும். ஒரு விஷயத்தை நன்றாக கவனித்தீர்கள் என்றால் புரியும்… விபத்து ஏற்பட்டு வலது கை பரிபோனபிறகு, தன்னை தேற்றிக்கொண்டு சுதாரித்துக்கொண்டு எழுவதற்கு டகாக்ஸ் ஜஸ்ட் ஒரே ஒரு மாதம் தான் எடுத்துக்கொண்டார். “நம் வாழ்க்கை அவ்வளவு தான். இனி நம்மால் பதக்கம் வெல்ல முடியுமா?” என்றெல்லாம் அந்த சூழ்நிலையில் அவர் சிந்தித்திருந்தால், அவரால் சாதித்திருக்கவே முடியாது.
குத்துசண்டை போட்டியில் ஒரு வீரர் எதிராளியால் தாக்கப்பட்டு விழும்போது, அவருக்கு மறுபடியும் எழுந்திருக்க பத்து செகண்டுகள் அவகாசம் தரப்படுகிறது. ஒரு செகண்டு கழித்து அவர் எழுந்தாலும் அவர் தோற்றவராகிவிடுவார். அடுத்த முறை நீங்கள் கீழே விழும்போது இதை நன்கு நினைவில் வைத்திருக்கவும்.
தனது வலது கை பறிபோய், தனது ஒலிம்பிக் கனவு தகர்ந்தபோது டகாக்ஸ்க்கு முடங்கிப்போவதற்கு பல OPTION கள் இருந்தன. “என் தலை விதி… எல்லாம் என் ராசி….” என்று என்னென்னவோ சொல்லிக்கொண்டு சுயபச்சாதபத்தை உடுத்திக்கொண்டு அவர் வாழ்நாளை ராணுவ பென்ஷன் வாங்கிக்கொண்டு கழித்திருக்க முடியும். ஆனால், அவர் தனக்குள்ளே விடையை தேடினார். வலது கையால் சுடமுடியும் என்றால் இடது கையாலும் ஏன் சுட முடியாது என்று கேள்வி கேட்டார்.
வெற்றியாளர்கள் எப்போதும் தீர்வை தேடுவார்கள் (SEARCH FOR SOLUTION). தோல்வியாளர்களோ எப்போதும் தப்பிக்க பார்ப்பார்கள் (SEARCH TO ESCAPE). இது தான் அவர்களுக்கிடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசம். நீங்கள் எப்படி?
அடுத்த முறை விழுந்தீர்கள் என்றால், உங்களுக்கு டகாக்ஸ் நினைவுக்கு வரவேண்டும். உடனே சுதாரித்துக்கொண்டு எழுந்துவிடவேண்டும்! வீழ்வது தோல்வியல்ல. வீழ்ந்துகிடப்பது தான் உண்மையான தோல்வி!!
======================================================================
Also check from our archives…
தோல்வி என்றால் உண்மையில் என்ன? MONDAY MORNING SPL 87
ஒரு சாதாரண மனிதனை சாதிக்க வைத்தது எது ?
தேவை : வாழ்வில் சாதிக்க துடிக்கும் சில இளைஞர்கள் !
“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!
ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்!
பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!
முடக்கி போட்ட விதி; ஜெயித்து காட்டிய மதி !
ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்!
வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல் – இவரைப் போல!
இவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் !
======================================================================
[END]
Dear Sundraji,
Good Morning. Excellent article. Monday Spl is Interesting. Please Continue as it gives a Confidence and Support to Our RM Viewers and Public whom they shared this article.
Thanking You For this Wonderful Edition.
With Regards,
S.Narayanan.
monday மோர்னிங் ஸ்பெஷல் மிகவும் அருமையான தன்னம்பிக்கை ஸ்பெஷல். டகாக்ஸ் அவர்களின் தன்னம்பிக்கையை படித்து நான் மிரண்டு விட்டேன்.
தெரியாத மனிதரைப் பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
சுபெர்ப் …………… ஸ்பெஷல்
நன்றி
உமா வெங்கட்
Truly inspiring… Thanks for sharing.
Excellent article
வணக்கம்…….. திரு.டகாக்ஸ் அவர்கள் தன்னம்பிக்கையின் சிகரம் என்றால் மிகையாகாது………… அவரைப் போன்ற தன்னம்பிக்கை எங்களுக்கெல்லாம் வருமா?
அன்புள்ள சுந்தர்
தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு ஒரு அற்புதமான உதாரணம். இதை நீங்கள் பகிர்ந்து கொண்ட விதம் மிக மிக அருமை. பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் உன்னத பணி.
கண்ணன்
மதுரை
Dear SunderJi,
Superb..
Rgds,
Ramesh
வணக்கம் சுந்தர். அருமையான ,தேவையான கட்டுரை.ஆனால் இந்த தன்னம்பிககை எல்லோர் மனதிலும் ஏன் வருவதில்லை. முயற்சி திருவினயாக்கும் என்பது இதுதான் . நன்றி
சுந்தர் அண்ணா..
கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்வியல் தத்துவத்தை “கரோலி டகாக்ஸ்” மூலம் எங்களுக்கு தெரிவித்து, SEARCH FOR ESCAPE லிருந்து “SEARCH FOR SOLUTION”க்கு செல்ல வேண்டும் என்பதையும் மிக உறுதியாக சொல்லி உள்ளீர்கள்.
மிக்க நன்றி அண்ணா..
வெற்றி பெருபவர்களுக்கு தோல்வி ஒருப்பொருட்டல்ல என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகின்றது.