Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 27, 2024
Please specify the group
Home > Featured > ஒதுக்கிய உலகத்தைத் தன் திறமையால் ஜெயித்துக் காட்டிய நர்த்தகி நடராஜ் – மகளிர் தின சிறப்பு பதிவு!

ஒதுக்கிய உலகத்தைத் தன் திறமையால் ஜெயித்துக் காட்டிய நர்த்தகி நடராஜ் – மகளிர் தின சிறப்பு பதிவு!

print
ர்த்தகி நடராஜ். இதுவரை நாம் சந்தித்த சாதனையாளர்களுள் மிக முக்கியமானவர். தனது சாதனைகளால் நம்மை பிரமிக்க வைத்தவர். மிகப் பெரிய நாட்டிய தாரகை. அரவாணிகள் என்று அழைக்கப்பட்டவர்களுக்கு ‘திருநங்கை’ என்று பெயர் சூட்டியது இவர் தான்.  வைஜயந்தி மாலா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு நாட்டியம் கற்றுத் தந்த கிட்டப்பா பிள்ளையிடம் நாட்டியம் கற்றவர். இவரது கதையையும் கடந்து வந்த பாதையையும் கேட்க கேட்க பிரமிப்பும் வியப்பும் தான் மேலிட்டது.

மகளிர் தினத்துக்கு இவரை விட பொருத்தமானவர் பதிவளிக்க கிடைக்கமாட்டார்!

இவருக்கு பரதமே உயிர்மூச்சு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா என்று இவர் போகாத நாடுகளே இல்லை. அரங்கேற்றம் நடத்தாத நகரங்களே இல்லை.

Narthaki Natraj 1

தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி, தன்னை புறக்கணித்த உறவுகளை தனது கடின உழைப்பாலும் அற்பணிப்பினாலும் இன்று அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறார்.குடியரசுத் தலைவரிடம் சமீபத்தில் பொற்றாமரை விருது கூட வாங்கியிருக்கிறார்.

இவரிடம் பேசும்போது தில்லையில் நடம் புரியும் ஆடல்வல்லான் எந்தளவு இவருக்கு இவரது வாழ்க்கை பயணத்தில் உறுதுணையாய் இருந்திருக்கிறான் என்று புரிகிறது. ஆம்… சிதம்பரம் நடராஜரின் பரிபூரண அருளையும் கடாக்ஷத்தையும் தரிசனத்தையும் பெற்றவர் நர்த்தகி நடராஜ்.

Narthaki Natraj 4

இவரை நமது தளத்தின் ரோல் மாடல் வி.ஐ.பி. சந்திப்புக்காக ஏற்கனவே சந்தித்து பேட்டிஎடுத்திருக்கிறோம். இன்று மகளிர் தின சிறப்ப பதிவாக அதை அளித்திருக்கவேண்டியது. ஆனால், சிவராத்திரி சிறப்பு பதிவுகள் அளிக்கவே நேரம் போதவில்லை. மேலும் நாம திருக்கடம்பூர் செல்ல வேண்டியிருந்ததால் இந்த பதிவை நிறைவு செய்ய முடியவில்லை.

நேற்று முன்தினம் கிருஷ்ண காண சபாவில் நடைபெற்ற நர்த்தகி நடராஜ் அவர்களின் திருநெறியத் திருமுறை நடனத்தை நேரில் கண்டு பரவசப்பட்டு, நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் அவரை நம் தளம் சார்பாக கௌரவித்தோம்.

Narthaki Natraj 2

சிவனின் செல்லப் பிள்ளையிடம் சிவனைப் பற்றி பேசாமல் வருவதா என்று சிவராத்திரிக்கு கடம்பூர் சென்று அமிர்தகடேஸ்வரரை தரிசிக்கவிருபப்தாக கூறினோம்.

“உங்க அப்டேட்ஸ் எல்லாம் ஃபேஸ்புக்ல பார்த்துக்கிட்டுருக்கேன் சுந்தர். ரொம்ப சிறப்பான பணி. எனக்காகவும் அமிர்தகடேஸ்வரர் கிட்டே வேண்டிகோங்க” என்றார்.

“எனது பிரார்த்தனை உங்களுக்காக் எப்போதும் உண்டு சகோதரி” என்றோம்.

Narthaki Natraj 3

இன்று மகளிர் தினத்தில் இந்த பதிவை அளிக்கவேண்டி, ஒரு பத்திரிகை பேட்டியில் நர்த்தகி கூறியிருக்கும் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்றை தருகிறோம்.

ஒதுக்கிய உலகத்தைத் தன் திறமையால் ஜெயித்துக் காட்டிய நர்த்தகி!

பரதக் கலையில் உச்சம் தொட்ட நடன நங்கைகள் யாருக்கும் வராத புதுவகை இடைஞ்சல்கள் கடந்து நடன அரங்கைத் தன்வசமாக்கிய திருநங்கை… நர்த்தகி நட்ராஜ். ‘அரவாணி’ என ஒதுக்கிய உலகத்தைத் தன் திறமையால் ஜெயித்துக் காட்டிய நர்த்தகியின் வாழ்க்கையில் இருந்து…

Narthaki Natraj _ Rightmanra Honours

”இந்தியாவிலேயே திருநங்கை என முத்திரையுடன் முதல் பாஸ்போர்ட் வாங்கியது நான்தான். அதுவே ஒரு பெரும் போராட்டம். முதல் பயணமாக அமெரிக்கா போய் இறங்குறோம். வரவேற்க வந்தவங்களுக்கு அப்பதான் நான் ஒரு திருநங்கைன்னு தெரிஞ்சது. அதிர்ந்துட்டாங்க. என்ன பண்றதுன்னு தெரியாம, வேண்டாத விருந்தாளி மாதிரி அழைச்சுட்டுப் போறாங்க. ரெண்டு வார நிகழ்ச்சி ஒரு நாள் நிகழ்ச்சியா மாற்றப்பட்டது. காரணம் புரிஞ்ச அன்னிக்கு ராத்திரி நான் தூங்கலை. விடிஞ்சது. நான் ஆடும் நேரம் வந்தது.

Narthaki Natraj _ Rightmanra Honours2

‘பம்பை பறை அதிரக் கொட்டு முரசொலிக்க தமிழர் திருநாளாம்… சிலம்பு சிலுசிலுக்க சலங்கை சலகலக்க ஆனந்தத் திருநாளாம்… இது அமெரிக்கத் திருநாளாம்!’னு உணர்வுகள் கொப்பளிக்கும் குரலில் பாடிக்கிட்டே முழு உத்வேகத்துடன் ஆடத் தொடங்கினேன். பரதத்தில் அமெரிக்க வாழ் தமிழர்களின் கலாசாரத்தையும் கலந்து ஆடினேன். அது எனக்கே புதுசு. அவங்களுக்கு ரொம்பவே புதுசு. நான் ஆடி முடிச்சதும் என்னைத் தலையில் தூக்கிவெச்சுக் கொண்டாடாத குறை. ஒரே நாளில் கிளம்புங்கன்னு சொன்னவங்க, ரெண்டு மாசம் அமெரிக்காவின் பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தவெச்சுட்டுத்தான் என்னை இந்தியா திரும்ப அனுமதிச்சாங்க!”

– எப்படி…!

இது நர்த்தகியின் போராட்ட பயணத்தின் ஒரு சிறு ட்ரெயிலர் தான். முழுப் பதிவு விரைவில்!

நம் தளத்தின் மிகப் பெரும் பலம் மகளிர் வாசகர்கள் தான். அதே போன்று நம் உழவாரப்பணிக் குழுவின் பலமும் அவர்கள் தான். இந்த மகளிர் தின நன்னாளில் பெண் வாசகர்கள் அனைவருக்கும் நம் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன், ரைட்மந்த்ரா தளத்தின் வளர்ச்சியில் மிகப் பெரிய பங்கினை ஆற்றி வருகிறமைக்கும் நம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

========================================================

Rightmantra needs your support to function smoothly…

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest or ad revenues. We are purely relying on our readers’ contribution. Donate us liberally. Small or big your contribution really matters.

Our A/c Details

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Or you can send Cheque / DD / MO to the following address:

Rightmantra Soul Solutions, Shop. No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033. Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

Also check :

சொத்துக்கள் அனைத்தையும் ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை – மகளிர் தின ஸ்பெஷல்!

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும் மகா பெரியவாவும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!

ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!

பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!

50 காசுகள் to லட்சங்களை புரட்டும் சங்கிலி தொடர் உணவகங்கள் – ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்!

ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1

திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!

ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!

“வறுமை நிலைக்கு பயந்துவிடாதே; திறமை இருக்கு மறந்துவிடாதே” – C.A. 1st Rank Holder Ms.Prema’s excl. interview to our website!

“அக்கா… அக்கா… எங்களுக்கெல்லாம் நீங்க தான் ரோல் மாடல்” – பிரேமாவை மொய்த்த பள்ளி மாணவிகள்!

========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *