Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, May 19, 2024
Please specify the group
Home > Featured > என் கடன் பணி செய்து கிடப்பதே!

என் கடன் பணி செய்து கிடப்பதே!

print
மது திருக்கடம்பூர் சிவராத்திரி சிறப்பு தரிசனம் மிக மிக சிறப்பாக நடந்தேறியது. எந்த வித திட்டமிடலும் இல்லாமல் அதே சமயம் அருமையாக அனைத்தும் நடந்து முடிந்தது. நினைத்துப் பார்த்தால் கனவு போல இருக்கிறது.

Thirukkadambur

Thirukkadambur2இந்த கோவிலுக்கு செல்லவேண்டும் இங்கு சில மணிநேரங்களையாவது கழிக்கவேண்டும் என்கிற ஆசை பல நாட்களாக இருந்து வந்தது. இருப்பினும் முறையான தொடர்பு கிடைக்கவில்லை. மேலும் இந்த ஆலயத்தின் புகைப்படங்களை பார்த்தவுடன் அழகில் சொக்கிப் போய் இந்த ஆலயம் பற்றி நம் தளத்தில் ஒரு ஆலய தரிசன சிறப்பு பதிவை அளிக்கவேண்டும் என்று வேறு முடிவு செய்திருந்தோம். ஆனால் திட்டமிடாமல் அது சாத்தியமில்லை. அதுவும் மகாசிவராத்திரி போன்ற முக்கியமான நாட்களில் அது எத்தனை கடினம் என்பது உங்களுக்கே தெரியும். எனவே கடம்பூர் பயணம் நேற்று முன் தினம் (ஞாயிறு மார்ச் 7) வரை திட்டமிடப்படவில்லை. இந்த சிவராத்திரியை பொருத்தவரை நாம் முதலில் செல்வதாக இருந்தது தருமபுரி கல்யாண காமாக்ஷி திருக்கோவிலுக்கு தான். ஆனால் திடீரென திருக்கடம்பூர் திட்டமிடப்பட்டு நடந்தேறியது. புயலாய் நம்மை அழைத்துச் சென்ற அம்பலத்தான், தென்றலாய் கொண்டு வந்து மீண்டும் சேர்த்துவிட்டான். நம்மிடம் என்ன இருக்கிறது ? அவனருளாலே அவன் தாள் வணங்கி!

Kalyana Sundarar
மூன்றாம் கால பூஜையில் கல்யாண சுந்தரருக்கு நடைபெற்ற அபிஷேகம்!

ஒரு பழம்பெரும் சிவாலயத்தில் நான்கு கால பூஜைகளை அபிஷேக ஆராதனைகளையும் கண்டு களித்துக்கொண்டு, கோவிலை ஏதோ குழந்தை புது வீட்டை குதூகலத்துடன் சுற்றி சுற்றி வருவதைப் போல சுற்றி வந்துகொண்டு… இந்த சிவராத்திரி நினைவுகள் என்றும் பசுமையாக இருக்கும் என்பது உறுதி.

திருக்கடம்பூரில் நான்கு கால பூஜை மற்றும் அபிஷேகங்களையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மூன்றாம் கால பூஜைக்கு நம்மால் இயன்ற சில அபிஷேக பொருட்கள், பூஜைப் பொருட்கள் தளம் சார்பாக வாங்கிக் கொடுத்திருந்தோம். மேலும் பூஜையின் போது நம் வாசகர்களின் பெயர்களுக்கும் பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையாளர்களுக்கும் அர்ச்சனை செய்ய பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அத்தனை பரபரப்பிலும் நெருக்கியடித்த கூட்டத்திற்கும் இடையிலும் இதை செய்ய முடிந்ததில் நமக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் நல்லதொரு மாற்றம் ஏற்படும் என்பதை உணர்த்தும்விதமாக வேறு சில சம்பவங்களும் நடைபெற்றன.

Thirukkadambur 2
பிரசாதம் பெற்றுக்கொண்டபோது…

(என்ன இது நான் பாட்டுக்கு சொல்லிட்டே போறேனே… ஆங்… எல்லாத்தையும் இதுலேயே சொல்லிபுட்டா எப்படி?) சிவராத்திரி சிறப்பு பதிவை நிறைவு செய்யும்போது அது பற்றி விரிவாக பார்ப்போம்.

kadambur prasadham

மற்றபடி திருக்கடம்பூர் அவசியம் அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசிக்கவேண்டிய வேண்டிய தலங்களுள் ஒன்று! இந்த தலத்தின் வரலாறு அத்தனை சுவையானது. அமிர்தம் போன்றது!

அப்புறம் இன்னொரு முக்கிய விஷயம்….

Thirukadambur 1

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்கிற அப்பர் பெருமானின் பிரபல வரிகள் பிறந்தது இந்தக் கோவிலில் தான்!

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன் கடன்னடி யேனையுந் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே.
– திருநாவுக்கரசர்

========================================================

Also Check :

12 ஜோதிர்லிங்கங்கள் தரிசனம் – ஒரு நேரடி அனுபவம் – மகா சிவராத்திரி சிறப்பு பதிவு

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

வரும் சிவராத்திரி 3 கோடி விரதத்திற்கு சமமான உத்தம சிவராத்திரி – முழு தகவல்கள் – சிவராத்திரி SPL 4

காகம் சிவகணங்களில் ஒன்றான கதை – அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL3

பதினோறாயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த ஏழை!  அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 2

காமுகன் கயிலை சென்ற கதை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 1

மனிதன் நினைக்கிறான் அவிநாசியப்பன் முடிக்கிறான்!

உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

========================================================

Rightmantra needs your support to function smoothly…

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest or ad revenues. We are purely relying on our readers’ contribution. Donate us liberally. Small or big your contribution really matters.

Our A/c Details

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Or you can send Cheque / DD / MO to the following address:

Rightmantra Soul Solutions, Shop. No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033. Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

சென்ற ஆண்டு அளித்த சிவராத்திரி ஸ்பெஷல் தொடர் மற்றும் இதற்கு முன்பு நாம் அளித்த சிவராத்திரி சிறப்பு பதிவுகளுக்கு….

கண்ணைக் கட்டிக்கொண்டு துவங்கிய ஒரு சிவராத்திரி பயணம்! – சிவராத்திரி ஸ்பெஷல் FINAL

மனக்கோயில் கொண்ட மாணிக்கத்துடன் ஒரு மாலை! – சிவராத்திரி ஸ்பெஷல் 6

சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 5

சிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்! சிவராத்திரி ஸ்பெஷல் 4

இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3

கல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

========================================================

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

========================================================

[END]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *