Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > ஒரு உடைந்த டீ கோப்பையும் கொஞ்சம் பக்குவமும்!

ஒரு உடைந்த டீ கோப்பையும் கொஞ்சம் பக்குவமும்!

print

ரு அப்பாவும் மகனும் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்திற்குப் போகிறார்கள்.

விருந்திற்கு முன்பாக தேநீர் வழங்கப்படுகிறது. அப்பா கையில் எடுப்பதற்கு முன்பு தேநீர் கோப்பை தவறி கீழே விழுந்து உடைந்து விடுகின்றது. அந்த சப்தம் கேட்டு நண்பர் வெளியே வந்து அதை பார்த்து, “அழகான சீனக் கோப்பை இது. எவ்வாறு உடைந்தது ?” என ஆதங்கமாகக் கேட்டார்.

“எனது கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது”, என அப்பா வருத்தமான குரலில் சொல்லவே நண்பர் உடைந்த பீங்கான்களை அள்ளிக் கொண்டு சென்றார்.

இதைக்கண்ட மகன் அப்பாவிடம் கேட்டான்… “உங்கள் கை கோப்பையில் படவே இல்லையே. பின் ஏன் நீங்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டீர்கள்?”

“உண்மைதான். தேநீர் கோப்பையைக் கொண்டுவந்து வைத்தது நண்பரின் மகள். அவள் கவனமாக மேஜைமீது அதை வைக்கவில்லை. ஆகவே தவறி விழுந்து விட்டது. இந்த உண்மையைச் சொன்னால் நண்பர் ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகமே. அதற்குப் பதிலாக செய்யாத குற்றத்தை நான் ஏற்றுக் கொண்டுவிடுவதே சரி என நினைத்தேன். ஒருவேளை இந்த உண்மைக்கு நீ தான் சாட்சி என விளக்கி சொல்லியிருந்தால் அவர் மகளைக் கோபித்துக் கொண்டிருப்பார். அதன்பிறகு அவரது மகளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும். மெல்ல எங்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடும். உறவுகளை உடைபடாமல் காப்பாற்ற இப்படி சிறு பொய்கள் தேவைப்படவே செய்கின்றன”.

அப்பாவின் முப்பது ஆண்டுகால அனுபவம் தான் அவரை இந்த முடிவு எடுக்க செய்திருக்கிறது. வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடம் இது போன்றது தானே!

இதற்கு மாறாக சிலர் தங்களது சுயநலத்திற்காக குடும்ப உறவுகளை சிதைத்து கொள்வதுடன் மற்றவர்களின் சந்தோஷத்தையும் கெடுத்து விடுகிறார்கள் .உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது எளிது. காப்பாற்றிக்கொள்வது எளிதல்ல. வீட்டுக் கொடுத்தலும், புரிதலும், அரவணைத்துப் போதலும் அத்தியாவசமானது.

நாம் யார் என்பதை நமது செயல்களே தீர்மானிக்கின்றன.

சிறியதோ, பெரியதோ எப்படியிருப்பினும், ஒரு செயலின் பின்னுள்ள எண்ணம் முக்கியமானது. நற்செயல்கள் புரிவதற்கு நல்லெண்ணங்களே முதற்படி. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு வழிமுறைகளை நாம் அறிவோம். ஆனால் நல்லெண்ணெங்களை உருவாக்கிக் கொள்ளவும் கடை பிடிக்கவும் என்ன வழிமுறைகள் இருக்கின்றன? அதை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள்? நல்ல எண்ணங்கள் மனதில் பதிய வேண்டுமென்று நம் முந்தைய தலைமுறை பெற்றோர்கள், ஒரே விஷயத்தை பலமுறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்போது மனதில் அது ஆழமாக பதிந்து விடும். நாம் எல்லோரும் அப்படியிருக்கிறோமா என்று நம்மையே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

கம்பராமாயணத்தின் ஆயிரம் பாடல்களை மனதில் இருந்து சொல்லக்கூடியவர் அன்று இருந்தார்கள். திருக்குறள், சிலப்பதிகாரம் முழுமையாக அறிந்தவர்கள், ஷேக்ஸ்பியரின் முழு நாடகத்தையும் நினைவில் வைத்திருந்து எடுத்து சொல்லும் திறன் கொண்டவர்கள் பலர் இருந்தார்கள். இன்று நாம் கணினியை அதிகம் சார்ந்து இயங்குவதால் நினைவாற்றலை இழந்து வருகிறோம். அதன் முக்கியத்துவமும் பெரிதாக மனதில் இல்லை. இப்படியே போனால் அடுத்த தலைமுறைக்கு தனது தந்தை, தாயின் பெயர் தவிர வேறெதுவும் நினைவில் நிற்காது.

கவிதை படித்தல் என்பது நினைவாற்றலை காப்பாற்றும் வழி என்கிறார் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசா.

ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், இலக்கியங்கள், திருமுறைகள் இவற்றை அவசியம் அனைவரும் படிக்கவேண்டும். பிள்ளைகளையும் படிக்க வைக்கவேண்டும். ஏட்டுச் சுரைக்காய் வாழ்க்கைக்கு போதாது.

அடுத்தவருக்கு இடையூறு செய்கிறோம் என்று தெரிந்தும் அதை பற்றி துளிக்கூட குற்ற உணர்ச்சி கொள்ளாத இளம் தலைமுறை உருவாகிக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இது மிகவும் ஆபத்தானது.

மேலே ஒரு இடத்தில் குறிப்பிட்டது போல விட்டுக் கொடுத்தலும், புரிந்து கொள்ளுதலும், அரவணைத்துப்போக முயல்வதும் தான் உறவுகளை காப்பாற்ற வழிவகுக்கும். இச்செயல்களை அடுத்த தலைமுறையினர்க்கு புரிய வைப்பது நம் தலைமுறையின் கடமை ஆகும்..

(‘கடவுளின் நாக்கு’ என்ற தலைப்பில் வந்த திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரையின் ஒரு பகுதியைத் தழுவி!)

=========================================================

Also check :

பிள்ளைகளுக்கு  என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?

உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா? MUST READ

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்!

‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்!’ MUST READ

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் – ஒரு கதையும் ஒரு சம்பவமும்!

=======================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=========================================================

Also check :

ஒரு நடிகைக்கு தந்தை எழுதிய கடிதம்! MUST READ

ஒரு கோடீஸ்வரரின் மகன் வேலை தேடி அலைந்த கதை – MUST READ

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

நேர்மைக்கு ஒரு விலை!

கார்பரேட் அடிமைக்கு கிடைத்த ‘பளார்’ – ஒரு உண்மை சம்பவம்!

ஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று !

“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!

“தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள்!”- ஒரு கணவனின் வாக்குமூலம்!

உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?

‘வாழ்க்கைத் துணை’ (LIFE PARTNER) என்றால் என்ன?

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!

ரெக்கை கட்டி பறந்த ஒரு சைக்கிள் வியாபாரி! சந்தையை புரட்டிப்போட்ட ‘நிர்மா’!

ஒரு வடை வியாபாரியும் வாழ்க்கை பாடமும்!

========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *