வாழநினைத்தால் வாழலாம்… வழியா இல்லை பூமியில்?
அந்த பன்னாட்டு நிறுவனத்தின் எதிரே ஒரு சாலையோரக் கடையில் ஒருவர் தினசரி மசால் வடை விற்பது வாடிக்கை. வடை விலை மலிவாகவும் அதே நேரம் மிகவும் சுவையாகவும் இருக்கும் என்பதால் பிரேக்கின் போது அந்நிறுவனத்தின் ஊழியர்கள் பலரும் அங்கு வந்து தான் டீ, வடை, சமோசா உள்ளிட்ட ஸ்நாக்ஸ் சாப்பிடுவார்கள்.
ஒரு நாள் அந்நிறுவனத்தின் மேலாளர் அருண் அங்கு வடை சாப்பிடவந்தார். என்ன நினைத்தாரோ உற்சாகத்துடன் அந்த வடை வியாபாரியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.
“பாபு, ரொம்ப நாளா உன்னை பார்க்கிறேன். உன் கடையை நீ நல்லா நடத்துறே உன்கிட்டே மேனேஜ்மேண்ட் ஸ்கில்ஸ் நிறைய இருக்கு. ஓரளவு படிச்ச நீ உன்னோட அறிவையும் திறமையையும் இப்படி வடை வித்து வீணடிக்கிறோமேன்னு உனக்கு தோணலியா?”
“யோசிச்சு பாரு… என்னை மாதிரி ஒரு கம்பெனில நீ வேலைக்கு சேர்ந்திருந்தா இந்நேரம் மேனேஜர் ஆகியிருக்கலாம்…”
பாபு ஒரு கணம் சிரித்தான்.
“சார்… நீங்க பார்க்குற வேலையை விட வடை விற்குற இந்த தொழில் பெட்டர் சார்… ஏன் தெரியுமா?”
“பத்து வருஷத்துக்கு முன்னாடி நான் கூடையில தான் வடை சமோசாவை வித்துகிட்டிருந்தேன். அப்போ தான் உங்களுக்கும் இந்த கம்பெனியில வேலை கிடைச்சது. அந்த நேரம் எனக்கு இதுல மாசம் தோராயமா நாலாயிரம் ரூபாய் கிடைச்சது. உங்களுக்கு அப்போ சம்பளம் இருபதாயிரம் ரூபாய் இருக்கும். அப்புறமா ஒரு தள்ளுவண்டியிலே கடை போட்டேன். இந்த பத்து வருஷத்துல நாம ரெண்டு பேரும் நல்லா டெவலப் ஆகியிருக்கோம். இதே இடத்துல நான் ஒரு கடை வெச்சிட்டேன். நீங்க அந்த கம்பெனியில நல்ல பொஷிஷனுக்கு வந்துட்டீங்க. இப்போ உங்க சம்பளம் ரெண்டு லட்சம் இருக்கும் இல்லியா? நானும் கிட்டத்தட்ட அந்தளவு கூடக் குறைய சில நேரங்கள்ல சம்பாதிக்கிறேன். ஆனா உங்க வேலையை விட என் வேலை பெட்டர். ஏன் சொல்றேன்னா… என் பிள்ளைகளோட எதிர்காலத்தை மனசுல வெச்சு!”
அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அருண், “எதைச் வெச்சு சொல்றீங்க பாபு?” என்றான் ஆர்வமாக அதே சமயம் சற்று குழப்பமாக.
**************************************************************
Don’t miss….
கார்பரேட் அடிமைக்கு கிடைத்த ‘பளார்’ – ஒரு உண்மை சம்பவம்!
**************************************************************
“கவனமாக கேளுங்க சார்…. அதாவது சார் என்னோட வேலையை, தொழிலை மிகக்குறைந்த வருவாய்ல, குறைஞ்ச முதல் போட்டு பத்து வருஷத்துக்கு முன்னே நான் ஆரம்பிச்சேன். ஆனா, என் பையனுக்கு அந்தக் கஷ்டம் கிடையாது. எனக்குப் பிறகு ஒரு நாள் அவன் என்னோட வியாபாரத்தை கவனிச்சுக்குவான். அப்போ அவன் ஜீரோவுல இருந்து ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நன்கு வளர்ந்த, லாபத்துக்கு உத்திரவாதம் கொண்ட ஒரு வியாபாரத்தைத் தான் அவன் கவனிச்சுக்கப் போறான். ஆனா உங்க கேஸ் அப்படியில்லை. கம்பெனியில் உங்களோட இந்த பத்து வருட வளர்ச்சியின் பயனை, உங்க முதலாளியும் அவரோட பிள்ளைகளும் தான் அனுபவிப்பாங்க. உங்க பிள்ளைகள் அல்ல. நீங்க பார்க்குற அதே வேலையை உங்க பிள்ளைகளுக்கு நீங்க வாங்கித் தரமுடியாது. அவங்க பேசிக்ல (START FROM SCRATCH) இருந்து தான் ஆரம்பிக்கணும்.”
“நீங்க பத்து வருஷத்துக்கு முன்னே எப்படி கஷ்டப்பட்டீங்களோ போராடினீங்களோ அதே கஷ்டம் தான் உங்க பசங்க படனும். ஆனா என்னோட பிள்ளை இந்த வியாபாரத்தை நல்லா விரிவுபடுத்த அவனுக்கு நிறைய வாய்ப்பிருக்கு. பக்கத்துல ஒரு பெரிய கம்பெனியில ஸ்நாக்ஸ் கான்டராக்ட் பேசிக்கிட்டிருக்கேன். என் பையன் தான் அதை பார்த்துக்கப்போறான். நாளைக்கு உங்க பையன் வளர்ந்து மேனேஜரா இருக்கும்போது, என் பையன் எங்கேயோ போயிருப்பான்.”
“இப்போ சொல்லுங்க… யார் அறிவையும் திறமையையும் வேஸ்ட் செய்றது????”
அடுத்த நொடி சாப்பிட்ட வடைக்கு பணம் கொடுத்துவிட்டு அருண் நடையைக் கட்டினான். வியர்த்து விறுவிறுத்தபடி.
* நீ பழகும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான்.
* செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமை தான் நமது செல்வம்.
* உழைப்பின் காய் கசப்பானது. கனியோ இனிப்பானது.
* ஏ.சி. அறையில் செய்யும் பணிகள் தான் அதிக வருவாய் தரும் என்பது நிச்சயமில்லை.
* படித்தவர்களே அதிகம் சம்பாதிக்கமுடியும் அவர்களே புத்திசாலிகள் என்று நினைக்கக்கூடாது.
* அழுக்கு உடையில் இருப்பவர்களுக்குத் தான் எதிர்காலம் குறித்த கவலைகளும் டென்ஷனும் இருக்கும் என்று நினைக்கக்கூடாது. எதிர்காலம் குறித்த தெளிவான பார்வை அவர்களில் பலருக்கு இருக்கும்.
(இணையத்தில் சுற்றிக்கொண்டிருந்த ஆங்கிலத்தில் கண்ட ஒரு கதையை மெருகேற்றி இங்கே தந்திருக்கிறோம். ஆனால் கிட்டத்தட்ட இதே போல ஒரு உண்மை சம்பவத்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் நாம் படித்திருக்கிறோம்! ஆக, நம்பிக்கையும் லட்சியமும் தொலைநோக்கு பார்வையும் சேர்ந்தால் எந்தவொரு தொழிலிலும் சிகரத்தை எட்டலாம் என்பதே உண்மை!!)
அனைவருக்கு நவராத்திரி ஆயுதபூஜை வாழ்த்துக்கள்!
**************************************************************
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?
Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
Paypal id : ‘rightmantra@gmail.com’
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
**************************************************************
Similar articles….
மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!
ஒரு கோடீஸ்வரரின் மகன் வேலை தேடி அலைந்த கதை – MUST READ
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
‘கலைவாணி’ என்னும் கறுப்பு வைரம்!!
கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?
வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?
அன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்!
ஒரு நடிகைக்கு தந்தை எழுதிய கடிதம்! MUST READ
ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?
**************************************************************
தட்டுங்கள்… இந்தக் கதவு நிச்சயம் திறக்கும்!
அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா?
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்!
விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!
உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?
ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)
எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
**************************************************************
[END]
தங்களுக்கும் நவராத்ரி மற்றும் ஆயுத பூஜை நாள் வாழ்த்துக்கள்!
அன்பன்
நாகராஜன் ஏகாம்பரம்