நண்பர் திரு.ம.கா.சிவஞானம் அவர்கள் நடத்தி வரும் ‘மல்லிகை மகள்’ மகளிர் மாத இதழில் அமரர் எஸ்.ஏ.பி. அவர் மகளுக்கு எழுதிய கடிதம் குறித்து வெளியான ஒரு கட்டுரையை இங்கே அவரது அனுமதி பெற்று தந்திருக்கிறோம்.
படியுங்கள். மனதில் பதியுங்கள். பகிருங்கள்.
**************************************************************
Also check :
பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?
உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா? MUST READ
சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்!
**************************************************************
எண்ணம் குட்டிபோடும் தன்மையுடையது!
குமுதம் வார இதழில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான கடிதம் அது. ‘குமுதம்’ ஆசிரியர் எஸ்.ஏ.பி தன் மகள் கிருஷ்ணா சிதம்பரத்துக்கு எழுதியது.
கிருஷ்ணா சிதம்பரத்துக்கு திருமணமான புதிது. ‘கணவரின் பெற்றோர் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை; அன்புடன் நடத்தவில்லை; தனக்கு இந்தத் திருமண வாழக்கை மகிழ்ச்சியைத் தரவில்லை’ என்ற ஆதங்கத்தில் அவர் மூழ்கி இருந்த நேரம். ஒரு மாறுதலுக்காக மைசூரில் இருக்கும் அக்கா வீட்டுக்கு தங்கி வரப் புறப்பட்டிருக்கிறார். ”அப்பா கடிதம் எழுதுவார்கள். கலங்காமல் போ!” என அவர் அம்மா சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.
பொதுவாக, இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்ணைப் பெற்ற அப்பாக்களிடமிருந்து என்ன கடிதம் வரும்? ‘நாங்கள் இருக்கிறோம்… கவலைப்படாதே!’ என்றோ, ‘எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்… பெண்ணுக்கு அதுதான் அழகு’ என்றோ அறிவுரை வரும். அதைத்தான் கிருஷ்ணா சிதம்பரமும் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், எஸ்.ஏ.பி.யிடம் இருந்து வந்ததோ… மகளின் வாழ்க்கையையே வழிநடத்துக் கூடிய கருத்துப் பெட்டகம்.
1988-ம் ஆண்டில் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை தன் வாழ்வின் மூல சாசனம் என்றே குறிப்பிட்டிருந்தார் கிருஷ்ணா சிதம்பரம் இந்தக் கடிதத்தை மையமாகித்தான் தன் வாழவை அமைத்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லி பூரித்திருந்தார்.
”வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடத் தோன்றுகிறது. இத்தகைய பேரின்பமான வாழ்க்கையைத் தந்த இறைவனுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் மனம் தத்தளிக்கிறது. இந்தப் பிறவி எடுக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ என்று மலைப்பாக இருக்கிறது!” என்றெல்லாம் தனது பரவசத்தை எழுத்தில் கொட்டியிருந்தார் கிருஷ்ணா சிதம்பரம்.
அவருக்கு மட்டுமல்ல… நிச்சயம் நம்மில் பலருக்கும்கூட வாழ்நாள் முழுமைக்குமான வழிகாட்டுதலாய் அந்தக் கடிதம் அமையக் கூடும். இதோ அந்தக் கடிதம்…
^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~
எஸ். ஏ. பி எழுதுகிறார்…
”கவலையைச் சுட்டெறி. இது, மெதுவாக நுழைந்து, ஓசைப்படாமல் கடித்து உயிரைக் குடிக்கக் கூடிய நச்சுப்பாம்பு. அதற்கு இடம் தராதே என்கிறது கீதை.
கவலையுறாதே. எழுந்திரு. உற்சாகமாக வாழ்க்கையைச் சந்தி, எத்தனையோ பிறவிகள் எடுத்து, புல்லாய், பூண்டாய், மிருகமாய், பறவையாய்த் திரிந்து, புண்ணியம் செய்து பெற்ற பெறற்கரிய ஜன்மம் இந்த மானிட ஜன்மம். அதுவும், கூன், குருடு, முடமாய்ப், பிறக்காமல் முழுமையாய்ப் பிறந்து பேரதிர்ஷ்டம். ‘அதை வீணாக்கலாமா?” என்று கேட்பார் ஆதிசங்கரர்.
சந்தோஷமாக முக மலர்ச்சியுடன் பழகு, இனிமையாகப் பேசு. மனதுக்குள் விளக்கு ஏற்றி வைத்துக்கொள். அது முகத்தில் பிரகாசித்து உன்னைப் பார்க்கிறவர்கள் எல்லோரையும் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு, சோர்விலிருந்து மகிழ்ச்சிக்கு, கோழைத்தனத்திலிருந்து வீரத்திற்கு அழைத்து வரட்டும்.
எண்ணம், குட்டிபோடும் தன்மையுடையது. எந்த எண்ணமும் தனித்துத் தோன்றி, தனியாக மறைவதில்லை. தன்னைப்போல பத்து நூறு எண்ணங்களை அடுக்கடுக்காகத் தோற்றுவித்து விட்டுத்தான் போகும். ‘நான் சோர்வாக இருக்கிறேன்’, ‘நான் தோல்வி அடைந்துவிட்டேன்’ ‘எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது’ என்று ஒரு முறை… ஒரே ஒரு முறை நினைத்தாலும்கூட, அது குளத்திலே எறிந்த கல்லினால் எழும் வட்டங்களைப் போல் பெரிதாகிப் பெரிதாகி, ஆளையே அழித்து விடும். எண்ணத்தை நீ ஏன் பயன்படுத்திக் கொள்ளலாகாது?
‘நான் நல்லவன்’ என்று நினை. ‘நான் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று எண்ணு. ‘எனக்கு எல்லோரையும் பிடித்திருக்கிறது. எனக்கு விரோதிகளே இல்லை. நான் எல்லோரிடமும் அன்பு செலுத்திக்கிறேன். எனக்கு எல்லோரிடமும் பிரியம் உண்டு. எல்லோரும் என்னை நேசிக்கிறார்கள் என்று ஒரு முறை நினை. அந்த ஒரு எண்ணமே வேர்விட்டு, கிளைத்து, பெரிய அலமரமாகி அசைக்க முடியாத சக்தியாக உனக்குத் துணை நிற்கும்.
வாழ்க்கை அழகானது. வாழ்க்கை ரசிக்கத்தகுந்தது. தெய்வீகமானது. அது ஓர் வீணை. அதை அன்புடன் வாசித்து, இன்னிசை எழுப்பு.
அது உன் கையில்தான் இருக்கிறது…”
அன்புடன்,
அப்பா
^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~
ஒரு அசாதாரண தந்தையின் அற்புதமான அறிவுரை! இந்தக் கடிதத்தின் மையமாக ஒலிக்கும் ‘எண்ணங்கள் குட்டி போடும் தன்மையுடையது’ என்பது எத்தனை பெரிய உண்மை!
எதோ ஒரு கட்டத்தில் நம் உற்ற நண்பர் நமக்குப் பிடிக்காத ஒரு காரியத்தை செய்துவிட்டால்… அவர் பற்றி நம்முள் தோன்றும் மோசமான எண்ணம், அத்துடனா முடிந்துவிடும்? அவர் நமக்கு செய்த நன்மைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, கடந்த காலத்தில் அவரால் நமக்கு ஏற்பட்ட இன்னல்களை மட்டுமே வரிசைப்படுத்திக் கொண்டிருக்கிறதே! ‘அவர் அப்பவே அப்படித்தான்,’ ‘அன்னிக்கு கூட இதே மாதிரிதான்,’ எப்பவுமே அவருக்கு இதே வேலைதான்’ எனப் பட்டியலிட்டு அவரை வில்லனாக்கி விட்டுதானே மறுவேலை பார்க்கும்! சொந்த பந்தங்களில், உடன் பிறந்தவர்களில், நண்பர்களில், அலுவலக சகாக்களில்… இப்படி எத்தனை உறவுகளை இந்த குட்டி போடும் எண்ணங்களால் இழந்திருப்போம்.
1988 -ல் எழுதப்பட்டிருந்தாலும், சகிப்புத் தன்மை குறைந்து உறவுகளிடையே உரசல்கள் அதிகரித்து வரும் இந்தக் காலத்துக்குத்தான் இது அவசிய அறிவுரை. குறிப்பாக, புகுந்த வீடு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறந்த வீட்டின் சீதனங்களில் ஒன்றாகவே இந்த நல்வார்த்தைகள் தரப்பட வேண்டும்!
– தமிழ்ச்செல்வி, திருச்சி | ‘மல்லிகை மகள்’ மாத இதழ்
=======================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
========================================================
Also check :
ஒரு நடிகைக்கு தந்தை எழுதிய கடிதம்! MUST READ
ஒரு கோடீஸ்வரரின் மகன் வேலை தேடி அலைந்த கதை – MUST READ
ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?
கார்பரேட் அடிமைக்கு கிடைத்த ‘பளார்’ – ஒரு உண்மை சம்பவம்!
ஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று !
“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!
“தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள்!”- ஒரு கணவனின் வாக்குமூலம்!
உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?
‘வாழ்க்கைத் துணை’ (LIFE PARTNER) என்றால் என்ன?
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!
ரெக்கை கட்டி பறந்த ஒரு சைக்கிள் வியாபாரி! சந்தையை புரட்டிப்போட்ட ‘நிர்மா’!
ஒரு வடை வியாபாரியும் வாழ்க்கை பாடமும்!
========================================================
[END]