Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > திருப்பாம்புரம் – ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே பெற்ற ஒரே தலம்!

திருப்பாம்புரம் – ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே பெற்ற ஒரே தலம்!

print
ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம், 18 வருட ராகு தசை, 7 வருட கேது தசை, லக்னத்திற்கு 2 ல் ராகுவோ, கேதுவோ இருப்பது, லக்னத்திற்கு  8ல் கேதுவோ, ராகுவோ இருப்பது, ராகு புத்தி, கேது புத்தி, களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணத்தடை, கனவில் அடிக்கடி பாம்பு வருதல், தெரிந்தோ தெரியாமலோ பாம்பைக் கொல்லுதல், கடன் தொல்லைகள் இருந்தால் அவர்கள் யாவர்க்கும் அருமருந்தாக விளங்கும் ஒரு ஆலயத்தை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

Thirupamburam 2

Thirupamburam 6

Thirupamburam 4Thirupamburam 3Thirupamburam 5Thirupamburam 7திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற சிறப்பு மிக்க தளம் இது.

இறைவன் : சேஷபுரீஸ்வரர். இறைவி : பிரமராம்பிகை (வண்டார்குழலி)

இந்த கோயில் திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோயில் ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே அமையப்பெற்ற தலம். எனவே இத்தலம் சர்வ தோஷ பரிகார தலம் என புராணங்கள் கூறுகின்றன. ஆதிசேஷனுக்கு இங்கு உற்சவர் விக்ரகம் உள்ளது.

Thirupamburam 1

Thirupamburam 10A

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பிற கோயில்களில் இருப்பதைப்போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற தலம் என்பது இதன் சிறப்பு. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 59ஆவது சிவத்தலமாகும். ஆனை தொழுத தலம் திருஆனைக்கா எனவும், எறும்பு தொழுத தலம் திறு எறும்பூர் எனவும் வழங்கப்படுவதுபோல, பாம்பு தொழுத இத்தலம் திருப்பாம்புரம், “பாம்புரம்” எனப் பெயர் கொண்டது.

திருஞானசம்பந்தர் தன் தேவாரப் பாடல்களில் இத்தலத்தைப் “பாம்புர நன்னகர்” என்று குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகத்திலும், சுந்தரர் தம் தேவாரத்திலும் இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். அருணகிரிநாதரும் திருப்புகழில் இத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு, கேது போன்ற சந்தர்ப்ப தோஷங்கள் விலகவும் சிறந்த தலம் என கூறப்படுகிறது.

Thirupamburam 12
21/03/2002 அன்று காலை முதல் காலை பூஜையின் போது வண்டுசேர்குழலி அம்பாள் மீது 7.5 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று மாலை போல உரித்த சட்டை இது!

இத்தலத்தில் பாம்புகள் வடிவில் இறையடியார்கள் வாழ்வதாக ஐதீகம். இத்தலத்தில் பாம்பு தீண்டுவதில்லை; அகத்தி பூப்பதில்லை; ஆலின் விழுது தரை தொடுவதில்லை. அன்னையின் மீதும் அப்பனின் மீதும் நாகம் சட்டை உரித்து மாலையாகச் சூட்டுகிறது.

போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 – 6.00 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

Thirupamburam 9

Thirupamburam 11நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.

விநாயகர் கைலாயத்தில் தன் தந்தை சிவபெருமானை வணங்கிய போது, அவர் கழுத்தில் இருந்த பாம்பு, தன்னையும் விநாயகர் வழிபட்டதாக நினைத்து கர்வம் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்க சாபமிட்டார். பின்னர் அஷ்ட மகா நாகங்களும், ராகு, கேதுவும் தங்கள் இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக மற்றவர்களையும் தண்டிக்கலாகாது என்றும், தவறு செய்த பாம்பையும் மன்னிக்கும்படியும் சிவனை வேண்டினர்.

Thirupamburam 8

மகாசிவராத்திரியன்று நாகங்களின் தலைவன் ஆதிசேஷன் தலைமையில் அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய நாகங்கள் திருப்பாம்புரம் வந்து வேண்டி சாபவிமோசனம் பெறலாம் என சிவன் அருளினார்.

அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள் மற்றும் நாகராஜரான ஆதிசேடன் ஆகியோர் இங்கு வந்து வழிபாட்டு பாவம் நீங்கி சென்றிருக்கின்றனர்.

Thirpamburam Seshapureeswarar

முகவரி : அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம்- 612 203. குடவாசல் வட்டம். திருவாரூர் மாவட்டம். Ph : 0435-7469555

செல்வது எப்படி : கும்பகோணம் – காரைக்கால் செல்லும் வழியில் கற்கத்தி என்னும் ஊர் அருகே .திரும்பவேண்டும். அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. (கும்பகோணம் – காரைக்கால் சாலையில் ஆர்ச் வைக்கப்பட்டுள்ளது.)

=====================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

சிறுவாபுரி பயணம்!

சிறுவாபுரியில் அண்ணாமலையார் ஆன்மீக வழிபட்டுக் குழுவினர் நடத்தவுள்ள திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று தொண்டு செய்ய நாம் நமது ‘ரைட்மந்த்ரா உழவாரப்பணி’ குழுவினருடன் சனிக்கிழமை (05/09/2015) மதியம் 3.00 மணியளவில் கோயம்பேட்டிலிருந்து வேனில் (நமது ஏற்பாடு) புறப்படுகிறோம். மாலை சுவாமிக்கு நடைபெறும் மாப்பிள்ளை அழைப்பில் பங்கேற்று தொண்டு செய்துவிட்டு இரவு சிறுவாபுரியில் ஹால்ட். மறுநாள் அதிகாலை எழுந்து தயாராகி தொடர்ந்து திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று உதவிகள் செய்துவிட்டு பிற்பக 2.00 மணியளவில் புறப்பட்டு சென்னை திரும்புகிறோம்.

அவரவர் சௌகரியத்தை பொறுத்து நாளை நம்முடன் வரக்கூடியவர்கள் வரலாம். அல்லது ஞாயிறு காலை நேரடியாக சிறுவாபுரிக்கு வந்து அங்கு இணைந்துகொள்ளலாம். (ஞாயிறு காலை வருகிறவர்கள் 7.30 AM க்குள் வரவும்.)
Siruvapuri Thirukkalyaana Urchavam
Siruvapuri Thirukkalyaana Urchavam 2உங்களுக்கோ உங்களை சார்ந்தவர்களுக்கு திருமண பிரார்த்தனை செய்ய இது அருமையான சந்தர்ப்பம். அண்ணாமலையார் ஆன்மீக வழிபட்டுக் குழுவினர் இதை முழுக்க முழுக்க இலவசமாக நடத்துகின்றனர். மாலை முதல் அனைத்தும் இலவசம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பலன் பெறவும்.

=====================================================================

Also check :

இல்லறமும் நல்லறமும் கூடவே சொந்த வீட்டையும் அருளும் சிறுவாபுரி பாலசுப்ரமணியர் !

இவர் தீர்க்காத நோய் இல்லை – வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர்

வேதமாகிய மலைகளுக்கு நடுவில் எழுந்தருளியிருக்கும் திரிசூலம் திரிசூலநாதர்!

நல்லதொரு வேலை; இனியில்லை கவலை! இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்!!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

அன்னப்பிராசனம் – குழந்தைக்கு ஊட்டும் முதல் சோற்றில் இத்தனை விஷயமா?

மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை – சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழ்வு!!

தீராத தோல்நோய்களை தீர்க்கும் திருத்தலம் + எருக்கன் இலை பிரசாதம்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

வாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!

சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

தவறுகளை மன்னித்து நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு தலம்!

=====================================================================

[END]

3 thoughts on “திருப்பாம்புரம் – ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே பெற்ற ஒரே தலம்!

  1. Sundarji,
    Your post brought back a lot of memories, as I had visited this temple last year by Gods grace.
    The way leading to the temple was soooo beautiful with lush greenery, very scenic n very quiet.
    How I wish I cud stay at kumbakonam!!!!!!

    Tks a lot.
    Ranjini

  2. திருப்பாம்புரம் பற்றிய அழகிய பதிவு. இந்த பதிவை படிக்கும் பொழுது கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றி வந்த உணர்வு ஏற்படுகிறது. கோவிலைப் பற்றிய அழகிய வர்ணனையை கொடுத்துள்ளீர்கள். ஒவ்வொரு படங்களும் அழகாக உள்ளது.

    பாம்பு அம்பாள் மீது சட்டையை உரித்த காட்சியைப் பார்க்கும் பொழுது பரவசமாக உள்ளது.

    சிறுவாபுரியில் முருகப்பெருமானின் மாப்பிளை அழைப்பு உற்சவத்திலும், திருமணத்திலும் கலந்து கொண்டது கலந்து கொண்டு சேவை செய்ததை மிகவும் பாக்கியமாக கருதுகிறேன். இந்த வைபவத்தில் கலந்து கொண்டவர்கள் பாக்கியசாலிகள். தங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *