Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > தவறுகளை மன்னித்து நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு தலம்!

தவறுகளை மன்னித்து நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு தலம்!

print

ந்தர்ப்ப சூழ்நிலைகளால் உந்தப்பட்டு தவறு செய்கிறவர்கள் அநேகம் பேர் உள்ளனர். நாம் செய்த தவற்றை மூடி மறைத்து யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். ஆனால் மனசாட்சியை ஏமாற்றவே இயலாது.

Uthirakosamangaiஅறிந்தோ அறியாமலோ அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மனிதர்கள் பலவித தவறுகள் செய்கின்றனர். பின்னர் அதை எண்ணி வாழ்நாள் முழுதும் வருந்துகின்றனர்.

“குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது” என்னும் பாடலுக்கிணங்க, ஒரு நொடியில் அவசரப்பட்டு செய்த தவறானது வாழ்க்கை முழுதும் மனவருத்தத்தை சிலருக்கு தந்து கொண்டிருக்கும்.

தவறு செய்வது மனித குணம். அதை மன்னிப்பது தெய்வ குணமல்லவா ? எனவே செய்த தவற்றால் நிம்மதி இழந்து தவிப்பவர்களுக்கு மன்னிப்பை அளித்து அவர்கள் நல்வாழ்வு வாழ வழிகாட்டுகிறது ஒரு தலம்.  அது தான் திருஉத்திரகோசமங்கை எனப்படும் பாண்டி நாட்டில் உள்ள திருவாசக பாடல் பெற்ற தலம்.

Thazambooதிருஉத்திரகோசமங்கை

இங்கு நடராஜர் சிலை மரகதத்தில் உள்ளது.இந்த நடராஜர் தான் ஆதி நடராஜர் என்றும் சொல்லப்படுகிறது.அதாவது தில்லை நடராஜரக்கு முன்பு இருந்தே இந்த ஆலயம் உள்ளது.ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே நடராஜரை மரகத கோலத்தில் தரிசிக்கமுடியும்.

மற்ற நாட்களில் சந்தனகாப்பு சார்த்தபட்டிருக்கும்.ஆரூதரா தரிசனம் முடிந்த அடுத்த நாள் மீண்டும் சந்தன காப்பு சார்த்தப்பட்டு அடுத்த ஆண்டு ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே களையப்படும்.இறைவன் உமையவள் மட்டும் காணுமாறு நடனம் ஆடியது உத்திரகோசமங்கையில் மட்டுமே.

இந்த கோவிலுக்கு பல பெருமைகள் உள்ளன. அவற்றை எழுத ஒரு பதிவு போதாது. ஆனால் அவற்றுள் மிக முக்கியமான ஒன்றை பார்ப்போம்.

Uthirakosamangai 2சிவ பூஜைக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும் ஒரே கோவில்

இறைவனின் அடி முடியை காண நான்முகனுக்கும் திருமாலுக்கும் போட்டி நிகழ்ந்தது. அப்போது விஷ்ணு வராக அவதாரம் எடுத்து கீழ்நோக்கி சென்றார். பிரம்மா அன்னவாகனத்தில் திருமுடியை காண மேல்நோக்கி சென்றார். அப்போது இறைவன் சிரசிலிருந்து தாழம்பூ ஒன்று உதிர்ந்து, கீழே வந்துகொண்டிருந்தது. அது விழுந்து கல்பகாலம் இருக்கும். அதை கண்ட பிரம்மா இறைவனின் திருமுடியை நான் கண்டதாக நீ கூறவேண்டும் என்று தாழம்பூவை கேட்டுக்கொள்ள தாழம்பூ அவ்வாரே பொய் சொன்னது.

இதை அறிந்த சிவபெருமான், பிரம்மா, தாழம்பூ இருவருக்கும் சாபமிட்டார். சிவ பூஜையில் தாழம்பூ இடம்பெறாது என்றுஒதுக்கிவைத்தார். அது முதல் சிவபூஜையில் மட்டுமின்றி வேறு எந்த பூஜையிலும் தாழம்பூவை பயன்படுத்துவதில்லை.

தவறை உணர்ந்த தாழம்பூ – மன்னித்தருளிய இறைவன் !

தன் தவறை உணர்ந்த பிரம்மா, இத்தளத்தில் தீர்த்தம் உண்டாக்கினார். சிவனிடம் சாபம் பெற்ற தாழம்பூ தவமிருந்து மன்னிப்பு வேண்டியது. அவர்கள் வேண்டுதலை ஏற்றுகொண்ட இறைவன், இருவருக்கும் காட்சி தந்து மன்னித்தருளினார். மேலும் தாழம்பூவை இத்தலத்தில் தாம் பயன்படுத்திகொள்வதாகவும் வரமளித்தார். அதன் அடிப்படியில். உத்திரகோசமங்கையில் மட்டும் தாழம்பூவை இறைவனுக்கு சூட்டும் வழக்கம் இருக்கிறது.

இங்கு தாழம்பூ கிடைப்பதில்லை. ஆகவே பக்தர்கள் வெளியூரிலிருந்து வாங்கி வந்து இங்கு இறைவனுக்கு சூட்டி வணங்குகின்றனர். இங்கு இறைவனை தரித்து, தாழம்பூ வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்தால் அறிந்தோ அறியாமலோ நாம் செய்த தவறுகள் மன்னிக்கப்படுவதாக நம்பிக்கை.

========================================================
* இறைவனின் மன்னிப்பை பெற இந்த தலத்திற்கு வந்து தரிசித்தால் மட்டும் போதாது. செய்த தவறை உணர்ந்து வருந்தி, ‘இனி தவறு செய்யமாட்டேன்’ என்று இறைவனிடம்  உறுதி கூறவேண்டும். வழிகாட்டுவது தான் நம் கடமை. உங்களை மன்னிக்கலாமா வேண்டாமா என்பதை நீங்கள் செய்த தவறின் கடுமையை பொறுத்து இறைவன் தீர்மானிப்பான்.

* நீங்கள் யாருக்கு தீங்கிழைத்தீர்களோ அவர்கள் உங்களை மன்னிக்காத வரை இறைவன் உங்களை மன்னிப்பதில்லை. எனவே முதலில் உங்களால் தீங்கிழைக்கப்பட்டவர்களிடம் முதலில் நீங்கள் மன்னிப்பை பெறவேண்டும்.

* அதே போல, பிறர் பிழையை பொறுக்கும் பக்குவமும் உங்களுக்கு வேண்டும். உங்களிடம் எவரேனும் தவறை உணர்ந்து மன்னிப்பு கோரினால் மனப்பூர்வமாக மன்னித்துவிடுங்கள்.
========================================================

ஆலய முகவரி :
அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில்
உத்தரகோசமங்கை – அஞ்சல், இராமநாதபுரம் – 623533.
+91- 4567 – 256 333, 256 214.

9 thoughts on “தவறுகளை மன்னித்து நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு தலம்!

  1. உத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் நடராஜர்.
    இக்கோவிலை பற்றி பல தடவை படித்துள்ளேன். ஆனால் இந்த நடராஜர் தான் ஆதி நடராஜர் என்றும் தில்லை நடராஜரக்கு முன்பு இருந்தே இந்த ஆலயம் உள்ளது என்பதும் தெரியாது.
    மிகவும் புகழ் பெற்ற ஆலயம்.
    மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்பவர்கள் பெரும்பாலும் இத்தலத்து இறைவனை தரிசித்து விட்டுத்தான் செல்வர்கள்.
    தாழம்பூ வெளியூரில் இருந்து வாங்கிவந்து இங்கு இறைவனுக்கு என்ன வேண்டி படைப்பார்களோ கண்டிப்பாக அது நடக்கும்.
    இறுதியில் உள்ள மூன்று பாயிண்டுகள் ரைட் மந்த்ராவின் முத்தான முத்துக்கள்.

  2. சுந்தர்ஜி
    அடியேனும் மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும்போது குடும்பத்துடன் இரண்டு வருடங்களுக்கு முன்பு இத்தலத்தை தரிசித்தோம். இங்கு பல வருடம் பழமையான இலந்தை மரம் தல விருட்சமாக கோவில் குளம் அருகே உள்ளது. மரகத நடராஜரையும் கண்குளிர தரிசித்தோம்.
    ஆனால் தவறு செய்தால் மன்னிப்பு அருளும் தலம் என்பது புது தகவல். நன்றி

  3. * நீங்கள் யாருக்கு தீங்கிழைத்தீர்களோ அவர்கள் உங்களை மன்னிக்காத வரை இறைவன் உங்களை மன்னிப்பதில்லை. எனவே முதலில் உங்களால் தீங்கிழைக்கப்பட்டவர்களிடம் முதலில் நீங்கள் மன்னிப்பை பெறவேண்டும்.

    * அதே போல, பிறர் பிழையை பொறுக்கும் பக்குவமும் உங்களுக்கு வேண்டும். உங்களிடம் எவரேனும் தவறை உணர்ந்து மன்னிப்பு கோரினால் மனப்பூர்வமாக மன்னித்துவிடுங்கள்.”///

    உத்தரகோச மங்கை பற்றி மாணிக்க வாசகர் இயற்றிய பதிவு

    “சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
    ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
    நாராயணன் அறியா நாண் மலர்த்தாள் நாயடியேற்கு
    ஊராகத் தந்தருளும் உத்தர கோச மங்கை
    ஆரா அமுதின் அருள் தாளினை பாடி
    போரார் வேற் கண் மடவீர் பொன்நூசல் ஆடாமோ ”

    நன்றி
    uma

  4. Namaskarams

    Sir

    I am Krishnamurthy suffering kidney Failure and for thrice a week dialysis for the last five years. I do not have related donors and I have registered for Cadaver Kidney (Diseased / Brain death donor) Transplantation in ApolloChennai Hospital as per the hospital guidelines. Now my சீரியல் நோ. 1 வெயிட் list list number for this surgery is approaching and my name has been put on priority. But this is totally unpredictable. I am trouble to survive my life.

    Kindly advise me Sir.

    Krishnamurthy

    1. சார்… மீண்டும் உங்களுக்காக பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை வைக்கிறோம். நிச்சயம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும். உங்களுக்கு இறையருளாலும் குருவருளாலும் சிறுநீரகம் கிடைக்கும். கவலை வேண்டாம்.

      – சுந்தர்

  5. சுந்தர்ஜி
    அருமையான் பதிவு. ஆலய முகவரி ,அதன் சிறப்பு போன்ற சிறப்பான் தகவல் சேகரித்து [ சிவ பூஜைக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும் ஒரே கோவில்] தந்தமைக்கு நன்றி.

  6. அன்பு சகோதரரே
    ஈஸ்வரனின் இந்த திருத் தலம் பற்றி பல புத்தகங்களில் படித்திருக்கிறேன்…ஆனால்…செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும் தலம் என்பது எனக்குத் தெரியாது….மிக நல்ல தகவல்….இம் மண்ணில் பிறந்த அனைவரும் செல்ல வேண்டிய திருக்கோயில் …யார்தான் தவறு செய்யவில்லை? தாழம்பூ பற்றிய செய்தியும் மிகப் புதியது…பதிவின் இறுதியில் உங்களுடைய பொன்னான மிக்க அர்த்தமுள்ளவை….தவறு செய்து விட்டு இத் தல ஈசனை வழி பட்டால் மட்டும் போதாது…தவறு செய்தவரிடம்…மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற உங்கள் கருத்து சிறப்பு….அருமையான பதிவு…வாழ்க வளமுடன்….என்னுடைய மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்…_/\_

  7. அன்பு சார்,

    உங்கள் பதிவு கண்டேன். மிக்க மகிழ்ச்சி. தலம் சென்றுள்ளேன். தகவல்
    தெரியாது. இருப்பினும் தகவல் அறிந்து மகிழ்ச்சி. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *