Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > ஒரு கப் காஃபியும் நம் வாழ்க்கையும் – Monday Morning Spl 11

ஒரு கப் காஃபியும் நம் வாழ்க்கையும் – Monday Morning Spl 11

print
ரு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த மாணவர்கள் கேம்பஸ் தேர்விலும் வெற்றி பெற்று மிகப் பெரிய நிறுவனங்களில் பணியில் சேர்கின்றனர். தங்களுக்கு நல்ல முறையில் கல்வி போதித்து ஓய்வு பெற்ற தங்கள் பேராசிரியர் ஒருவரின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவிப்பதற்காக அவர் வீட்டுக்கு சென்றனர்.

மாணவர்களும் பேராசிரியரும் ஒருவருக்கொருவர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். மெல்ல அவர்கள் பேச்சு பணியிடத்திலும் வாழ்க்கையிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை குறித்து திரும்பியது. மாணவர்கள் வாழ்க்கை குறித்த ஒரு தவறான கண்ணோட்டத்தில் இருப்பதை பேராசிரியர் புரிந்துகொள்கிறார்.

“இருங்க உங்களுக்கு காஃபி எடுத்துட்டு வர்றேன்” என்று கூறி உள்ளே சமையற்கட்டுக்கு செல்லும் பேராசிரியர் சற்று நேரம் கழித்து ஒரு பெரிய ஜாரில் காஃபியும், காஃபியை அருந்துவதற்கு தேவையான கப்புகளையும் கொண்டு வந்தார்.

அந்த கப்புகள் ஒரே மாதிரி இல்லாமல் ஒவ்வொன்றும் ஒரு விதமாக இருந்தது. பீங்கான், பிளாஸ்டிக், கண்ணாடி, அட்டை, என பல விதமான பொருட்களால் அவை செய்யப்பட்டிருந்தது. அதில் பல விலையுயர்ந்த கப்புகளும் இருந்தன.

“டேக் யுவர் காஃபி மை பாய்ஸ்…” என்று சொல்ல, மாணவர்கள் அனைவரும் உடனே ஆளுக்கு ஒரு கப்பை எடுத்து அதில் காஃபியை ஊற்றிக்கொண்டனர். மற்றவர்கள் என்ன கப்பை எடுக்கிறார்கள் என்றும் பார்த்துக்கொண்டனர்.

எல்லோரும் கப்பில் காஃபியை எடுத்துக்கொண்ட பிறகு ஆசிரியர் அவர்களை பார்த்து சொன்னார்…. “எல்லாரும் கவனிச்சீங்கன்னா ஒரு விஷயம் புரியும். விலை உயர்ந்த பார்ப்பதற்கு கவர்ச்சியா இருக்கும் கப்புகளையே எல்லோரும் எடுத்திருக்கீங்க…. விலை மலிவா சாதாரணமா இருக்கும் கப்புகளை யாருமே எடுத்துக்கலை. காஃபி குடிக்கிறதுல கூட உங்களுக்கு பெஸ்ட் அவுட் ஆப் பெஸ்ட்டே வேணும்னு நீங்க நினைக்கிறது யதார்த்தம் தான். தப்பு இல்லை. ஆனா விஷயமே அங்கே தான் இருக்கு. உங்கள் பிரச்னைகளுக்கு அடிப்படை காரணமே இந்த அணுகுமுறை தான்.

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள கப், நீங்கள் குடிக்கும் காஃபியின் டேஸ்ட்டை கொஞ்சம் கூட கூட்டவோ குறைக்கவோ போவதில்லை. உங்களில் பலர் எடுத்திருக்கும் கப் மிகவும் விலை உயர்ந்தது. சொல்லப்போனால் நீங்கள் என்ன குடிக்கிறீர்கள் என்று கூட அது காட்டாது.

உங்கள் எல்லோருக்கும் தேவை காஃபியே தவிர கப் அல்ல. அப்படியிருக்கும்போது எல்லோரும் விலை உயர்ந்த  கப்புகளையே தேர்ந்தெடுத்தீர்கள். அப்படி தேர்ந்தெடுத்த பிறகு மற்றவர்கள் கைகளில் இருந்த கப்புகளை உங்கள் கப்புகளோடு ஒப்பிட்டு பார்த்துக்கொண்டீர்கள்.

நம் வாழ்க்கை என்பதும் இந்த காபி போன்றது தான்.

நமது வேலை, பணம், அந்தஸ்து இவைகளெல்லாம் அந்த காஃபியை தாங்கும் கப்புகள் போல. அதாவது வாழ்க்கையை தாங்கும் ஒரு கொள்கலன் தான் இவை.

நாம் என்ன மாதிரியான கப்புகளை கொண்டிருக்கிறோம் என்பது நம் வாழ்க்கையை ஒருபோதும் தீர்மானிக்காது. நாம் வாழ்க்கைத் தரத்தையும் அது மாற்றாது.

பல நேரங்களில் கப்புகளின் மீதே முழு கவனத்தை செலுத்தி ஆண்டவன் தரும் காஃபியை புறக்கணித்துவிடுகிறோம்.

ஆண்டவன் தருவது வாழ்க்கை எனும் காஃபியையே தவிர அதை தாங்கும் கப்புகளை அல்ல. எனவே காஃபியை என்ஜாய் செய்யுங்கள்!

=====================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=====================================

[END]

13 thoughts on “ஒரு கப் காஃபியும் நம் வாழ்க்கையும் – Monday Morning Spl 11

  1. சுந்தர் அண்ணா வாழ்வில் எல்லோரும் கடைபிடிக்கவேண்டிய விஷயம் நன்றி நன்றி

  2. வாழ்க்கையை அடுத்தவருடன் ஓப்பிடவேண்டாம்,உங்கலுக்கு கிடைத்த வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும் என் மிக அருமையாக காபி உதாரனத்திள் சொல்லியுல்லீர்கல் Monday Morning spl..(SUPER TIPS)
    நண்ரிகலுடன்..
    சந்திரசேகரன்.

  3. வணக்கம் சார் ,
    வெரி வெரி வெரி …. சூப்பர் சார். எங்க அப்பா கூட சொல்வர் . அடுத்தவன் யானை மேல போலானால் நாமும் அதருக்கு ஆசைப்பட கூடாது என்று .

    தேங்க்ஸ்

  4. \\பல நேரங்களில் கப்புகளின் மீதே முழு கவனத்தை செலுத்தி ஆண்டவன் தரும் காஃபியை புறக்கணித்துவிடுகிறோம்.

    ஆண்டவன் தருவது வாழ்க்கை எனும் காஃபியையே தவிர அதை தாங்கும் கப்புகளை அல்ல. எனவே காஃபியை என்ஜாய் செய்யுங்கள்!\\

    என்ன ஒரு சத்தியமான தகவல் .

    Monday Morning Spl super .

    manohar

  5. வெளிதோற்றத்தை விட ,,, மனசு தான் முக்கியம் இதை இப்படிகூட எடுதுகுலாமே

  6. monday special always super
    நாம் எல்லாரும் நீங்கள் எழுதிள்ள விதத்தில் தான் வாழ்கையை எடுத்து கொள்கிறோம்.
    தேங்க்ஸ்

  7. சார்,

    நல்ல இருக்கு. எதுலேர்ந்து உங்களுக்கு இந்த மாதிரி “கதைகள்” கிடைக்குதுன்னு எங்களுக்கும் சொல்லுங்க சார் ப்ளீஸ்.

  8. நம் வாழ்க்கை நம் கையில். அடுத்தவரைப் பார்த்து அல்லல் பட வேண்டாம் . என்னே ஒரு உயர்ந்த , சிந்திக்க வைக்கும் யதார்த்தம். நன்றிகளுடன் .

  9. மோதிரவிரல் தந்த இறைவனுக்கு நன்றி கூறுவோம், மோதிரம் இல்லையென கவலை வேண்டாம்.

  10. அருமையான பதிவு . நமக்கு இந்த நல் வாழ்வை தந்த இறைவனை நினைத்து மன அமைதியுடன் வாழ வேண்டுமே தவிர மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது . நமக்கு வேண்டியதை நல்ல தருணத்தில் அவன் தருவான். நன்றி சுந்தர்ஜி .

  11. அருமையான செய்தி !!!

    புறத்தில் செலுத்தப்படும் கவனம் அகத்துக்கு திரும்புமானால் வியத்தகு மாற்றங்களை ஒவ்வொருவரும் உணர முடியும் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *