Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > நல்லோர் தரிசனம் பாப விமோசனம், சிவ கடாக்ஷம்! Righmantra Prayer Club

நல்லோர் தரிசனம் பாப விமோசனம், சிவ கடாக்ஷம்! Righmantra Prayer Club

print
தில்லையில் ‘பெற்றான் சாம்பான்’ என்னும் விறகு வெட்டி ஒருவர் இருந்தார். விறகு வெட்டியாக பிறந்தாலும் முற்பிறவியில் சிவத்தொண்டு  செய்ததால், இந்த பிறவியிலும் சிவத்தொண்டு செய்யும் பாக்கியம் அவரையும் அறியாமல் அவருக்கு கிடைத்தது. எப்படி தெரியுமா? சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள மடப்பள்ளிக்கு விறகு வெட்டி தரும் வேலை மூலம்.

சிவாலயத்தின் மடப்பள்ளி என்பதால் அதை ஒரு வயிற்றுப் பிழைப்பு என்று கருதாமல் மிகவும் கண்ணும் கருத்துமாக ஒரு வேள்வியாக கருதி அந்த பணியை அவர் செய்து வந்தார்.

இவருக்கு சிவபதத்தை அளிக்க விரும்பிய ஆடல்வல்லான், அவருடைய கனவில் தோன்றி உமாபதி சிவத்திற்கு தொண்டு செய்யுமாறு ஆணையிட்டார். (தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவரில் ஒருவர் உமாபதி சிவாசாரியார் அவர்கள், நாயன்மார்களுக்குப் பின்னர் வந்த சைவ சித்தாந்தத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராய்க் கருதப்படுகின்றார்.)

Lord Natajar

அது முதல் உமாபதி சிவத்தின் திருமடத்திற்கு ஒரு சுமை விறகை சாம்பான் தினமும் போட்டு வந்தார். ஆனால் ஒரு நாள் கன மழை பெய்தமையால் விறகை போட முடியவில்லை. இதனால் அன்றைய உணவை தயாரிக்க தாமதமானது. உணவு தாமதமாவதற்கு காரணத்தை கேட்டறிந்த உமாபதி  சிவம், சாம்பான் வந்தால் தனக்கு தகவல் தெரிவிக்கும்படி சொன்னார்.

அன்றிரவு மறுபடியும் சாம்பான் கனவில் தோன்றிய இறைவன், ஒரு சீட்டை கொடுத்து இதை உமாபதி சிவத்திடம் கொடு. அவர் உனக்கு முக்தி  வழங்குவார் என்று கூறி மறைந்தார்.

காலையில் கண்விழித்துப் பார்த்தபோது கையில் இறைவன் கொடுத்த பரிந்துரை சீட்டு இருந்தது. மறுநாள் பெற்றான் சாம்பான் திருமடத்திற்கு வந்தார். அவர் வந்ததை உமாபதி சிவத்திடம் மாணவர்கள் அறிவித்தனர். சாம்பனும் அவரிடம் ஈசன் கொடுத்த சீட்டைக் கொடுத்தார்.

அச்சீட்டைத் தம் இருகண்களிலும் ஒற்றிக்கொண்டு அவர் அச்சீட்டிலிருந்து “அடியார்க் கெளியன் சிற்றம்பலவன்” எனத் தொடங்கும் பாட்டின் கருத்தினை உணர்ந்து சாம்பானுக்கு ‘ஞான தீட்சை’ அளித்தார். சாம்பானும் பரிபக்குவ நிலையில் இருந்தமையால் அப்போதே முக்தியடைந்தார்.

[pulledquote]அப்போது சுற்று முற்றும் பார்த்த உமாபதி சிவத்தின் கண்களுக்கு நடராஜரின் அபிஷேக நீர் பாய்ந்து வளர்ந்திருந்த முள்ளிச் செடி பட்டது. தீட்சைக்கு இதவே தகுதி பெற்றது என்று கருதி, அச்செடிக்கு பார்வையினாலேயே தரும் நயன தீட்சையை அளித்தார்.[/pulledquote]

ஆனால் உண்மையை உணராத சாம்பானின்  மனைவியும் உறவினர்களும் அரசனிடம் சென்று விறகு தரத் தவறிய காரணத்தால் உமாபதிசிவம் கோபம்கொண்டு சாம்பானைக் கொன்றுவிட்டார் என முறையிட்டனர்.

அரசனும் உமாபதிசிவத்தை அணுகி உண்மை என்ன என வினவினான். உடனே உமாபதிசிவம் அரசனுக்கு சிவ தீட்சையின் சிறப்பினை விளக்கினார்.

ஆனால் அரசனுக்கு உமாபதி சிவம் கூறியதில் நம்பிக்கை ஏற்படவில்லை.

“நீங்கள் சொல்வது உண்மை என்று எனக்கு அதை நிரூபிக்க வேண்டும்” என்று கட்டளையிட்டான்.

இதை சிவதீட்சை அளித்து தானே நிரூபிக்க முடியும்? ஆனால் அரசன் உட்பட அந்நேரம் சபையில் இருந்த எவருக்கும் சிவதீட்சையை பெற தகுதி இருக்கவில்லை.

அப்போது சுற்று முற்றும் பார்த்த உமாபதி சிவத்தின் கண்களுக்கு நடராஜரின் அபிஷேக நீர் பாய்ந்து வளர்ந்திருந்த முள்ளிச் செடி பட்டது. தீட்சைக்கு இதவே தகுதி பெற்றது என்று கருதி, அச்செடிக்கு பார்வையினாலேயே தரும் நயன தீட்சையை அளித்தார். உமாபதி சிவத்திடம் நயனதீட்சை பெற்ற அந்த முள்ளிச் செடி அடுத்த நொடி ஒளி உருவம் பெற்று அனைவர் முன்பும் விண்ணில் எழும்பி மறைந்தது.

இந்த அதிசயத்தை பார்த்த அரசன், “என்னை மன்னித்துவிடுங்கள்… என்னை மன்னித்துவிடுங்கள்… சிவ தீட்சையின் சக்தியை உணர்ந்துகொண்டேன்!” என்று கூறியபடி உமாபதி சிவத்தின் கால்களில் வீழ்ந்தான்.

நல்லோர் தரிசனம் பாப விமோசனம், சிவ கடாக்ஷம்!

===============================================================

சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…

Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : திருப்பாம்புரம் ஆலயத்தின் ஓதுவார் திரு.கே.எம்.சண்முகம் அவர்கள்

ஜூன் மாதம் நாம் பெற்றோருடன் வைத்தீஸ்வரன் கோவில் பயணத்திற்கு தயாராகிக்கொண்டிருந்தபோது, நமது வாசகர் திரு.கந்தையா என்பவர் நம்மிடம் முடிந்தால் திருப்பாம்புரமும் செல்லும்படியும், அங்கு ஆலயத்தின் ஓதுவார் நமக்கு நல்லபடியாக அருகிலிருந்து தரிசனம் செய்துவைப்பார் என்றும் கூறினார்.

இதையடுத்து வைத்தீஸ்வரன் கோவில் தரிசனம் முடித்த பிறகு திருப்பாம்புரம் சென்றோம். அப்போது திரு.சண்முக ஓதுவாரை சந்தித்தோம்.

64 ஆம் அகவையில் இருக்கும் திரு.சண்முக ஓதுவார் அவர்கள் திருப்பாம்புரத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக இறைவனின் புகழை பாடி வருகிறார். அதற்கு முன் சென்னை திருவொற்றியூர் தியாகராஜா சுவாமி திருக்கோவிலில் ஒன்பது ஆண்டுகள் ஓதுவாராக இருந்திருக்கிறார்.

Maha Periyava Sitting

இவர் ஓதுவாராக ஆனது எப்படி? யாரிடம் திருமுறை கற்றுக்கொண்டார்? என்று கேட்டபோது, திரு.சண்முகம் கூறியதாவது :

“நான் சிறுவயதில் என் நண்பர்களுடன் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி செல்வேன். (இவரது சொந்த ஊர் காஞ்சிபுரம்!!) அங்கே அப்போது கோவிலில் ஓதுவார்கள் தேவாரம் பாடுவதை மெய்மறந்து கேட்பேன். எனக்கு தேவாரத்தின் மீதிருந்த ஆர்வத்தை பார்த்த ஆலய ஓதுவார்கள் திரு.சுப்ரமணியமும் திரு.சம்பந்தமும் எனக்கு தேவாரம் கற்றுத் தந்தார்கள்.

“காஞ்சிபுரம் சொந்த ஊர் என்று சொல்கிறீர்களே… மஹா பெரியவரை தரிசித்திருக்கிறீர்களா?” என்று கேட்டோம்.

“ஒரு முறை இருமுறை அல்ல. பல முறை மஹா பெரியவரை தரிசித்திருக்கிறேன். அடிக்கடி நாங்கள் காஞ்சி மடத்திற்கு செல்வோம். அப்போதெல்லாம் (மார்கழி உள்ளிட்ட விஷேச மாதங்களில்) நாங்கள் வரதராஜப் பெருமாள் கோவிலிலிருந்து ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கும் காமாட்சியம்மன் கோவிலுக்கும் தேவாரம் பாடிக்கொண்டே செல்வோம். எங்களை ஊக்குவிக்க வேண்டிய மகா ஸ்வாமிகள் எங்களுக்கு வெள்ளிக் காசுகள் தருவர். அதை அவரிடம் பெற கடும் போட்டியிருக்கும். நான் சிறந்த முறையில் தேவாரம் பாடியமைக்காக ஒரு முறை ருத்ராட்ச மாலை கூட அவரிடம் வாங்கியிருக்கிறேன்.”

"

ஒரு முறை திருபெருந்துறையில் உள்ள ஆவுடையார் கோவிலில் திருப்பணி நடைபெற்றபோது, மஹா ஸ்வாமிகள் அந்த கோவிலின் ராஜகோபுரத்திற்கு கலசங்கள் செய்ய ஒரு கமிட்டியை நிர்மாணித்தார். ஈரோட்டை சேர்ந்த அழகப்ப முதலியார் என்பவர் அதற்கு தலைவராக இருந்தார். அதில் நான் உறுப்பினராக இருந்தேன். சிறந்த முறையில் பணியாற்றி கலசங்களை தயார் செய்து ஸ்தாபித்ததால் என்னை ஏகாம்பரேஸ்வரர் கோவில் கலசக் கமிட்டியிலும் நியமித்தார். அதையும் சிறந்த முறையில் செய்து முடித்தோம்.

ஜனகல்யாண் திட்டத்தை ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் துவக்கியபோது, என் பொறுப்பில் உள்ள குழுவிற்கு நான்கு தையல் மிஷின்கள் கொடுக்கப்பட்டது. அதைக் கொண்டு சுமார் 65 பெண்களுக்கு தையல் கற்றுக்கொடுத்து சான்றிதழும் பெற்றுக் கொடுத்தோம்.

கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் எனக்கு ”சிவப்பணி தொண்டர்” என்கிற பட்டத்தை அளித்திருக்கிறார்.

முறைப்படி திருமுறை கற்கவேண்டும் என்கிற ஆவலில் திருவாடுதுறை ஆதீனத்தில் மூன்றாண்டுகள் சைவ சித்தாந்த வகுப்பில் சேர்ந்து ‘சித்தாந்த செல்வர்’ என்கிற பட்டத்தையும் இவர் பெற்றிருக்கிறார்.

Thirupamburam Shanmuga Odhuvar

திரு.சண்முகம் ஐயா அவர்கள் ஓதுவாராக மட்டுமல்ல மேலும் பல பரிமாணங்களை கொண்டிருக்கிறார் என்பதை அறிந்தபோது இவர் மீது நமது மதிப்பு பன்மடங்கு கூடியது.

தரிசனம் முடித்துவிட்டு வந்ததும், இவருக்கு நம் தளம் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவம் செய்யப்பட்டு, கையில் ஒரு தொகை அன்பளிப்பாக தரப்பட்டது.

“இதெல்லாம் வேண்டாமே… உங்க அன்பு ஒன்றே போதும் தம்பி” என்று சங்கோஜத்துடன் நமது மரியாதையை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

“உங்கள் சிவத்தொண்டுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. உங்களை கௌரவிப்பதன் மூலம் எங்கள் பாபங்களை நாங்கள் தொலைத்துக்கொள்கிறோம். மேலும் இந்த மரியாதையை உங்களுக்கு தனிப்பட்ட ஒருவர் செய்வதில்லை. சுமார் 5000 பேர்களின் பிரதிநிதியாக இதை செய்கிறேன். அன்போடு ஏற்றுக்கொள்ளவேண்டும். அடுத்த முறை ஆலயங்களுக்கு செல்லும்போது உங்களை போன்றவர்களை என் வாசகர்கள் கவனிக்கவேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதையை  தரவேண்டும். அவர்களால் முடிந்த சிறு உதவியை செய்யவேண்டும். அதற்காகவே இதை செய்கிறேன்!” என்று கூறி அவரை கௌரவித்தோம்.

வாசகர்களே… சண்முக ஓதுவார் போன்றவர்கள் போற்றி பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷங்கள். இவர்களுக்கு அறநிலையத்துறை சார்பாக கொடுக்கப்படும் ஊதியம் மிக மிக குறைவு.

எனவே அடுத்த முறை ஆலயங்களுக்கு சென்றால், அர்ச்சகர்கள், மங்கள வாத்தியக்கார்கள் வரிசையில் இவர்களையும் நீங்கள் கௌரவிக்கவேண்டும். இயன்ற உதவிகளை செய்யவேண்டும்!

(திருப்பாம்புரம் ஆலயம் பற்றி விரிவான பதிவு இடம்பெற்றுள்ளது. பார்க்க : http://rightmantra.com/?p=21568)

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…

இந்த  பிரார்த்தனைக்கு முதலில் கோரிக்கை அனுப்பியிருக்கும் முகலிவாக்கம் வெங்கட் அவர்கள் நம் நெருங்கிய நண்பர். நலம் விரும்பிகளில் ஒருவர். நமது தளத்தின் நிகழ்வுகளுக்கு தவறாமல் வருபவர். வேல்மாறலை நமக்கு அறிமுகப்படுத்தி தொடர் பதிவுகள் வருவதற்கு காரணமாக இருந்தவர். பெரியவாவின் அணுக்கத் தொண்டர் காஞ்சிபுரம் சந்திரமௌலி சாஸ்திரிகளிடம் நம்மை அறிமுகப் படுத்தியவர்.

இவரைப் பற்றிய பதிவு ஏற்கனவே நம் தளத்தில் அளிக்கப்பட்டுள்ளது. வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்?

சமீப காலங்களாக அவரை ஒரு உடல் உபாதை படுத்தி வருகிறது. உரிய சிகிச்சைகள், பிரார்த்தனை முதலியவற்றை அவர் மேற்கொண்டிருந்தாலும் கூட்டுப் பிரார்த்தனை மற்றும் நமது பிரார்த்தனை கிளப் மீது அவருக்கிருக்கும் அசைக்கக் முடியாத நம்பிக்கை காரணமாக தனது கோரிக்கையை  சமர்பித்திருக்கிறார். அவர் விரைந்து நலம் பெற்று தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாக நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்ற வாழவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

"

அடுத்த கோரிக்கை அனுப்பியிருப்பவர் கரூரை சேர்ந்த திரு.சூரியநாராயணன் அவர்கள். இவர் நம் வாசகர் சண்முகநாதன் அவர்களின்  உறவினர். ஏற்கனவே தனக்காகவும் தனது சகோதரிக்காகவும் பிரார்த்தனை சமர்பித்து அது வெற்றி கண்டு நம் பிரார்த்தனை கிளப் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவர்.  உறவினருக்கு பரிந்துரைத்திருபப்தில் ஆச்சரியமில்லை. (சண்முகநாதன் அவர்களை பற்றி நிறைய சொல்லவேண்டும். அதை உரிய நேரம் வரும்போது மேடையிலேயே சொல்கிறோம்.)

சூரியநாராயன் அவர்களை பற்றி பிரார்த்தனையிலேயே விரிவாக சொல்லியிருக்கிறோம். படியுங்கள்.

எல்லாரும் எல்லா வளமும் நலனும் பெறவேண்டும்!

===============================================================

நமக்காக பிரார்த்தித்த திருமுறை வகுப்பு மாணவர்கள்!

சென்ற வார பிரார்த்தனையின் போது, பிரார்த்தனை நடைபெற்ற நேரம் நாம் நாகேஸ்வரர் கோவிலில் இருந்தோம். பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற திரு.சங்கர் அவர்கள் முன்னிலையில் அவரிடம் திருமுறை படிக்கும் மாணவர்கள் முன்னிலையிலும் நமது பிரார்த்தனை நடைபெற்றது.

nageswarar children devaram 2

நமக்காக பிரார்த்திக்கும் தேவாரம் பயிலும் மாணவர்கள்!
நமக்காக பிரார்த்திக்கும் தேவாரம் பயிலும் மாணவர்கள்!

இதனிடையே சமீபத்தில் ஒரு நாள் திரு.பாலாஜி அவர்கள் நம்மை அலைபேசியில் தொடர்புகொண்டு தன் கோரிக்கையை நமது பிரார்த்தனை கிளப்பில் வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்தார். வாழ்த்துக்கள்!

===============================================================

* பிரார்த்தனைக்கு விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

Suffering from fatty liver – pray for my recovery and health!

Dear Sundar,

As informed your personally earlier, I have been diagonized with Grade 3 Non Alcoholic Fatty Liver Disease.  Normally fatty liver disease is reversible, however grade plays an important role.  In my case, my liver has nearly 66% of fat due to heridatary and sedentary life style.  As the fat percentage is very high, it may take long time to reverse the present state to the normal.

Diet and exercises are the only solution to reverse this disease and there should not be any complications in the middle.  All of my family members are also having some kind of illness.  As we are all strongly believe in “Guruvarul” and “Thiruvarul”, I am expecting some miracles to happen in our life.

I know the value of “Our Prayer Club”. I request you and our Rightmantra friends to pray for me and my family.

Thank You.

Regards,
K S Venkat,
முகலிவாக்கம்

===============================================================

சொத்து மற்றும் கடன் பிரச்சனை தீர வேண்டும்!

கரூரை சேர்ந்தவர் திரு.சூரிய நாராயணன் (38). பெருந்துறையை சேர்ந்த நம் வாசகர் சண்முகநாதனின் உறவினர்.

சுயதொழில் செய்து வரும் திரு.சூரியநாராயணன் அவர்களுக்கு ஏகப்பட்ட கடன்கள் உள்ளது. தனது பெயரில் உள்ள சொத்து (வீடு) ஒன்றை விற்றால் அந்த கடன்களை அடைப்பதோடு, புதிதாக் ஆஓறூ சிறிய வீட்டை கட்டி குடியேற முடியும்.

ஆனால் வீட்டை சில பல காரணங்களால் அவரால் விற்க முடியவில்லை. வருகிறார்கள், பார்க்கிறார்கள். சென்றுவிடுகிறார்கள். ஏதேனும் தடை வந்துவிடுகிறது.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. (குறள் 0377)

சொத்து இருக்கிறது. இருப்பினும் அதைக் கொண்டு இன்பம் துய்க்க முடியவில்லை. இல்லாமல் இருப்பதைவிட இது கொடுமையானது.

இந்த சொத்தை விற்று, தனது கடன்களை அடைத்து புதிய சொத்தை வாங்கி அதன் பிறகு திருமணம் செய்த்கொள்ளவேண்டும் என்கிற நிலையில் இருக்கிறார் சூரியநாராயணன்.

இவரிடம் பேசியபோது தான் தெரிந்தது இன்னொரு மிகப் பெரிய அறத்தை செய்துவருகிறார். உடன்பிறந்த சகோதரர்கள் இருக்கும்போதும் தனது அம்மாவையும், பாட்டியையும் தன்னுடனே வைத்து அவர்களை பார்த்துக்கொள்கிறார்.

(அது தவிர மேலும் பல கோவில் திருப்பணிகளை அமைதியாக செய்துவருகிறார், ஆலயங்களில் நடைபெறும் தேவார – திருவாசக முற்றோதல்களுக்கு சென்று வருகிறார் என்று அவரது உறவினர் மூலம் கேள்விப்பட்டோம்!)

இந்த சிவத்தொண்டே இவருக்கு ஒரு நல்ல வழியை நிச்சயம் காண்பிக்கும் என்று நம்பலாம்.

இப்போதைக்கு ஒவ்வொரு திங்களும் ஏதாவது ஒரு சிவாலயத்திற்கு சென்று விளக்கேற்றி இறைவனை தரிசிக்க சொல்லியிருக்கிறோம். கரூர் என்பதால் பசுபதீஸ்வரரை தரிசிப்பதாக சொல்லியிருக்கிறார்.

இந்த பதிவு திருப்பாம்புரம் சம்பந்தப்பட்ட ஒன்று என்பதால் திருபாம்புரமும் ஒரு முறை சென்று வரச் சொல்லியிருக்கிறோம்.

===============================================================

பொது பிரார்த்தனை

ஓதுவார் குறையை அரசிடம் ஓதுவார் யார்…? பக்தி இலக்கியங்களுக்கு உயிர் வருமா?

தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்த தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரந்தம், பெரியபுராணம் மற்றும் பதிகப் பாடல்களை தெரிந்த ஓதுவார், அரையர்கள் பலர் இருந்தும், அவர்களை அரசு பயன்படுத்திக் கொள்ளாமல் புறக்கணித்து வருகிறது. இதை மாற்றி, பழைமை வாய்ந்த சைவ, வைணவப் பாடல்களை தினந்தோறும் கோவில்களில் ஒலிக்கச் செய்யவும், வகுப்புகள் எடுக்கவும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Odhuvar

சைவக் கோவில்களில், பூஜையின் போது, தேவார திருமுறைகளைப் பாடும் பணியைச் செய்பவர்கள் ஓதுவார்கள். புகழ்பெற்ற சைவ மடங்களில், குருகுல முறைப்படி படித்து வந்த இவர்களுக்கு, அறநிலையத்துறையினர் உரிய பணி வழங்காமலும், வழங்கியவர்களுக்கு முறையான சம்பளம் வழங்காமலும் உள்ளனர்.

இதனால், பாடல்பெற்ற தலங்களில் கூட ஓதுவார்கள் பணியில் இல்லாத அவலம் நீடிக்கிறது. சைவப் பெரியார் திருநாவுக்கரசர் தேவாரத்தை அரங்கேற்றிய, கடலூர் மாவட்டம் திருவதிகைக் கோவிலிலும், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தை அரங்கேற்றிய, திருவெண்ணெய் நல்லூரிலும் இன்று தேவாரம் பாட ஓதுவார் இல்லை.

வைணவக் கோவில்களில் பாசுரம் பாடும் பணியில், ‘அரையர்’கள் ஈடுபடுத்தப்படுவர். வைணவத்தில் புகழ்பெற்ற வைபவமான வைகுண்ட ஏகாதசியன்று நடக்கும், பகல்பத்து, ரா பத்து ஆகியவை தமிழ் திருவிழாக்களாகவே நடந்து வருகின்றன. சைவக் கோவில்களைப் போல், வைணவக் கோவில்களிலும், “அரையர்’ சேவையின்றிப் பூஜைகள் அரங்கேறி வருகின்றன.

தமிழில் பெயர் வைக்கும் சினிமாவுக்கு அரசு வரிச்சலுகை வழங்குகிறது. ஆனால், கோவில்களில் தமிழில் பாடுபவர்களுக்கு சம்பளமும் குறைவு; சலுகைகளும் இல்லை.

"

தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிர திவ்விய பிரபந்தம், பெரியபுராணம், குமரகுருபரர் பாடல்கள், பாரதியார் பாடல்கள்,  அந்தந்தத் திருத்தலத்திற்கு உரிய பாடல்கள், மற்றும் அவ்வையார், கபிலர், இரட்டைப் புலவர்கள் எனப் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்த அருந்தமிழ் புலவர்கள் பாடல்களை கோவில்கள் முழுவதும் ஒலிக்கச் செய்ய வேண்டும்.

அனைத்துக் கோவில்களிலும் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு முறையான சம்பளம் வழங்கி, பக்தி இலக்கிய வகுப்புகள் நடத்த வேண்டும். மக்களை சோம்பேறியாக்கும் இலவசங்களுக்கு பல ஆயிரம்  கோடிகளை செலவு செய்யும் அரசு, சமயத்தமிழையும், பக்தி இலக்கியங்களையும் காக்க நடவடிக்கை எடுக்குமா?

இதுவே நாம் இறைவனிடம் சமர்பிக்க கூடிய பொது பிரார்த்தனை.

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

===============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

முகலிவாக்கத்தை சேர்ந்த நண்பர் திரு.வெங்கட் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கல்லீரல் நோய் நீங்கி அவர் விரைந்து நலம் பெறவும், கரூரை சேர்ந்த வாசகர் சூரிய நாராயணன் அவர்களுக்கு சொத்து தொடர்பான பிரச்னையும் கடன் பிரச்னையும் நீங்கி அவர் விரைவில் மணமாலை சூடவும் மேன்மேலும் அறப்பணிகளை அவர் மனமகிழ்ச்சியுடன் செய்யக்கூடிஅய் சூழ்நிலை கனியவும் இறைவனை வேண்டுவோம். அதே போன்று திருக்கோவில்களில் இறைவனின் புகழை பாடும் ஓதுவார்கள் மற்றும் அரையர்கள் வாழ்வில் ஏற்றமும் சமூகத்தில் உரிய அங்கீகாரம் பெறவும், நிறைவான சம்பளம் பெறவும் இறைவனை வேண்டுவோம்.

இந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.சண்முக ஓதுவார் அவர்கள் மேலும் மேலும் சிவதொண்டில்  விளங்கி, நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற ஆடல்வல்லானை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : செப்டம்பர் 6, 2015 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

===============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

===============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

===============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W: www.rightmantra.com

===============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

===============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : குன்றத்தூரை சேர்ந்த திருமுறை ஆசிரியர் திரு.சங்கர் அவர்கள்.

2 thoughts on “நல்லோர் தரிசனம் பாப விமோசனம், சிவ கடாக்ஷம்! Righmantra Prayer Club

  1. இந்த பதிவின் மூலம் சிவ தீட்சையைப் பற்றிய மெய் சிலிர்க்கும் சம்பவத்தை அறிந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் சிவத் தொண்டரான , மகா பெரியவாவின் ஆசி பெற்ற திரு சண்முகம் அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கங்கள் . திரு சண்முகம் அவர்களின் சிவத் தொண்டைப் பற்றி படிக்க படிக்க நெஞ்சம் நெகிழ்கிறது.

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் திரு வெங்கட் அவர்களின் கோரிக்கை கண்டிப்பாக மகா பெரியவா நிறைவேற்றுவார் . அவரும் திருமதி வெங்கட்டும் எனக்கு பரிச்சயமானவர்கள் திரு சூரிய நாராயணன் பிரச்சனையும் இறை அருளால் தீர வேண்டும்.

    மற்றும் லோக ஷேமத்திற்காக பிரார்த்தனை செய்வோம்

    மகா பெரியவா படம் நம் பிரார்த்தனை கிளப்பிற்க்காக பிரார்த்தனை செய்வது போல் உள்ளது.

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து
    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா வெங்கட்

  2. ஓம் சாய் ராம்,

    தங்களின் முக நூலை முருகன் அருளலால் கண்டேன். திருத்தணி முருகன் எங்கள் குலதெய்வம். தற்சமயம் மிகுந்த மனதுயரத்தில் என் கணவரை பிரிந்து வாடுகின்றேன். தயவு செய்து எங்கள் குடும்பம் ஒன்றுசேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ அன்பு உள்ளங்கள் பிரார்த்திக்குமாறு வேண்டுகிறேன். தங்களின் முகநூளில் உள்ள வேல்மாரல் மந்திரம் தினம் ஜெபித்து வருகின்றேன். தங்கள் முகநூல் உறுப்பினராகும் வழிமுறையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

    நன்றி

    அன்பு சகோதரி
    உமா kumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *