“பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான். பலன் கருதாமல் உழைக்கச் சொன்னான்” என்று ஸ்ரீமத் பகவத் கீதையின் சாரத்தை இரண்டே வாக்கியங்களில் கூறினார் மகாகவி சுப்ரமணிய பாரதியார். ஆனால் அப்படி பயனை எண்ணாமல் உழைப்பது சாத்தியமா? எல்லாரும் அதை பின்பற்றி நடக்கமுடியுமா? பயன் கருதாமல் உழைப்பது என்றால் உழைப்பின் மேன்மையும் பயனும் தான் என்ன? எல்லாருக்கும் தோன்றலாம்.
பயனை எண்ணாமல் உழைப்பதும் முடியும். பக்தி செய்து வாழவும் முடியும். அதைத் தான் நிஷ்காமிய கர்மம் என்று சொல்கிறார்கள். அப்படி உழைப்பவனே உலகம் போற்றும் கர்மயோகி என்று நம் பெரியோர்கள் சொல்கிறார்கள். இறைவனின் மெய்யடியார்கள் வரலாற்றில் அதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. அவர்களுள் ஒருவர் தான் ராகா கும்பர்.
பாண்டியநாட்டில் எப்படி கல்லும், முள்ளும் கவிபாடுமோ, அதுபோல பண்டரிபுரத்தில் நாத்திகனும் கூட நாமஸ்மரணம் செய்வான் என்பர். அங்குள்ள செடிகளும் கொடிகளும் கூட நாம ஸ்மரணம் செய்யும். ஆசாரம் அனுஷ்டானமெல்லாம் இங்கு காணாமல் போய் எல்லாரும் ஒன்று கூடி நாம சங்கீர்த்தனம் செய்வார்கள். அதனால் தான் நாதப் பிரம்மம் பண்டரிபுரம் என்று ஒரு சொல் வழங்கலாயிற்று.
இந்த தலத்தில் மண்பாண்டம் செய்வோர் குலத்திலே பிறந்தவர் ராகா என்பவர். குயவர்களை இங்கே “கும்பர்’ என்பார்கள். இதனால் இவர் ராகாகும்பர் என எல்லோரும் அழைத்தார்கள். ராகாகும்பரின் மனைவி பாகாபாய். இவர்களுக்கு ஒரு மகள். பெயர் பாங்காதேவி. தினந்தோறும் யாத்ரீகர்களுக்கு உணவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
மூவரும் நிஷ்காமியர்கள். “நிஷ்காமியம்’ என்றால் “தனக்காகவோ, பிறருக்காகவோ இறைவனிடம் எந்த நிலையிலும் எதையும் கேட்பதில்லை’. அதாவது, “பலன் எதிர்பாராமல் பக்தி செலுத்துவது’. இறைவனைப் வணங்குவதற்கும், பிறருக்கு கொடுத்து உதவுவதற்கும் மட்டுமே உயிர் வாழ வேண்டும் என்பதே இவர்களின் கொள்கை.
எங்கேயும் சுத்தி ரங்கனை செவி என்பது போல, ராகாகும்பரின் கை பானை செய்து கொண்டிருந்தாலும், மனம் மட்டும் பாண்டுரங்கனையே சிந்தித்துக் கொண்டிருக்கும்.
பானை செய்து விற்று அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பிறருக்கு இட்டு தாங்களும் உண்பார்கள். சோர்வு என்பதையே ராகாவோ அவரது குடும்பத்தினரோ அறியமாட்டார்கள்.
திருவிழாக் காலங்களில் பானைகளை செய்து சந்தைக்கு கொண்டு சென்று விற்பார் ராகா. கிடைக்கும் அதிகப்படியான வருமானத்தைக் கொண்டு மேலும் அதிகமாக பக்தர்களுக்கு அமுது படைப்பார்கள். ஒரு திருவிழா சமயத்தில் வழக்கம்போல பானைகளை செய்து அவற்றை காய வைத்திருந்தார் ராகா. அன்றிரவு ஒரு பூனை தனது குட்டிகளை ஒரு பானைக்குள் வைத்து விட்டு இரைதேட சென்று விட்டது.
மறுநாள் வழக்கம் போல தனது பணிகளை செய்த ராகா, வெயிலில் காய்ந்த பானைகளை எடுத்து வேகுவதற்கு சூளையில் வைத்தார். பூனை குட்டிகள் ஒரு பானைக்குள் இருப்பதை அவர் அறியவில்லை. தீ மூட்டப்பட்டது. சற்று நேரத்தில் தாய்ப்பூனை வந்தது. பானைகளைக் காணாத அது கத்திக் கொண்டே அங்குமிங்கும் அலை பாய்ந்தது.
"
இதைக் கண்ட ராகா, என்னவோ, ஏதோவென்று வந்து பார்க்க, சூளையில் இருந்து குட்டிகளின் கதறல் ஒலி கேட்டது.
ராகா பதறிப் போனார். அவர் கொண்டதுயரத்திற்கு அளவே இல்லை. தன்னையுமறியாமல் ஒரு கொடூர பாவம் செய்துவிட்டமைக்கு கலங்கினார்.
“ஐயோ பாண்டுரங்கா! தீராத பாவத்திற்கு என்னை ஆளாக்கி விட்டாயே. இத்தனை நாள் நான் காத்து வந்த அஹிம்சா விரதத்திற்கு பங்கம் வந்துவிடும் போலிருக்கிறதே… இது என்ன கொடுமை? உள்ளிருக்கும் குட்டிகள் நெருப்பில் வெந்து துடிதுடித்து மடிந்து விடுமே! இந்த தாய்ப்பூனையின் சாபம் என்னை விடுமா? கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் அமுது படைப்பவன் நீ…. உள்ளிருக்கும் குட்டிகளை நீ தான் காப்பாற்ற வேண்டும்..” என பலவாறு கதறினார். அழுது அரற்றினார்.
அவரது கதறல் கேட்டு பாகாவும் ஓடிவந்தாள். நடந்ததை அறிந்து பதறி அவளும் கீழே விழுந்து பாண்டுரங்கா… பாண்டுரங்கா என்று கூவினாள்.
“பாண்டுரங்கா! அந்த குட்டிகளை எப்படியாவது காப்பாற்று… இந்த தொழிலையே விட்டுவிடுகிறோம்” என்று மன்றாடியபடி சூளையின் முன்பு இருவரும் சாஷ்டாங்கமாக விழுந்தனர்.
தம்பதிகள் இருவரும் அப்படியே பாண்டுரங்கனை நோக்கி தியானத்தில் ஆழ்ந்து விட்டனர். அப்படியே இரவும் முழுதும் கழிந்தது. பொழுதும் புலர்ந்தது. சூளையும் ஆறியது. அவசர அவசரமாய் ஒவ்வொரு பானையாக அகற்றி சூளையைப் பிரித்தனர் ராகா தம்பதியர்.
என்ன அதிசயம்! மற்ற அனைத்து பானைகளும் வந்திருந்த நிலையில் பூனைக்குட்டிகள் இருந்த பானை மட்டும் வேகவில்லை. உள்ளே குட்டிகள் ஒன்றையொன்று அணைத்தபடி படுத்துக்கொண்டிருன்தனர். தாய்ப்பூனை தனது குட்டிகளை கவ்வி வெளியே எடுத்துப் போட்டு நக்கிக் கொடுத்து தனது வாஞ்சையை வெளிப்படுத்தியது.
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
பாண்டுரங்கனுக்கு நன்றி கூறக்கூட, ராகாகும்பருக்கு நா கூட எழவில்லை. ஊர்மக்கள் யாவரும் இந்த அதிசயத்தை கேள்விப்பட்டு ராகாவின் வீட்டு முன் திரண்டுவிட்டனர்.
ராகா சத்தியம் செய்ததைப் போல பானை செய்யும் தொழிலை விட்டு விட்டார். காட்டில் சென்று விறகு வெட்டத் துவங்கினார். பச்சை மரங்களை வெட்ட மனமின்றி பட்டுப் போய் காய்ந்த மரங்களையே வெட்டுவார். காய்ந்த சுள்ளிகளை மட்டுமே பொறுக்குவார்.
பண்டரிநாதனிடம் உன் கருணை வேண்டும் என்று கூட இத்தம்பதிகள் கேட்டதில்லை. நிஷ்காமிய கர்மா என்பதற்கு அர்த்தம் இப்போது புரிந்திருக்குமே!
– ஸ்ரீ மஹா பக்தவிஜயத்தில் வெளியான ராகாகும்பரின் கதையை அடியொற்றி எழுதப்பட்டது.
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!
=============================================================
Also check:
சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!
கண்ணனாக அவதரித்ததற்கு கடவுள் கொடுத்த விலை – கிருஷ்ண ஜெயந்தி SPL!
கண்ணன் மனம் குளிரும் வகையில் ஒரு கோகுலாஷ்டமி – OUR KRISHNA JAYANTHI CELEBRATIONS!
கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்!
மாளிகைகள் வரவேற்க தயாராக இருக்க, குடிசையை தேடி வந்த கண்ணன்
=============================================================
ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)
பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)
விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)
=============================================================
பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!
மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !
திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)
ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)
ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!
==============================================================
சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!
“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்!
ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)
அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)
ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)
கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)
உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )
கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!
=============================================================
[END]
கிருஷ்ண ஜயந்தியில் ஒரு அருமையான கதையை பகிர்ந்து எங்களை பரவசப் படுத்தி விட்டீர்கள்.
பூனை பானைக்குள் மாட்டிக் கொண்டதில் ராகா மட்டும் பதறவில்லை . என் நெஞ்சமும் பதைபதைத்து விட்டது.
தாய்ப் பூனையின் குணமே குட்டி பிறந்தவுடன் இடம் மாற்றிக் கொண்டே இருக்கும் நான் பூனைகள் வளர்த்ததால் இந்த பதிவை படித்து நெகிழ்ந்து விட்டேன்
பாண்டு ரங்கன் தன பக்தனை தடுத்தாட்கொண்ட விதம் அருமை.
அழகிய ஸ்பெஷல் பதிவு இது
எல்லோருக்கும் ஸ்ரீ ஜெயந்தி வாழ்த்துக்கள்
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
சுந்தர் சார் வணக்கம்
மிகவும் பொருத்தமான பதிவு
அனவைருக்கும் கிர்ஷ்ணஜெயந்தி நல் வாழ்த்துக்கள்
நன்றி