Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > திருமலை வெங்கடேச பெருமாள் தேடும் அந்த ஒரு பக்தர் !

திருமலை வெங்கடேச பெருமாள் தேடும் அந்த ஒரு பக்தர் !

print
நேற்று கார்த்திகை தீபத்தின் போது குன்றத்தூரில் இருந்தோம். கார்த்திகை தீப தரிசன அனுபவத்தை எழுதி வருகிறேன். நேரடி புகைப்படங்களுடன் ஒரு விரிவான பதிவு வரவிருக்கிறது. தவிர உங்களை நெகிழ வைக்கும் வேறு சில விஷயங்களும் நம் தளம் சார்பாக (நேற்று) கார்த்திகை தீபத்தன்று நடைபெற்றது.

நம் நண்பர்கள் & தள வாசகர்கள் சிலர் தங்களை கவர்ந்த செய்திகளையோ கட்டுரைகளையோ இணையத்தில் படிக்க நேர்ந்தால் அதை நமக்கு அனுப்புவதுண்டு. நாமும் அவற்றை நேரமும் சூழ்நிலையும் அமையும்போதெல்லாம் நம் தளத்தில் பிரசுரிப்பதுண்டு. எனக்கும் அவ்வப்போது ஒரு பிரேக் தேவையல்லவா? அப்போதுதானே அடுத்தடுத்த பதிவுகளை சிறப்பாக எழுத முடியும். இத்தகு கட்டுரைகள் ஒரு வகையில் LIGHT READING போல. படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருப்பதோடல்லாமல் படிக்கும்போதே மயிலிறகால் நம்மை வருடியது போல இருக்கும்.

சமீபத்தில் நண்பர் சிவக்குமார் நமக்கு நண்பர் முருகராஜ் தினமலர்.காமில் எழுதிய கட்டுரை ஒன்றை மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

படித்தவுடன் பொட்டிலடித்தாற்போல இருந்தது.

“ஒளவையே உனக்கு என்ன வேண்டும்?” என்று முருகப் பெருமான் வரமளிக்க முற்பட்ட போது, “ஐயனே… பிறவாமை வேண்டும். ஒருவேளை மீண்டும் பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும்” என்று ஒளவை சொன்னது ஏன் என்று புரிந்தது.

நமக்கு அப்படி ஒரு பக்தி செலுத்தும் பக்குவம் எப்போது வரும் என்று தெரியாது. அதுவரை அட்லீஸ்ட் அப்படி இருப்பவர்கள் பற்றியாவது படிப்போம்.

lord-venkateswara

====================================================

திருமலை ஆஸ்தான அர்ச்சகர் டாக்டர் ஏ.வி.ரமண தீட்சிதர்
திருமலை ஆஸ்தான அர்ச்சகர் டாக்டர் ஏ.வி.ரமண தீட்சிதர்

பெருமாள் தேடும் அந்த ஒரு பக்தர்

நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டித்தரும் கோயிலும், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் தலமுமான திருமலை திருப்பதி கோயிலின் பிரதான அர்ச்சகரும், பிரம்மோற்சவ விழாவின்போது வலம் வரும் சுவாமி வாகனத்தில் இருப்பவரும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துவங்கி நடிகர் ரஜினிகாந்த் வரையிலான பிரபல விருந்தினர்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்லக்கூடியவரும், நாள்தோறும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் சொற்பொழிவு நிகழ்த்துபவரும், மாலிக்கியூல் பயலாஜியில் ஆராய்ச்சி படிப்பை முடித்து டாக்டர் பட்டம் பெற்றவருமான டாக்டர் ஏ.வி.ரமண தீட்சிதர் ஒரு நல்ல தமிழ் ஆர்வலரும் கூட.

பிரம்மோற்சவம் முடிந்த ஒரு நாள் மாலை நமது தினமலர்.காம் இணையதளத்தின் விருந்தினர் பகுதிக்காக விசேஷ பேட்டி வழங்கினார். அவரது பேட்டியிலிருந்து…

இப்போது எல்லாம் சாமியை நிம்மதியாக பார்க்க முடியவில்லை என பக்தர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். 1950ல் வந்திருந்தால் ஐந்து நிமிடம் அல்ல பத்து நிமிடம் நின்றால் கூட உங்களை போகச் சொல்ல ஆள் கிடையாது. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லையே. கடந்த மாதம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வந்திருந்தார். சரியாக இரண்டு நிமிடம் கூட சுவாமி முன் நின்று பிரார்த்தனை செய்திருக்கமாட்டார், அதற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றுவிட்டனர். ஆக ஒரு நிமிடம் கூட பார்க்கவில்லை என்று நினைக்காதீர்கள், மாறாக பத்து வினாடி பார்த்தேன் என்று திருப்தி அடைந்து கொள்ளுங்கள்.

பக்தி என்பது குளித்து முடித்து நாமம் இட்டு மந்திரம் சொல்லி பூஜை செய்து சாமி கும்பிடுவதோடு முடிந்துவிடுவதில்லை. அப்போதுதான் துவங்குகிறது. நாளின் ஒவ்வொரு நொடியும் உங்களை பெருமாள் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு மனம், மெய், வாக்கு ஆகிய மூன்றாலும் தவறேதும் செய்யாதிருப்பதே பக்தி.

புகைப்பட உதவி : தினமலர்.காம்
புகைப்பட உதவி : தினமலர்.காம்

எனக்கு எஜமான் பெருமாள்தான், எங்கோயோ இருந்த என்னை தனக்கு பூஜை செய்யும்படி அருகில் அழைத்து வைத்துக் கொண்டுள்ளார், அந்த காரியத்தில் கடுகளவும் குறைவின்றி செய்ய வேண்டும், செய்துவருகிறேன். அப்படி மனம்விரும்பி என் வேலையை செய்யும்போது ஏற்படும் பரவசம் பக்திக்கு ஈடானது. யாராக இருந்தாலும் மனம் சொன்னதை கேட்டு வேலையை ஈடுபாட்டுடன் செய்யுங்கள், அந்த தொழில் பக்தியைதான் பெருமாள் மிகவும் நேசிப்பார்.

தமிழ் ஆழ்வார்கள் பனிரெண்டு பேராலும் தமிழ் பாசுரங்களால் பாடி ஆனந்தமாக ஆராதிக்கப்பட்டவரே திருமலை பெருமாள். அவர் பள்ளி எழுந்தது முதல் திரும்ப பள்ளியறை போவது வரை அவரை ஆராதிப்பது தமிழ் பாசுரங்களே. இதன் காரணமாகவே நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் தெலுங்காக இருந்தாலும் தமிழை நானே விரும்பி படித்தேன்.

காலுக்கு செருப்பு கூட வாங்க முடியவில்லையே என்று கவலைப்படுபவன் காலே இல்லாதவனை பார்த்தபிறகு நமது கவலையில் நியாயமில்லை என்பதை உணர்வான் அது போல எல்லோருக்கும் அவரவர் நிலைக்கு ஏற்ப கஷ்ட, நஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். இதையே நினைத்துக் கொண்டு இருக்காமல் அதை கடந்து போகும் வழியை பார்க்க வேண்டும்.

உன்னிடம் அதிகாரம் இருந்தால் அதை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தாமல் இருப்பதும் குற்றம், அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு தப்பான விஷயம் நடக்கும் போது அதை பார்த்துக் கொண்டு தடுத்து நிறுத்தாமல் விட்டாலும் பாவம். முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்எஸ்ஆருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தபோது, ” உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார்” எனக்கு ஒன்றும் வேண்டாம் ஆந்திரா மாநிலம் முழுவதும் உள்ள 34 ஆயிரம் கோவில்களைச் சேர்ந்த ஒரு லட்சம் அர்ச்சகர் குடும்பங்கள் நலம் பெற ஒரே ஒரு உத்திரவு போடுங்கள் என்றுதான் கேட்டேன்’ அப்படியே உத்திரவிட்டார். இன்று அந்த ஒரு லட்சம் குடும்பமும் நிம்மதியாக இருக்கிறது.

ஆக பக்தியும் நிம்மதியும் ஆனந்தமும் குலசேகரபடிக்கட்டைத்தாண்டி கர்ப்பககிரகத்தில் மட்டும் இல்லை, உங்கள் மனதிலும் இருக்கிறது. வாழ்க்கையை நேசியுங்கள் அது எப்படி இருந்தாலும், அமைந்தாலும் ஒத்துக்கொண்டு வாழப்பழகுங்கள்.

உங்களுக்கு ஓன்று தெரியுமா? அன்றாடம் தன்னை வந்து சந்திக்கும் கோடிக்கணக்கான பக்தர்களின் வீடு வேண்டும், பணம் வேண்டும், வெளிநாட்டு வேலை வேண்டும் என்பது போன்ற ஆயிரக்கணக்கான “வேண்டும்’ என்கின்ற வேண்டுதலை மட்டுமே கேட்கும் பெருமாள் கோடியில் ஒரு பக்தன் எனக்கு எதுவும் வேண்டாம் “நீதான் வேண்டும் நீ மட்டுமே வேண்டும்’ என்று கேட்டு வர மாட்டாரா? அவரை வைகுந்தத்திற்கே அழைத்துச் சென்று அருகே வைத்துக் கொள்வோம் என எண்ணியுள்ளார், அந்த ஒரு பக்தராக மனதார மாறமுடியுமா? பாருங்களேன், என்று கூறி முடித்தார் டாக்டர் ஏ.வி.ரமண தீட்சிதர்.

நன்றி :  எல்.முருகராஜ் | DINAMALAR.COM

 

 

7 thoughts on “திருமலை வெங்கடேச பெருமாள் தேடும் அந்த ஒரு பக்தர் !

  1. சுந்தர்ஜி
    ஒரு பக்தன் எனக்கு எதுவும் வேண்டாம் “நீதான் வேண்டும் நீ மட்டுமே வேண்டும்’ என்று கேட்டு வர மாட்டாரா? அவரை வைகுந்தத்திற்கே அழைத்துச் சென்று அருகே வைத்துக் கொள்வோம் என எண்ணியுள்ளார், அந்த ஒரு பக்தராக மனதார மாறமுடியுமா? பாருங்களேன், முடியும். எல்லோரும் முயன்று பார்போம்

  2. ///உன்னிடம் அதிகாரம் இருந்தால் அதை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தாமல் இருப்பதும் குற்றம், அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு தப்பான விஷயம் நடக்கும் போது அதை பார்த்துக் கொண்டு தடுத்து நிறுத்தாமல் விட்டாலும் பாவம்.///
    ///அன்றாடம் தன்னை வந்து சந்திக்கும் கோடிக்கணக்கான பக்தர்களின் வீடு வேண்டும், பணம் வேண்டும், வெளிநாட்டு வேலை வேண்டும் என்பது போன்ற ஆயிரக்கணக்கான “வேண்டும்’ என்கின்ற வேண்டுதலை மட்டுமே கேட்கும் பெருமாள் கோடியில் ஒரு பக்தன் எனக்கு எதுவும் வேண்டாம் “நீதான் வேண்டும் நீ மட்டுமே வேண்டும்’ என்று கேட்டு வர மாட்டாரா? அவரை வைகுந்தத்திற்கே அழைத்துச் சென்று அருகே வைத்துக் கொள்வோம் என எண்ணியுள்ளார், அந்த ஒரு பக்தராக மனதார மாறமுடியுமா? ///

    அருமையாக சொல்லியுள்ளார்
    திரு ,டாக்டர் ஏ.வி.ரமண தீட்சிதர்..

  3. வணக்கம் சுந்தர் சார் ,
    மிகவும் அற்புதமான பதிவு. அதுவும் “காலுக்கு செருப்பு கூட வாங்க முடியவில்லையே என்று கவலைப்படுபவன் காலே இல்லாதவனை பார்த்தபிறகு ” என் மனதை மிகவும் தொட்டது .
    மிக்க நன்றி.

  4. சுந்தர்ஜி

    வேண்டும் வேண்டும் உன் திருவடி வணங்கவேண்டும். உன்னை மறவாமல் நினைக்கிற மனம் வேண்டும். உன் புகழ் பாட வேண்டும்.பிறவாமை வேண்டும். ஒருவேளை மீண்டும் பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும்” உன் புகழ் கேட்க வேண்டும். உன் தரிசனம் காண வேண்டும்.

  5. பெருமாள் அப்பா எனக்கு நீங்க மட்டும் போதும் வேறு எதுவும் வேண்டாம் , பெருமாள் அப்பா நா இருக்கே பா உங்களுக்கு கவலை படாதீங்காப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *