Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, June 11, 2023
Please specify the group
Home > Featured > மனதில் உறுதி வேண்டும்!

மனதில் உறுதி வேண்டும்!

print
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. (குறள் 337)

மேற்படி குறளுக்கு பொருள் என்னவென்றால், அடுத்த நொடி வாழ்க்கை எவருக்கும் இங்கே நிச்சயமில்லை. இதில் அவர்கள் கனவுகள் மட்டும் கோடிகளில் இருக்கும்!

Lamp 2பாரதி விழாவுக்கான ஏற்பாடுகளை ஒரு பக்கம் தீவிரமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், நேற்று மாலை பணிமுடித்து சுமார் 7.30 மணியளவில் அலுவலகத்தைவிட்டு வெளியே வருகிறோம். அப்போது தான் எமக்கு அந்த எஸ்.எம்.எஸ். வந்தது.

“மதுரா டிராவல்ஸ் அதிபர் வீ.கே.டி. பாலன் அவர்களின் தாயார் இசக்கியம்மாள் இன்று மதியம் இறைவனடி சேர்ந்தார். சென்னை மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள திரு.பாலன் அவர்களின் இல்லத்தில் அவர் உடல் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9.00 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. மயிலையில் ஆல் இந்தியா ரேடியோ பின்புறம் அவர் உடல் தகனம் நடைபெறும்!”

எஸ்.எம்.எஸ்.ஸை பார்த்தவுடன் நமக்கு பகீரென்றது. சற்று நிலைகுலைந்து தான் போனோம்.

உடனே மந்தைவெளிப்பக்கத்தில் உள்ள திரு.பாலன் அவர்களின் இல்லத்திற்கு விரைந்தோம்.

பாலன் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினோம். தனது பணியாள் ஒருவரை அழைத்து நம்மை உள்ளே அழைத்து போகச் சொன்னார்.

உள்ளே FREEZER BOX ல் வைக்கப்பட்டிருந்த அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சற்று நேரம் அங்கு அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு வெளியே வந்தோம்.

VKT Balan mother passes awayபாலன் அவர்களின் உறவினர் ஒருவரிடம் பேசியதி, பாலன் தாயாருக்கு 92 வயது என்றும், எந்த வித துன்பமும் இல்லாத வகையில் ஒரு மென்மையான மரணம் தான் அவருக்கு ஏற்பட்டது என்றும் கூறினார். சமீப காலங்களாகவே இசக்கியம்மாளுக்கு உடல் நலம் சற்று குன்றியிருந்தது எனவும் நேற்று மதியம் 3.30 அளவில் உயிர் பிரிந்துவிட்டது என்றும் கூறினார்.

அவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

ஒரு பக்கம் பாரதி விழா ஏற்பாடுகள் தீவிரமாக போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவ்விழாவின் முக்கிய விருந்தினர் ஒருவர் தனது தாயை இழந்து வாடும் சூழல் நம்மை என்னவோ செய்தது. நம் விழாவில் அவர் கலந்துகொள்வதை விட, மிகப் பெரிய துயரம் ஒன்று அவரை தாக்கியிருக்கும் இந்த சூழலில் அவருக்கு ஆன்ம பலம் வேண்டி இறைவனை பிரார்த்திப்பதே நம் முதல் கடமை.

எனவே பாரதி விழாவில் திரு.பாலன் அவர்களின் தாயாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்படும்.

ஒவ்வொரு ஞாயிறு தோறும் நம் தளம் சார்பாக மாலை 5.30 – 5.45 நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனை இம்முறை விழா அரங்கிலேயே கடவுள் வாழ்த்து பாடி முடித்ததும் நடைபெறும். இதுவரை பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை சமர்பித்திருந்த அனைவருக்காகவும் பிரார்த்தனை நடைபெறும். அப்போது திரு.பாலன் அவர்களின் தாயார் இசக்கியம்மாள் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்படும்.

இந்த சூழ்நிலையில் நாம் ஒன்றை குறிப்பிட விரும்புகிறோம்.

அழைப்பிதழை வடிவமைத்து நேற்று முன்தினம் தான் திரு.பாலன் அவர்களுக்கு நாம் கூரியர் அனுப்பியிருந்தோம். எனவே நேற்று மாலை அவரை தொடர்புகொண்டு அழைப்பிதழ் வந்துவிட்டதா சார்… என்று கேட்க நினைத்திருந்தோம். நான் அழைப்பு அனுப்பியிருந்த வேறு சிலருக்கு அது கிடைத்துவிட்டது. எனவே எப்படியும் பாலன் சாருக்கும் அது கிடைத்திருக்கும். எதற்கும் மாலை வேலை முடிந்து வெளியே வந்த பின்னர் கேட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம்.

நாம் வெளியே வந்து வண்டியை ஸ்டார்ட் செய்கிறோம் நமக்கு மேலே சொன்ன எஸ்.எம்.எஸ். வந்தது.

மதுராவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அனுப்பியிருந்தார். அந்த சூழ்நிலையிலும் பாலன் அவர்கள், நம்மை கருத்தில் கொண்டு, “அந்த தம்பிக்கு விஷயம் தெரியாது. அவருக்கு கொஞ்சம் தகவல் அனுப்பிடுங்கப்பா …” என்று சொல்லியிருக்கிறார். அவர் மட்டும் நமக்கு தகவல் தெரிவிக்க முயற்சி எடுக்கவில்லை என்றால் விஷயம் தெரியாமல் நாம் அவரிடம் விழா பற்றி பேசி அவரை சங்கடப்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. நல்லவேளை அது தவிர்க்கப்பட்டது.

தான் துயரத்தில் இருந்த நேரத்திலும் நம்மை பற்றி கருத்தில் கொண்டு செயலாற்றிய பாலன் அவர்களின் மனிதநேயத்திற்கு ஒரு சல்யூட்!

==========================================================

நாம் முந்தைய பதிவில் கூறியது போல, பாரதி விழா ஏற்பாடுகளில் இறங்கியது முதலே பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறோம். எதற்கும் கலங்காது ‘எல்லாம் அவன் செயல்’ என்று எடுத்த காரியத்தை நல்லவிதமாக முடிக்க செயலாற்றி வருகிறோம்.

பல நல்ல விஷயங்களை சொல்லி சொல்லி, கேட்டு கேட்டு, படித்து நம்மை பக்குவப்படுத்திக்கொண்டு வந்ததால் இது போன்ற ஒரு சூழ்நிலையை தாங்கக் கூடிய வல்லமை வந்தது. மற்றதை பாரதியின் ஆன்மா தான் உடனிருந்து வழிநடத்தவேண்டும்.

துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

==========================================================

[END]

12 thoughts on “மனதில் உறுதி வேண்டும்!

 1. இந்த பதிவினை பார்த்தவுடன் நெஞ்சம் கனக்கிறது நாம் ஆவலுடன் எதிர்பார்த்த மனிதர்க்கு இப்படி ஒரு சோதனை… ….உங்களுக்குத்தான் எவ்வளுவு போராட்டம் ,…மற்றதை பாரதியின் ஆன்மா தான் உடனிருந்து வழிநடத்தவேண்டும். –

 2. அந்த அன்பு தாயாரின் ஆத்மா இறைவனின் நிழலில் சாந்தியடைய பிராத்தனை செய்கின்றோம்.

 3. சுந்தர்ஜி

  உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது எனத தெரியவில்லை.
  நடப்பது எல்லாம் நன்மைக்கே ! பாரதி விழாவுக்கு பாரதிக்கு வாழ்க்கையில் வந்த சோதனைகள் போல உங்களுக்கு அடுத்த அடுத்த சோதனைகள். மற்ற கடமைகளையும் செய்து கொண்டு இந்த தளத்தை சாதராணமாக நடத்துவதே பெரும்பாடு. இதற்கிடையில் இந்த மாதிரி சூழ்நிலைகள்.

  கண்டிப்பாக மஹா பெரியவா உங்களுக்கு துணை இருப்பார். விழா நல்லபடி நடக்கும். கலங்காது இரு மனமே ! நம் கனவுகள் நிறைவேறும் நாளைய தினமே!

 4. டியர் சுந்தர்ஜி

  உங்கள் பதிவை படித்து மனது மிகவும் பதைபதைத்தது. திரு பாலன் அம்மா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

  எவ்வளவு சோதனை வந்தாலும் விழா வெற்றி பெற பாரதி அருள் புரிய வேண்டும்.

  நன்றி
  uma

 5. சுந்தர்ஜி
  திரு பாலன் அவர்களுக்கு நமது தளம் சார்பாக அழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன் . அம்மா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

 6. சுந்தர்ஜி,
  இந்ந்த தகவலை பார்த்துடன் என்ன மனம மிகவும் கனமனாக உள்ளது. திரு பாலன் அவர்களுக்கு நமது தளம் சார்பாக அழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன் . அம்மா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.
  நன்றி,
  நாராயணன்.

 7. டியர் சுந்தர்ஜி,

  வேறு என்ன சொல்ல

  துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
  சோர்ந்துவிட லாகாது பாப்பா!
  அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
  அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

  திரு.பாலன் மற்றும் அவரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன்.

  பாலு மகேந்திரன் .வீ

 8. அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
  அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! –
  அன்பே சிவம் ….அந்த எல்லாம் வல்ல ஈசன் சிவபெருமானின் அருளால் நன்றாக நடை பெற வாழ்த்துக்கள் ……

  சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
  ஆராத இன்பம் அருளுமலை போற்றி
  சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
  அவன் அருளாலே அவன்தாள் வணங்கி…வாழ்த்துக்கள்

   1. சுந்தர் சார் ,தயவு செய்து இந்த முறை மன்னித்து விடுங்கள் ….நம் பாரதி விழாவுக்கு வர முடிய வில்லை …மதுரை …..நான் இந்த வாரம் உங்களை …விழா நல்லபடி நடக்கும்.சிவாயநம

 9. அய்யா பாலன் அவர்களின் தாயார் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்

 10. அனைத்தும் நல்லவண்ணம் நடந்தேற , எல்லாம்வல்ல குருவருளும் திருவருளும் உங்களுடன் முழுவதுமாக இருந்து வழி நடத்தும் என்பது மட்டும் உறுதி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *