Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > அதிசய எலியும் ஒரு புத்திசாலி பெண்ணும் ! Monday Morning Spl 20

அதிசய எலியும் ஒரு புத்திசாலி பெண்ணும் ! Monday Morning Spl 20

print
ரு பெண் தோட்டத்தில் உள்ள புல்வெளியில் குழந்தைகளுடன் பந்து விளையாடிக்கொண்டிருந்தாள். கணவன் வெளியே சென்றிருந்தான். விளையாடும்போது குழந்தைகள் அடித்த பந்து புல்வெளிக்குள் சென்று மறைந்துவிட, அதை தேடிக்கொண்டு இவள் சென்றாள்.

அங்கே ஒரு பொறியில் ஒரு வெள்ளை எலி சிக்கியிருப்பதை பார்க்கிறாள். இவளை பார்த்தவுடன், அந்த வெள்ளை எலி பேசியது.

White Rat

“என்னை இந்த பொறியில்  இருந்து விடுவித்தால் உனக்கு மூன்று வரம் தருவேன்” என்றது.

இவளுக்கு எலி பேசுவது ஆச்சரியம். தன்னை விடுவித்தால் வரம் தருவேன் என்று சொன்னது அதை விட ஆச்சரியம். உடனே அதை விடுவித்தாள்.

எலி, “ஸாரி… உன்னிடம் ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன். நீ என்ன கேட்டாலும் நான் தருகிறேன். ஆனால் உன் கணவனுக்கு அதை விட மூன்று மடங்கு அதிகம் கிடைக்கும்!! பரவாயில்லையா?” என்றது.

“பரவாயில்லை! உலகிலேயே அழகான பெண்ணாக நான் மாறவேண்டும். இது தான் என் முதல் வேண்டுகோள்!!”

“தாரளாமாக. ஆனால்… உன் கணவன் உன்னை விட மூன்று மடங்கு அழகானவனாக மாறிவிடுவான் என்பதை நினைவில் கொள். அப்படி அவன் அழகானவனாக மாறுகிற பட்சத்தில் ஏராளமான பெண்கள் அவனை மொய்க்கக் கூடும்” என்று எச்சரித்தது எலி.

“உலகிலேயே அழகான பெண்ணாக நான் தான் இருப்பேன் என்பதால் என்னைத் தவிர வேறு எவரிடமும் அவர் பார்வை செல்லாது. அவரது சுபாவம் தெரிந்து தான் நான் இந்த வரத்தை கேட்டேன்.” (அடங்கொப்புறானே… என்னா ஒரு அண்டர்ஷ்டேண்டிங்!!)

அடுத்த நொடி அந்த பெண் மிகவும் அழகாக மாறிவிடுகிறாள்.

“உலகிலேயே மிகப் பெரிய பணக்காரியாக நான் மாறவேண்டும். இது தான் என் இரண்டாவது விருப்பம்.”

“அப்படியே… ஆனால் உன் கணவன் உன்னை விட மூன்று மடங்கு மிகப் பெரிய பணக்காரனாக மாறிவிடுவான். பரவாயில்லையா?”

“அதானால் என்ன? என் பணம் அவருடையது. அவர் பணம் என்னுடையது எனும்போது எந்த பிரச்னையும் இல்லையே…” (அடேங்கப்பா…… என்னா கால்குலேஷன்!)

அடுத்த நொடி இவள் மிகப் பெரிய பணக்காரியாக மாறிவிடுகிறாள்.

“அடுத்து என்ன வேண்டும்?” இது எலி.

“எனக்கு லேசான ஹார்ட் அட்டாக் வரவேண்டும்” என்றாள் அந்த பெண்! (யம்மாடியோவ்… என்னா வில்லத்தனம்!)

கதையின் நீதி : பெண்கள் மிகவும் புத்திசாலிகள்.

குறிப்பு : மகளிர் வாசகர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். இத்தோடு நிறுத்திவிடவும்.
அப்பாவி ஆண் வாசகர்கள் மட்டும் மேலே படிக்கவும்.

======================================================
தொடர்ச்சி : “எனக்கு லேசான ஹார்ட் அட்டாக் வரவேண்டும்” என்று அந்த பெண் கேட்டதால், அவள் கணவனுக்கு மூன்று மடங்கு லேசான ஹார்ட் அட்டாக் வந்தது. அதாவது ஹார்ட் அட்டாக் வந்ததே தெரியாத அளவிற்கு! (ஹா…ஹா…ஹா..!!!!!!!!!!!!!!!!!!)

கதையின் உண்மையான நீதி : பெண்கள் தங்களை புத்திசாலிகள் என்று நினைத்துக்கொள்வார்கள். போனால் போகட்டும் அப்படியே நினைத்துகொள்ளட்டும். நாம் பாட்டுக்கு அவர்கள் அப்படி நினைத்துகொள்வதை கண்டு ரசிப்போம். (வழக்கம்போல!!!! ஹி..ஹி….!!!)

குறிப்பு : நீங்கள் பெண்ணாக இருந்து இதை மேலும் படித்தீர்கள் என்றால், பெண்கள் எப்போதும் பிறர் சொல்வதை கேட்பதே இல்லை என்பதும் தெளிவாகும்!

=============================================================

முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=============================================================

[END]

11 thoughts on “அதிசய எலியும் ஒரு புத்திசாலி பெண்ணும் ! Monday Morning Spl 20

  1. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது நன்றி..

  2. டியர் சுந்தர்ஜி

    Happy morning to everybody

    I object today’s monday morning spl.

    Regards
    Uma

  3. எல்லாம் நல்லாதானே போய்கொண்டிருந்தது.இப்ப ஏன் இப்படி? பெண்கள் அப்பாவி சார் விட்ருங்க.

  4. டியர் சுந்தர்,
    குட் மோர்னிங். குட் ஸ்டோரி.

    நன்றி,
    நாராயணன்.

  5. சுந்தர்ஜி,

    என்ன ஆச்சு உங்களுக்கு. இதற்க்கு மேல் எனக்கு கேட்க தோன்றவில்லை.

  6. அப்பாவி ஆண்கள் நாங்கள்தான் !…..எங்கள் முகத்தில் எழுதிவதுள்ளது தெரிகிறதா ???…

    -மனோகர்

  7. சுந்தர்ஜி
    பெண்கள் நாட்டின் கண்கள். மாதராய் பிறபதற்கு மா தவம் செய்ய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *