2. தங்களுக்கு ஒரு துணை கிடைக்கும் வரை தான் பெண்கள் தங்களது எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவார்கள். ஆண்களோ துணை கிடைக்கும் வரை எதிர்காலத்தை பற்றியே சிந்திக்கமாட்டார்கள்.
3. தன் மனைவி செலவழிக்கூடிய தொகைக்கும் அதிகமாக எவன் சம்பாதிக்கிறானோ அவன் தான் வெற்றிகரமான ஆண். அப்படிப்பட்ட ஒருவனை கணவனாக அடையும் பெண்ணே வெற்றிகரமான பெண்!
4. ஒரு ஆணுடன் ஒரு பெண் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தவேண்டும் என்றால், அவனை அதிகமாக புரிந்துகொண்டு, குறைவாக நேசிக்கவேண்டும். அதுவே ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தவேண்டும் என்றால், அவளை அவன் அளவுக்கதிகமாக நேசிக்கவேண்டும். ஆனால் புரிந்துகொள்ள முயற்சிக்கவே கூடாது.
5. திருமணம் செய்துகொள்ளாத ஆண்களை விட திருமணமான ஆண்களே அதிக நாட்கள் உயிர்வாழ்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால், அவர்கள் அதிக நாட்கள் வாழ விரும்புவதில்லை.
6. திருமணமான எந்த பெண்ணும் தன்னுடைய தவறுகளை மறந்துவிடவேண்டும். ஒரு விஷயத்தை இருவர் நினைவில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை.
7. திருமணத்திற்கு பின், ‘அவன் மாறிவிடுவான்’ என்று பெண் நினைக்கிறாள். ஆனால் அவன் மாறுவதில்லை. திருமணத்திற்கு பிறகு அவள் மாறமாட்டாள் என்று அவன் நம்புகிறான். ஆனால் அவள் மாறிவிடுகிறாள்.
8. எந்த ஒரு வாதத்திலும் பெண் சொல்வதே இறுதி. அதற்கு பிறகு ஆண் சொல்வது புதிய வாதத்திற்கு ஒரு துவக்கம்.
9. ஒரு பெண்ணை ஒரு ஆணால் இரண்டு சந்தரப்பங்களில் புரிந்துகொள்ள முடியாது. திருமணத்திற்கு முன்பும். திருமணத்திற்கு பின்பும்.
10. எந்த ஒரு உரையாடலையும் ஆண் தான் ஆரம்பிப்பான். ஆனால் பெண் தான் முடித்து வைப்பாள்.
11. ஒரு பெண் தனது தவறுகளை ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் தனது தவறை கடைசீயாக ஒப்புக்கொண்ட ஆண் யார் தெரியுமா? பெண்ணினத்தை படைத்தவன்.
12. ஒரு ஆணிடம் சூரியனுக்கு கீழே உள்ள எதைப்பற்றியாவது விளக்கம் கேட்டால், கூடுமானவரை ஒரே ஒரு வாக்கியத்தில் பதில் வரும். ஆனால் ஒரு பெண்ணிடம் உங்கள் தலைநகரம் எது என்று கேட்டால் கூட வண்டி வண்டியாக ஏதாவது பதில் வரும்.
13. ஒரு ஆண் ஆமாம் என்றால் ஆமாம் என்றும் இல்லை என்றால் இல்லை என்றும் அர்த்தம். ஆனால் பெண், ஆமாம் என்றால் இல்லை என்று அர்த்தம். இல்லை என்றால் ஆமாம் என்றும் அர்த்தம்.
14. ஆண்கள் கண்ணாடியில் மட்டுமே தங்களை பார்த்துக்கொள்வார்கள். ஆனால் பெண்கள் ஸ்பூன்கள், பிளேட்டுகள், கார் கண்ணாடிகள், பளபளப்பாக தெரியும் எதன் மீதும் தங்களை பார்த்துக்கொள்வார்கள்.
15. ஆண்கள் செல்போனை தகவல் தொடர்புக்கு மட்டுமே உபயோகிப்பார்கள். பெண்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் தோழியரை பார்க்க செல்வார்கள். மணிக்கணக்கில் அவர்கள் வீட்டில் தங்கிவிட்டு பேசிவிட்டு வருவார்கள். வீட்டுக்கு வந்தவுடன் மறுபடியும் அவர்களிடமே மொபைலில் மணிக்கணக்காக பேசுவார்கள்.
16. பெண்கள் எப்பொதும் ஆண்கள் மறந்து போகும் விஷயத்தை பற்றியே கவலைப்படுவார்கள். ஆண்களோ பெண்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் விஷயங்களை எண்ணி கவலைப்படுவார்கள்.
நண்பர் விவேகானந்தன் அவர்களின் முகநூலில் பார்த்து நமது ரைட்மந்த்ரா முகநூலில் நாம் சில நாட்களுக்கு பகிர்ந்திருந்த ஒரு சுவாரஸ்யமான தகவலை இங்கு உங்கள் அனைவரின் பார்வைக்கும் கொண்டு வருகிறேன். இதை படித்துவிட்டு நமக்கு ஏற்பட்ட சிரிப்பை அடக்க வெகு நேரமாகியது. யாம் பெற்ற இன்பம் பெருக வையகம் என்கிற நல்ல உள்ளத்துடன் இங்கு பகிர்கிறேன்.
அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்…..?
1 ஏங்க எங்க போறீங்க?
2 யார்கூடப் போறீங்க?
3 ஏன் போறீங்க?
4 எப்படி போறீங்க?
5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?
6 ஏன் நீங்கமட்டும் போறீங்க?
7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?
8 நானும் உங்ககூட வரட்டுமா?
9 எப்ப திரும்ப வருவீங்க?
10 எங்க சாப்பிடுவீஙக?
11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?
13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?
14 பதில் சொல்லுங்க ஏன்?
15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?
16 நீங்க என்னை அம்மாவீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா?
17 நான் அனி திரும்ப வரமாட.டேன்
18 ஏன் பேசாம இருக்கீங்க ?
19 என்ன தடுத்த நிறுத்தமாட்டீஙகளா?
20 இதுக்முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்தமாதிரிபண்ணிருக்கீங்களா?
21 எத்தனை கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டமாதிரி நிக்கிறீங்க ?
22 இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???
இதுக்கு அப்புறமும் அவர் அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா?????
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=============================================================
Dear Mr Sundar
என்ன sir,காலங்கர்த்தாலே இவ்வளவு ரொம்ப அதிகமா யோசித்து பெண்களை பற்றி கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக தத்துவ முத்துக்களாக எழுதியிருக்கிறீர்கள்.
ஆன்மிக சிந்தனையிலிருந்து மாறி இவ்வளவு அழகாக !!!! உங்களை எழுத தூண்டியது யார்?
நாங்கள் இந்த article யை just for fun ஆகா எடுத்து கொள்கிறோம்
நன்றி
உமா
திரு சுந்தர் அவர்களுக்கு,
மன்னிக்கவும். இத்தகைய பதிவுகளை திங்கள்கிழமையில் தவிர்க்கலாம்.
இவ்வாறு நடைபெறுவது இது இரண்டாவது தடவை
திங்கட்கிழமை காலை ஸ்பெஷல் என்பதே மன இறுக்கத்தை தவிர்ப்பதற்கு தான். மற்றபடி சீரியசான விஷயங்களை பேச அல்ல. இதை உமா அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல நாம் அளித்திருப்பது ஒரு ஜாலிக்காகத் தான். எவர் மனதையும் இது நிச்சயம் புண்படுத்தாது.
மேலும் நம் வாசகியரை பற்றி நமக்கு தெரியும். இதை அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.
இருப்பினும் பெரும்பான்மையானோர் விருப்பத்திற்கு இதை விட்டுவிடுகிறேன். என் விருப்பத்தை விட உங்கள் விருப்பமே முக்கியம்.
(நாம் இதை அளிக்க காரணம், பாவப்பட்ட இந்த ஆண்கள், கொஞ்சமாவது பெண்களை புரிந்துகொண்டு வாழட்டுமே என்கிற நப்பாசை தான்!)
– சுந்தர்
மிகவும் அருமையான தகவல்.அதுவும் பெண்களை பற்றி நன்றாக புரிந்து கொள்ள உதவும்.போனஸ் செய்தி படித்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போனது.
வணக்கம் சார்,
சார் செம ஜாலி மூடில் உள்ளது போல தெரிகிறது. ரொம்பவும் மெனக்கெட்டு யான் பெற்ற இன்பம் எல்லோரும் பெருக என்று பாயிண்ட் நிறைய எழுதிள்ளது போல திரிகிறது.
உங்களை பற்றி தெரிந்த உங்கள் வாசகர்கள் சிரித்து விட்டு மறந்து விடுவோம்.
மற்ற எத்தனை பேரிடம் வாங்கி கட்ட போகிறேர்களோ தெரியவில்லை.
எனிவே monday morning jolly morning
மேலும் உமா சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.
காலையில் சின்ன ஒரு விளையாட்டா? எப்படி சார் இப்படி !!!!!!!!!!!??????.
Sampath சார் அவர்களுக்கு
சும்மா சார் விளையாட்டுக்கு போட்டுள்ளார்.
கடல் ஆழம் அறியலாம் எங்கள் மன ஆழம் அறிய முடியாது.
எனவே சிரித்து மகிழுங்கள்.
கடல் ஆழம் அறியலாம் எங்கள் மன ஆழம் அறிய முடியாது.
உண்மை உண்மை உண்மை.
அதான் இந்த ஆண்கள் ரொம்ப கஷ்ட படுகிறார்கள்.
ராஜா.
சுந்தர் சார் வணக்கம் …..ரொம்ப அருமையா யோசிச்சு காலையில் சிரிக்க வச்சு இருக்கைக….உமா அவர்கள் சொன்ன மாறி நாங்கள் இந்த article யை just for fun ஆகா எடுத்து கொள்கிறோம்……
நன்றி……
தனலட்சுமி ………
colombus comedy – good imagination.
சுந்தர்ஜி,
ஹாஆஆஆஆஆஆஆஆஆஅ…………………….
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.
ரொம்ப ஜாலி மூடோ……………
சுந்தர் சார் ,
அருமை , , , , , முற்றிலும் உண்மை.
மனைவியை கொஞ்சம் குட புரிந்து கொள்ள
முடியல . யாரும் யாரையும் மாத்த
முடியாது.மாத்த நினைத்தாள் தோல்வி
தான் மிஞ்சும். நீ , நீயாக இரு. நான் ,
நானாக இருக்க வேண்டும்.
இப்படி கேட்டால் , கொலம்பஸ்
கடைக்ககுட போக முடியாது.
உமா மேடம் , பரிமளம் மேடம்
மன்னித்து விடுங்கள்.
ராஜா.
மகளீர் தின வாழ்த்து பதிவிட்டு ஒரு வாரம்தான் ஆகிறது ,அதுக்குள்ளே அவங்கமேல என்ன கோவம்முன்னு தெரியல …..????????????
ஆனா ஜி …
கல்யாணத்துக்கு பிறகு இந்த பதிவ மறுபதிவு செய்ய வேண்டுமென்று ,இப்போதே கோரிக்கைவைக்கிறேன் .
நான் இந்த விளையாட்டுக்கு வரல …
-மனோகர்
Dear Sundaraji ,
I am also expecting the same as Manohar sir expects
கல்யாணத்துக்கு பிறகு இந்த பதிவ மறுபதிவு செய்ய வேண்டுமென்று ,இப்போதே கோரிக்கைவைக்கிறேன் 🙂
Venkatesh
அப்போது மேலிடத்தின் அனுமதி (!) கிடைத்தால் அதுசமயம் மீண்டும் பப்ளிஷ் செய்யப்படும்.
– சுந்தர்
மனோகர் சார்
வாழ்கை ஒரு விளையாட்டு அதை ஆடி
பார்க்க வேண்டும்.
– ராஜா –
திங்கட்கிழமை சிறப்பு பதிவு அருமை. நான் இந்த பதிவை ஜாலியாக படித்தேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. இதில் இருக்கும் ஒவ்வொரு விஷயமும் உண்மை. அதிலும் கொலம்பஸ் பற்றி கற்பனையாக இருந்தாலும் நூற்றுக்கு நூறு உண்மை. மனைவி அமைவதெல்லாம் உண்மையிலேயே இறைவன் கொடுத்த வரம்தான். அதனால் ஆண்கள் எல்லோரையும் அதிக புண்ணியம் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
என்னுடைய கமெண்டை நான் ஜோக்குக்காக சொல்லவில்லை அதேசமயம் மற்றவர்கள் மனதை புண்படுத்தும் நோக்கமும் எனக்கில்லை.
பிரம்மச்சாரி சுந்தர் அவர்களே, இப்போது திருப்திதானே!
சுந்தர் சார்,
உங்களின் இந்த பதிவு நன்றாக சிரிக்க வைத்துள்ளது.
OOKK COOL .
நன்றியுடன் அருண்
இந்த ஆர்டிகளை மனைவியுடன் சேர்ந்து படிக்கலாம், ஜாலி டைம்…. நன்றி ஜி.
மனைவியும் நானும் சேர்ந்து படித்தோம் …சிரித்தோம்
மிகவும் அருமையான தகவல்.
நந்தகோபால்
வந்தவாசி