ஒரு முறை அவன் பிச்சையெடுக்கும்பொது ஒரு வீட்டில், அவனுக்கு ஒரு பானை நிறைய பாலை கொடுத்தார்கள். பானை நிறைய பால் பிச்சை கிடைத்த சந்தோஷத்தில் அவன் அதை வீட்டுக்கு கொண்டுவந்து அதை காய்ச்சி அதில் கொஞ்சம் குடித்துவிட்டு மீதியை தயிராக்கும் பொருட்டு உரையூற்றி ஒரு உறியில் தொங்கவிட்டான்.
தனது குடிசையில் உள்ள கயிற்று கட்டிலில் சாய்ந்தவன் மெல்ல யோசிக்க ஆரம்பித்தான்.
“காலை இந்த பானையில் உள்ள பால் முழுதும் தயிராகியிருக்கும். தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பேன். வெண்ணையை காய்ச்சினால் நெய் கிடைக்கும். அதை பக்கத்து ஊர் சந்தைக்கு கொண்டு சென்று விற்று நல்ல லாபம் பார்ப்பேன். பின்னர் அதை வைத்து ஒரு ஜோடி ஆடுகள் வாங்குவேன். ஆடுகளை வீட்டுக்கு கொண்டு வந்து வளர்ப்பேன். இரண்டு விரைவில் நான்காகும். நான்கு அப்படியே எட்டாகும். ஒரு ஆட்டுப் பண்ணையே வைக்கும் அளவிற்கு என்னிடம் ஆடுகள் இருக்கும். ஆடுகளை அப்படியே சந்தையில் விற்றுவிட்டு இரண்டு பசுக்கள் வாங்குவேன். பசுக்கள் மூலம் பால் வியாபாரம் செய்து நன்கு பொருளீட்டுவேன். பசுக்கள் பல்கி பெருகும். அடுத்து அதை வைத்து குதிரைகளை வாங்குவேன். குதிரைகளும் பல்கி பெருக, குதிரை லாயம் அமைப்பேன். குதிரைகளை அக்கம் பக்கத்து ஊர்களுக்கும் சமஸ்தானங்களுக்கும் விற்பேன். இப்படி நான் செல்வந்தனானவுடன் எனக்கு பலர் பெண் தர முன்வருவார்கள். ஒரு அழகான பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவளுடன் குடும்பம் நடத்துவேன். எனக்கு ஒரு மகன் பிறப்பான். அவனை நான் கொஞ்சி மகிழ்வேன். மகன் தவழும் பருவத்தில், தவழ்ந்துகொண்டே குதிரைகளுக்கு அருகே செல்வான். குதிரைகள் குழந்தையை மிதித்துவிட்டால் என்ன செய்வது? எனக்கு கோபம் தலைக்கேறும். “குழந்தை குதிரைக்கு அருகே செல்வதை கூட பார்க்காமல் என்னடி செய்துகொண்டிருக்கிறாய்?” என்று என் மனைவியை எட்டி உதைப்பேன்.”
கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தவன், தன்னை மறந்து எழுந்து கால்களை தூக்கி உதைக்க, மேலே உறியில் தொங்கவிடப்படிருந்த பால் பானையில் கால்பட்டு பானை உடைந்து கீழே விழுந்து எல்லா பாலும் கொட்டிவிடுகிறது. பிச்சையாக கிடைத்த எல்லா பாலும் வீணாக போய்விடுகிறது.
நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் என்பார்கள் அல்லவா? அதன் அர்த்தம் இது தான்.
இலக்குகளை அடைய உழைக்காமல் செயலாற்றாமல் வெறும் கனவு மட்டுமே காண்பவர்களுக்கும் மேற்கூறிய கதையில் உள்ள பிச்சைக்காரனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. வாழ்க்கையில் வெற்றி பெற கனவு காண்பதற்கும், கனவு மட்டுமே காண்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
(* MONDY MORNING SPL தொடர் விரைவில் நிறைவு பெறவிருக்கிறது. இதுவரை ஆதரவளித்த அனைவருக்கும் நம் நன்றி.)
==============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
==============================================================
காலை வேலையை இனிமையாக தொடங்கி வைத்தமைக்கு மிக்க நன்றி
உலகிலேயே அதி விரைவாக செல்லும் ஒரே வாகனம் நமது எண்ணங்கள் தான்
அதற்க்கு உரிய நேரத்தில் கடிவாளம் பொருத்தி சரியான திசையில் பயணிக்க செய்தால் வாழ்க்கையில் உன்னதமான உயர்ந்த இடத்தை அடையலாம்
அதனை விடுத்து அதன் போக்கில் நாம் செல்வோமேயானால் மேலே சொன்ன கடையில் வரும் சோம்பேறியின் நிலை தான் நமக்கும்
நல்லதை நினைப்போம்
நல்லதே நடக்கட்டும்
வாழ்க வளமுடன் !!!
சுபெர்ப் ஸ்டோரி
கனவு மெய் பட வேண்டும் ஆனால் கனவு மட்டும் கண்டு வாழ்க்கையை தொலைத்து விட கூடாது.
ஏன் monday மோர்னிங் ஸ்பெஷல் ஸ்டாப் ஆக போகிறது. ஒவொரு வாரமும் energetic பதிவாக வரும் இதை ஸ்டாப் செய்யாதீர்கள்
நன்றி
உமா
இதை தயார் செய்வதில் நம் உழைப்பு அதிகம். ஆனால் இதற்கு வரவேற்பு குறைவாக உள்ளது. வேறொன்றுமில்லை.
– சுந்தர்
எப்புடி வரவேற்பு கம்மியா இருக்குனு சொல்றீங்க?. எது உங்கள பொறுத்த வரைக்கும் நல்ல வரவேற்பு?.
ஒவ்வொரு பதிவையும் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று பார்க்க முடியும்.அதை வைத்து சொல்கிறேன்.
Don’t lose you heart Sunderji.
Monday morning நீங்களே இப்படி சொன்னால் நாங்களெல்லாம் என்ன செய்வது?
(* MONDY MORNING SPL தொடர் விரைவில் நிறைவு பெறவிருக்கிறது. இதுவரை ஆதரவளித்த அனைவருக்கும் நம் நன்றி.)
Why Sir?
இந்த நேரத்தில் என் நினைவிற்கு வருவது
“காட்டிலுள்ள மலர்கள் எல்லாம் யார் பார்த்து ரசிக்க பூக்கின்றன?
நிலா யார் பார்த்து ரசிக்க வென்று தினமும் வருகிறது?
வானவில் யார் அதை ரசிக்க வேண்டுமென்று தோன்றுகிறது?
சூரியன் ஏன்தினமும் கிழக்கில் உதிக்கிறான்?
……………………………………………………………………………………………….”
இவ்வாறு இயற்கை அனைத்தும் அவைகளது கடமையை செவ்வனே செய்து கொண்டு இருக்கின்றன.
அதே போல் நீங்களும் உங்களது பணியை கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும். இது ரைட் மந்தர வாசகர்களது அன்பான, கண்டிப்பான வேண்டு கோள்.
சொல்வது எளிது:செய்வது கடினம் என்று நீங்கள் நினைப்பது எங்களுக்கு புரிகிறது.
ஆயினும் என்ன செய்ய? உங்களது கருத்துகள் குறைந்தது ஒருவருக்கு பிரயோஜனமாக இருந்தாலும் அது உங்கள் எழுத்துக்கு கிடைத்த வெற்றி தானே சார்.
Please consider sir.
monday marning spl very super.
recharge done.
manohar
சோம்பேறிகள் இருக்கும் வரையேல் இக் கதையெனை எத்தனை முறை சொன்னலும் தகும்…
நாங்கள் உணர்தவரைக்கும் திரு சுந்தர் அவர்கள் செய்யும் எந்த வேலைக்கும் வரவேற்ப்பை எதிர் பார்ப்பதில்லை. நன்றி சுந்தர் அவர்களே….
இப்படிக்கு,
விசு
நினைப்புதான் பிழைப்பை வளர்க்கும்
நினைப்புதான் பிழைப்பை கொடுக்கும்
கொடுக்கும் என்ற சொல்லில் கால் போனால் மட்டுமே கெடுக்கும்!!!
கதையில் ஆழமில்லை அனால்
கருத்தில் ஆழம் உள்ளதாக உணர்கிறேன்!!!
நன்றி..
வால்டேர்
நல்ல விளக்கம். நன்றி.
///இலக்குகளை அடைய உழைக்காமல் செயலாற்றாமல் வெறும் கனவு மட்டுமே காண்பவர்களுக்கும் மேற்கூறிய கதையில் உள்ள பிச்சைக்காரனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. வாழ்க்கையில் வெற்றி பெற கனவு காண்பதற்கும், கனவு மட்டுமே காண்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.///
நன்றி .
சுந்தர் சார்,
monday morning spl கண்டிப்பாக நிருத்தகூடாது. உங்கள் பனி தயவு செய்து தொடரட்டும்.
அன்புடன் அருண்
நான் கம்ப்யூட்டர் ஆன் செய்ததுமே முதலில் படிப்பது நீங்கள் அளிக்கும் செய்திகளை தான் . நிறைய விஷயங்கள் உங்கள் தளத்தில் இருந்து தெரிந்து கொண்டேன் . monday morning ஸ்பெஷல் வெகு அருமை.கண்டிப்பாக நிறுத்தக்கூடாது உங்கள் பணி தயவு செய்து தொடரட்டும்.