Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > உதவி கேட்டால் கல்லால் அடித்த கடவுள் – MONDAY MORNING SPL 43

உதவி கேட்டால் கல்லால் அடித்த கடவுள் – MONDAY MORNING SPL 43

print
வன் பக்தியும் ஒழுக்கமும் மிக்க ஒரு நல்ல இளைஞன். ஒரு நாள் ஒரு காட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்போது அவனுக்குப் பசியெடுத்தது. சுற்று முற்றும் பார்த்தவன் ஒரு கிணற்றுக்கு அருகே பக்கவாட்டில் உள்ள ஒரு மரத்தில் உயரத்தில் நன்கு கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

img_1975சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் நல்ல ஆழமான கிணறு. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு “யாராவது காப்பாற்றுங்கள்’ என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து பிடி வழுக்க ஆரம்பித்தது.

“இறைவா நீ இருப்பது உண்மையானால், உன் மீது நான் கொண்டுள்ள பக்தி உண்மையானால் என்னை காப்பாற்று!” என்று பிரார்த்தித்துக் கொண்டான்.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். “ஐயா என்னை கொஞ்சம் காப்பாற்றுங்கள்… இன்னும் சிறிது நேரத்தில் விழுந்துவிடுவேன் போலிருக்கிறது!” என்றார்ன்.

உடனே அந்த முதியவர், “உன்னை எதுக்கு காப்பாத்தணும்? நீ போறதுனால நாட்டுக்கு ஒன்னும் நஷ்டம் இல்லே” என்று கூறியபடி அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் அவனுக்கு ஆத்திரம் வந்தது. “பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு?” என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு “நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்” என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இந்த பெரியவருக்கு பாடம் புகட்டியே தீருவது என்று தீர்மானித்த இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். அவரது கைகளை பற்றி முறித்து, “ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?” என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே “தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்” என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

DSCN1604

“நான் உன்னை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக கல்லால் அடித்தேன்… பின்னர் எப்படி நீயாகவே எவர் உதவியுமின்றி கீழே வந்தாய்?”

“அது வந்து, உங்களுக்கு எப்படியும் பாடம் புகட்ட விரும்பினேன். கீழே இறங்கும் அந்த வெறியும் வேகமும் தானே வந்துவிட்டது.”

“ஆம்… அது தான் நான் உனக்கு செய்த உதவி. அதாவது உன் பலத்தை உனக்கு உணர்த்தியது!”

பெரியவர் விளக்கினார். “நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து என் மீது கோபம் கொண்டு நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. என் மீது கோபத்தை  ஏற்படுத்தி அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்” என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

ஆண்டவனின் உதவிகளும் சில சமயம் இப்படித் தான். நாம் எதிர்பார்ப்பதற்கு நேரெதிராக நமக்கு கிடைப்பதுண்டு.

நம்மை பிரச்சனையில் இருந்து காப்பாற்ற, நமக்கு மேலும் உத்வேகம் கொடுக்க, நம் பலத்தை நாம் அறிய ஆண்டவன் சில சமயம் இப்படி நம் மீது சிலரைக் கொண்டு கல்லால் அடிக்கக்கூடும். (இதைத் தான் BLESSING IN DISGUISE என்று சொல்வார்கள்!) அவை அனைத்தும் நம்மை காயப்படுத்த அல்ல… நமது நன்மைக்கே, நமது உயர்வுக்கே என்பதை உணர்ந்துகொண்டு நம் பயணத்தை தொடரவேண்டும்.

==============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==============================================================
[END]

9 thoughts on “உதவி கேட்டால் கல்லால் அடித்த கடவுள் – MONDAY MORNING SPL 43

  1. good morning rightmantra readers!!!!
    glad to read an article after a long time due 2 various reasons!!!and as usual–sema energetic post–much needed one at the right time!!
    Let the ALMIGHTY shower his grace on the entire Universe..
    R.HariHaraSudan
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”…

  2. அருமையான பதிவு.. நச்சென்றிருந்தது. என் அனுபவத்தில் பலமுறை இந்த மாதிரி நடந்துள்ளது. கடவுள் ஏன் என்னை இப்படி சோதிக்கிறார் என்று நினைப்பேன். ஆனால் தங்கள் பதிவை படித்த பின்பு அவர் சோதிப்பது ஏன் என்று புரிந்தது. என்னை என் பலத்தை எனக்கு புரிய வைக்க அவன் நடத்தும் நாடகமே..

    சுந்தர் பலருக்கு இதை புரிய வைக்க அவன் தங்களை கருவி ஆக்கி கொண்டது தாங்கள் செய்த புண்ணியம்.

    நன்றி.

  3. superb போஸ்ட் அண்ட் வெரி enthusiastic

    இறைவன் கல்லால் அடித்தாலும் நம் நன்மைக்கே என்று எடுத்துக்கொண்டால் நம் வாழ்கை பயணம் சிறப்பாக அமையும். மனிதர்கள் சொல்லால் அடிக்கும் வலியை விட இறைவன் கொடுக்கும் துயரம் எவ்வளவோ மேல்.

    ஹரிஹரசுதன் How are you how is your Amma now?
    நன்றி
    உமா

    1. I am better now mam..Thanks for your concern mam!!.Amma is fine,recovering still..last week also she had low sugar and we had to take preventive measures on time!!!It Will take another 2-3 months for her to recover completely–GOD willing!!

  4. இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்வது, எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும் முயற்சியையும் விட்டுவிட கூடாது. ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை நினைத்து கவலை படுவதாலோ வருத்தப் படுவதாலோ எந்த மாறுதலும் நிகழப்போவதில்லை. அதை நினைத்து கவலைப் படுவதற்கு பதிலாக அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தால் நடப்பவையாவது நல்லவையாக நடக்கும்.

    எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே அதிலிருந்து தப்ப தன்னம்பிக்கையும், பதட்டப்படாமல் இருந்தாலே பாதி வெற்றி, நாம் பயப்படாமல் எதிரில் உள்ளவர்களை சமாளித்தால் மீதி வெற்றி.

    தன்னம்பிக்கை வேண்டும் பதட்டம் வேண்டாம்… வெற்றி நமக்கே ….

    -தன்னம்பிக்கை SPL சூப்பர் .

    -மனோகர்

  5. வணக்கம் சார்,
    மிக அருமையான பதிவு.
    நல்ல ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளிர்கள்.நல்ல கதை நடை. இறைவன் செய்யும் எல்லா செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும்.
    நம்மை நம் பலத்தை நாம் அறிய செய்யும் சோதனை தான் அவரின் விளையாட்டு. நல்ல கருத்து
    as usual energitic story

  6. அருமையான கதை
    ஆழமான கருத்து

    யானைக்கு தும்பிக்கை
    மனிதனுக்கு நம்பிக்கை

    முக்திக்கு தேவை அசைக்கமுடியாத தெய்வபக்தி

    உளியினால் கொத்தப்படாத கற்கள் ஒருபோதும் சிலை ஆவதில்லை
    உழப்படாத நிலத்தில் உணவு தானியம் விளைவதில்லை
    பக்குவப்படாத மனதில் நல்ல சிந்தனை என்னும் விதை வளர தலைபடுவதில்லை

    நம்பிக்கை கொள்வோம்
    நல்லதே நினைப்போம்
    நல்லதே நடக்கும்

    வாழ்க வளமுடன்

  7. முற்றிலும் உண்மை. என் வாழ்விலும் பல சோதனைகள் வந்து அதையும் இறைவன் தான் தீர்த்திருக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *